Saturday, December 5, 2009

8 ஆம் நம்பர் சைக்கிள்...



ஆறடி உயர கட்டுமஸ்தான உடம்பு. நெஞ்சுக்குழியில் ஒரு டம்பளர் தண்ணி நிக்கும். டெய்லி 1000 கர்லா, 250 பெஞ்சு பிரஸ். ஒரு முழு கோழி. நாட்டு சரக்கு. கத்திரி சிகரெட். அதிமுக கரை வேட்டி. முண்டா வரை மடித்து விடப் பட்ட வெள்ளை சட்டை. கழுத்தில் கைகுட்டை. கறுப்பில் நீலம் கலந்த நிறம். எப்போதும் லேசான நீலத்தில் மிதக்கும் கண்கள். இதுதான் பன்னீர். பன்னீர் வாடகை சைக்கிள் கடையின் முதலாளி.

பன்னீர் எனக்கு ஆதர்ச நாயகன். நான் அப்போது +2 படித்து கொண்டிருந்தேன். அவன் கடை பக்கத்தில்தான் நம்மாள் வீடு. பன்னீரை சிநேகம் பிடிக்க அதுதான் முதல் காரணம். அப்போது சட்டென்று ஏரியா விட்டு ஏரியா போய் சைட் அடிக்க முடியாது. ஒவ்வொரு தெருவிலும் ஒரு அடியாள் கோஷ்டி உண்டு. சுளுக்கெடுத்து விடுவார்கள். ஆனால் நான் பன்னீரின் பெட் என்பதால் எனக்கு விதி விலக்கு . ஆம் . பன்னீருக்கு நான் மிகவும் பிடித்தமானவன். இதில் எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. என் நண்பர்கள் சிலருக்கு பொறாமை. பன்னீர் என்னை பெல் என்றுதான் கூப்பிடுவான். அவனிடம் 8 ஆம் நம்பர் சைக்கிள் ஒன்று உண்டு.அதிமுக கலரில் “பன்னீர்” என்று எழுதி குதிரை மாதிரி இருக்கும். அதை வாடகைக்கு தரமாட்டான். அது புரட்சித்தலைவர் தஞ்சைக்கு வந்தபோது அவனுக்கு பரிசாக தந்ததாம். அரை மணிக்கொருக்கா அதை துடைத்து பள பளன்னு வச்சிருப்பான். ஆனால் நான் அந்த சைக்கிளை ஓட்டிக் கொண்டு போய்தான் அவளை பார்ப்பேன்.அந்த சைக்கிளில் நான் போவதை எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்ப்பர். எனக்கு பெருமையாக இருக்கும். அவளை சாய்த்திட நான் என்னை விட அந்த சைக்கிளைத்தான் மலை போல் நம்பியிருந்தேன்..பன்னீர் கடை சைக்கிளில் கேரியர் இருக்காது. டபுள்ஸ் போக கூடாதுன்னு. ஆனால் என்னிடம் அடிக்கடி அவன் சொல்வது. பெல்லு.. நீ அவளை நம்ம எட்டாம் நம்பர்ல முன்னாடி வச்சு தூக்கிட்டு வந்திடு. எவன் வந்தாலும் நான் பாத்துக்கறேன்..

ஒரு முறை நானும், ரவியும் ஒரு வெட்டி தகராறு இழுத்து விட்டோம். பன்னீர் இருக்கும் தைரியத்தில்தான். விஷயம் பன்னீர் காதுக்கு போயிற்று. கடுப்பானவன் என்னை அடித்து விட்டான். பின் என்ன நினைத்தானோ, சரி வாங்கன்னு சாந்தி புரோட்டா ஸ்டாலுக்கு கூட்டிகிட்டு போனான். நல்லா சாப்பிட்டோம். பெல்லு.ஏற்கனவே அவனுகளுக்கும், எனக்கும் ஆகாது. அதனால இது பெரிய பிரச்சனையா ஆகப் போகுது. நீங்களும் சாக்கிரதையா இருக்கணும். தனியா எங்கயேயும் சுத்தாதீங்க. சைக்கிள் செயினை இடுப்பில கட்டி கிட்டே திரிங்க.. என்றான்.

