ஈரோடு பதிவர் சங்கமம் உண்மையில் அற்புதமான நிகழ்வு. எந்த ஈகோவும் இல்லாமல் செயல்பட்டு சிறப்பாக நடத்தி காட்டிவிட்டனர். வாழ்த்துக்கள் கதிர், கார்த்திக், நந்து,ஆரூரான் , வால்பையன் (கொஞ்சம் சுதிசுத்தம்தான்) மற்றும் அனைத்து நண்பர்களுக்கும். சென்னையிலிருந்து நோகாமல் அழைத்து சென்ற அப்துல்லாவிற்கும், வாகன ஓட்டுனர் கோவிந்தாவுக்கும், உடன் வந்த கேபிள்,வாசு, வண்ணத்துப்பூச்சியாருக்கும் நன்றிகள். முடிந்தவுடன் பரிசலின் காரில் பாட்டை போட்டுவிட்டு குத்தாட்டம் போட்டோம். நல்ல அனுபவம்.
ராமதாசு சொன்ன 49” ஓ என்னவாயிற்று ? 84% வாக்குப்பதிவாம் வந்தவாசியில். வன்னியர் ஓட்டு அன்னியருக்கு போய்விட்டது. அடுத்த தேர்தலில் சவுக்கடியாருக்கு நெருக்கடிதான். இப்பவே எல்லாம் உன்னால்தான் என்று மகன் கரிச்சு கொட்டுகிறார். சந்தோஷமாக இருகிறது.
திருச்செந்தூரில் வாக்குபதிவு வந்தவாசியை விட குறைச்சல்தான் 78 %. ஏன்? தம்பி முந்துகிறார். வாக்கு வித்தியாசமும் அங்கு குறைவாகி விட்டால் தெரியும் சங்கதி. அண்ணன் காத்திருக்கிறார் !
வேட்டைக்காரன் லேட்டஸ்ட் நீயூஸ். காஞ்சிபுரத்தில் ஆறு ஸ்கிரினில் படம் திரையிடப்பட்டிருக்கிறது. போட்ட காசை எடுக்கவே பிரம்மபிரயத்தனம் என்று தியேட்டர் ஓனர் சொன்னார். சன் பிக்சர்ஸ்க்கு எந்த பிரச்சனையும் இல்லை. நோம்பிவிட்டார்கள். வாங்கியவர்கள் பாடுதான் திண்டாட்டமாம். ஆக்ஷன் ஸ்கிரிப்ட் என்றால் அந்தரத்தில் ஆறு சண்டை போடுவதுதான் என்ற நம் இயக்குனர்களின் பாமரத்தனம்தான் திரைக்கதை மொக்கையாவதற்கு காரணம். ஆக்ஷனும், வயலன்சும் ஸ்கிரிப்டில் இருக்க வேண்டும். முடிந்தவரை மோதல் ஏற்படுவதற்கான சூழலை எஸ்டாபிளிஷ செய்து, சண்டையை தள்ளீ போட்டு கொண்டே வர வேண்டும். உதாரணம் அக்னிநட்சத்திரமும்,உதயம் திரைப்படங்கள். அடுத்தது சண்டைதான் என்று ஆடியன்ஸ் நினைக்கும்போது, சண்டை வந்தால் அது சிரிப்புக்காட்சியாகி விடுகிறது. வேட்டைக்காரனிலும் அதுதான் நடக்கிறது.தலை நடிகர் மற்றும் அனைத்து இளைய நடிகர்களுக்கும் கொண்டாட்டமாம் வேட்டை வீழ்ந்ததில்.
முதல் நாள் ரசிகனுக்கு ஒருவித கிக்தான். தன் தலைவன் படத்தை பார்ப்பதில். அது படத்தின் ரிசல்ட்டை தீர்மானிக்காது. அவனை மறுபடியும் பார்க்க சொல்லுங்கள் பார்ப்போம்.அடிக்க வருவானய்யா.
