விடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது.கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல்.நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான்.மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு” calling.. என்ன இந்த நேரத்துல..கரகரப்பாய் ஹலோ என்றேன்..அண்ணா..பாரதி பேசறேன்..குரல் உடைந்து இருந்தது.பாரதி சேஷுவின் மனைவி.
என்னம்மா?சேஷு இன்னும் வரலையா?
அண்ணா..அவர் போயிட்டார்.
குப்பென வியர்த்தது..வாட்..என்னம்மா சொல்றே?
ராத்திரியெல்லாம் தூக்கம் வராம அவஸ்தை பட்டு கிட்டிருந்தாரு..டீ வேணூம்னு கேட்டாரு..போட்டு எடுத்துகிட்டு வர்ரதுக்குள்ள.....அழ ஆரம்பித்தாள்.
சேஷு ஒரு விளம்பர காப்பி ரைட்டர்.பெரிய ஏஜன்சிகளின் ஆபத்பாந்தவன்.கான்செப்ட்டும்,ஒரு மணி நேரமும் கொடுத்தால் போதும்..பின்னி விடுவான்..அந்த பெயிண்ட் விளம்பரமும்,மசலா விளம்பரமும் ஹிட் ஆனதுக்கு முழு காரணம் சேஷூதான்.குடி,சிகரெட் எல்லாம் ஓவர்டோஸ்தான்.குழந்தை இல்லை.”பாரதிதான் எனக்கு குழந்தை.என்ன... அவதான் குழந்தை இல்லைன்னு பித்து பிடிச்சு பேசுவா.
பாரதி..நா கிளம்பிட்டேன்.நீ தைரியமா இரு..
அண்ணா..அவர் வீட்டுல சொல்லிடுங்க.
இருவரும் காதல் திருமணம்.பாரதிக்கு அப்பா,அம்மா யாருண்ணே தெரியாது.ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள்..சேஷூவின் வீட்டில் எதிர்ப்பு.மீறி பதிவு திருமணம்.நான் தான் கையெழுத்து போட்டேன்.” இனி அந்த பெண் என்ன செய்யப் போகிறாள்..
ரெண்டாவது ஒலிப்பில் போனை எடுத்து விட்டான் ராஜூ..சேஷூவின் தம்பி.ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு பாங்கில் வேலை..
என்னன்னா?இந்த நேரத்தில்..
விவரம் சொன்னேன்...
நா வர்ர வரைக்கும்???
பாவி நீதான் கொள்ளி போடணும்..சீக்கிரம் வா..ஃப்ரிசர் பாக்ஸ் அரேஞ் பண்ணிடறேன்..
லிண்டாஸ் வைத்தி,ஓ அண்ட் எம் காத்ரீன் சொன்னவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள்.நைட்டு மப்பு இன்னும் இருக்கும் போல.போன வாரம் அவள் வீட்டில் ஒரு பார்ட்டி..குறையொன்றும் இல்லை என்று சேஷூ பாட,அவள் ஒன்ஸ் மோர் கேட்டது ஞாபகம் வந்தது.நெருங்கிய அனைவருக்கும் தகவல் சொல்லி நான் சேஷூ வின் வீட்டை அடைந்தபோது யாரும் வந்திருக்க வில்லை.பாரதி மட்டும் வாசலில் அழுத படி..என்னை பார்த்தவுடன் விலகி வழி விட உள்ளே போனேன்
சேஷு ஹாலில் ஒருக்களித்து படுத்திருந்தான்.திடுக்கென்றது..பாரதியை கேள்விக்குறியுடன் பார்த்தேன்.
இப்பதான் அண்ணா திரும்பி படுத்து கிட்டார் ....என்றாள் பாரதி.
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
(பின் குறிப்பு) இது ஒரு உண்மை நிகழ்வு.நானும் சம்பந்த பட்டிருக்கிறேன்.நிஜத்தில் சேஷூ இறந்து விட்டான்.சேஷூ எப்பவும் புரண்டு,புரண்டு படுப்பதுதான் வழக்கம்.அன்று பாரதி ஒரே பக்கமாய் படுத்திருக்கிறாரே..வலிக்குமே..என்று சவத்தை ஒருக்களிக்க வைத்திருக்கிறாள்.மனநோய்க்கான சிகிச்சை முடிந்து பாரதி இப்போது புட்டபர்த்தியில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.இங்கு சேஷூவை சாகடிக்க எனக்கு மனமில்லை...
------------------------------------------------------------------------------------------------
37 comments:
// இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..
சம்திங் ராங்க்...//
யெஸ்.. யெஸ்... ரியலி சம்திங் ராங்..
