Saturday, December 19, 2009

வே(ஓ)ட்டைக்காரன்நன்றாக இருக்கும் ஒரு ஆளை தினமும் ஒருமுறை “ஏன் சார் ஒரு மாதிரி ஆயிட்டீங்க? முகமெல்லாம் வெளுத்து போனாப்ல” என்று சொல்லிக் கொண்டே வந்தால் அவருக்கு உண்மையிலேயே நாம் இப்படி ஆகிட்டோமோ! என்று தோன்றி விடும். மகன் தொலைக்காட்சியும் அந்த வேலையைத்தான் செய்கிறார்கள். வெற்றி நடை போடுகிறது என்ற விளம்பரம் நேற்று மாலையே துவங்கிவிட்டது.

படத்தின் துவக்கத்தில் வரும் “நா அடிச்சா” என்ற பாடல் வரியை “நா நடிச்சா” என்று மாற்றிவிடலாம். விஜய் அந்தளவுக்கு நம் பொறுமையை சோதிக்கிறார். ஆனால் அவரால் அவ்வளவுதான் செய்யமுடியும். ஒரு பாடலில் கலர் விக் வைத்து ஆடியதே சாதனைதான். கெட்டப் சேன்சாம். கொடுமை.

கதை. பெரிதாக ஒன்றும் இல்லை. போலிஸ் ஆக வேண்டியவன் பொறுக்கி(நல்ல)ஆன கதைதான்.

அதைஏகப்பட்டபில்டப்,சேஷ்டைகள்,கொணஷ்டைகளோடு மூன்று மணிநேரம் வேட்டையாடியிருக்கிறார்கள்.

அனுஷ்கா? விஜய்யின் பெரியக்கா மாதிரி இருக்கிறார். உயரம் அப்பட்டமாக தெரிகிறது. நடிப்பை காட்ட வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தும் மற்றதை காட்டவில்லை என்பது எனக்கும்,கேபிளுக்கும் ஏமாற்றமே. படத்தில் நகைக்கடையில் வரும் ஒரு பிகர் உண்மையில் நன்றாக இருந்தது.

வில்லன் சலீம்கோஷ். இன்னும் வெற்றிவிழாவிலேயே இருக்கிறார். பேஸ் வாய்ஸ் போதும். பயம் காட்ட என்று நினைத்து விட்டார் போலும்.அவரை காட்டி அழும் குழந்தைக்கு கூட சோறுட்ட முடியாது. இன்னொரு வில்லன். சாய்குமார். சோப்ளாங்கியாக வருகிறார். நீளமாக வளர்த்திருப்பதை தவிர ஒரு.... ம் புடுங்கலை.

அநேகமாக பாபு இனி சிவனே என்று உட்காரும் நிலை வரலாம். மொக்கையான திரைக்கதை. வாயால் பில்டப் கொடுத்து புரொடியூச்ரை ஏமாற்றியிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (கிடைத்தால்)

காமெடி? விஜய் பண்ணுகிறார். சிரிப்புத்தான் வருகிறது. என்ன? நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள வேண்டும்.

படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.

ஒன்று : இடைவேளை

இரண்டு:முடிவு


டிஸ்கி : சைதை ராஜ் தியேட்டரில் விஜய் கட் அவுட்டிற்கு பால் ஊற்றினார்கள். அது படத்திற்கும்தான்

44 comments:

Raju said...

இதுக்கு" தோரணை" படம் எவ்வளவோ தேவலை போலயே..!

நையாண்டி நைனா said...

same blood

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சைதை ராஜ் தியேட்டரில் விஜய் கட் அவுட்டிற்கு பால் ஊற்றினார்கள். அது படத்திற்கும்தான் //
-);

அகநாழிகை said...

:))))))))))))))

தேவதையே ......... said...

அய்யா ... உங்களுக்கு , எங்க இருந்து தான் இந்த குசும்பு வருது ..........முக்கியமா பால் ஊத்தற மேட்டர் சூப்பர்.
என்ன இருந்தாலும் ஒரு வருங்கால முதல்வர(?) இப்படி சொல்லிடிங்களே ??

Paleo God said...

