Thursday, August 26, 2010

நாகம்மா...


ஊருக்கு போகும் பாதை முற்றிலும் மாறி விட்டிருந்தது . இங்க தான் ஒருபெரிய புதர் இருந்தது . அந்த அடர்த்தியான நாகமரம் மட்டும் இன்னமும் . கிழடு தட்டி . பழங்கள் இல்லை . அந்த மரத்தில் கண் போல் ஒரு முட்டு உண்டு . அது இன்னமும் இருந்தது . நாகம்மா..

ஊர் வரைக்கும் பஸ் போகும் என்றார் நடத்துனர் . ஆனால் வேலு முன்னரே இறங்கி கொண்டான் . நடக்க வேண்டும் போல் இருந்தது . ஊரில் யார் , யார் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டான் . பாண்டிக்கு மட்டும் ஒரு முறை லெட்டர் போட்டிருந்தான் . வேலு ஊரை விட்டு போகும் போது அப்பத்தா கிழவி மட்டுமே இவனுக்கு சொந்தம்னு சொல்லிக்க இருந்தாள் . அவளும் போய் சேர்ந்திருப்பாள் . சைக்கிள் கடை பாண்டி மட்டும் இருப்பான் என்று நினைத்தான் . நாகம்மா இருப்பாளா?

எல்லாக் காலங்களில் நாகமரம் காய்த்து கொட்டும் . சரியாக விளக்க முடியாத ஒரு ருசி நாகப்பழத்துக்கு . முட்டை வடிவில் , கருநீலமாக , சதைபிடிப்பாக.. நாகம்மாவின் இடுப்பு நினைவுக்கு வரும் . நாகம்மாவும் அந்த பழத்தின் நிறம் தான் . அதுவும் அவள் இடுப்பு . அதில் மின்னல் போல் ஒரு வளைவு . அதற்காகத்தானே வேலு அப்படி செய்தான் .


பாண்டி ! அவளை பார்த்தாலே வேட்டி நனையுதுடா . என்ன செஞ்சாச்சும் தூக்கிட்டு போயிடனும்டா . நாகமர புதருக்குள்ள வச்சு ..

வேலு நாகம்மா நெருப்பு . அந்த சூட்டை கூட பொறுத்துக்கலாம் . பாத்து சூதானமா நடந்துக்க .. இல்ல ஊர்ல நாறி போயிடுவே

வேலுக்கு எதுவும் பொருட்டாயில்லை . பற்றி எரிந்தது . இத்தனைக்கும் அவன் ஒன்னும் பொம்பளை பொறுக்கியில்லை . அவளை பார்த்தவுடன் முனி அடித்த மாதிரி ஆகிப் போனான் . சாடையாய் அவளிடம் சொல்லிப்பார்த்தான் . ராசாத்தி மாதிரி வச்சுக்கிறேண்டி உன்னைய என்றான் . அவள் சிரித்து இவனை மேலும் போதையாக்கி நழுவிக் கொண்டேயிருந்தாள் . காரணம் பிற்பாடுதான் தான் தெரிந்தது . மாரியப்பன் . நாகமரத்தடியில் இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை வேலு பார்த்து விட்டான் . அவன் பார்க்கும் போது மாரியின் கை இடுப்பு மின்னலை பிடித்துக் கொண்டிருந்தது ..

பாண்டியின் கடை கொஞ்சம் பெரிசாக மாறியிருந்தது . பாண்டி அப்படியேதான் இருந்தான் . வேலுவை பார்த்ததும் கட்டிக்கொண்டான் . பாட்டில் கொண்டு வந்தியா பங்காளி என்றான் .

நைட்டு வச்சுக்குவோம் கச்சேரியை என்று சொல்லி விட்டு நாகம்மா இன்னும் இங்கதான் இருக்காளாடா என்றான் வேலு

பாண்டிக்கு முகம் மாறியது . வேலு அவ இருக்கா . நீ பழசை மறந்துடு . அவ இப்ப குறிகாரியாயிட்டா . ஊருக்கு இப்ப அவ சாமி மாதிரி .

