இவ்வளவு நேரமா? என்னத்தை புடிங்கிட்டு இருக்கான் இந்த பய.. எனக்கு கோபமாக வந்தது. பின்ன..நானே நைட்டு அடிச்ச சரக்கு மண்டை பாரமாய் அவஸ்தை படறேன். ஒரு கட்டிங் அடிச்சாத்தான் சரியாகும். இந்த முனியனை அனுப்பினா..போய் 2 ஹவர் ஆகுது. இன்னும் ஆளை காணும்.. வரட்டும் . சாத்திடறேன்... மீதி தூள் இருப்பது நினைவுக்கு வந்தது. எடுத்து கசக்கி பீடியில் அடைத்தேன். பற்ற வைத்து சுகமாய் ஒரு இழுப்பு. கடலை மிட்டாய் இருந்தா நல்லாயிருக்கும் போல இருந்தது.
நேத்து நைட்டு பார்த்த மிட்நைட் மசாலா வேற தொந்தரவு பண்ணீகிட்டே இருக்கு. இன்னிக்கு கிளைமேட் வேற சில்லுன்னு இருக்கு. என்ன பண்றது? சரி முதல்ல முனியன் வரட்டும். சரக்கு ஏத்தி கிட்டு அப்புறம் யோசிக்கலாம். மீன் காரன் வேற வருவான்.
முனியன் வந்துவிட்டான். கடையில் சரக்கு இறக்கி கொண்டிருந்தார்களாம். அதான் லேட்டுனு தலை சொறிந்தான். போய் சிகரெட்டும், ஆம்லெட்டும் வாங்கி வான்னு அனுப்பிட்டு, சரக்கை கிளாசில் ஊற்றினேன். டூப்ளிகெட்டான்னு தெரியலை. இந்த நாத்தம் அடிக்குது. ஊரே ஏமாத்து வேலைதான் பண்ணுது..
முனி ஆம்லெட் வாங்கிட்டு வர்றதுக்குள்ள சரக்கு காலி. போடா. போய் இன்னொரு பாட்டில் வாங்கிட்டு வா..முனகி கிட்டே போனான் முனியன்.
சரக்கடிச்சா எனக்கு உடனே பாட்டு வந்துடும். பி.சுசிலா பாடின ஒரு பாட்டை பாட ஆரம்பிச்சேன். போன் அடிச்சுது. யார்னு பார்த்தேன்...ரவிதான்..
இந்த இடத்தில்தான் எனக்கு குழப்பம். மேற்கொண்டு இந்த கதையை எப்படி எடுத்து செல்வது என்று..? ரவியை வரச்சொல்வதா? வேண்டாமா? சும்மா வழக்கம் போல் சப்புன்னு கதையை முடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால்..
போன் அடித்தது. யார்னு பார்த்தேன். ரவிதான்.. சனியன் புடிச்சவன். ஒரு வேலைக்கு லாயக்கில்லை. எப்பவும் என் காசுலயே குடிக்கலான்னு அலையறவன்.. சரி. வந்து தொலைன்னேன்.
ரவி வந்து விட்டான்.. என்ன காலையிலேயே போட்டியா? சரி.. எவ்வளவு பணமிருக்கு?
இருக்கு. ஆனா உனக்கு ஒரு சல்லிக்காசு தர மாட்டேன்..
நீ தரலைன்னா.. நானே எடுத்துக்கறேன்..
வேண்டாம்.. வராதே..அவன் கேட்காமல் கையை பிடிக்க.. எட்டி விட்டேன்.. சுவற்றில் தலை மோதி விழுந்தான்.. தலை தொங்கியது.. கிட்ட போய் பார்த்தேன். மூச்சு அடங்கியிருந்தது. வாசலில் சத்தம் கேட்டது. முனியன்..
என்னாச்சு?
செத்து போயிட்டான் முனி.
முனி பரபரவென்று செயல்பட்டான். சாக்கு பைக்குள் பிணத்தை திணித்தான். ரத்தக்கறையை துடைத்தான்.
