Thursday, August 19, 2010

மானிட்டர் பக்கங்கள்.....19/08/10


(உலக அமைதிக்காக பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன்)



எழுதி ரொம்ப நாளாச்சு ! எழுதனும்னு கட்டாயமா ? காலத்தின் கைஅரிப்பான்னு தெரியலை . மொக்கைக்கு இவ்வளவு பில்டப்பான்னு ஜ்யோவ்ராம் சுந்தரின் ஸ்டேட்டஸ் மெசேஜ் சிரிக்கிறது . (30/06/2010 ) . இன்று திருமணநாள் காணும் சுந்தருக்கு வாழ்த்துக்கள் . எனக்கு அடுத்த மாசம் (ட்வின் டவர் அட்டாக் )

பாங்காக்கில் வாசு புலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . நான் ஒரு கிளியுடன் ...(படம் போட இயலவில்லை..பர்சனலாக காட்டுகிறேன் .வாசு எடுத்த கோணம் சரியில்லை )

பொதுவாகவே மேலை நாடுகளில் ஹாரன் அடிப்பதில்லை . இங்கும் அப்படித்தான் . ஆனால் அதற்கு பதிலாகத்தான் நாங்க வாய் ஓயவே இல்லை .

அங்கு சாப்பிட்ட பேப்பர் மசால் தோசை 165 பாட் . கிட்டதட்ட 270 ரூ . நான் அதில் 200 ஐ சர்வீஸ் செய்த அந்த கொத்தமல்லி செடிக்கு (கொத்தமல்லி செடியில் எலுமிச்சை பழம் அங்கு காய்க்கிறது ) கொடுத்தேன் . மீதியை ஓட்டல்காரனுக்கு அழுதேன்

போன் , ரூம் இவை நான் சந்தித்த (அதாவது பெயர் கேட்ட ) இரு பெண்களின் பெயர்கள் . பெயர்க் காரணம் தெரியவில்லை

ஒருவன் ஆபாசபடத்தை காட்டி எனக்கு தூண்டில் போட்டான் . நான் மறுக்க , என்னை தாக்கிவிட துணிந்துவிட்டான் . நானும் முஷ்டியை ஓங்கி , நம்மூரின் உட்சபட்ச கெட்ட வார்த்தையை சொன்னேன் . சிரித்து அனுப்பி விட்டான் . அந்த வார்த்தைக்கு தாய்லாந்தில் மரியாதையான அர்த்தம் இருக்குமோ ?


ஏழு நாள் பாங்காக்கில் தளும்பியது (சரக்குங்க ) ஒத்துக் கொள்ளவில்லை . இங்கு வந்து இறங்கியதும் , ஏழரையை (அந்தாள் இல்லிங்க) காட்டியது . டாக்டரிடம் போய் ஆறு மாதமாகி விட்டது போலும் . மனைவி என்னங்க இப்படி என்றாள் .
ஒரு முயற்சி என்றால் , இப்படிப்பட்ட இடைஞ்சல்களை சகிக்கத்தான் வேண்டும் என்று வியாக்கியானம் பேசி விட்டு போனேன் .

என்னாச்சு மணிகண்டன் ?

நீங்கதான் சொல்லனும் சார்

வழக்கம் போல்தானே என்றவர் பெரிய சீட்டை எழுத ஆரம்பித்தார் . நல்லவேளை ஐ.சி.யூ வெல்லாம் இல்லை . அந்தளவுக்கு ராஸ்லீலையெல்லாம் தாய்லாந்தில் நடக்கவில்லை . வெண்சீருடையில் செவிலிகள் போன முறையைவிட அழகாக தெரிந்தார்கள் . கொஞ்சம் அறிமுகமான அந்த பெண் லேசாக சிரித்தாள் . அங்காடித்தெரு அஞ்சலி சாயல் அவளுக்கு இருப்பதாக பட்டது . உன் பெயர் ”கனி”யாம்மா என்றேன் . இல்லை சார் “தமிழ் “ என்றாள் . ரெண்டும் ஒன்னுதாம்மா என்றேன் . அவளுக்கு புரியாமல் சிரிப்பு வந்தது .