அப்புறம் அவன் சொன்னது போல் அது ஊர் தகராலு(சரியான உச்சரிப்புதான்) ஆயிற்று. நான் சைக்கிள் செயினை சுழற்றி சண்டை போடுவதை எப்படியாவது அவளை பார்க்க வைத்தால் போதும். கட்டின துணியோடு வந்து விடுவாள் என்று அசாத்திய நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பே வராமல் அவர்களுக்குள் காம்ப்ரமைசாகி விட்டார்கள்.

சென்னை வந்து செட்டிலாகி(அதாவது கந்தலாகி..) பன்னீரையெல்லாம் மறந்தே விட்டேன். ஒரு முறை ஊருக்கு போகும் போது உலக்ஸ் சொன்னான்.. மாப்ள பன்னீரை பார்த்தேன். உன்னைய ரொம்ப கேட்டான். எனக்கும் சட்டென்று பன்னீர் பெல்லு என்று கூப்பிடுவது போல் இருந்தது.

ஆறடி பனையாக இருந்த பன்னீர் நாலரை அடிக்கு சுருண்டிருந்தான். சகல வியாதிகளும் இருந்தது. அந்த நீல கண்கள் மட்டும் அப்படியே. என்னை பார்த்ததும் பெல்லுதானே என்று எழுந்து உட்கார்ந்து கொண்டான். சைக்கிள் கடையெல்லாம் மூடியாச்சு.. ஏதோ பொழப்பு ஓடுது. பையன் சின்னதா ஒரு டைலர் கடை வச்சிருக்கான்( சந்திரன்).. அப்புறம் நீ எப்படி இருக்கே? கடைசி வரைக்கும் அந்த சைட் உன்னைய திரும்பி பார்க்கல இல்லே? புது தெம்பு வந்தது போல் பன்னீர் பேசிக் கொண்டே போக, நான் வாங்கி கொண்டு போயிருந்த எம்.சி பிராண்டியை கொடுத்தேன். கூட பாம்பே ஸ்வீட் ஸ்டால் காராசேவு. அவனுக்கு மிகவும் பிடிக்கும். லேசாக அந்த முரடனின் கண்ணில் நீர் கோர்த்தது.

உடம்புல திராணி இருந்தப்ப இவளை மனுஷியாவே மதிச்சதில்லை. பாவம்... இப்ப இதான் எல்லாம் செய்யுது.. பன்னீரின் மனைவி அவனை ஆதரவாக அனைத்துக் கொண்டாள்..

பெல்லு... திரும்ப அந்த மாதிரி வாழமுடியுமா? ஆசையாயிருக்கு..எனக்கும் கண் கலங்கியது. ஒற்றை ஆளாக சைக்கிளை சுழற்றி சிலம்பம் ஆடி, பத்து பேரை பன்னீர் சமாளிப்பதை பார்த்திருக்கிறேன். இப்போ பச்சை குழந்தையாய் அவன் அழுவதை பார்க்க வாழ்க்கையின் மீது மீண்டும் தாங்க இயலா வியப்பு தோன்றி மறைந்தது.

பன்னீர் அந்த 8 ஆம் நம்பர் சைக்கிள் எங்கேன்னு கேட்டேன். அதோன்னு கை காட்டினான். அது சிதிலமடைந்து, எலும்பு கூடாக இருந்ததுன்னு நினைச்சா அது தப்பு...

எது நடக்குதோ இல்லியோ, தெனம் அந்த சைக்கிளை துடைச்சு, எண்ணெய் போட்டு, பூ சாத்திடுவாரு. என் உசிரே அங்க தாண்டா இருக்குன்னு அடிக்கடி சொல்வாரு..

எனக்கு அந்த 8 ஆம் நம்பர் சைக்கிளில் போய் அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது...

31 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

super appu..

கே.என்.சிவராமன் said...

நல்லா இருக்கு... இன்னும் கொஞ்சம் செதுக்க்கியிருக்கலாம்னு தோணுது.

போற போக்கைப் பார்த்தா, உங்க தளத்துல நல்ல சிறுகதைகள் வந்துடும் போலிருக்கே :(

தோழமையுடன்
பைத்தியக்காரன்

☼ வெயிலான் said...

நல்ல பதிவுண்ணே!

Vidhoosh said...

