Tuesday, August 3, 2010

கலி முத்தி போச்சு



செம்மொழி மாநாட்டு வாயிலில்
வள்ளுவன் நிறுத்தப்பட்டான்
அடையாள அட்டையோ
அனுமதி சீட்டோ இல்லையாம்

எனக்கேவா என்றவனை
தேற்றினார்கள்
பாரதியும் , தமிழ்த்தாத்தாவும்
பக்கத்து தியேட்டரில்
தமிழ்ப்படம் பார்க்க உ.வே.சா போனார்
பாரதி வீரப்பன் காட்டுக்கு
பஸ் ஏறினான்

பாரதிதாசனை உள்ளே விட்டு விட்டார்கள்
பார்க்க மந்திரி தோரணை
தெரிந்ததாம்

கேவல்சந்த் கோத்தாரி கடையில்
கண்ணகியின் கால் சிலம்பு
அடகு வைத்தவன் கோவலன் இல்லை
என்பதுதான் செய்தி
பாண்டியன் கஜானா காலியாம்

பற்றி எரியட்டும் என்றாள் கண்ணகி
கொட்டி தீர்த்தது
தினகரன் அலுவலகத்துக்கு
சேதாரம் குறைச்சல்தான்

பிரபல சேனலில்
மாதவியின் பேட்டி
நயன் தாராதான் பிடித்த
நடிகையாம்
பொதுப்பணித்துறைக்கும் , டாஸ்மாக்குக்கும்
அட்சயப்பாத்திரம்தான்
அடையாள சின்னம்

தவளையின் வயிற்றில்
பாம்புகுட்டிகள்
கலி முத்தி போனதுக்கு
அது மட்டுமல்ல சாட்சி
இந்த கவுஜையும்தான்

21 comments:

Sanjai Gandhi said...

கொய்யால.. :)))))

Katz said...

ஆயிரம் பொற்காசுகள் இந்த கவுஜைக்கு

ஜானகிராமன் said...

மெல்லத் தமிழ் இனி சாகும்.

கலகலப்ரியா said...

superu maniji...

ARV Loshan said...

:))))

Paleo God said...

தலைவரேஏஏஏஏஏஏஏஏஏஏ ... :))

உண்மைத்தமிழன் said...

மொத்தத்துல சாவுடான்றீங்க..! சரிதாண்ணே..!

vinthaimanithan said...

இங்கு
மாதவிகளுக்கு மட்டும்தான் மணிமகுடமாம்...
கண்ணகிகளுக்கு காவல்காரி வேலைதானாம்!

vasu balaji said...

sanjaya ரிப்பீட்டிக்கிறேன்

'பரிவை' சே.குமார் said...

கொய்யால... இந்த கவுஜைக்கு ஆயிரம் பொற்காசுகள் .

க ரா said...

மணிஜீ நகி ... நக்கல்ஜீ க்ரக்ட் :)

பாலா said...

பின்னிட்டான்யா பில்கேட்ஸு...!!

இன்னொரு முத்தம் கணக்கில்!

நேசமித்ரன் said...

போலாம் ரைட்...!

a said...

கலக்கல் கவுஜ....

Mahi_Granny said...

கலை முத்தித் தான் போச்சு. நல்லா வந்திருக்குஉங்க கவுஜை

Umapathy said...

படித்தது பிடிச்சி போச்சு
உய் உய் உய் ய் ய் ய் ய்

vasan said...

/கடையில்கண்ணகியின் கால் சிலம்புஅடகு வைத்தவன் கோவலன் இல்லை/ இது நச்...
//பற்றி எரியட்டும் என்றாள் கண்ணகிகொட்டி தீர்த்ததுதினகரன் அலுவலகத்துக்குசேதாரம் குறைச்சல்தான்//
இது ந‌ச்..ந‌ச்..
///பொதுப்பணித்துறைக்கும் , டாஸ்மாக்குக்கும்அட்சயப்பாத்திரம்தான் அடையாள சின்னம்///
இது 'ந‌ச்சு'

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Robin said...

Good one!

R.Gopi said...

//தவளையின் வயிற்றில்
பாம்பு குட்டிகள்
கலி முத்தி போனதுக்கு
அது மட்டுமல்ல சாட்சி
இந்த கவுஜையும்தான்//

பின்றியே தல......

அட்டகாசம்.....

ரோஸ்விக் said...

உண்மையிலே கலி முத்திதான் போச்சு தலைவரே!
:-))