“அக்கா” நீங்க கவலைப்படாதீங்க.உங்க புருஷனா இருக்க இவனுக்கு தகுதியில்லை. சரக்கை அடிச்சுட்டு நிம்மதியா தூங்குங்க..சனியன் ஒழிஞ்சது.. நான் பாத்துக்கறேன்...
23 comments:
இன்னொரு சர்ரியலிச கதை.:)
//பி.சுசிலா பாடின ஒரு பாட்டை பாட ஆரம்பிச்சேன்//
இங்கியே லேசா டவுட் ஆனேன்
கதைல இன்னும் கொஞ்சம் சுதி
ஏத்தி இருக்கலாம்..........
கடைசி ட்விஸ்ட் surprise தான் ஜி. ஆனா language part தான் கவனிக்கவேண்டியது.
அந்த மிட்நைட் மசாலா சரி வராதே:))
ட்விஸ்ட்டு நல்லா இருந்துச்சி..!
\\வானம்பாடிகள் said...
அந்த மிட்நைட் மசாலா சரி வராதே:))\\
ஏன் பார்க்கக் கூடாதா..?
காமெடி கதை எழுத்வும். உங்கள் நகைச்சுவை படிக்க ஆவல்.
கதை ஜூப்பரு... கடைசி ட்விஸ்ட் எதிர் பார்க்கலை...
என்னோமோ போங்க நமக்கு இதெல்லாம் தெரியாது
// இன்னொரு சர்ரியலிச கதை.:)///
//பி.சுசிலா பாடின ஒரு பாட்டை பாட ஆரம்பிச்சேன்//
இங்கியே லேசா டவுட் ஆனேன்.
Repeat:-)))))))
நல்லா இருக்கு..லீட் காரெக்ரோட பேர சொல்லாம இருந்ததுதான் ட்விஸ்ட். சிம்பிளா கலக்கிட்டீங்க
ட்விஸ்ட் சூப்பர் தல ..
/முனி ஆம்லெட் வாங்கிட்டு வர்றதுக்குள்ள சரக்கு காலி. //
இருந்தாலும் ரொம்ப வேகம்ங்க..
நான் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
கருத்துள்ள கதை :)
Nallaa ezuthuraangkaiyyaa kathai.. :-)) eppidi ippidillaam?
சூப்பருங்கண்ணே..!
இப்படியொரு திடீர் திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை..!
ஐயோ....கொலை கொலை.
/*butterfly Surya said...
காமெடி கதை எழுத்வும். உங்கள் நகைச்சுவை படிக்க ஆவல்.*/
எங்க அண்ணனை வச்சு நீங்க காமெடி கீமடி பண்ணலியே...???
=)).. அசத்தல்..!
மிட் நைட் மசலா மேட்டர் மட்டும் இல்லைன்னா.. இன்னும் சூப்பர்...
சரக்கு, மிட்நைட் மசாலா அவர்களுக்கும், - சமத்துவத்தைக் கொண்டு வந்துட்டீங்க, வாழ்த்துகள்!
கதை டாப்பு!!! கலக்குங்கப்பு!!
\\இன்னொரு சர்ரியலிச கதை.:)\\
????/
nice one.
கதை அருமை
கலக்கல்.... தண்டோரா
கொஞ்சம் மது,
ஒரு டிராப் செக்ஸ்,
இன்னொரு டிராப் செல்பீஷ்னெஸ்,
முக்கா கிளாஸ் சமத்துவம்,
இரண்டு பெக் வன்முறை,
எல்லாம் ஒரு விசுறு விசி, ஹைவே ஸ்பீடு நடை....
தலைவா... இப்படி எல்லாத்தயும் ஒரே முடக்குல எழுத உன்னால தான் முடியும்.
என்ன ஒரு ஸ்டைல்....
நிறைய எழுதும்மா....
அப்புறம் உங்க பிரண்ட் சாருகிட்ட சொல்லுங்க... அவருக்கும் கண்டிப்பா கதை பிடிக்கும்.
Post a Comment