அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்..ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..அந்த மாதிரி முன்னாள்,இன்னாள் முதல்வர்களை சந்திக்க வைத்தால் என்ன ? என்று ஒரு முயற்சி
அண்ணா சமாதிக்கும்,எம்ஜிஅர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது..கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்..அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா?வழக்கம் போல் லேட்டாக வர..கருணா விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..
”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?
இல்லை அம்மணி “கிரகணத்தை அப்படித்தான் பார்க்கணும்..கேள்விபட்டதில்லையா?
வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..
எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..
நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..குடும்பத்துல எல்லாரும் ஆடறாங்க..
அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..
விலைவாசிய பாத்திங்களா?விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...
அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம். இடைத்தேர்தல் செலவுக்காகவே மந்தி(ரி)களை ஓவர்டைம் பார்க்க சொல்லியிருக்கேன்.
ரொம்ப பீத்திக்காதீங்க. அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...
அம்மணி. இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம். முன்ன மாதிரி எல்லாம் சுவத்துல இடம் பிடிச்சு ,சின்னத்தை எழுதினா மட்டும் போதாது. பெரியவனை கேளுங்க. அவர்தான் எல்லாம் பாத்துக்கிறாரு.
வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது. 234 ம் எனக்குத்தான்.
அறியாமையில் அரற்றுகிறீர்கள். அது இன்னும் சொர்க்கம். உங்களுக்கு சுத்தம். ஒன்னு காந்தி,இல்லன்னா கத்தி. எவனாச்சும் எதிர்ப்பான்?
நீங்க புள்ளை பிடிக்கிறா மாதிரி என் கட்சி காரனையெல்லாம் தூக்கிட்டு போயிடறீங்க? நான் பொழுது போகலைன்னா எஸ்வி சேகரை பேச சொல்வேன். அவரை வச்சு நீங்க என்ன பண்ணுவீங்க?
இங்கதான் ஆற்காடு, துரைன்னு ஏகப்பட்ட பேர் இருக்காங்களே. அப்படியும் பொழுது போகலைன்னா, ஏழை மக்கள் சில பேரை அழைத்து நான் வசனம் எழுதிய படங்களை போட்டு காமிப்பேன். அவங்க குலுங்க,குலுங்க சிரிக்கும்போது, நான் இறைவனை காண்பேன்.
ஆமாம். கூவம் மணக்க போகுதாமே. இது உங்களுக்கே ஓவரா தெரியலை?
அதை பத்தி நமக்கென்ன? சிங்கப்பூர் போயிட்டு வரும்போது டூட்டி ஃபரீ ஷாப்ல ஏகப்பட்ட செண்ட் வாங்கிட்டு வந்தோமில்ல. அதை ஊத்திதான் மணக்க வைப்போம். எப்பூடி?
சகிக்கலை. என் ஆட்சிகாலத்தில்....
இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..
அம்மையாரே,நம்ம லாவணியை அப்புறம் கூட வச்சுக்கலாம்..முதல்ல இந்த மாதிரி புல்லுருவிகளை என்ன பண்ணனும் தெரியுமில்ல...
ஆமாமாம்..இந்த விஷயத்துல நீங்களும் நானும் ஒரே கட்சிதானே..
அப்புறம் என்ன? ஸ்டார்ட் மூஜிக்....
கடற்கரையில் பதிவர் சந்திப்பு முடிகிறது...
அக்னிப்பார்வை : அதோ, அங்க முனகல் கேக்குது. தண்டோராவா இருக்குமோ?
அடப்பாவி அவனேதான். அப்பவே சொன்னேன் . ஆட்டோ வரும்னு பார்த்தா புல் டோசர் ஏறின மாதிரி இருக்கு..
ரமேஷ் வைத்யா : ஏ அப்பா.. யாராச்சும் அவனுக்கு சரக்கு வாங்கி கொடுங்கப்பா. எந்திரிச்சுருவான்.
லக்கிலுக் : உடலெங்கும் இருக்கும் நகக்குறிகளை பார்த்தால் புத்திக்கு புதிதாக ஏதோ படுகிறது...ஆனால் மனசு ஏற்க மறுக்கிறது...
அதிஷா “ஐயா லாலி..லாலி..ஜாலி..ஜாலி...தண்டோர காலி..காலி....
முரளிகண்ணன் : இப்படித்தான் 80களில் வந்த ஒரு திரைப்படத்தில் மோகன் ஹீரோ என்று நினைக்கிறேன். மாறுகால், மாறுகை வெட்டபட்ட நண்டு மாதிரியே இருக்காரே.
கேபிள் : பரங்கிமலை ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரியே இருக்கானே. ஒரு சேஞ்சுக்கு ஹாட் ஸ்பாட்ல போட்றுவமா?
பைத்தியக்காரன் : அதிகார வர்க்கத்தின் உரையாடலில் அற்பர்கள் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் கட்டுடைந்து போகும்.அடுத்த வாரம் உலகபடத்துக்கு ஒரு டிக்கெட் போச்சு. (ஏற்கனவே நாலு பேர்தான் வர்றாங்க)
ஜ்யோவ்ராம்...:

இனியும்
ஒவ்வொரு
சனியும்
எண்ணெய் தேய்த்து
எண்ணெய் தேய்த்து
குளியும்..
