Friday, December 4, 2009

கடன் வாங்கி கழித்தல்....


மாப்ள..ஒரு நாளாவது நாலு தெருவையும் சுதந்திரமா சுத்தி வரணும்டா… சொன்னது என் நண்பன். இடம் தஞ்சை.. காரணம் கடன் தொல்லை..எங்கள் ஊரில் மேற்கு,கிழக்கு,வடக்கு,தெற்கு என்று நான்கு ராஜவீதிகள்.ஊடாக சின்ன சந்துகள்..ஒரு சந்தில் நுழைந்தால் போதும் சுத்தி சுத்தி நாலு ராஜ வீதிகளையும் அடையலாம்...+2 முடித்து கல்லூரியில் கால் வைத்த பருவம். டீக்கடை,பொட்டிகடை,வாடகை சைக்கிள் கடை,அயர்ன் கடை.. இப்படி எங்கள் கடன் கணக்கு சகல இடங்களிலும் வியாபித்திருந்தது.ஒரு இடத்துக்கு நேர் வழியில் போகவே முடியாது.எங்களை பொறுத்தவரை நேர்வழி சுற்றாகவே இருந்தது. என் நண்பன் உலக்சுக்கு ஒரு சமயம் பொட்டி கடை கடன் ரூ100 ஐ தாண்டி விட்டது. கடைகாரன் கொலைவெறியோடு இருந்தான். சிக்கினா சின்னாபின்னம்தான் என்ற நிலை. மாப்ள..ரூபா பொரட்டி கொடுத்திடலாம்..ஆனா பார்த்தவுடனே மேல கையை வச்சுட்டான்னா பிரச்சினையாயிடும்.என்ன பண்ண...ஒரு ஐடியா பண்ணோம்.

அதன்படிஉலக்ஸ் முதலில் மீசையை எடுத்தான். வெள்ளை வேட்டி சட்டைக்கு மாறினான். நேராக அந்த கடைக்கு போனான். கடைகாரருக்கு அடையாளம் தெரியவில்லை. இவன் அவனான்னு குழப்பம். என் தம்பி உங்க கிட்ட கடன் வாங்கியிருக்கானா? கேட்டது நம்மாளூ..கடைகாரர் ஆமாம் என்க, இந்தாங்கன்னு பணத்தை கொடுத்து தம்பி வேலை விஷயமா வெளியூர் போயிட்டான்.இனிமே வர மாட்டான். கடைகாரர் உணர்ச்சி பிரவாகமானார்.சே..எப்படிபட்ட புள்ளைய திட்டிபுட்டோம்னு “பரவாயில்லை தம்பி..நீங்க எப்ப எது எவ்வளவுக்கு வேணும்னாலும் நம்ம கடையில வாங்கிகங்க.. காசு மெதுவா கொடுத்தா போதும். இது எப்புடி இருக்கு. அப்புறம் அந்த கடன் குட்டி போட்டுகிட்டே போனது தனி கதை.

பெத்த கடன்,வளர்த்தகடன்,சோத்துக்கடன்,நன்றிகடன் இப்படி எத்தனை கடன் இருந்தாலும் ரூபாயா கொடுத்த கடனும்,வாங்கின கடனும் தான் பாடாய் படுத்தும். கடன் பெற்றார் நெஞ்சம் போல் .. இது பழசு. கடன் கொடுத்தார் நெஞ்சம் இதுதான் புதுசு. பாருங்க ஒரு பீடி கடன் கேட்டு கொடுக்கலை..இதுக்கு ஒரு கொலை..கடன் வாங்குறது சின்ன புள்ளைல இங்க் கடன் வாங்குறதிலயே ஆரம்பிக்குது.பேனா கழுத்தை திருகி சொட்டு கணக்குல மை கடன் வாங்கி,அதை திருப்பி கொடுத்து வரவு செலவு முளையிலேயே தொடங்குது.

என் சொந்தகாரன் ஒருத்தன் நல்ல நிலைமையில் இருந்தான். அப்ப நம்ம நிலைமை சிங்கிள் டீ க்கே சிங்கி.. மேற்படியான் கிட்ட போய் 1000 ரூ கேட்டேன். உடனே கொடுத்துட்டான். கொஞ்ச நாள் கழித்து எனக்கு 3000 ரூ தேவைப்பட்டது. உடனே 1000 ரூ இன்னொரு இடத்தில் புரட்டி சொந்தக்காரனிடம் கொடுக்கலாம்னு போனேன்.. முதல்ல இதை கொடுத்துட்டு , ஒரு 2 நாள் கழிச்சு 3000 க்கு அடி போடலாம்னு மாஸ்டர் பிளான். ஆனா அவன்? 1000 ரூ வேணாம்னுட்டான். பாவம்டா நீயே கஷ்டப்படுற.. வச்சுக்கன்னுட்டான். அதாவது முற்றுப்புள்ளி வச்சுட்டான்..புத்திசாலி. தப்பிச்சுட்டான்..

கடன் வாங்கி கழித்தல்.. இந்த தலைப்பில் ஒரு காமெடி ஸ்கிரிப்ட் எழுதினேன். முழுக்க சொந்த அனுபவம்தான். விஜய் டிவி அப்போது கோல்டன் ஈகிள் டிவியாக இருந்தது.. கங்கைஅமரன் அதன் தலைவராக இருந்தார். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடிச்சு போய் விவேக்கை வச்சு பண்ணலாம்னு சொன்னார். ஆனால் நம்ம சனியன் சடை பின்னி, பூ வச்சு ஆட ஆரம்பிச்சுது..பிராஜெக்ட் கோவிந்தா. அமரனும் வெளியேறி விட்டார். பின் வரும் பாரா அந்த கதையில் வரும் ஒரு பிட்டுதான்..