என்னமோ பின்னூட்டம் போடணும்னு தோணியது
:(

--வித்யா

vasu balaji said...

ஒரு நல்ல படைப்ப படிச்ச திருப்தி.

sathishsangkavi.blogspot.com said...

அருமை...........

நாம் எங்கு இருந்தாலும் ஊரிற்கு செல்லும்
போது பழைய நண்பர்களை பார்க்கும் சுகமே தனி
நமக்கும் அவர்களுக்கும்.........

உங்களைப் போல எனக்கும் பல பன்னீர்கள்............

iniyavan said...

//ஒரு முறை ஊருக்கு போகும் போது உலக்ஸ் சொன்னான்.. மாப்ள பன்னீரை பார்த்தேன். உன்னைய ரொம்ப கேட்டான். //

நான் எப்ப உங்க கிட்ட சொன்னேன்?

iniyavan said...

//நாட்டு சரக்கு.//

//நான் வாங்கி கொண்டு போயிருந்த எம்.சி பிராண்டியை கொடுத்தேன்//

அதானே பார்த்தேன். இதல்லாம் இல்லாம தலைவரோட பதிவா??????

மணிஜி said...

/என். உலகநாதன் said...
//ஒரு முறை ஊருக்கு போகும் போது உலக்ஸ் சொன்னான்.. மாப்ள பன்னீரை பார்த்தேன். உன்னைய ரொம்ப கேட்டான். //

நான் எப்ப உங்க கிட்ட சொன்னேன்?//

ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நிணைக்கிறென் உங்க கிட்ட...

கலகலப்ரியா said...

//அவளை சாய்த்திட நான் என்னை விட அந்த சைக்கிளைத்தான் மலை போல் நம்பியிருந்தேன்..//

//சைக்கிள் செயினை சுழற்றி சண்டை போடுவதை எப்படியாவது அவளை பார்க்க வைத்தால் போதும். கட்டின துணியோடு வந்து //

=))

//இப்போ பச்சை குழந்தையாய் அவன் அழுவதை பார்க்க வாழ்க்கையின் மீது மீண்டும் தாங்க இயலா வியப்பு தோன்றி மறைந்தது.//

அடிக்கடி தோன்றும் வியப்பு... இது நானான்னே சந்தேகம் வர்ற அளவுக்கு வாழ்க்கை ஒரு மனிதனைப் புரட்டிப் போட்டுவிடும்...

//எனக்கு அந்த 8 ஆம் நம்பர் சைக்கிளில் போய் அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது...//

:) can feel it..

எறும்பு said...

//வாழ்க்கையின் மீது மீண்டும் தாங்க இயலா வியப்பு தோன்றி மறைந்தது//

என்ன பண்றது அண்ணே?? மாற்றம் தான் நிதர்சனம்

cheena (சீனா) said...

அன்பின் தண்டோரா

அருமையான கதை

நல நடை - இயல்பான எளிதான் சொற்கள் - நல்வாழ்த்துகள்

பூங்குன்றன்.வே said...

எளிய தமிழில் இனிய சிறுகதை. நல்லா இருக்கு பாஸ்.

Jackiesekar said...

நல்லா இருந்துச்சு.. அதைவிட அந்த 8 நம்பர் சைக்கிள் இல்லாட்டியும் ஒரு தபா அந்த புள்ளைய பார்த்துட்டு வரலாம் இல்லையா???

Cable சங்கர் said...

ஏற்கனவே நீங்க சொல்லி கேட்டிருந்தாலும், படிக்கிறப்ப நல்லவே இருக்கு தலைவரே..

உண்மைத்தமிழன் said...

கதை நன்றாக இருக்கிறது..! சூப்பர்தான் என்றாலும் நான் ஒருவன் இங்கே தனியே அழுது கொண்டிருக்க.. தலைவரான நீங்கள் மட்டும் தனியே ஆவர்த்தனம் நடத்துவதைப் போல் என்னைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் பதிவுகள் போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது..

ஆகவே இன்றிலிருந்து எமது தளம் மீளவும் எமது கைக்குக் கிடைக்கின்றவரையிலும் உமது தளத்திலும், நமது சுற்றத்தார் அனைவரின் புதிய பதிவிற்கும் மைனஸ் குத்துக்கள் குத்தப்படும் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்..