சார் ! அடிக்கடி இங்க வர்றீங்க

உன்னைப் பார்ப்பதற்காக இருக்கலாமோ ? இதை சொன்னவுடன் அவளுக்கு லேசாக வெட்கம் வந்தது . சகோதரியை வெட்கப்படுத்தியிருக்கிறேன் . பாங்காக்கில் அந்த ஈரான் பெண்ணிடம் நாலு வரிகள் சொன்னேன் . அதற்கே அங்கிருந்த பஞ்சவர்ண கிளிக்கு டெபாசிட் போனது . எங்கள் ஊரில் இப்படி சொன்னால் அவ்வளவுதான் . நாக்கை வெட்டி சூலத்தில் சொருகி விடுவார்கள் . ஆமாம் .. உங்க நாடும் கடுமையானதுதானே . இதற்கு தண்டனை உண்டா ? என்றேன்

ஆம் . உண்டு . நான் புகார் கொடுத்தால் . ஆனால் நாக்கை மட்டுமல்ல என்றாள் அவள் ..


டாக்டர் வந்தார் . எப்படியிருக்கு மணி ?

சரியாகி போச்சு .

அதுக்குள்ளவா ? நிலா வரலையா ?

சரக்கு தீர்ந்து போச்சுன்னு சொன்னேன் .

பாரு . தலைவர் மதுவிலக்கு கொண்டுவரப்போறாராம் . என்னப் பண்ணுவீங்க ?

அதெப்படி தாய்லாந்துல இவர் கொண்டு வரமுடியும் என்றேன் . இவருக்கு மயக்க ஊசி போடுமா என்றபடி கையை ஆட்டி விட்டி அகன்றார் .


இன்னும் முடிக்காமலிருந்த தஞ்சை பிரகாஷை முடித்தேன் . ஏஜன்சியிடம் இருந்து போன் .

ஜீ..கிளையண்ட் வர சொல்லிட்டாங்க



எங்க ? எப்ப ?

காங்கேயம் . நாளைக்கு ..கான்செப்ட் ரெடி பண்ணுங்க . ஒரு நாலாவது ..

காங்கேயத்தில் ஒரு நெய் கம்பெனி ..பலமுறை சந்தித்தும் வேலையாகவில்லை . இந்த முறை பார்க்கலாம் . ஒவ்வொரு முறையும் ஈரோடு , பார் , குப்பண்ணா , டேம் ஃபிஷ் என்றே பொழுது கழிந்தது . இந்த முறை நேரமிருந்தால் நண்பர்களுக்கு போன் செய்கிறேன் . ஈரோடு தொடாமல் கார் மூலம் காங்கேயம் வருகிறேன்


கணவன் ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்கிறான்

மகள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டிருக்கிறாள்

அப்பா ! கோடிக்கு எத்தனை சைஃபர்ப்பா ?

சமையலைறையிலிருந்து வாசனை அலை அலையாய் வருகிறது (கிராஃபிக்ஸ்)

கணவன் : டார்லிங் ! ஸ்ண்டே ஸ்பெஷலா?

மனைவி : சம்திங் ஸ்பெஷல் ..

மகள் : அப்பா ! பிராண்ட் நேமை சொல்லி..அதுல சமைச்சா எவ்ரிதிங்க் ஸ்பெஷல்தானே (குழந்தைங்கன்னா , கிழவி ரேஞ்சிற்கு பேசனுமே )

மனைவி பல உண்வுகளை சமைக்கும் காட்சிகள் .

நெய் டின்னின் குளோசப் காட்சிகள் .. கணவன் ஒரு ஸ்வீட்டை எடுக்க . மனைவி :நோ “ கெஸ்ட் ஃப்ர்ஸ்ட் என்கிறாள்

கணவன் யார் கெஸ்ட் என்று மகளிடம் ஜாடையில் கேட்கிறான் . மகளும் , அம்மாவும் நக்கலாக சிரித்துக் கொள்கிறார்கள்

மனைவி : எல்லாம் உங்க சொந்தகாரங்கதான் என்கிறாள்.


வாசலில் காலிங் பெல் அடிக்கிறது.

மனைவி கெஸ்ட் வந்தாச்சு என்கிறாள்.

அதாவது “உங்க மாமனாரும் , மாமியாரும் என்கிறாள்

----------- நெய் ..குஷி , ருசி , குதூகூலம்

“மணம் வீசும்...மனம் பேசும் “

எதாவது பெட்டரா கேப்ஷன் இருந்தால் கொடுங்க .. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா பரிசு உண்டு


ஒரு ஆசை : ஆட்சி மாறிடும் சூழல் தெரிகிறது என்று சஞ்சய் மாதிரி அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள் . எதுவானாலும் பேயும் , பிசாசும்தாம் நமக்கு சாஸ்வதம் . ஆனால் காட்சிகள் மாறும் போது , படம் எப்படி விருவிருப்பாக இருக்குன்னு பார்க்க ஆசை..உங்களுக்கு ?

