Friday, August 28, 2009

கொஞ்சம் ரீமிக்ஸ்....




பந்தலிலே பாகற்க்காய்...
தொங்குதடி பாத்தியா??
போகும் போது பறிச்சுக்கலாம்..அடியே....

இது தென் தமிழ் நாட்டின் ஒரு ஒப்பாரி பாடல்...எழவு வீட்டிற்க்கு ஒப்பாரி வைக்க வந்த இருவர் ஊடே அந்த வீட்டில் இருக்கும் பாகற்காய் கொடியை கண் வைத்து பாடுகிறார்கள்.ஓப்பாரி...உண்மையில் அழிந்து கொண்டு வரும் ஒரு அற்புதமான கலை...துக்க வீட்டில் ராகம் போட்டு பெருங்குரலெடுத்து பாடும் போது ....துக்கம் கரைந்து..அழுகை வெளிப்பட்டு மனம் லேசாகிறது.தமிழ் நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஒப்பாரி பாடப்பட்டு வருகிறது..மதுரை,ராமனாதபுரம்,தேனி,திண்டுக்கல்,தூத்துக்குடி,சேலம் என அந்தந்த வட்டார வழக்கில் ஏராளமான பாடல்கள் .இதை பற்றி ஒரு ஆவணப் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.தென்திசை இயக்கம் என்ற ஒரு அமைப்பு சில நண்பர்களால் மதுரையில் தொடங்கபட்டிருக்கிறது.கலை மற்றும் மாற்று ஊடகம் போன்றவற்றை வளர்ப்பதில் பெரும் முனைப்புடன் இருக்கிறார்கள்.அவர்கள் உதவியுடன் விரைவில் ஒப்பாரியை பற்றிய பதிவை தொடங்க உள்ளோம்..

-------------------------------------------------------------------------------------------------

சமீபத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு போக நேரிட்டது..மிக ஆடம்பரமான திருமணம்..அத்தனை லேட்டஸ்ட் மாடல் கார்களும் ஆஜர்.உறவினர் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டம்தான் அதிகம் இருந்தது..திருமண வீட்டாருக்கு ஒரு வேலையும் இல்லை.அத்தனையும் காண்ட் ராக்ட்தான்.நெருங்கிய சொந்தங்கள் சிலர் காணும்..ஆஃபிஸ்,மீட்டிங்க்.ஆடிட்டிங்,அப்ராட்,நாள்(அந்த) என்று ஆயிரம் சாக்குகள்...வாண்டுகள் கூட்டம் கம்மி.வந்திருந்த சிலதும் அப்பாவின் மல்டிமீடியா செல்லை நோண்டி போட்டோ,கேம்ஸ் என்று பிஸி...கூட்டம் நிறைய..சத்தம் நிறைய....ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது?

என் சொந்த ஊர் தஞ்சை...சிறு வயதில் உறவினர் வீட்டு கல்யாணம் எல்லாம் சென்னையில்தான்(மெட்.. ராஸ்)..கல்யாணம் என்றால் குஷிதான்..தஞ்சையில் விலைகுறைவு என்பதால் வாழை இலை,காய் எல்லாம் வாங்கி கொண்டு சாயந்திரம் 5 மணிக்கு கிளம்பும் செங்கோட்டா பாஸ் பாசஞ்சரில் ஏறினால் காலையில் எக்மோரில் இறங்கி நேராக சத்திரம்....


அப்போதெல்லாம் கல்யாணம் என்பது 3 நாள் கூத்து..(இப்போ அதுவும் பாதியாகி விட்டது).நான்,3 தம்பிகள்,அக்கா,அப்பா,அம்மா(குடும்பதோடு போகலன்னா கோவிச்சுகுவாங்கன்ணே)..சத்திரம் போய் இறங்கினால் அங்கு பெரிய படையே இருக்கும்.மாமா,சித்தி,பெரியப்பா,மற்றும் நம் உறவினர் வீட்டு வாண்டுகள் எல்லாம் சேர்த்து ஒரு 34/40 தேறும்..அப்ப ஆரம்பிக்கும் அமர்க்களம் இருக்கே..அடடா..வாழை பழம் முதல் வடை வரை சமையற்காரருக்கு தெரியாமல் (அவங்க பிசியா ரம்மி ஆடிட்டு இருப்பாங்க..) திருடி பங்கு பிரிப்பதில் சண்டை போட்டு..(சில ஆள்காட்டி எட்டப்பங்களும் செட்டில் உண்டு) வாரி விழுந்து முட்டி சிராய்ச்சு...பின் பக்கத்தில் எதாவது சைக்கிள் கடையை கண்டு பிடித்து வாடகை சைக்கிள்(ஹவர் சைக்கிள்)எடுத்து ஓட்டி,ஊரை சுத்தி..ஆளாலுக்கு ஒரு பக்கம் தேட வச்சு..அத்தனை அமர்க்களமும் நடக்கும்..(அத்தை/மாமா பெண்களிடம் பிலிம் காட்டும் சைடு ரீலும் உண்டு).