எழுத்தாளர் ஏடாகூடம் ஒரு புத்தகம் போட்டார். ”கடன் வாங்குவது எப்படி?” அதை கடனுக்குத்தான் அச்சடித்தார்.பிரஸ்காரர் பணம் கேட்டு வந்தபோது ஏடாகூடம் சொன்னார்” ஐயா இன்னொரு புத்தகம் எழுதியிருக்கேன். அதையும் கடனுக்கு அச்சடிச்சு கொடுத்திங்கன்னா மொத்தமா திருப்பிடறேன்.அது என்னய்யா புதுசுன்னு கேட்டால் “வாங்கின கடனை திருப்பி தராமல் இருப்பது எப்படி”யாம்.


கடன் வாங்குறதுக்கு கணக்கு வாத்தியாரும் ஒரு காரணம்.அவர்தானே பத்தலைன்னா பக்கத்துல கடன் வாங்கி கழிங்கன்னு சொல்லி கொடுத்தார்.
கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை.. ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா கொடுத்திங்கன்னா..



19 comments:

மணிஜி said...

பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் இட்ட இடுகை. சில மாற்றங்களுடன்..

Cable சங்கர் said...

ரீமிக்ஸ்... வர வர பதிவுக்கெல்லாம் ரீமிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கப்பா..:)

கே.என்.சிவராமன் said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

??????

அண்ணன் வலைத்தளத்துலயா இப்படி?

இடுகை?

இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்னு தோணுது. உங்களால எழுத முடியும். அதனாலத்தான் தோணுச்சு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

sathishsangkavi.blogspot.com said...

//கடன் வாங்குறதுக்கு கணக்கு வாத்தியாரும் ஒரு காரணம்.அவர்தானே பத்தலைன்னா பக்கத்துல கடன் வாங்கி கழிங்கன்னு சொல்லி கொடுத்தார்.//

பாவங்க அவரு.............

அவர் கடன் வாங்கிய பின் கழிக்கத்தான் சொன்னார்
ஓடி ஒளியவா சொன்னார்......

நையாண்டி நைனா said...

/* பைத்தியக்காரன் said...
//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//
??????
அண்ணன் வலைத்தளத்துலயா இப்படி?*/

கடன் கொடுத்தவங்க ஒரு வேளை இது மூலமாவும் முயற்சி பன்னீருவாங்கலோ என்று பயந்திருப்பார்...

நையாண்டி நைனா said...

கடன் வாங்கி கழிக்கலாம் ஆனா அதுக்காக... இப்படி சொந்த பதிவையே கடன் வாங்கி கடன் வாங்கி கிழிக்க, சாரி... கழிக்க கூடாது..

butterfly Surya said...

ரீ மிக்ஸ் நல்லாதான் இருக்கு. அண்ணன் சிவராமன் சொல்வது போல் இன்னும் எழுதியிருக்கலாம்.

முன்னாடி போட்ட பின்னூட்டம் பதிவாகவில்லையே..??

vasu balaji said...

ஓ. இதான் ரீ மிக்ஸா. நல்லாத்தான் இருக்கு. =))

Unknown said...

அந்த கடைகாரர் போலவே நம்ம ஊரு காரங்க எல்லாம் நல்லவங்க அண்ணா...

cheena (சீனா) said...

அடடே - தஞ்சாவூரா - நாலு ராஜ வீதியா

நான் பொறந்தது மேல ராஜ வீதிங்கோ

படிச்சது எட்டாம் கிளாஸ் வரைக்கும் அங்கே தாங்கோ -

கடன் வாங்கறதப் பத்தி ஒரு இடுகையா - பலே பலே - நல்லாவே இருக்கு

நல்வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா கொடுத்திங்கன்னா..//
யாத்தா.. நான் எஸ்கேப்பு... :-)

மணிஜி said...

/cheena (சீனா) said...
அடடே - தஞ்சாவூரா - நாலு ராஜ வீதியா

நான் பொறந்தது மேல ராஜ வீதிங்கோ

படிச்சது எட்டாம் கிளாஸ் வரைக்கும் அங்கே தாங்கோ -

கடன் வாங்கறதப் பத்தி ஒரு இடுகையா - பலே பலே - நல்லாவே இருக்கு

நல்வாழ்த்துகள்//

வருகைக்கு நன்றி சீனா ஐயா... கல்லூரி வரி தஞ்சைதான்..அப்புறம்தான் சீர் கெட்ட சென்னை

மணிஜி said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

கலகலப்ரியா said...

//கணக்கு வாத்தியாரும் ஒரு காரணம்//

அது சரி..! கடன்காரங்க கிட்ட அந்தாளு அட்ரஸ் கொடுத்து கைய கண்பிச்சிடுவீங்க போல..!

நிலாமதி said...

என்கிட்ட கடன் கேட்க போறீங்களோ என்று பயந்து விடேன் .........இது சும்மா...

Chitra said...

................கடன் வாங்கி விட்டு எஸ்கேப் ஆன சந்தோஷம், பதிவை வாசிக்கும்போது.

மணிஜி said...

நன்றி..கலகலப்ரியா..

நன்றி..சித்ரா..நிலாமதி...

பெசொவி said...

ரொம்ப நல்ல பதிவு.
(அண்ணே...கடனுக்கு சொல்லிட்டுப் போகலைன்னே...!)

Rajan said...

came here thru Charu link . did not expect much and visited today after a week. but liked ur sense of humour and narration. keep it up...