திஸ் இஸ் கால்ட்... இடுகை மேனியா..
பின்னூட்டம் போடவும் கை பர பரக்குது...
ஆபிஸ் வேலை நெட்டி முறிக்குது...
இருந்தாலும் பின்னூட்டம் எப்படியாவது போட்டு, தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டு போட்டுவிடுகின்றேன்..
வாட் இஸ் ராங் வித் மி?
சேஷூ...
மனது கனக்கின்றது.
சும்மா நின்னு விளையாடுதுண்ணே பதிவு
அருமை
நினைவில் உள்ளவரை யாரும் இறப்பதில்லை!
நெகிழ்ச்சியான பதிவு.
சேஷீ மறக்க முடியாத பெயராகி விட்டது.
நெகிழ்ச்சியான உள்ளம் உருக்கும் பதிவு, ஏற்கனவே நீங்கள் சேஷு பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் இன்னும் ரிலேட் செய்ய முடிகிறது.
ஆனால் கவிதை போட்டு சேஷுவை நீர்த்துவிட்டீர்கள் என்று தோன்றுகிறது.. முடிந்தால் எடுத்துவிடவும். கவிதை அடுத்த பதிவுக்கு ஆகும்.
/திஸ் இஸ் கால்ட்... இடுகை மேனியா.//
உங்களுக்கு பின்னூட்ட போபியா.. இவருக்கு ப்ளாகோபியா..
//நன்றி..ராகவன்...அரவிந்தை கேட்டதாக சொல்லவும்.
/சேஷூ...
மனது கனக்கின்றது//
உண்மைதான்.பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வராத ஒரு எழுத்தாளன் அவன்..
/நெகிழ்ச்சியான பதிவு.
சேஷீ மறக்க முடியாத பெயராகி விட்டது.//
நன்றி..வண்ணத்துபூச்சியார்..
சிவக்குமாருக்கும் சேஷூவை தெரியும்
/நெகிழ்ச்சியான உள்ளம் உருக்கும் பதிவு, ஏற்கனவே நீங்கள் சேஷு பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் இன்னும் ரிலேட் செய்ய முடிகிறது.
ஆனால் கவிதை போட்டு சேஷுவை நீர்த்துவிட்டீர்கள் என்று தோன்றுகிறது.. முடிந்தால் எடுத்துவிடவும். கவிதை அடுத்த பதிவுக்கு ஆகும்//
அனுபவம் பேசும்போது ஆமோதிக்கத்தானே வேண்டும்..
தண்டோரா
நிகழ்வு உண்மையெனினும், முடிவு நெகிழ்வு....
முடிவு மனசை கனக்க வைக்குதண்ணே.
வாங்க தராசு அண்ணே.
தம்பி கோபி..
காலை வணக்கம்..கச்சேரியை ஆரம்பிப்போம்..
அண்ணே, வண்ணத்துப்ப்பூச்சி, கேபிள் சொல்றதப் பார்த்தா சேஷூ இன்ஸ்ட்ரக்டிங் கேரக்டரா இருப்பார் போலயே..!
ஆனா, அவர் இப்போது இல்லாதது வருத்தம்தான்.
:(
/அண்ணே, வண்ணத்துப்ப்பூச்சி, கேபிள் சொல்றதப் பார்த்தா சேஷூ இன்ஸ்ட்ரக்டிங் கேரக்டரா இருப்பார் போலயே..!
ஆனா, அவர் இப்போது இல்லாதது வருத்தம்தான்.
:(//
ஆமாம் டக்ளஸ்..நிறைய சுவாரசியமான நிகழ்வுகள்..ஒவ்வொன்றாக எழுதலாம் என்று இருக்கிறது..அடுத்து கண்ணதாசன் நினைவு நாளில் ஒரு சாராயக்கடையில் அடித்த கூத்து..
சின்ன பதிவானாலும் உலுக்கி விட்டது. அதை சொன்ன விதத்தில் நீங்கள் கலக்கி விட்டீர்கள்.
இந்த பதிவில் இத்தனை விசயங்களா,
1. அயராத உழைப்பு
2. காதல் திருமணத்தின் சண்டை சச்சரவு
3. கணவன் இறந்ததை புக்ககத்தில் சொல்ல முடியாத பெண்ணின் நிலை பாடு
4. வெடித்து அழும் நட்பு
5. காதல் தம்பதியின் அன்னியோன்யம் / பிரண்டு படுக்க வைத்ததும் அவளே மனம் பிரண்டதும்
6. கடைசி வரியில் சேஷுவை சாகடிக்காது, பின் குறிப்பில் கொன்றது
/சின்ன பதிவானாலும் உலுக்கி விட்டது. அதை சொன்ன விதத்தில் நீங்கள் கலக்கி விட்டீர்கள்.