இப்போது இருப்பது போல் ஆடம்பரமான மண்டபங்கள் அப்போது இல்லை..எல்லாம் பரிமுனை(parrys)யில் தெலுங்கு செட்டியார் மண்டபங்கள்தான்..அங்கு ஒரு மானேஜர் ..அவர் குடும்பமும் சத்திரத்தின் ஒரு அறையில் இருப்பார்கள்.அங்கும் ஒரு பெண்ணோ,பையனோ சினேகிதமாகி விடுவார்கள்..கல்யாணம் முடிந்து சத்திரம் காலி பண்ணும் போது அவர்களை பிரியும் போது ஒரு மெல்லிய துக்கம் வரும்..

கொஞ்சம் பெரியவனான பின்(நான் வளர்கிறேனே மம்மி??)கல்யாணம் சைட் அடிக்கும் உற்சவமானது..இன்னும் கொஞ்ச நாளானது...மப்பு.... மங்காத்தா..ரம்மி.. என்று ஆரோக்கியமான வளர்சி அடைந்தது...இப்ப நம்மளும் குடும்பஸ்தனாயிட்டோம்...(கொசு வத்தி முடிய போவுது..)

இந்த திருமணத்தில் வாண்டுகளையே காணும்..இருக்கும் சிலரும் பேசினால் அதில் ஒரு சின்ன தற்பெருமையே இருந்தது.(பாட்டு..,கராத்தே..கீ போர்டு..நீச்சல்..(ஒரு தாய் குலம் சொல்கிறார்..விக்கிக்கு யார் கூடவும் விளையாடவும் சரி பேசவும் பிடிக்காது..ஸ்கூல்,கிளாஸ்..கம்ப்யூட்டர்..அதான் அவன் உலகம்)..நான் யோசித்தேன் அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள்..அல்லது எனக்கு அப்போது எது கிடைக்கவில்லை...(இந்த போலியான பொழுது போக்கும் ஆடம்பரமும்)ஏன் இப்படி பிள்ளைகள் தனித் தனி தீவாய் இருக்கிறார்கள்...
காரணம் ஒன்றுதானாக இருக்கமுடியும்..சமூக,பொருளாதார விழிப்புணர்ச்சி அல்லது நன்கு முன் எச்சரிக்கையுடன் வாழ்வை திட்டமிடுதல்...

"நாம் இருவர்..நமக்கு இருவர்..என்று தொடங்கி..பின் அது "நாம் இருவர்..நமக்கு ஒருவர்" என்று ஆனது..இனி என்ன ஆகும் நாமே இருவர்..நமக்கு எதற்கு இன்னொருவர்.." என்று ஆகிவிடுமோ??

""மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
” தாய் மாமன் சீர் கொண்டு வாராண்டி...அவன் தங்க கொலுசு....

இந்த பாட்டுக்கு எல்லாம் வருங்கால சந்ததிக்கு பொழிப்புரை எழுதித்தான் புரிய வைக்க வேண்டுமோ?
-------------------------------------------------------------------------------------------------

காந்தி கடன் வாங்கிட்டு திருப்பிகொடுக்காமல் டபாய்த்திருப்பாரோ?பின் ஏன் திரும்பி வராக் கடனுக்கு காந்தி கணக்கு என்று பெயர் வந்தது?

நண்பரும் ,பதிவரும் வண்ணத்துப்பூச்சியார் அழகாக சொன்னார்”

”அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் சில கடைகளில் கதர் குல்லா அணிந்து வந்து டீ காபி குடிப்பவர்களிடம் காசு வாங்க மாட்டார்கள். சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்களுக்கு ஒரு மரியாதையும் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவிட வேண்டி சிலர் செய்த தருமம்’ என்று என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.