பா.ராஜாராம் said...

எப்பவாவது பிடிக்கத்தான் போகிற உங்கள் கைகளை இப்பவே பிடிசுக்கிரனும் போல் இருக்கு மணி.என் மணி பையா!(கண்டுக்கவேணாம்..உணர்சிவசபட்டால் அப்படித்தான் நான்!)

அடிக்கடி இந்த வேலை பாருங்கள்.ஆன்மாவில் இருந்து பேசுகிற இந்த வேலையை..

butterfly Surya said...

super..

அப்புறம் தான் இங்க வந்து ஸ்கூட்டர் வாங்கி...

அந்த கதை எப்போ..??

பிரபாகர் said...

நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்கண்ணே! ரொம்ப நல்லாருக்கு.

பிரபாகர்.

iniyavan said...

/என். உலகநாதன் said...
//ஒரு முறை ஊருக்கு போகும் போது உலக்ஸ் சொன்னான்.. மாப்ள பன்னீரை பார்த்தேன். உன்னைய ரொம்ப கேட்டான். //

நான் எப்ப உங்க கிட்ட சொன்னேன்?//

ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நிணைக்கிறென் உங்க கிட்ட...//

தெரியும் தல.

சும்மா ஜாலிக்காக அப்படி ஒரு பின்னூட்டமிட்டேன்.

Thamira said...

நல்லா இருக்கு... இன்னும் கொஞ்சம் செதுக்க்கியிருக்கலாம்னு தோணுது.

போற போக்கைப் பார்த்தா, உங்க தளத்துல நல்ல சிறுகதைகள் வந்துடும் போலிருக்கே :-))

// ரிப்பீட்டு.!

இன்றைய கவிதை said...

தண்டோரா ஸார்!

நாங்க ரஜினியை நேசிக்கற மாதிரி,
பன்னீர் 'வாத்தியா'ரை நேசிக்க மட்டும் செய்யாம,
மனசுல ஏத்தி வெச்சிருக்கார்!

அனுபவக் கதைகள் எல்லாமே,
மனசை அசைக்கும் கதைகள்தான்!

தொடருங்க!


-இன்றைய கவிதை நண்பர்கள்

ஹரிணி அம்மா said...

நாம் எங்கு இருந்தாலும் ஊரிற்கு செல்லும்
போது பழைய நண்பர்களை பார்க்கும் சுகமே தனி
நமக்கும் அவர்களுக்கும்//


அழகாச் சொல்லியிருக்கிங்க

அத்திரி said...

பழைய நினைப்புடா பேராண்டி........... பழைய நினைப்புடா

அத்திரி said...

நாந்தான் 25

சீமாச்சு.. said...

பெல்லு..

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. கதையிலே அப்படியே ஒரு உயிரோட்டம் தெரியுது..

உண்மைக்கதையா.. அல்லது கதையில் கொஞ்சம் உண்மையா?

மணிஜி said...

Patta Patti

பைத்தியக்காரன்

வெயிலான்


Vidhoosh

--வித்யா


வானம்பாடிகள்

Sangkavi .

என். உலகநாதன்

கலகலப்ரியா

எறும்பு


cheena (சீனா) said...

பூங்குன்றன்.வே said...
எளிய தமிழில் இனிய சிறுகதை. நல்லா இருக்கு பாஸ்.


jackiesekar
Cable Sankar said...

உண்மைத்
தமிழன்(15270788164745573644)

பா.ராஜாராம்
butterfly Surya \
பிரபாகர்\

என். உலகநாதன் said...
/என். உலகநாதன் said...

ஆதிமூலகிருஷ்ணன்

இன்றைய கவிதை

ஹரிணி அம்மா
அத்திரி

அத்திரி

Seemachu

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு வந்தனமும்,நன்றிகளும்..

நிலாமதி said...

இளமைகால நினைவை அசைபோடுவதே தனி சுகம் .
நினைவுகள் சிறு கதையாக ......அருமை நண்பா

மாயாவி said...

இளமைக்காலங்களில் பார்க்கின்ற பழகுகின்ற சிலரை வாழ்வின் கடைசிவரை மறக்க முடியாது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு தண்டோரா.

தருமி said...

நல்லாயிருக்கு..
பிடிச்சிருக்கு .....