Saturday, August 21, 2010

மலடி..காயடி..கசையடி



மனுநீதி சோழன் மாளிகை
வாசல் மணியை அடித்தது
ஷகீலா போஸ்டரை தின்ற மாடு
குறை கேட்ட மன்னன்
காயடிக்க உத்தரவாம்
யார் அடிப்பது என்று
அவன் வாரிசுகளுக்குள் விவாதம்
ஆளை விடுங்கள் என்ற மாடு
மனுவுடன் போயஸ் கார்டன் போனது
காளை மாட்டில் பால் கறக்க
அங்கு உத்தரவாம்
“கை” யை யாராவது இரவல்
கொடுங்க சாமீகளா !

கொண்டு வந்த அவலை
டாஸ்மாக்கில் தீர்த்து விட்டான் குசேலன்
கூட குடித்த அத்தனைப்பேருக்கும்
இலவச விநியோகம்
மிஞ்சியிருந்த அவிச்ச கடலையுடன்
குவார்ட்டர் அடிச்ச மப்புடன்
கோவிந்தனை காண
கோகுலம் போனான்
அன்பை மெச்சிய கண்ணன்
தமிழால் தடவி கொடுத்தான்
இலவச தொலைக்காட்சியும்
காமசூத்ரா காண்டம் ஒரு அட்டையும்
கூடவே மிட்நைட் மசாலா
பார்க்கும்படி பரிந்துரையும்

அறிவாலயத்தில் அடையாள அட்டை
வாங்கும் கீயூவில்
இளங்கோவனும்
அவர் இல்லையப்பா இவர்
பின்னால் தொல்..இவரும் அவர் இல்லை
தொல்காப்பியராம்
அவசரத்துக்கு ஒதுங்கும் இடத்தில்
முளைத்திருந்தது செடிகள்
அதற்கு ஒரு பெயரும் இட்டிருந்தார்கள்
தொல்காப்பிய பூங்காவாம்


ராஜாவா ... ராணியா...
இன்னும் என்ன கொடுப்பான்
கலியுக கர்ணன் ?
பேரத்துக்கு ஜோக்கர்கள்
படிகிறார்கள்
தாயம் பன்னிரண்டு விழுமா ?
வழக்கம் போல் மெண்டோஸ்
வாழ்க்கைக்கு தயராகிறார்கள்
தினத்தந்தி வாசகர்கள்

இழவு வீட்டிலும்
வீடியோ எடுக்க வந்துவிட்டது
இளைஞர் கூட்டம்
அத்தனை பேர் தலையிலும்
சூரியன் முளைத்திருக்கிறது
ஒன்று சும்மா இருங்கள்
இல்லை சூத்தை காட்டுங்கள்
வாங்க மட்டுமே நீ
அடிக்கும் ஆசையிருந்தால்
முதல் பாராவில் சொன்ன
மாட்டை நினைத்துக் கொள்
காயடிப்பார்கள்
மலடியை கர்ப்பமாக்குவார்கள்
பாலியல் சட்டத்தில் உன்னை
பலியாக்குவார்கள்
போடா ஆமாம் என்று
சொல்லிவிட்டு
வெண்ணெய்......................


14 comments:

ரமேஷ் வைத்யா said...

உலக அமைதி வந்திருச்சு போலிருக்கே ஸ்வாமின்..!

ரமேஷ் வைத்யா said...

மீத்த பஷ்ட்டூ!

மணிஜி said...

யோவ்..ஊர்ல இருக்கியா? போன் பண்ணுயா? நம்பர் இருக்கா?

Unknown said...

கடேசி பார்ட் யாருன்னு புரியலையே தலை?

ஜானகிராமன் said...

என்ன கொடுமை மணிஜீ...

Unknown said...

//நான் கலெக்டருக்கு படித்திருந்தால் , மந்திகளுக்கு கார் கதவை திறந்து விட்டுக் கொண்டிருக்க வேண்டும்..--உயர்கல்வி துறை அமைச்சர் திரு .பொன்முடி//

இண்டென்ஷனல் ஸ்பெல்லோ மாதிரி இருக்கே?

vasu balaji said...

ஆனாலும் இப்படியா:)))

vasu balaji said...

முகிலன் said...
கடேசி பார்ட் யாருன்னு புரியலையே தலை?

மீ த ரிப்பீட்டு

உண்மைத்தமிழன் said...

போடாங்.........வெண்ணெய்..!

Unknown said...

எவ்வளவு வெண்ணை அடிச்சாலும் பெப்பென்னு போறவனுகளுக்கு புரியுமா ஜி..

Cable சங்கர் said...

aNNe.. புத்தக் வெளியீடுக்கு வாங்கண்ணே

Jerry Eshananda said...

பாட்டையாவில் பட்டையை கிளப்பிவிட்டு,இங்கே கவிதையிலும் கிளப்பி இருக்குறீர்கள்

மரா said...

அருமை மணிஜி. அந்த கடேசி பாரா...த்ரோ ஸம் லைட் தல :)

R.Gopi said...

ஆஹா....

மணிஜீ... ஃபுல் ஃபார்ம்ல இருக்கீயளே..

அந்த கடைசி பாரா....!!??