எழுதும் வாழ்நாள்
எழுதும் வாழ்நாள்
முழுதும்,
அவர்தமை
அவர்தமை
தொழுதும்
இந்த பத்தாவது வரியில் அவருக்கு 10 போடலாம்
நர்சிம் : எதாவது செய்யணும் பாஸ். உயிர் தங்குமான்னு பாருங்க. அய்யனார் கம்மாவை படிச்சாரான்னு தெரியலையே.
நர்சிம் : எதாவது செய்யணும் பாஸ். உயிர் தங்குமான்னு பாருங்க. அய்யனார் கம்மாவை படிச்சாரான்னு தெரியலையே.
கார்க்கி : வேட்டைகாரன் வர்றதுக்குள்ள ஏன் அவசரம்?
டோண்டு : என்ன செய்யறது..தொட்டாலே போயிடும்..சமீபத்துல இந்த வார்த்தைக்கு காங்கோ மொழில ஒரு கவிதை படிச்சேன். டிரைவர் வந்துட்டான்னா, நாம கிளம்பிடலாம். போற வழியில விஜிடபிள்ஸ் வாங்கணும்.
வால்பையன் “ “சே..வடை போச்சே. கடைக்கு தனியாத்தான் போகனுமா?
ஜாக்கி சேகர் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்புகிறார்.

ஜாக்கி எங்க? பின்ன மீ த பர்ஸ்ட்.போய் சூடா பதிவு போடனுமில்லே.
25 comments:
மீள் பதிவு மாதிரி மாதிரி தெரியுதே..!
கொஞ்சம் அப்டேட்ஸுடன்..அய்யனார் கம்மா, வேட்டைக்காரன் இதெல்லாம் சேர்த்து..!
/♠ ராஜு ♠ said...
மீள் பதிவு மாதிரி மாதிரி தெரியுதே..!
கொஞ்சம் அப்டேட்ஸுடன்..அய்யனார் கம்மா, வேட்டைக்காரன் இதெல்லாம் சேர்த்து..!//
டீஜண்டா ரீமிக்ஸ்...
"சும்மா டச் வுட்டு போககூடாதுல்ல...."
ரைட்டு
//விலைவாசிய பாத்திங்களா? விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...//
இதுல உங்கள் ட்ரெடிஷனல் டச் தெரிகிறது பாஸ்.
கடற்கரையில் பதிவர் சந்திப்பு : அந்தந்த பதிவர்களுக்கே உரித்தான பனியில் சொல்லியிருப்பது அருமை ஸார்.
குறிப்பா கேபிள் ,ஜாக்கி சேகர் அண்ணா கற்பனை டியலாக்ஸ் அருமை :)
அப்ப நான்தான் போட்டோவே எடுத்தனா?
அப்ப நான்தான் போட்டோவே எடுத்தனா?///// ஆமாம். அதுல என்னையும் கேபிளையும் மறந்துட்டியா..??
நல்லாயிரு மக்கா..
என்ன மணிஜீ, ஒரே டீஜண்டா ரீமிக்ஸ்ஸை போட்டு தாக்குறீங்க.. ??
ரைட்டு
//பரங்கிமலை ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரியே இருக்கானே//
எல்லாமே செம நக்கல் தலைவரே
சூப்பர்ண்ணே
என்னை விட்டுட்டீங்களேண்ணே..!
எழுதிக்குங்க..
தண்டோராவின் நிலையைப் பார்த்து உண்மைத்தமிழன் சென்னை வீட்டையும், பிளாக்கையும் காலி செய்துவிட்டு திண்டுக்கல் ஓட்டம்..!
//உயிர் தங்குமான்னு பாருங்க. அய்யனார் கம்மாவை படிச்சாரான்னு தெரியலையே//
:)
ஜி.. உங்களுக்கு ஓவருதான் லொள்ளு
\\பிளாக்கையும் காலி செய்துவிட்டு திண்டுக்கல் ஓட்டம்..!\\
அதத்தான் Google ஏற்கனவே செஞ்சாச்சே..!
அகநாழிகை- புத்தக வெளியீட்டுவிழா--புகைப்படங்கள்.
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html
அண்ணே! எங்களையும் ஆட்டையில சேர்த்துக்கங்க...
நீங்க மேல சொன்ன ரெண்டு பெரும் நம்மள சேர்த்துக்க மாட்டாங்க...
கீழ உள்ள மக்களோடு மக்களா எங்களையும் சேர்த்துக்கங்க...
அடுத்ததா எப்ப எதார்த்தத்தை கொட்டி
என்டர் பட்டனை தட்டி
கவிதை எழுத போறீங்க ?
நாங்க அதுக்கும் வைப்போம் ஒரு விளம்பரத்தட்டி...
:-)))
கலக்கல் தலைவரே.
:-))))))))
ரைட்டு
எடுத்துச்சொல்லலாம்னு பார்த்தா நம்மாளுங்கள் அத்தனை பேரின் வசனங்களும் அவ்வளவு பஃர்பெக்ட். :-))
ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரி போட கூட யாருமில்லையே..?:(
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா:))). அசத்தல் தலைவரே
//கருணா விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்//
அதுதான் 'சன்' மற்றும் 'கிளாஸ்' இருக்கே...
=))... அசத்தல்..!
வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..
அன்புடன் தண்டோரா
அண்ணே நல்ல கற்பனையில் நல்ல நகைச்சுவை,ரசித்து சிரித்தேன்.
கற்பனை அபாரம் அன்பின் தண்டோரா
நல்வாழ்த்துகள்
Post a Comment