குடும்பத்துடன் திருப்பதிக்கு போயிருந்தேன். ரிட்டர்ன் சப்தகிரி ரயிலில். சென்னையிலிருந்து ரயில் வந்தது. அடித்து ,பிடித்து ஏறி இடம் போட்டு விட்டு பார்த்தால் பிளாட்பாரத்தில் அன்னதானம் செய்துகொண்டிருந்தார்கள். அருகில் போய் பாக்கு மட்டை பிளேட்டை எடுத்துக் கொண்டு முதலில் பொங்கல், சட்னி வாங்கி கொண்டேன். பூரியும் இரண்டு. கிழங்கு வாங்கும் போதுதான் வித்தியாசமாக பார்த்தனர். “தம்பி நீங்க ? என்று இழுத்தனர். ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன். அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அய்யோ ! சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன். கிழங்கை போட்டனர். அங்கிருந்து கம்பார்ட்மெண்டிற்கு எப்படி வந்தேன் என்றே தெரியாது. வீட்டில் எங்களுக்கு இல்லையா என்றதற்கு “போங்கடி பிச்சைகாரிகளா” என்று வாயில் வந்தது.
எந்திரன் படத்திற்காக நான் எழுதிய பாடலின் சில வரிகள்:
ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
டைனமைட்…. என் மடியில் ....
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
டைனமைட்…. என் மடியில் ....
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி
44 comments:
ஹலோ, இது ஏற்கனவே எழுதுன எந்திரன் பாடல்தானே..!
இதுக்குக்கூட நம்ம நைனா, உங்களுக்கு சிலை வைக்கிறதுக்காக
தாமிரபரணிக் கரைல கல்லெடுக்கப் போனாரே..!ஞாபகமிருக்கா தல...?
ஈரோடு பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி..... அனைவரிடமும் நீங்கள் பழகிய விதம், காட்டிய அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது......
சந்திப்பும், நட்பும் தொடர ஆசைப்படுகிறேன்.
அன்புடன்
ஆரூரன்
வேட்டைக்காரன்.. உண்மை தான்.. எனது நண்பன் ஒருவன், தீவிர விஜய் ரசிகன்.. எப்போடா ரெண்டாவது வாட்டி பாக்கப் போறேன்னு கேட்டா அடிக்க வர்றான் சார்..
அன்னதானம் மேட்டர்.. செம காமெடி போங்க.. :)
//சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன். கிழங்கை போட்டனர். //
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்...::))
நேற்று இரவு காட்சியோடு வேட்டைக்காரன் மூன்றுமுறை பார்த்துட்டேன். செம கலக்கலா இருக்கு. ஏன் இப்படி எழுதி இருக்கீங்கன்னு புரியல.
//நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர்//
என்ன கொடும சார்..
நன்றி தண்டோரா
//தலை நடிகர் மற்றும் அனைத்து இளைய நடிகர்களுக்கும் கொண்டாட்டமாம் வேட்டை வீழ்ந்ததில்.//
அவங்களுக்கு மட்டுமா?
தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சிதான்.......
ஈரோட்டில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி........
//நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர்//
அவ்ள பெரிய பேமிலியா அப்ப அவரோடதா தான் இருக்கும். ஆனா அது பகுத்தறிவு பேமிலியாச்சே திருப்பதிக்கு எதுக்கு போனாங்க
........................ :)
அன்னதானம்????????
சிரிச்சி முடியல தல...........
//அங்கிருந்து கம்பார்ட்மெண்டிற்கு எப்படி வந்தேன் என்றே தெரியாது. //
தினமும் வீட்டிற்கும் அப்படித்தானே போறிப்க்க.. எப்டின்னே தெரியாம.. :)
வணக்கம் தண்டோரா...
தொலைப்பேசியில் பேசியதில் மிக்க மகிழ்ச்சி...
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
honestly speaking u enjoy the picture. for others u r commenting the picture. be cool say truth.Vijay films for entertainers not for logical thinkers. if u want logic in picture, it is not available in vijay picture. so dont see and also dont propagate wrong comments. it will hurts those who r working hardly in this picture. i really enjoy ur blog but hereafter i will rethink it to visit. sorry sir.
honestly speaking u enjoy the picture. for others u r commenting the picture. be cool say truth.Vijay films for entertainers not for logical thinkers. if u want logic in picture, it is not available in vijay picture. so dont see and also dont propagate wrong comments. it will hurts those who r working hardly in this picture. i really enjoy ur blog but hereafter i will rethink it to visit. sorry sir.