புரியலடாயா மாப்ள..

மிலிட்டரி சரக்கும் , சேர்மானங்களும் எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு போனார்கள் . மூன்றாவது ரவுண்டில் பாண்டிக்கு கண்கள் சொருக ஆரம்பித்தது . நாகம்மாவின் குடிசை எங்கிருக்கிறது என்ற வேலுவின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை . அவளை இப்போதே தேடி பிடிக்க வேண்டும் என்ற வெறி வேலுவுக்கு .

நீ பாத்தியா வேலு ? அந்த மாரி பயலா . மச்சம்டா அவனுக்கு . ஆனா அவனும் ஆளு நல்லா ஓங்கு தாங்காத்தான் இருப்பான் .

ஏன் நான் மட்டும் எப்படியிருகேன் ? இதை விடப் போறதில்லைடா . அவ கால்ல கூட விழுந்து பார்த்தேன்டா . அதுக்கும் சிரிச்சா . மாரியோட ....... மயித்துக்கு கூட நீ பொருந்த மாட்டேன்னுட்டா .. குச்சிக்காரி.. அவளை..கறுவினான் வேலு...


என்ன வேலு தம்பி . பட்டாளத்து சரக்கு கும்முன்னு தூக்குது . எங்களுக்கு ஒரு கோடு தரக்கூடாதா என்றார் நாட்டாமை வீட்டு கணக்கு பிள்ளை.

ஒரு பாட்டிலே தாரேன் கணக்கு . இந்த நாகம்மா இப்ப எங்க இருக்கான்னு மட்டும் சொல்லு . இன்னும் வைரம் பாஞ்சு மெருகோட இருப்பா . அன்னிக்கு விட்டதை , இன்னிக்கு அள்ளிடனும் . இப்பதான் மாரி இல்லியே . அன்று மாரி துரத்தினதை நினைச்சா இன்னிக்கு ஈரக்குலை உதறும் வேலுக்கு . என்ன சிரிப்பு சிரிச்சா குச்சிக்காரி அன்னிக்கு . அதுல போனவன் தானே வேலு . மாரி நாலு பேத்தை வெட்டிட்டு என்று பாண்டி சொன்னது ஒலித்துக் கொண்டே இருக்கிறது . நல்லவேளை வேலு . அன்னிக்கு நீ ஓடிட்ட . உன்னைய மாதிரிதான். அவனுங்களும் நாகம்மாவை துக்கிட்டு போகப்பார்த்தாங்க . வெட்டி சொருகி வச்சுட்டான் . அந்த நாகமரத்துலதான் .. இன்னும் கூட அந்த வீச்சம் இருக்குடா.. அதுக்கப்புறம்தான் அது பட்டு போக ஆரம்பிச்சிருச்சு ..

மாரி எப்டி செத்தான் ?

நாகம்மாவுக்கும் அவனுக்கும் கல்யாணம் . ஒரு பய போகலை . யாரையும் கூப்பிடலை . மறுநாள் போயிட்டான் . நெஞ்சுவலின்னு பேசிகிட்டாங்க . ஆவி அடிச்சிருச்சுன்னும் பேச்சிருக்கு . நாகம்மா வாயை தொறக்கலை . திடீர்னு ஊருக்குள்ள வருவா .. ஒரு நாள் நாட்டாமை வீட்டுக்கு போனான் . இந்த இடத்துல பாம்பு இருக்கு . இன்னிக்கு ராத்திரி இங்க நுரை தள்ளப்போகுதுன்னா . போடி கோட்டிக்காரின்னு கழுத்தை பிடிச்சு தள்ளினாங்க . ஆனா அன்னிக்கு ராத்திரியே நாட்டாமை சம்சாரத்தை தீண்டிடுச்சு . அதுலேர்ந்து ஊருக்குள்ள அவளுக்கு பேர் . அவளா வந்தாத்தான் ஆச்சு . கணக்கு அரை பாட்டிலை தீர்த்து விட்டு ஆட ஆரம்பித்தார் .