அதையும் கொச்சைப் படுத்தி காசு கொடுக்காமல் ஏமாற்றுபவர்களை இப்படி சொல்கிறது நமது சமூகம்.
-----------------------------------------------------------------------------------------------------------------

நம்புங்கள்
நேற்றோடு ஒழித்துவிட்டேன்

நம்புங்கள்
நாளை முதல்
நிச்சயம் இல்லை

நான் இடுகைகள்
இடுவதை சொன்னேன்
-----------------------------------------------------------------------------------------------------------------

36 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//நம்புங்கள்
நேற்றோடு ஒழித்துவிட்டேன்

நம்புங்கள்
நாளை முதல்
நிச்சயம் இல்லை

நான் இடுகைகள்
இடுவதை சொன்னேன்//


yyyyyyyy

yyyyyyyyy

ஏன் மணிகண்டன்?

:(

:(

மணிஜி said...

///நம்புங்கள்
நேற்றோடு ஒழித்துவிட்டேன்

நம்புங்கள்
நாளை முதல்
நிச்சயம் இல்லை

நான் இடுகைகள்
இடுவதை சொன்னேன்//


yyyyyyyy

yyyyyyyyy

ஏன் மணிகண்டன்?//

வசந்த்..இன்று என்று சொல்லவில்லை

இரும்புத்திரை said...

அந்த ஒப்பாரி பாட்டு அதோடு முடியவில்லை

அதை பார்த்த இழவு வீட்டுக்காரி

"நான் விதைக்லா வைச்சுருக்கேன்..
விதைக்லா வைச்சுருக்கேன்.." என்று பாட

அந்த எதிர் கோஷ்டி

"தெரியாம சொல்லிப்புட்டோம்..
தெரியாம சொல்லிப்புட்டோம்.." என்று பாட

"எனக்கு ஒரு பதிவு போச்சே..
ஒரு பதிவு போச்சே.." என்று இப்போ நான் பாடுகிறேன்

ஒரு வேண்டுகோள்

ஒரு பதிவுக்கு மேற்கோள் காட்ட உங்க கவிதை வேணும்
எடுத்துக்கவா

மணிஜி said...

/அந்த ஒப்பாரி பாட்டு அதோடு முடியவில்லை

அதை பார்த்த இழவு வீட்டுக்காரி

"நான் விதைக்லா வைச்சுருக்கேன்..
விதைக்லா வைச்சுருக்கேன்.." என்று பாட

அந்த எதிர் கோஷ்டி

"தெரியாம சொல்லிப்புட்டோம்..
தெரியாம சொல்லிப்புட்டோம்.." என்று பாட

"எனக்கு ஒரு பதிவு போச்சே..
ஒரு பதிவு போச்சே.." என்று இப்போ நான் பாடுகிறேன்

ஒரு வேண்டுகோள்

ஒரு பதிவுக்கு மேற்கோள் காட்ட உங்க கவிதை வேணும்
எடுத்துக்கவா//

அரவிந்த்..அந்த பாட்டு முழுவதும் எனக்கு தெரியும்..
அப்புறம் அனுமதியெல்லாம் எதுக்கு?
கிழிச்சு தொங்கவிடு..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு.. திருமணங்கள் நீங்கள் கூறுவது போலவே நடக்கிறது.

ஒப்பாரி என்பது அழிந்துவிடும் நிலையிலே உள்ளது, பாகற்காய் பாட்டை ரசித்தேன் :))

Jackiesekar said...

நம்புங்கள்
நேற்றோடு ஒழித்துவிட்டேன்

நம்புங்கள்
நாளை முதல்
நிச்சயம் இல்லை--


நான் கூட மானிட்டரை சொல்ல வர்ரீங்களோன்னு நினைச்சேன்...

ஈரோடு கதிர் said...

அற்புதமான பதிவு... இதுதான் சிறப்பு என சுட்ட வேண்டியதில்லை. முழுக்க சிறப்பு

வால்பையன் said...

திருமண சடங்குகள் இப்போதெல்லாம் அரைமணி நேரம் தான்!
ஆனா போன ஸ்பீடுலயே திரும்பி வந்துருவாங்க!

Raju said...