/Sakul Hameed said...
honestly speaking u enjoy the picture. for others u r commenting the picture. be cool say truth.Vijay films for entertainers not for logical thinkers. if u want logic in picture, it is not available in vijay picture. so dont see and also dont propagate wrong comments. it will hurts those who r working hardly in this picture. i really enjoy ur blog but hereafter i will rethink it to visit. sorry sir//
i think you are a hardcore fan of ilaiyathalapathi. i too like vijay in killi,pokkiri and sachin.but templet scripts like vettaikkaaran really irritates me. that too three consecutive movies of vijay are same lines.if iam not worth of visiting, that you have to decide which i think to see vijay film again. thanks sakul. greetings
மணிஜி.. கலக்கல்.
மறக்க முடியாத அனுபவமாய் என்றும் நினைவில் இருக்கும் ஈரோடு சந்திப்பு..
நன்றி கதிர் + நண்பர்கள்.
Simply Superb.
கலக்கறீங்க ப்ளாக்குலயும்...!!!??
இந்த வாரம் மானிட்டர் பக்கம் அவ்வளவு கிக் இல்ல. கவிதை நிஜமாவே சூப்பர்.
//பரிசலின் காரில் குத்தாட்டம் போட்டோம். நல்ல அனுபவம்.//
டியூசன் டீச்சர் என்ற ஒரு காவியத்தில் இதுபோல் ஒரு சீன் வரும்:))
அண்ணே கேள்வி நம்பர் 1) உங்களுக்கும் கலைஞருக்கும் வாய்கா வரப்பு சண்டையா?
நம்பர்2) உங்களுக்கும் சன்னுக்கும் வேலி தகறாரா?
நம்பர் 3) உங்களுக்கும் திமுக வுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா? மானிட்டர் பக்கங்களை தொடர்ந்து படித்து வருவதால் இதுபோல் நினைப்பு வருகிறது.
பிளீஸ் ஆன்சர் மை ஆல் கொஸ்டின்ஸ் 3 x 5= 15 மார்க்ஸ்
(பத்துவரிக்கு மிகாமல் விடையளிக்கவும்)
//வித்தியாசமாக பார்த்தனர். “தம்பி நீங்க ? என்று இழுத்தனர். ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன்//
தலைவரே,
சூப்பரான அனுபவம் போங்க!
இனிய சந்திப்பு எல்லயில்லா ஆனந்தம்
உணர்த்தியது இடுகை. அருமை..
http://niroodai.blogspot.com
//ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன். அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அய்யோ ! சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன்.//
அகா............
தங்களை சந்திப்பில் சந்தித்ததும் இனிமையான அனுபவமாய் இருந்தது...
//அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அய்யோ ! சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன். கிழங்கை போட்டனர். //
:-)
அன்னதானம் மேட்டர்.. செம காமெடி :-)))))
அதுக்கப்புறம் நீங்க சொன்ன போங்கடி பிச்சைகாரீகளா.... என்னன்னா நக்கலு??
அடிகிடி விழுகலை??
அன்னதானம் மேட்டர்.. செம காமெடி :-)))))
அதுக்கப்புறம் நீங்க சொன்ன போங்கடி பிச்சைகாரீகளா.... என்னன்னா நக்கலு??
அடிகிடி விழுகலை??
அன்னதான பிரபுவே சரணம் அய்யப்பா
அன்னதானத்துக்கு நான் அடிமை..
:-))))
உங்கள் வருகைக்கும் நன்றி தல!
சாகுல் அமிதுக்கு கொடுத்த பதில் நல்ல பதில்.. அய்யய்யோ.. விஜய திட்டினா வர்றவங்க வரமாட்டாங்களாமே...:)) எப்படி யெல்லாம் பீதிய கிளப்புறாங்கய்யா..