நாட்டாமை , நீ , நான் மூணு பேர் மட்டும் போறோம் என்ன என்றான் வேலு பாண்டியிடம்

உண்மையா இருந்தா அந்த செறுக்கியை வெட்டி போடனும் என்றார் நாட்டாமை . அவருக்கும் அவள் மேல் ஒரு கண் இருந்தது . மசியாத கடுப்பு .

போனார்கள் . சம்போகம் நடந்து கொண்டிருந்தது . அந்த காட்சி . இரண்டு நாகங்கள் பின்னி பினைந்து ஆடிக் கொண்டிருந்தன . பச்சை பத்திக் கொள்ளும் உஷ்ணம் . தகிக்கிறது . அவர்களை தடுக்க தோன்றவில்லை . ராஜசம்போகம் . சத்தம் போடாமல் திரும்பி விட்டார்கள் . அடுத்த நாள் வேலு நாகம்மாவை மடக்கி இழுத்தான் . முந்தின நாள் நடந்ததை பார்த்து விட்டேன் என்றான் . எனக்கும் விரி . இல்லை ஊர் சிரிக்கும்னு மிரட்டினான் . நாகம்மா அதற்கும் சிரித்தாள் . மாரி வருவான் . உன்னைய வெட்டுவான் . வேணுமின்னா உன் பொணத்தோட படுக்கறேன் . ரெண்டும் ஒன்னுதான் என்று சிரித்தாள் .

வேலு வேண்டாம் . இப்ப போகாதே என்று தடுத்தார் கணக்கு . வேலுவுக்கு போதையும் , காமமும் தலைக்கேறியிருந்தது . நாகப்பழ வாசனை அடித்தது . அதோ ..அந்த செறுக்கிதான் வர்றா..இன்னும் அந்த இடுப்பில் மின்னல் ஓடிக் கொண்டிருந்தது . அவள் இடுப்பை வளைத்து தூக்கி கொண்டான் . நாகமரத்துகு பின்னால் சாய்த்தான் . அப்போதும் அவள் சிரிக்கவே செய்தாள் . உதடுகளை குவித்து அவன் முகத்தை நெருங்கினாள் .


மறுநாள்.. நாகமரத்துக்கு அடியில் வேலு செத்து போயிருந்தான் . உடல் நீலம் பாரித்திருந்தது . உதட்டில் ஒரு பொட்டு . அதில் ரத்தக்கறை... மரத்தில் பழமே இல்லை . எப்படி நாகப்பழ வாசனை என்று ஊர்க்காரர்களுக்கு ஆச்சர்யம்தான்

9 comments:

vinthaimanithan said...

நாகம்மா இடுப்பு மாதிரியே கதையும்...! என்ன எனக்குத்தான் கொஞ்சம் புரியல

vinthaimanithan said...

நாகம்மா இடுப்பு மாதிரியே கதையும்...! என்ன எனக்குத்தான் கொஞ்சம் புரியல

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு. ஆனா, உங்களின் யதார்த்தம் இதில் மிஸ்சிங்.

அப்புறம், நன்றி மணிஜி. இப்ப அந்த பழைய பிரச்சினை இல்லை. டெம்ப்ளேட் தான் காரணமாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

a said...

கடஸியில கொஞ்சம் குழப்பமா இருக்கு....

Cable சங்கர் said...

கருப்பு இடுப்பா..? ஓகே.

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு.

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
Tech Shankar said...

விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் உங்கள் பங்களிப்பு குறித்து மிகுந்த மகிழ்வடைகிறேன்

Congratulations for participating Vijay TV's Neeya Naana program.

by

TS

Thamira said...

சப்ஜெக்டும், நடையும் அட்டகாசம். ஆனா கதையை இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம். ஏதும் ஃபேண்டஸி அல்லது பின்நவீனத்துவமா?