கொஞ்சம் டிஸ்கிகள் :

ஒரே இடத்தில் நடந்த மாபெரும் விருந்து..பிரமிப்பூட்டும் அசைவ சாப்பாடு..இன்று இரவு நிஜம் நிகழ்ச்சியில்...........


பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்


எதிர் வீட்டுக்காரர் மாடியில் இரண்டு அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் ,ஒரு பொண்ணு அவருக்கு .பொண்ணை கட்டி கொடுத்துட்டா , பையனை மேல வச்சுட்டு , நானும் மனைவியும் கீழே காலத்தை கழிச்சுடுவோம் என்றார் . என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள் ! எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது

கோவிந்தா கோஷம் எங்கும் ஒலிக்கிறது. பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எனக்குத்தான் கோவிந்தா என்றால் அதற்கு முன்னால் இருக்கும் குவார்ட்டர் என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது


இது பெஸ்கியோட டிஸ்கி


சண்டே வித் தங்கமணி

தங்கமணி: ஏங்க, பெப்பர் சிக்கன் பண்ணட்டுமா?
நான்: வேணாம்மா
தங்கம்: இல்லன்னா, பட்டர் சிக்கன்?
நான்: நோ.
தங்கம்: செட்டினாடு சிக்கன்?
நான்: அதல்லாம் வேணாம்மா, வெறும் குழம்பு மட்டும் வை, போதும்.
தங்கம்: இப்படி ஒரு புருசன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும், நான் கஷ்டப்படக்கூடாதுன்னு ஒன்னும் வேணாம்னு சொல்றீங்களே.
நான்: அது நீ கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக இல்லம்மா, நான் கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக

ஒரு கவிஜை :
இடது, வலது
ஏறி, இறங்கி
மேலும்,கீழும்
சரியும்,தவறும்
நடத்தலும்,நிற்றலும்
முன்னும்,பின்னும்
அந்தப்புறம், இந்தப்புறம்
ஆணும்,பெண்ணும்
இதுவரை சரிதான்
ஆனால்
உனக்கும்,எனக்கும்
எனக்கும்,உனக்கும்
என்பதில் உடன்பாடில்லை
அது நான்,நீ என்று
திருத்தப்படுகிறது.

33 comments:

vinthaimanithan said...

கவிதைல ரொம்ப யோசிக்க வெக்கிறீங்கண்ணே!

vinthaimanithan said...

செங்கோட்டை பார்டர் தாண்டினா கொத்தமல்லிச் செடியில தேங்காயே காய்க்குதாம்!

உண்மைத்தமிழன் said...

வழக்கம் போல..!

இந்த பாங்காங் மேட்டர் மட்டும்தான் எனக்குச் சரியாப் புரியலை..

நிறைய உண்மையை மறைக்குறீங்களோன்னு தோணுது..!

பித்தன் said...

தேன வழிச்சிட்டு புறங்கைய நக்காமைய இருந்தீங்க..... பாங்காக் போயிட்டு ஒன்னும் பண்ணாம திரும்பி வந்தது செல்லுபடியாகாது......

vasu balaji said...

பாவி மனுஷா:)). சைட் டிஷ் கவுஜ நல்லாருக்கு.

Raju said...

என்னை ஒரு குடும்பத்தலைவியாக உணர வைப்பது -------- நெய்

Raju said...

சிவத்த உடல் மினுமினுக்க கருத்த உடல் பளபளக்க வாங்கி சாப்பிடுங்கள் --------- நெய்

Raju said...

-------- நெய்யில பலகாரம் செஞ்சா மனுசன் குட்டி போட்ட கழுதையாட்டம் சுத்தி சுத்தி வருவாரு!

Raju said...

தொட்டுத் தொடரும் ஒரு நெய்யின் சுத்தப் பாரம்பரியம்.

Raju said...

அந்த நெய் சாப்பிட்ட குழந்தைகள் வளர்ந்தார்கள் 3மீ.ஆனால், ------ நெய் சாப்பிட்ட குழந்தைகள் வளர்ந்தார்கள் 6மீ! டாக்டர்களால் அங்கீகரிக்கப்பட்ட நெய்.

Raju said...

உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற ------ நெய்யால் விளக்கு போடுங்கள்

Raju said...

எல்லா ஆண்,பெண் மற்றும் குழந்தை தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய உகந்தது ------ நெய்.

Raju said...

த டேஸ்ட் ஆஃப் காங்கேயம்,------- நெய்.

Raju said...