//எந்திரன் படத்திற்காக நான் எழுதிய பாடலின் சில வரிகள்://
:-))))))))))
அன்பின் தண்டோரா
நேற்றைய சந்திப்பு இன்றும் நிழலாடுகிறது. அமைதியின் உருவம் - ஆன்மீகம் - நட்பாகப் பேசியது - மறக்க இயலாது. நல்வாழ்த்துகள்
எந்திரன் பாடலும், அன்னதானமும் அட்டகாசம்:))
அண்ணே கம்பார்ட்மென்ட்ல மானிட்டர் எதையும் ஏத்திட்டு போகலையே ..
// Romeoboy said...
அண்ணே கம்பார்ட்மென்ட்ல மானிட்டர் எதையும் ஏத்திட்டு
//
அண்ணே இது குலைக்கிற நாயி.கடிக்காது
:)))
கொஞ்சம் சுதிசுத்தம்தான்)...
நீங்களும் பின்பாட்டு பாடினதா கேள்விப்பட்டேன்..
ஓட்டுனர் கோவிந்தாவுக்கு...
பொது இடங்களில்..தம்பியண்ணன் சத்தமாக கூப்பிடுவதை நினைத்துப்பார்க்கிறேன்..
49”0
திரும்ப மரம் வெட்டி கட்சியை கரையேத்த முடியாதா..என்ன,,,?
மரத்துக்கு மரம் தாவி சலிச்சு ஓய்ஞ்சு போயிட்டாரோ என்னமோ...
அப்போ அண்ணன் டெல்லிக்கு பர்மனண்ட் இல்லையா?
அய்யய்யோ.....
வேட்டைக்காரனை எல்லோரும் கடிச்சு வச்சுட்டாங்க...பாவமா இருக்கு.
எந்திரன் படத்துக்கு தமிழ்லதானே பாட்டு எழுதணும்...
தலைவா....
ஈரோடு பதிவர் சந்திப்பு நன்றாக நடந்ததில் மகிழ்ச்சி...
//பாக்கு மட்டை பிளேட்டை எடுத்துக் கொண்டு முதலில் பொங்கல், சட்னி வாங்கி கொண்டேன். பூரியும் இரண்டு. கிழங்கு வாங்கும் போதுதான் வித்தியாசமாக பார்த்தனர். “தம்பி நீங்க ? என்று இழுத்தனர். ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன். அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அய்யோ ! சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன். கிழங்கை போட்டனர்//
*********
ஹா...ஹா...ஹா... இது டிபிக்கல் தண்டோரா டச்...
கலக்கல் தலைவா...
எந்திரன் படத்து பாட்டு லிரிக்ஸா... ம்ம்ம்ம் நடத்துங்க... நடத்துங்க... உங்கள எல்லாம் இன்னொரு தடவை வில்லு, குருவி, வேட்டைக்காரன் பார்க்க சொன்னா சரியாயிடும்... (சொம்மா டமாசு தல...)
//கரிசல்காரன் said...
அவ்ள பெரிய பேமிலியா அப்ப அவரோடதா தான் இருக்கும். ஆனா அது பகுத்தறிவு பேமிலியாச்சே திருப்பதிக்கு எதுக்கு போனாங்க//
********
கலக்கல் கமெண்ட்....
ஹலோ... ஊருக்கு தான் பகுத்தறிவு... தனக்கு எல்லா கோயில்லேயும் பூஜை, புனஸ்காரம் எல்லாம் நடக்குது...
இடுப்புல தாயத்து கூட கட்டியிருக்காராமே ”தல”...
திருப்பதி சம்பவம் சூப்பர் பாஸ்....அருமையா எழுதுறீங்க....மானிட்டற்கு எப்பவுமே கிக் அதிகம் தான்
me the 41st?
நாற்பதை கடந்ததற்கு வாழ்த்துகள்... :)
(ரொம்ப நாள்களுக்கு பிறகு)
பின்னூட்டமிட்டு பெருமைபடுத்திய உள்ளங்களுக்கு அன்பு நன்றிகள்..
மற்றவையெல்லாம் உங்கள் வழக்கமான கலாய்த்தல்கள் ஆனால்
அன்னதானம் அட்டகாசம்!
அண்ணே, அன்னதானம் மேட்டர்.. செம காமெடி போங்க.. :)
Post a Comment