Friday, February 5, 2010

அர்த்தமில்லாத கதைகள்....4


இந்த வருசம் அய்யாவுக்கு 87 முடியுது. சிறப்பா கொண்டாடிடணும்.

செஞ்சிடலாம். ஆனா அதுக்கப்புறம் அவரை வீட்டோட இருக்க சொல்லுங்க. இந்த நிலம், நீச்சு, தோட்டம் , தொறவு எல்லாத்தையும் என் கிட்ட ஒப்படைக்க சொல்லிடுங்க.

அதைத்தானே அவரும் சொல்லி கிட்டிருக்காரு. பாவம். போதும் இத்தனை காலம் ஓடா ஒழைச்சு குடும்பங்களை ஏதோ கரையேத்திட்டாரு. இனிமேலாவது அக்கடான்னு கோயில் குளம்னு இருக்கட்டும்.

சரி. பெரியவர் என்ன சொல்றாரு?

அவர் என்ன சொல்றது! சரின்னுதான் சொல்வாரு.

இல்லம்மா . எனக்கென்னவோ அண்ணன் இதுக்கு ஒத்துக்குவாருன்னு தோணலை. நீங்க வேணா பாருங்க!

எலேய் ! கிடா வெட்டியாச்சா? மாலை எங்க? அண்ணன் ரெடியாயிடுவாரு.

அண்ணே ! எங்களுக்கு எல்லாமே நீங்கதான். உங்களை நம்பித்தான் இருக்கோம்.

என்ன தம்பி? ஊர் பூரா ஒரே பேச்சா இருக்கு.

என்ன பேசிக்கிறாங்க?

என்ன அண்ணே! தெரியாத மாதிரி கேக்கறீங்க? பெரியவர் காசி, ராமேஸ்வரம்னு கிளம்பறாராம். தம்பி கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு.

எல்லோருக்கும் சொல்றேன் கேட்டுக்கங்க. டேய்! நம்ம தலையாரியை கூப்பிட்டு ஊருக்கு தண்டோரா போட சொல்லு. பெரியவர் எங்கயும் போகலை. அடுத்த வருஷமும் அவர்தான் ஊர் நாட்டாமை.

என்னங்க இது? அண்ணன் இப்படி சொல்லிட்டாரு?

பாவம்! ஐயா பாடுதான் திண்டாட்டம். என்ன செய்யப்போறாரு?

அவருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? எத்தனை சமாளிச்சிருக்காரு! பாரேன். ஊதி தள்ளிடுவாரு!


ஏம்மா! அப்பா சொத்துல பொம்பளை பிள்ளைகளுக்கும் சம பங்கு உண்டுன்னு ஐயா முன்ன நாட்டாமையா இருக்கிறப்ப சொன்னாருல்ல?

ஆமாம்! அதுக்கு என்ன இப்போ?

எனக்கு என்ன கிடைக்கும்னு தெரியலையே?

மதிய சாப்பாட்டுக்கு இங்கதான் வருவாரு . நீயே கேளு!

-------------------------------------------------------------------------------------------------

அக்கா! சீமைக்கு போனிங்களே? பெரியக்காவை பாத்தீங்களா? உங்களை கண்டுகிட்டாங்களா?

இல்லை தங்கச்சி. திரும்பி கூட பார்க்கலையே!தலையால தண்ணி குடிச்சு பார்த்தேனே. ம்ஹீம்.. அசரலை.

பின்ன ! அசலூராயிருந்தாலும் உப்பு போட்டுத்தானே ரொட்டி சாப்பிடுது. பத்தாததுக்கு பெரியவரோட ஆளுங்க மூட்டி விட்டு கிட்டே இருக்காங்க!!

அன்னிக்கு விழுப்புரம் காது குத்து திருவிழாவில வச்சு நீங்க அவங்களை ஏசாம இருந்தா, இந்நேரம் ராணி மாதிரி இருந்திருக்கலாம். அப்புறமாவது விட்டீங்களா? பட்டப்பேரை வச்சு கிண்டலடிச்சீங்க. மறந்துடுவாங்களா என்ன?

ஆமாம். அப்பல்லாம் நீயும் கூடத்தானே இருந்த. எடுத்து சொல்ல வேண்டியதுதானே.

எங்கக்கா உங்களுக்கு யார் சொல்றது? அதான் நீங்க ஒருக்கா முடிவு பண்ணிட்டா, உங்க பேச்சை நீங்களே கேக்க மாட்டீங்களே!

சரி. பார்ப்போம். எதுக்கும் இந்த விருதாசலத்து பங்காளி மேல ஒரு கண்ணு இருக்கட்டும்.