சுத்தமான பசும்பாலிலிருந்து கைபடாமல் தயாரிக்கப்படும் ஒரே நெய்,------ நெய்.

Raju said...

இப்போது -------- நெய், ஜாஸ்மின், ஸ்ட்ராபெர்ரி என உங்கள் மனம் கவர்ந்த ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது.

Raju said...

அண்ணே, இவ்ளோ கேப்ஷன் கொடுத்திருக்கேன். பிளீஸ்..தயவு செஞ்சு மைசூர்பா அனுப்பி வச்சிருங்க...
பிளீஸ்.

Katz said...

நகைச்சுவையா அருமையா எழுதறிங்க...

அபி அப்பா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சுஜாதா படிப்பது மாதிரி இருந்துச்சு.

அடுத்து நெய் விளம்பரம் ரொம்ப சாதாரணமா இருந்துச்சு. இன்னும் நல்லா செய்யுங்க. இது மனசுல நிக்கலை. இதுக்கு பேசாம வீரபாண்டி பொன்னி அரிசி மூட்டையை அந்த 30 நொடியில் 20 தடவை காமிச்சு உச்சஸ்தாயில் பிராண்ட் பெயர் சொல்வது மனசிலே திட்டவாவது பதிஞ்சுது.

குத்தம் சொல்ல இதை சொல்லலை. ஒரு ஸ்பார்க் ஒரே ஸ்பார்க் மனசிலே பச்சக்ன்னு நெய் மாதிரி ஒட்டிக்கனும். அது போல செய்யுங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

ஈரோடு வந்தவுடன் மறக்காமல் அழையுங்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

மானிட்டர் பக்கங்கள்......ம்ம்ம்ம்ம்

யுவகிருஷ்ணா said...

//பொதுவாகவே மேலை நாடுகளில் ஹாரன் அடிப்பதில்லை . இங்கும் அப்படித்தான் . ஆனால் அதற்கு பதிலாகத்தான் நாங்க வாய் ஓயவே இல்லை .//

’ஹாரன் - வாய்’ டபுள் மீனிங்கு எதுவுமில்லையே பாஸூ?

ஆட்சி மாறும்னு யாரும் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு அலையாதீங்க. கூட்டணியே இல்லைன்னாலும் 2016 வரைக்கும் கலீஞ்ஞர் ஆட்சிதான்!

மத்தபடி செம இண்டரெஸ்டிங் பத்தி.

அகல்விளக்கு said...

One of the best Monitor........

Super thalaivare......

:)

யாசவி said...

btw lines நிறைய பேருக்கு புரிஞ்சுதான்னு தெரியல.

ம்ம்ம் நடத்துங்க

மற்றபடி மானிட்டர் வழக்கம் போல சூ..சூ...சூப்பர்

யாசவி said...

கொத்தமல்லி செடிக்கு கொடுத்தீர்களோ?

ஹோட்டல்க்காரனுக்கு அழுதீர்கள்?

நடக்கட்டும்....

VISA said...

இந்திய சூப்பர் மார்க்கெட்டில் முதல் முறையாக மார்க்கெட்டுக்கு வந்து ஆரு மாதங்களே ஆன புத்தம் புது நெய்.

//மத்தபடி செம இண்டரெஸ்டிங் பத்தி.//

இதன் மூலம் மணிஜீயை பத்தி எழுத்தாளர் என்று சொல்ல வருகிறீர்களா - எப்புடி அவ்வ்வ்வ்....மாதவா பின்றடா

உமர் | Umar said...

காங்கேயம் என்றால் R.K. கணபதி செட்டியார் நிறுவனத்தின் RKG நெய்யாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

RKG எனில்,

RKG
சுவை ஆஹா ஜி
மணம் ஓஹோ ஜி

செ.சரவணக்குமார் said...

எழுத்து நடை வசீகரிக்கிறது மணிஜீ.

Paleo God said...

நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்
//

சிரிச்சிக்கினே கீறேன் தல! :)

ரமேஷ் வைத்யா said...

ஈரல் கறி சைடு டிஷ். யாருக்கோ.

Cable சங்கர் said...

ஐக்கு அப்புறம் யாரையும் பாக்கலையா?

மணிஜி said...

வருகைக்கும் , மொய்க்கும் நன்றி நண்பர்களே...

நித்யன் said...

பிரமாதம் தலைவரே...

பாங்காங் அனுபவங்களை அங்கங்கு சுவைபட தூவிச் செல்வது அபாரம்.

நெய் மணக்க வாழ்த்துக்கள்.

அன்பு நித்யன்.

a said...

மணிஜி : அருமை.....