//படத்தில் நகைக்கடையில் வரும் ஒரு பிகர் உண்மையில் நன்றாக இருந்தது...//

அப்ப நீங்களும் என்னமாதிரி படத்த உன்னிப்பா!!?? பாக்கரவர்தானா?? SAME BLOOD :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))))

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

இனிமே எல்லா படத்துக்கும் நீங்க இதே மாதிரி உண்மையா விமர்சனம் எழுதினா நல்லாயிருக்கும்..!

மண்குதிரை said...

:-) எதிர் பார்த்ததுதான்

Prathap Kumar S. said...

ஹஹஹ சூப்பர் விமர்சனம்... படம் பிளாப்பா.. ரொம்ப சந்தோஷம்..

சிவாஜி சங்கர் said...

//படத்தின் துவக்கத்தில் வரும் “நா அடிச்சா” என்ற பாடல் வரியை “நா நடிச்சா” என்று மாற்றிவிடலாம். //
தூள் நைனா.

ரமேஷ் கார்த்திகேயன் said...

//சைதை ராஜ் தியேட்டரில் விஜய் கட் அவுட்டிற்கு பால் ஊற்றினார்கள். அது படத்திற்கும்தான் //

nice comment

க.பாலாசி said...

கடைசியா சொன்னீங்களே அது நெத்தியடி...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.


ஒன்று : இடைவேளை


இரண்டு:முடிவு
//

இந்த இரண்டாவது நல்லா இருக்கே!

படம் எப்ப எடுக்குறாங்க!?

geethappriyan said...

டிஸ்கி : சைதை ராஜ் தியேட்டரில் விஜய் கட் அவுட்டிற்கு பால் ஊற்றினார்கள். அது படத்திற்கும்தான் //

:))))))))))))))

தமிழினிமை... said...

padam innum paakala...
anyway hope ur vimarsanam is of correct use to me..
bythe way..
go thru my COUNTER-COMMENT for urs in NIZHAL VALAI...

பிரபாகர் said...

அண்ணே! பிடிச்ச ரெண்டு விஷயமும், பால் ஊத்துனதும்... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!

பிரபாகர்.

கலகலப்ரியா said...

=)))))... attakasham..!

vasu balaji said...

டிஸ்கிலயே கொன்னுட்டீங்க பாஸ்.

சதீஷ் said...

சூப்பரப்பு......

Starjan (ஸ்டார்ஜன்) said...

வேட்டைக்காரன் ஹிட்டா ....

Unknown said...

எல்லாரும் இப்டி பண்ணுன அந்த பையன் எப்டி தான் மேனேஜ் பண்ணுவன்.., என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியமைக்கு நன்றி..,

ஜெட்லி... said...

எனக்கு என்னமோ நல்ல வசூல் தான்னு
தோணுது தலைவரே....

Cable சங்கர் said...

தண்டோராபிகர் நிஜமாவே நல்லாத்தான் இருக்கு

Ashok D said...

அடிச்சு நொறிக்கிட்டீங்க.. நச் விமர்சணம்...(படிச்சதிலயே)

Unknown said...

very nice,
your last comments will disturb vijay-sure

அக்னி பார்வை said...

///படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.

ஒன்று : இடைவேளை

இரண்டு:முடிவு
///
super....

venkat said...

enna koduma saravanan idhu...oru manushan evalavu than porumaiya irukarathu..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஊத்திகிச்சா?!!!! சரி காசு மிச்சம் நமக்கு.

ஈரோடு கதிர் said...

ஆனாலும் முழுசா பார்த்துட்டீங்க போல

Unknown said...

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் உலக கொடுமை .

ATM,வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

ஆனா நாங்க (நாம) மாறிட்டோம்.

உங்க வாழ்க்கைல பொக்கிஷமாய் இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

பா.ராஜாராம் said...

//படத்தில் நகைக்கடையில் வரும் ஒரு பிகர் உண்மையில் நன்றாக இருந்தது.//

:-))))

வெண்பூ said...

தண்டோரா... இப்படி தண்டோரா போட்டுட்டீங்களே.. விமர்சனம் கலக்கல்.. அதிலயும் அந்த ஜிவல்லரி ஃபிகர், புடிச்ச ரெண்டு, கடைசி டிஸ்க் மூணும் கலக்கல் மேட்டர்..