இந்த பதிவில் இத்தனை விசயங்களா,
1. அயராத உழைப்பு
2. காதல் திருமணத்தின் சண்டை சச்சரவு
3. கணவன் இறந்ததை புக்ககத்தில் சொல்ல முடியாத பெண்ணின் நிலை பாடு
4. வெடித்து அழும் நட்பு
5. காதல் தம்பதியின் அன்னியோன்யம் / பிரண்டு படுக்க வைத்ததும் அவளே மனம் பிரண்டதும்
6. கடைசி வரியில் சேஷுவை சாகடிக்காது, பின் குறிப்பில் கொன்றது//
பங்காளி ம்ம்ம் படுகாளி..சேஷூவின் வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது..பாரதியை திருமணம் செய்யும் முடிவை எடுக்க அவன் எடுத்துக் கொண்டது வெறும் ஒரு மணி நேரம்தான்..
நல்லா இருக்கு.அவர் இறப்புக்கு ஏதாவது காரணம் உண்டா?
ஓகே.. நடத்துங்க...
ஒரு விஷயம் குறிச்சுக்கோங்க...
வர வர அசத்துறீங்க.
நெகிழ்ச்சியான பதிவு.
பதிவ விட பின்னூட்டத்துல சேஷீ பற்றி நிறைய தகவல்
காதலின் வீரியம் இங்கு புரிந்தது.
காதலிக்காவாவது அவர் குடியை தவிர்த்திருக்கலாம்...
அவரை நம்பி வந்த அந்தப் பெண்ணை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
என்னென்னவோ தோன்றுகிறது தோழரே...
மிக நல்ல அல்லது வேறு தளத்திலான உத்தியில் சொல்லி இருக்கிறீர்கள் நெகிழ்வை.நன்றாக இருக்கிறது.
உண்மை நிகழ்வு என்னும்போது மனம் கனத்துப் போகிறது..:-(((((
/நல்லா இருக்கு.அவர் இறப்புக்கு ஏதாவது காரணம் உண்டா//
மாரடைப்பு..உடன் மரணம்.
/ஓகே.. நடத்துங்க...
ஒரு விஷயம் குறிச்சுக்கோங்க...
வர வர அசத்துறீங்க//
நன்றி நைனா..
/நெகிழ்ச்சியான பதிவு.
பதிவ விட பின்னூட்டத்துல சேஷீ பற்றி நிறைய தகவல்//
ஒவ்வொன்றாக எழுதலாம் என்று இருக்கிறென்..நன்றி நாஞ்சில்
/காதலின் வீரியம் இங்கு புரிந்தது.
காதலிக்காவாவது அவர் குடியை தவிர்த்திருக்கலாம்...
அவரை நம்பி வந்த அந்தப் பெண்ணை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
என்னென்னவோ தோன்றுகிறது தோழரே//
ரொம்ப குழப்பிக்காதீங்க...நன்றி அன்புமணி..
/மிக நல்ல அல்லது வேறு தளத்திலான உத்தியில் சொல்லி இருக்கிறீர்கள் நெகிழ்வை.நன்றாக இருக்கிறது//
நன்றி..நர்சிம்
தண்டாரோ,
கதை மிகவும் நன்றாக இருக்கிறது.
சொன்ன விதமும் சுருக்கமாக தெளிவாக இருக்கிறது.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
/தண்டாரோ,
கதை மிகவும் நன்றாக இருக்கிறது.
சொன்ன விதமும் சுருக்கமாக தெளிவாக இருக்கிறது.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//
வாசு.முடிஞ்சா ஒரு நல்ல கூலர்ஸ் வாங்கிட்டு வாங்க..
மிக மிக அழகான நடை,விஷயத்தை சொல்லியிருக்கிற விதம் அருமை.சூப்பர்.
//மிக மிக அழகான நடை,விஷயத்தை சொல்லியிருக்கிற விதம் அருமை.சூப்பர்//
ஸ்ரீ....லீவுல போயிருக்கிறதா நினைச்சேன்..
அழ வச்சுட்டிங்களே...
/அழ வச்சுட்டிங்களே//
வருகைக்கு நன்றி ஈஸ்வரி..
நெகிழ்ச்சியான பதிவு. பின் குறிப்பு மனதை புரட்டிப்போட்டது. Sudden Death எப்படி மற்றவர்களை பாதிக்கும் என அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். இன்று நீ நாளை நான் - என்பது தான் வாழ்க்கை நியதி என்றாலும், மனம் அவ்வளவு எளிதாக சமாதானமடைவது இல்லை :-(
Post a Comment