Wednesday, August 5, 2009

கூட்டாஞ்சோறு-----05/08/09

வழக்கு ஒன்று:(கோர்டில் பணிபுரியும் நண்பர் சொன்னது)

கும்பகோணம் நீதிமன்றம்.திருட்டு குற்றம் சாட்டப்பட்டு ஒரு பெண் கூண்டில் நிறுத்தப்படுகிறாள்.பெரிதாக ஒன்றுமில்லை.பக்கத்து வீட்டில் ஒரு கால் பவுன் கம்மலை திருடிவிட்டாளாம்.முதன் முறை என்பதால் குறைந்த பட்சமாக ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

ஐயா,நான் என் தரப்பை சற்று விளக்க அனுமதி வேண்டும்.

நீதிபதி கனிவுடன் சொல் என்கிறார்.

ஐயா,என் புருஷன் ஒரு பெருங்குடிகாரன்.இன்னொருத்தியுடன் ஓடி விட்டான்.ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு வைத்தியம் செய்யவதற்காகவே திருட நேர்ந்தது.எனக்கு வேறு ஆதரவும் இல்லை.நான் சிறைக்கு சென்று விட்டால் என் மகனின் கதி.?ஆனால் இனி ஒரு போதும் நான் திருடமாட்டேன்.பார்த்து செய்யுங்கள்..

நிதிபதி யோசிக்கிறார்.அம்மா.குற்றத்தை நீயே ஒப்புக்கொண்டு விட்டாய்.விடுதலை செய்ய முடியாது.உன் பிள்ளையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.நீயின்றி அச்சிறுவனால் இருக்கவும் முடியாது என்று தெரிகிறது.ஆகவே உன் தூண்டுதலின் பெயரில் உன் மகன் வீட்டுக்குள் புகுந்து நகையை எடுத்து வந்து உன்னிடம் கொடுத்ததாக வழக்கை மாற்றி ,உன் மகனையும் உன்னுடன் சிறைக்கு அனுப்புகிறேன்.உள்ளே அவனுக்கு கல்விக்கும் ஏற்பாடு செய்யப்படும்.தண்டனை முடிந்து வந்ததும் உனக்கும் ஒரு வேலைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------வழக்கு இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)

16 வயது இளம் பெண் ரம்யா.காதல் வந்து விட்டது.காதலனுக்கு வயது 19 தான்.வீட்டில் எதிர்ப்பு.ஓடி போகிறார்கள்.பெண்ணின் தாய் ஹேபியஸ் கார்பஸ் மனு போடுகிறார்.கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர் செய்ய போலிசுக்கு கட்டளையிடப்படுகிறது.அதற்குள் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.போலிஸ் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள்.

மைனர் பெண்ணை கடத்திய குற்றத்துக்கு காதலனுக்கு சிறையும்,பெண்ணை தாயுடன் அனுப்பவும் தீர்ப்பாகிறது.

ஐயா நான் என் தரப்பை உரைக்க அனுமதி வேண்டும்--ரம்யா

சொல்லம்மா?

ஐயா,என் தாய்க்கு நாலு புருஷன்கள்.முதல் புருஷனுக்கு பிறந்தவள் நான்.அவர் பிரிந்து விட்டார்.வரிசையாக தெருவுக்கு ஒன்றாக வைத்திருக்கிறாள்.ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் செய்வாள்.நாலாவது புருஷனுக்கு என்னை விற்று விட இருந்தாள்.அதனால்தான் மனசுக்கு பிடிச்சவனுடன் ஓடிப் போனேன்.

சரியம்மா..நீ மைனராச்சே..காப்பகத்துக்கு போகிறாயா?இரண்டு வருடம் கழித்து புருஷனுடன் சேர்ந்து கொள்.

ஐயா..எங்களுக்கு திருமணம் மட்டுமல்ல,எல்லாமும் ஆகிவிட்டது.இந்நிலையில் அவரை பிரிந்து ,இரண்டு வருடம் கழித்து வந்தால் அவர் என்னை ஏற்று கொள்வார் என்ற உத்தரவாதத்தை கோர்ட் எனக்கு அளிக்குமா?

