Tuesday, August 24, 2010

முன்னாளும் , இந்நாளும் சந்திக்கிறார்கள்


அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்.. ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..தமிழகத்தின் முன்னாள் உபத்திரமும் , இன்னாள் மூலப்பத்திரமும் (சேலத்தில் மு.கவை வாழ்த்தி இந்த வாசகம் பார்த்தேன் ) நேற்று சந்திப்பார்கள் என்று நவ”கிரக”ங்களும் ஆவலுடன் இருந்ததாம் . ஆனால் அந்த சரித்திர பிரசித்தி பெற வேண்டிய சந்திப்பு நடைபெறவில்லை . சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் . கடும் முயற்சிக்குப் பிறகு....


அண்ணா சமாதிக்கும், எம்ஜிஆர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது.. கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்.. அண்ணா சமாதியை பார்த்தவுடன் அவருக்கு உண்ணாவிரதம், இருக்கும் ஆசை வருகிறது . உதவியாளர் முதல்வர் காலையிலேயே செட் தோசை சாப்பிட்டதை நினைவுபடுத்துகிறார் . சரிய்யா..அந்தம்மா வரும் வரைக்கும் நான் உண்ணாவிரதம் என்று சொல்ல , கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த “மாரியம்மன் மகிமை “ சீரியல் நிறுத்தப்பட்டு , உண்ணாவிரதம் நேரடி ஒளிபரப்பு .

அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா? தூங்கி முழிச்சு , அணிந்திருந்த நகைகளை கழட்டி விட்டு வழக்கம் போல் லேட்டாக வர. கருணாநிதி விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?

இல்லை அம்மணி “கிரகணத்தை” அப்படித்தான் பார்க்கனும்..கேள்விப் பட்டதில்லையா?

வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..

இன்னிக்கு முரசொலி வாசிக்கலையா ? கின்னஸ்ல என் பேர் வந்திருக்கு . அதிகமா தபால் எழுதினதுக்காக .எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..

நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..ஆளாலுக்கு ஆடறாங்க..

அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..ஆமாம்..உங்களுக்கு இலவச தொலைகாட்சி கிடைத்ததா ? ஒரு ரூபா அரிசிதான் நீங்களும் சாப்பிடறீங்கன்னு உளவுத்துறை ரிப்போர்ட்

நான்சென்ஸ்..நான் இப்ப பிஸ்ஸாவுக்கு மாறியாச்சு . உங்க கையை வீக்காக்க போறேன். விலைவாசிய பாத்திங்களா? விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..

ரொம்ப பீத்திக்காதீங்க...கோவையையும் , திருச்சியையும் பார்த்தீங்கள்ளே . அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...ஆமாம்..எனக்கு எதாவது மிச்சம் இருக்குமா ? சசி ரொம்ப நாளா ஒரு மூக்குத்தி கேட்டு கிட்டு இருக்காங்க


மதுரை தம்பி கிட்ட கேளுங்க.. கம்மல் ,கால் கிலோ கறி எல்லாம் உண்டு . ஓட்டை சூரியனுக்கு போடுங்க போதும்

இந்த முறை அது நடக்காது . அடுத்த மைனாரிட்டி ஆட்சி என்னுதுதான்

அம்மணி....இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??

வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது..

அறியாமையில் அரற்றுகிறீர்கள்..அது இன்னும் சொர்க்கம்...உங்களுக்கு சுத்தம்..ஒன்னு காந்தி, இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்?

இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..

கருணாநிதி..அம்மையாரே, நம்ம லாவணியை அப்புறம் கூட வச்சுக்கலாம்..முதல்ல இந்த மாதிரி புல்லுருவிகளை என்ன பண்ணனும் தெரியுமில்ல...

ஆமாமாம்..இந்த விஷயத்துல நீங்களும் நானும் ஒரே கட்சிதானே..

அப்புறம் என்ன? ஸ்டார்ட் மூஜிக்....12 comments:

Ŝ₤Ω..™ said...

:))))))

vasu balaji said...

//கருணாநிதி விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?//

செம க்யூட் டைரக்டோரியல் டச்:))

அதகளம்:))

Unknown said...

ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்...

Katz said...

ஹலோ? இருக்கீங்களா?

//விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...//

ஹா! ஹா! கலக்குங்க.

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

நிசமாவே உங்க கிளைமாக்ஸ் மாதிரிதான் ஆவப் போகுது..

பாத்து பத்திரமா இருந்துக்குங்க..!

vinthaimanithan said...

கெக்கெக்கெக்கே..........

Kumky said...

மீள் பதிவா இருந்தாலும் புல் மீல்ஸ் தல.

செ.சரவணக்குமார் said...

//இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..//

மக்கள் பிரச்சனையா?? ஹி ஹி..

செம்ம காமெடி தலைவரே நீங்க.

'பரிவை' சே.குமார் said...

அருமை...
நல்லா இருந்தது.

Jerry Eshananda said...

சந்திச்சு இருந்தா "சந்தி சிருச்சுருக்கும்ல".

Thomas Ruban said...

//இல்லை அம்மணி “கிரகணத்தை” அப்படித்தான் பார்க்கனும்..கேள்விப் பட்டதில்லையா?//

;)))) செம நக்கல்...

//வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்.//

உங்களுக்கு எவ்வளவு வந்திச்சின்னு தெரிஞ்சுக்கலாமா..

//ஒன்னு காந்தி, இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்? //

இப்பவே பயமுறுத்திறிர்கள்.

//இந்த விஷயத்துல நீங்களும் நானும் ஒரே கட்சிதானே..//

அரசியலில் இது எல்லாம் சகஜம் அண்ணே!!

கலக்கல் பதிவு நன்றி

Jackiesekar said...

செம கருத்துக்கிண்டல்...