\\இரும்புத்திரை அரவிந்த்
ஒரு பதிவுக்கு மேற்கோள் காட்ட உங்க கவிதை வேணும்
எடுத்துக்கவா\\

மொதல்ல இந்தாளுக்கிட்ட இருந்து சிஸ்டத்த புடுங்கனும்.
:)

butterfly Surya said...

ஜி, இந்த அவசர யுகத்தில் கொண்டாட்டங்களே இல்லை.

எல்லாமே சடங்காகி போனது.

Contract கல்யாண வைபோகமே...
----------------

அட.. நம்பிட்டேன்... பிரபா கொண்டு வந்ததிலே மிச்சம் இருக்கா..???

அகநாழிகை said...

தண்டாரோ,
அந்த கல்யாண நிகழ்ச்சிகளை அப்படியே கதையா எழுதலாமே.
எல்லாமே நல்லாயிருக்கு, தலைப்பு கூட.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

இராகவன் நைஜிரியா said...

// ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது? //

அங்கு உண்மையான பாசம் மறைஞ்சு போச்சு. எல்லாம் போலியா இருக்காங்க. வார்த்தைகள் உதட்டளவில் தான் இருக்கு, மனசிலுருந்து வரவில்லை.

ஒப்பாரி என்பது ஒரு ஒப்பற்ற கலை. அதனுடைய தாக்கம் வர வர குறைந்து கொண்டே வருகின்றது

Ashok D said...

:)

குடந்தை அன்புமணி said...

சில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதன்லேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா?
இது உங்களுக்கான பதிவு மணிஜி.thagavalmalar.blogspot.com வலைத்தளத்திற்கு வரவும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கே? வழக்கமானதை விட ஏதோ வித்தியாசம்.

ரமேஷ் வைத்யா said...

கல்யாணம் பற்றிய பார்வையும் ஆதங்கமும் அபாரம். நெகிழ்ந்தேன்.

ரமேஷ் வைத்யா said...

கல்யாணம் பற்றிய பார்வையும் ஆதங்கமும் அபாரம். நெகிழ்ந்தேன்.

நையாண்டி நைனா said...

நைனா அண்ணன் வர்றார் மீஜிக்கை போடுங்க... நைனா அண்ணன் வர்றார் மீஜிக்கை போடுங்க...


நல்லா இருக்கு தல, அதிலும் அந்த கல்யாண விவரிப்புகள் அருமை.

மணிஜி said...

/நம்புங்கள்
நேற்றோடு ஒழித்துவிட்டேன்

நம்புங்கள்
நாளை முதல்
நிச்சயம் இல்லை--


நான் கூட மானிட்டரை சொல்ல வர்ரீங்களோன்னு நினைச்சேன்.//

ஜாக்கி..மானிட்டரை விட பதிவுதான் போதை கூட

மணிஜி said...

/கதிர் - ஈரோடு August 28, 2009 10:51 AM
அற்புதமான பதிவு... இதுதான் சிறப்பு என சுட்ட வேண்டியதில்லை. முழுக்க சிறப்பு//

நன்றி நண்பா(வெண்பா)

மணிஜி said...

/நல்ல பதிவு.. திருமணங்கள் நீங்கள் கூறுவது போலவே நடக்கிறது.

ஒப்பாரி என்பது அழிந்துவிடும் நிலையிலே உள்ளது, பாகற்காய் பாட்டை ரசித்தேன் :)//

நன்றி நண்பரே

மணிஜி said...

/திருமண சடங்குகள் இப்போதெல்லாம் அரைமணி நேரம் தான்!
ஆனா போன ஸ்பீடுலயே திரும்பி வந்துருவாங்க//

உண்மைதான் வால்..நன்றி

மணிஜி said...

/\\இரும்புத்திரை அரவிந்த்
ஒரு பதிவுக்கு மேற்கோள் காட்ட உங்க கவிதை வேணும்
எடுத்துக்கவா\\

மொதல்ல இந்தாளுக்கிட்ட இருந்து சிஸ்டத்த புடுங்கனும்.
:)//

டக்ளஸ் யார்கிட்ட இருந்து?தெளிவா சொல்லுயா

மணிஜி said...

/ஜி, இந்த அவசர யுகத்தில் கொண்டாட்டங்களே இல்லை.

எல்லாமே சடங்காகி போனது.