நீதிபதி யோசிக்கிறார்..சரியம்மா..நீ புருஷனுடன் போகலாம்.அவனையும் விடுதலை செய்கிறேன்..புருஷன் வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனப்தை போலிசார் தொடர் கண்காணிப்பில் உறுதி செய்து கோர்ட்டில் தெரிவிக்க உத்தரவிடப்படுகிறது..

-------------------------------------------------------------------------------------------------

திருவள்ளுவர் பிறந்த மயிலாப்பூரில் அவருக்கு ஒரு கோயில்உண்டு.பூஜை,பிரசாதம்,திருக்குறள் ஓதல் என்று அமர்க்களப்பட்ட கோயில் இந்து அறநிலைய துறையின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது.பெங்களுர் தமிழ்சங்கத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் அள்ளி கொடுத்திருக்கிறார்..ஆனால் மயிலை திருவள்ளுவர் கோயில் இன்று கேட்பாரற்று கிடக்கிறது.அங்கிருக்கும் வள்ளுவர் சிலை அடையாளம் தெரியாத அளவுக்கு அழுக்கடைந்து இருக்கிறதாம்.

இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும் அரசியல் இருக்கிறது.விரைவில் பெங்களூரு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது.18 லட்சம் தமிழரின் ஓட்டுக்கள்தான் அதை நிர்ணயிக்குமாம்.அதற்காகத்தான் அந்த எலி அம்மணத்தோடு அலைகிறதாம்..

-------------------------------------------------------------------------------------------------
ஓபாமா தேசத்தில் ஒப்பாரி அதிகமாயிருக்கிறது.வீடு இல்லாமல் பரதேசியாய் சுற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம்.அதனால் குடிமக்களே ..எங்காவது சென்று வாருங்கள்..விமான சீட்டு இலவசம் என்று கூவிக் கொடுக்கிறார்களாம்.வழிச்செலவுக்கு காசும் உண்டாம்.

-------------------------------------------------------------------------------------------------

லண்டனில் ஒரு பெண் ,தன் திருமணத்துக்கு விருந்தாளிகள் தேவை என்று விளம்பரம் கொடுத்திருக்கிறாள்.தான் ஒரு அனாதை என்றும் தன் திருமணத்தை சிறப்பிக்க ஆட்கள்தேவை..விருந்தாளிகள் நேர்முகத்தேர்வின் மூலம் அனுமதிக்க படுவார்கள்..தகுந்த சன்மானமும் உண்டாம்..(கையில் காசில்லை..வயிற்றில் பெரும் பசி..நண்பன் ஆலோசனைப்படி”மொய்” கவரை வாங்கி சட்டைப்பையில் வெளியில் தெரியும் படி வைத்துக்கொள்டு ஒரு கல்யாணத்தில் ஓசி சோற்றை கும்மியடித்தது நினைவுக்கு வருகிறது)

-------------------------------------------------------------------------------------------------

ஒரு குறும்படம்..நண்பர் பொன்.சுதா இயக்கியது..

மெல்லிய,உற்சாகமான ஹம்மிங்குடன் ஒருத்தி குளிக்கிறாள்.பின் பீரோவை திறந்து ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறாள்..பின் மேக்கப்..பார்த்து,பார்த்து அலஙகரித்து கொள்கிறாள்..பின் நகை,கடிகாரம் என்று ரசனையுடன் அணிகிறாள்..ஒரு முறை ஆளுயர நிலைகண்ணாடி முன் அழகை ரசித்து கொள்கிறாள்.பின் மீண்டும் பீரோவை திறந்து அந்த கறுப்பு அங்கியை எடுத்து முழுவதும் மூடிக்கொண்டு வெளியேறுகிறாள்....

-------------------------------------------------------------------------------------------------

30 comments:

Raju said...