ஆமாம். அந்தாள் வலிய வந்தப்ப அவரையும்தான் ஏசி விட்டீங்க. கள்ளு குடிக்கிறான், உளறான்னு !

அடியேய் ! இப்ப அந்தாளுக்கும் வேற போக்கிடம் இல்லை. இங்கனத்தான் வரணும். வருவாரு பாரு. வண்டியை பூட்ட சொல்லு. கிளம்புவோம்.

எங்கக்கா?

தோப்புக்குத்தான். போய் ஒரு ஆறு மாசம் தூக்கத்தை போட்டுட்டு வருவோம்.

எது எப்படியோ? எங்க காட்டுல மழை பெய்யதை யாரும் தடுக்க முடியாதுல்ல!!




22 comments:

எறும்பு said...

Present sir...

எறும்பு said...

நீங்க அய்யா பக்கமா அம்மா பக்கமா ?

Unknown said...

thanjavoorkkaranoda kusumbu theriyudhu!!!

Anonymous said...

//எல்லோருக்கும் சொல்றேன் கேட்டுக்கங்க. டேய்! நம்ம தலையாரியை கூப்பிட்டு ஊருக்கு தண்டோரா போட சொல்லு. பெரியவர் எங்கயும் போகலை. அடுத்த வருஷமும் அவர்தான் ஊர் நாட்டாமை.//

ithu thaan natakka pokuthu....

nice to read.... :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அர்த்தமில்லாத கதைகள்னு சொல்லிட்டு பயங்கரமான அர்த்தமுள்ளதா இருக்கே.

கடல்புறா said...

ஊர் பூரா போய் தண்டோரா போடு. போ. உனக்கு புல்டோசர் ரெடியா இருக்கு.

வெள்ளிநிலா said...

அண்ணே தண்டோரா, உங்களுக்கு உடம்பு ரொம்ப பலமா, ஆட்டோ எல்லாம் பழசு, ராகேட்டே வரும்.,, "கிரி"யில வர்ற மூத்திர சந்து வேற ஞாபகம் வந்து தொலைக்குது....

Unknown said...

:-))))

vasu balaji said...

:))).

உண்மைத்தமிழன் said...

வழக்கம்போல நகைச்சுவைத் தோரணங்கள்..!

நல்லாயிருக்குண்ணே..!

சங்கர் said...

நான் ஒண்ணும் சொல்லலை :))

Unknown said...

நிறைய உள் அர்த்தம் இருக்கு போல இருக்கே......

நேசமித்ரன் said...

அட சாமி எப்பிடி எல்லாம் யோசிக்கிறீங்க யப்போ

Marimuthu Murugan said...

எப்பிடியெல்லாம் ரீமேக் பண்றாங்கப்பா...

இப்பவே கண்ண கட்டுதே...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//இந்த வருசம் அய்யாவுக்கு 87 முடியுது. சிறப்பா கொண்டாடிடணும்//

இனிய 87-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்னத்தான் வயசானாலும் உங்களை நீங்களே "அய்யா" ன்னு அழைத்துக்கொள்வது நல்லாவா இருக்கு?

வரதராஜலு .பூ said...

புரியுது புரியுது அர்த்மில்லாத கதைகளின் அர்த்தம் புரியுது :-)

ரவி said...

ஆக, எப்ப புத்தகம் வெளிவரப்போவுது ? பதிப்பகம் எது ? புத்தக விலை என்ன ?

ஜெட்லி... said...

தலைவரே காலையில் மக்கள் டி.வி.யில்
ஜன்னலுக்கு வெளியே நிகழ்ச்சிக்கு வரீங்கன்னு
ஏன் முன்னாடியே சொல்லல....
குறும்படத்தில் இருந்து தான் பார்த்தேன்...
உங்கள் பேட்டியின் வீடியோ இருந்தால் போடவும்....

மரா said...

நானும் ஒண்ணும் சொல்லலை..

Unknown said...

வழக்கமான “அர்ததமே” இல்லாத கதை..

Paleo God said...

ரைட்டு..:))

vinthaimanithan said...

"டேய்.... இந்த தண்டோரா தொல்லை தாங்க முடியலடா...
அவன் வீடு பக்கத்துல எதுவும் பாலம் கட்டலாமானு பாரு"

"பண்ணிடலாம்ணே! ஆனா அவன் வீடு முன் போர்ஷ்ன் கொஞ்சம் இடைஞ்சலா இருக்குறா மாதிரி இருக்குண்ணே"

" நீ நம்ம பயடா! கப்புனு புடிச்சிட்டியே!!"


ர்ர்ர்ர்ரைட்... வுடு ஜூட்!!!!!!!!!!