Ramprasath said...

தலைப்புலேயே விமர்சனம் இருக்கு.. கலக்குங்க , தொடருங்க உஙகள் விமர்சனங்களை...

Unknown said...

நல்ல விமர்சனம். முதல்ல விஜய்யை நாடு கடத்தனும்.

Saran-DBA said...

thannoda padatha thaanae remake panni record break thanae pannikararu. kodumai pa.

CS. Mohan Kumar said...

கலக்கல் விமர்சனம்.

நம்ம blog-ல் பிரபல பதிவர்களை கலாய்ச்சிருக்கேன். வந்து சிரிங்க

Beski said...

டிஸ்கி டாப்பு.

VISA said...

அய்யோ....அசத்தல் டிஸ்கி. நிச்சயமா எதிர்பாக்கல. நல்ல சிந்தனை உங்களுக்கு.
எவ்வளவு கோபம் வருது தலைவரே. பத்து ரூபா சோப்புக்கு குவாலிட்டி குவான்டிட்டுன்னு நம்ம ஆளுங்க கன்சியூமரிசம் பேசுவார்கள். ஆனால் விஜயோ அஜித்தோ திரைப்படம் என்ற பெயரில் வந்து நடந்துவிட்டு போனால் கூட பட்டினி கிடந்தாவது அதை பார்த்துவிடுவதில் ஒரு திருப்தி. ரசிகன் அதுவும் தமிழ் ரசிகன் ரொம்ப பாவம். காலம் காலமாய் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஜாதி. நானும் வேட்டைக்காரன் ரொம்ப எதிர்பார்த்தேன். இப்ப அடுத்த வாரம் வந்துடுவானுங்க சன் டி.வி.ல இயக்குனர் ...சுத்துற நாற்காலில இருந்து சூ.....ஆட்டுறதுக்கு. கலர் கலரா அப்படியே விஜய் அஜித்த விட பிரமாதமா நடிச்சு ஒரு பேட்டி கொடுப்பான் பாருங்க.....அப்ப தான் நெஜமாவே காசு குடுத்து மொக்க வாங்கின நம்ம சூ எரியும்.....அந்த அளவுக்கு கோபம் வருது. அதான் கொஞ்சம் ஓவரா எழுதிட்டேன்.

DISC: நான் விஜயை நிச்சய்மா குற்றம் சொல்லவே மாட்டேன்

ஜெகதீபன் said...

படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.
ஒன்று : இடைவேளை
இரண்டு:முடிவு

கலக்கல் அண்ணே ...!!!!

R.Gopi said...

////படத்தின் துவக்கத்தில் வரும் “நா அடிச்சா” என்ற பாடல் வரியை “நா நடிச்சா” என்று மாற்றிவிடலாம். //

//விஜய் அந்தளவுக்கு நம் பொறுமையை சோதிக்கிறார். ஆனால் அவரால் அவ்வளவுதான் செய்யமுடியும். ஒரு பாடலில் கலர் விக் வைத்து ஆடியதே சாதனைதான். கெட்டப் சேன்சாம். கொடுமை.//

//படத்தில் நகைக்கடையில் வரும் ஒரு பிகர் உண்மையில் நன்றாக இருந்தது.//

//அநேகமாக பாபு இனி சிவனே என்று உட்காரும் நிலை வரலாம்.//

//காமெடி? விஜய் பண்ணுகிறார். சிரிப்புத்தான் வருகிறது. என்ன? நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள வேண்டும்.//

//படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.

ஒன்று : இடைவேளை

இரண்டு:முடிவு//

**********

தலைவா... இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல...

ஆண்மை குறையேல்.... said...

//நகைக்கடையில் வரும் ஒரு பிகர் உண்மையில் நன்றாக இருந்தது.//

உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ டேஸ்ட்னு நென‌ச்சுருந்தேன்...

மணிஜி said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே...

3SK said...

intha polapu thevaya , ennanga padathula Fight than sema Comedy,
college ku shirta thoranthu potu pora ore alu ivar than. ipadiye pesitu iruntha ini vara padam odathungo. vijay hand Bangle la kooda Graphicsa thanga mudilinga.