குறும்பட கரு அருமை தலைவரே..!

ஓ..அதுக்குத்தான் அந்த கர்நாடக சோழியன் குடுமி ஆடுதா..?

யாசவி said...

nice collection.

Is the court matter true?

I suspect some reason for karnataka's stand on statue

Cable சங்கர் said...

/மெல்லிய,உற்சாகமான ஹம்மிங்குடன் ஒருத்தி குளிக்கிறாள்.பின் பீரோவை திறந்து ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறாள்..பின் மேக்கப்..பார்த்து,பார்த்து அலஙகரித்து கொள்கிறாள்..பின் நகை,கடிகாரம் என்று ரசனையுடன் அணிகிறாள்..ஒரு முறை ஆளுயர நிலைகண்ணாடி முன் அழகை ரசித்து கொள்கிறாள்.பின் மீண்டும் பீரோவை திறந்து அந்த கறுப்பு அங்கியை எடுத்து முழுவதும் மூடிக்கொண்டு வெளியேறுகிறாள்....
//
தலைவரே. அந்த குறும்படம் பெண் இயக்கியது இல்லை.. என் நண்பர் பொன்.சுதா இயக்கியது. அவர் ஒரு ஆண். அவரது அடுத்த குறும்படம் வருகிற எட்டாம் தேதி வெளியிடுகிறார். என் ப்ளாக் அதை பற்றிய விளம்பரம் இருக்கிறது. அந்த குறும்படத்தின் பெயர் மறைபொருள்.

biskothupayal said...

andha kurumpadhai naanum pathrikkeren!!!!!

butterfly Surya said...

தகவல்கள் அருமை.

தராசு said...

//புருஷன் வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனப்தை போலிசார் தொடர் கண்காணிப்பில் உறுதி செய்து கோர்ட்டில் தெரிவிக்க உத்தரவிடப்படுகிறது.. //

நல்லா குடுக்கறாய்ங்கய்யா தீர்ப்பு. போலீஸ் கண்காணிச்சா அந்த குடும்பம் விளங்குன மாதிரித்தான். சரி, போலீஸுக்கு ஒரு வருமானத்து வழி பண்ணி குடுத்துருக்காரு.

Rajaraman said...

பதினெட்டு வருடமாக மூடிக்கிடந்த சிலையை இதற்க்கு முன் இருந்த அரசுகள் திறந்து திருக்கலாமே. அப்படியே தமிழர்களின் ஓட்டையும் வாங்கி குவித்திருக்கலாமே..

அதற்க்கு ஒரு இடையுரப்பா தானே வர வேண்டி இருந்தது.. உங்களைப்போன்ற போலி முற்போக்கு? வியாதிகளுக்கு BJP எது செய்தாலும் குற்றம் தானே.

போங்கய்யா நீங்களும் உங்க பாசாங்குகளும்!!!!!!!!!!!!!!!!!

வால்பையன் said...

சரியா தான் தீர்ப்பு சொல்லியிருக்காங்க!

மணிஜி said...

nice collection.

Is the court matter true?

I suspect some reason for karnataka's stand on statue//

thanks yasavi..

மணிஜி said...

/குறும்பட கரு அருமை தலைவரே..!

ஓ..அதுக்குத்தான் அந்த கர்நாடக சோழியன் குடுமி ஆடுதா..//

ராஜாராமின் கமெண்ட் பாத்தீங்களா?

மணிஜி said...

கேபிள்..தகவலுக்கு நன்றி..திருத்தி விடுகிறேன்..

மணிஜி said...

நன்றி..பிஸ்கோத்துபயல்,
வண்ணத்துபூச்சியார்
தராசு அண்ணே....
வால்பையன்..

மணிஜி said...

/பதினெட்டு வருடமாக மூடிக்கிடந்த சிலையை இதற்க்கு முன் இருந்த அரசுகள் திறந்து திருக்கலாமே. அப்படியே தமிழர்களின் ஓட்டையும் வாங்கி குவித்திருக்கலாமே..