Contract கல்யாண வைபோகமே..//

வாங்க வண்ணத்துப்புச்சி

மணிஜி said...

/தண்டாரோ,
அந்த கல்யாண நிகழ்ச்சிகளை அப்படியே கதையா எழுதலாமே.
எல்லாமே நல்லாயிருக்கு, தலைப்பு கூட.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//

நன்றி கவிஞரே

மணிஜி said...

/// ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது? //

அங்கு உண்மையான பாசம் மறைஞ்சு போச்சு. எல்லாம் போலியா இருக்காங்க. வார்த்தைகள் உதட்டளவில் தான் இருக்கு, மனசிலுருந்து வரவில்லை.

ஒப்பாரி என்பது ஒரு ஒப்பற்ற கலை. அதனுடைய தாக்கம் வர வர குறைந்து கொண்டே வருகின்றது//

ராகவன் எப்படியிருக்கீங்க?நன்றி

மணிஜி said...

நன்றி அஷோக்ஜி

மணிஜி said...

அன்புமணி..வருகைக்கு நன்றி..நா ஏற்கனவே பார்த்துவிட்டேன்

மணிஜி said...

/ஸ்ரீ August 28, 2009 4:15 PM
நல்லாருக்கே? வழக்கமானதை விட ஏதோ வித்தியாசம்//

அப்படியா?நன்றி

மணிஜி said...

/ரமேஷ் வைத்யா August 28, 2009 5:11 PM
கல்யாணம் பற்றிய பார்வையும் ஆதங்கமும் அபாரம். நெகிழ்ந்தேன்///

தலைவரே..அதுக்குள்ள...

மணிஜி said...

/நைனா அண்ணன் வர்றார் மீஜிக்கை போடுங்க... நைனா அண்ணன் வர்றார் மீஜிக்கை போடுங்க...


நல்லா இருக்கு தல, அதிலும் அந்த கல்யாண விவரிப்புகள் அருமை//

நைனா..எங்க போனீங்க?வலைவீசி தேடறாங்க ..பய புள்ளைங்க

உண்மைத்தமிழன் said...

கவிதைல மேட்டர் சொல்றதை என்னிக்கு நிறுத்தப் போறீங்க.?!!

ஒண்ணும் புரியலே.. நாளைக்கு பதிவு போடுவீங்களா.. அல்லாட்டி போட மாட்டீங்களா..?

இது ஏதாவது உறுதியா தெரிஞ்சாத்தான நாங்களும் போய் வா மகனேன்னும், இல்லாட்டி போகாதே மணாளான்னு பதிவு போட்டு எங்க கணக்க உயர்த்த முடியும்..?

மணிஜி said...

/கவிதைல மேட்டர் சொல்றதை என்னிக்கு நிறுத்தப் போறீங்க.?!!

ஒண்ணும் புரியலே.. நாளைக்கு பதிவு போடுவீங்களா.. அல்லாட்டி போட மாட்டீங்களா..?

இது ஏதாவது உறுதியா தெரிஞ்சாத்தான நாங்களும் போய் வா மகனேன்னும், இல்லாட்டி போகாதே மணாளான்னு பதிவு போட்டு எங்க கணக்க உயர்த்த முடியும்..?//

உண்மைத்தமிழன் அண்ணே..இப்படி வெள்ளந்தியா கேக்கறீக..என்னத்தை சொல்றது...இன்னிக்குத்தான நிஜம்..

அத்திரி said...

கொசுவத்தி நிகழ்வுகள் அருமை அண்ணே

கலையரசன் said...

கல்யாணம் குறித்த அந்த கொசுவத்திய நான் சுந்தலாமுன்னு நினைச்சேன்... வடபோச்சே!!

ஆனாலும் நீங்க அத சொன்ன விதத்துல ஒரு "கிக்" இருக்கதான் செய்யுது தலைவா!

ஷங்கி said...

நம்ம ஊரு கல்யாணம் பத்தி, இங்கே பெருமையாப் பேசி அப்புறம் இப்பல்லாம் உங்க ஊரு கல்யாணம் மாதிரி ஆச்சிப்பான்னு அழுவாச்சியோட போன வெள்ளிக்கிழமைதான் ஒப்பாரி வைச்சேன். நீங்க பதிவைப் போட்டுட்டீங்க!
நன்று, நன்றி!