அதற்க்கு ஒரு இடையுரப்பா தானே வர வேண்டி இருந்தது.. உங்களைப்போன்ற போலி முற்போக்கு? வியாதிகளுக்கு BJP எது செய்தாலும் குற்றம் தானே.

போங்கய்யா நீங்களும் உங்க பாசாங்குகளும்!!!!!!!!!!!!!!!!//

சிலை திறப்பதால் பிரச்சனை தீராது..அதிகமாகும்..இரண்டு மாநில போலிசுக்கும் கூடுதன் தலைவலிதான்...ஓகேனக்கல் பிரச்சனையில் இடையூரப்பாவின் நிலை உங்களுக்கு தெரிந்திருக்கும்..போலியாவது,அப்பமாவது..வெங்காயம்..

Rajaraman said...

சிலை திறப்பது, சமாதி கட்டுவது, ஊஎல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொள்வது எல்லாம் தமிழனுக்கே உரிய கல்யாண குணங்கள்.. அதுவும் தமிழ்நாட்டில் இந்த வியாதி 1967 க்கு பிறகு பெருகிவிட்டது.

பெங்களூரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க சொல்லி தமிழர்களாகிய நாம் செய்த வீம்பால் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது.

நையாண்டி நைனா said...

nalla soru.

மணிஜி said...

/சிலை திறப்பது, சமாதி கட்டுவது, ஊஎல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொள்வது எல்லாம் தமிழனுக்கே உரிய கல்யாண குணங்கள்.. அதுவும் தமிழ்நாட்டில் இந்த வியாதி 1967 க்கு பிறகு பெருகிவிட்டது.

பெங்களூரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க சொல்லி தமிழர்களாகிய நாம் செய்த வீம்பால் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது//

உண்மைதான் நண்பரே..

மணிஜி said...

/nalla soru.//

வாங்க..நக்கலிஸ்ட்..

நாஞ்சில் நாதம் said...

முதல் தீர்ப்பு கொஞ்சம் நெருடுகிறது. தப்பே செய்யாத குழந்தைக்கு ஜெயிலா?

ரெண்டாவது தீர்ப்பு ஓகே

கார்த்திக் said...

இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)..

அருமை...

மணிஜி said...

/முதல் தீர்ப்பு கொஞ்சம் நெருடுகிறது. தப்பே செய்யாத குழந்தைக்கு ஜெயிலா?

ரெண்டாவது தீர்ப்பு ஓகே//

உண்மை கற்பனையைவிட சுடும்..

மணிஜி said...

/இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)..

அருமை...

August 5, 2009 2:43 AM//

கார்த்தி..நன்றி

. said...

கூட்டாஞ் சோறு நல்ல சுவை. மிக பிரமாதம்.

நடைமுறை வேறு, சட்டம் வேறு என புரிய வைக்கும் நிகழ்வுகள். என்ன அட்டகாசமான பதிவு. கலக்கி விட்டீர்களய்யா...

ஒபாமா தேசத்தை பற்றிய தகவல் பாதி புரிகிறது, மீதி புரிஞ்சா மாதிரி இருக்கு. என் போன்ற யானை பார்க்க வெள்ளெளுத்தக் காரர்களுக்கு உடைத்து சொல்லலாமே.

குறும் ப‌ட‌ம், சுமார் தான். சொல்ல‌ விழைந்த க‌ருத்து ந‌ம் க‌லாச்சார‌ம் சாராத‌தால் அத்த‌னை பிடிக்க‌ வில்லை.

இப்ப‌டி இருந்தால் எப்ப்டி இருக்கும்.

அலங்காரம் முடித்த பெண், சாலையில் இறங்கி நடக்கிறாள். ஒரு இளம் ஆண் கடந்து செல்கிறான். அவளை கண்டு கொள்ளவே இல்லை. அவள் முகம் வாடுகிறது.

சற்று தூரத்தில் இன்னோரு ஆடவன், பார்வையில் அவள் அழகை ரசிக்கிறான். சந்தோசத்தில் அவள் சிரிக்கிறாள். நெருங்கி வந்து 'நீங்க‌ அழ‌காய் இருக்கிறீர்க‌ள்' என்கிறான். அவள் கோப‌ப் ப‌ட்டு செருப்பை க‌ழ‌ட்டுகிறாள்.

மணிஜி said...

/குறும் ப‌ட‌ம், சுமார் தான். சொல்ல‌ விழைந்த க‌ருத்து ந‌ம் க‌லாச்சார‌ம் சாராத‌தால் அத்த‌னை பிடிக்க‌ வில்லை. //

தலைவரே...கருத்துக்கு நன்றி..அக்குறும்படத்தை பார்த்தால் அந்த வலியை நீங்கள் உணரமுடியும் என்று நம்புகிறேன்..ஆனாலும் சர்ச்சைக்குரியது என்பதால் அதை விவாதிக்க இயலவில்லை..

வால்பையன் said...

http://valpaiyan.blogspot.com/2009/04/family-photo.html


இந்த பதிவின் பின்னூட்டத்தில் அந்த குறும்படத்திற்கான லிங்க் கிடைக்கும்!

அத்திரி said...

சிலை திறப்பதில் இவ்ளோ பாலிக்டிஸா////////////////////

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வும் பதிவும் தோழரே,வாழ்த்தும் அன்பும்!

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எல்லாம் கொடுக்கல் வாங்கல்தான்
அங்கே திருவள்ளுவர் இங்கே கர்நாடக
கவிஞர்...!

Thomas Ruban said...

//இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும் அரசியல் இருக்கிறது.விரைவில் பெங்களூரு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது.18 லட்சம் தமிழரின் ஓட்டுக்கள்தான் அதை நிர்ணயிக்குமாம்.அதற்காகத்தான் அந்த எலி அம்மணத்தோடு அலைகிறதாம்.//

அரசியல்வாதிகள் எதுவும் ஆதயம் இல்லாமல் செய்யமாட்டார்கள்.

இப்போது வள்ளுவர் சிலை திறந்தாலும் அதை பாதுகாப்பது யார்? பிறகு எதாவது ஒரு வன்முறையில்
சிலைக்கு சேதம் ஏற்ப்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பு?பிறகு
சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞனரின் சிலை சேதம் அடையும்.அதனால்
வன்முறை வெடிக்கும்.இதெல்லாம் தேவையா?

இது வேலியில் போகிற ஒணனை வேட்டிக்குள் விட்டுவிட்டு பிறகு குத்துதே குடைதுதே
என்ற கதை ஆகிவிடாதா?

Thomas Ruban said...

//இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும் அரசியல் இருக்கிறது.விரைவில் பெங்களூரு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது.18 லட்சம் தமிழரின் ஓட்டுக்கள்தான் அதை நிர்ணயிக்குமாம்.அதற்காகத்தான் அந்த எலி அம்மணத்தோடு அலைகிறதாம்.//

அரசியல்வாதிகள் எதுவும் ஆதயம் இல்லாமல் செய்யமாட்டார்கள்.

இப்போது வள்ளுவர் சிலை திறந்தாலும் அதை பாதுகாப்பது யார்? பிறகு எதாவது ஒரு வன்முறையில்
சிலைக்கு சேதம் ஏற்ப்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பு?பிறகு
சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞனரின் சிலை சேதம் அடையும்.அதனால்
வன்முறை வெடிக்கும்.இதெல்லாம் தேவையா?

இது வேலியில் போகிற ஒணனை வேட்டிக்குள் விட்டுவிட்டு பிறகு குத்துதே குடைதுதே
என்ற கதை ஆகிவிடாதா?

மணிஜி said...

வால்..லிங்கை கிளிக் செய்து மீண்டும் படம் பார்த்தேன்.
ராஜாராம் சார்..
அத்திரி..
வெங்கட்..
தாமஸ்..

நன்றிகள்...