Saturday, October 3, 2009

திருந்தி கொள்கிறேன்.............


நடந்த நிகழ்வுகளில்
எனக்கும்
உடன்பாடில்லைதான்
நூறு சதம்

குறி வைத்து
குதறுகிறார்களே
என்ற கோபம்
நிதானமிழக்க
வைத்தது

பிரித்தாளும்
சூழ்ச்சியை விட
மோசமான குயுக்தி
செயலிழக்க
வைப்பது

புரிதல் உள்ள
நண்பர்கள்
சுட்டியதும்
உணர்ந்து கொண்டேன்

கருமத்தை
தொலைத்து விட்டு
காரியத்தில்
கவனம் தேவை

நடந்தவை
மறந்து போகட்டும்
நடப்பவை
இனிதாகட்டும்

வேதனையிருந்தாலும்
வேலை கெடும்
சூழல் உருவாகிறது

தெளிந்து கொண்டேன்
தெரிந்து கொண்டேன்
அறிவுறுத்திய
அன்பு நெஞ்சங்களுக்கு
நன்றியும்
வந்தனங்களும்


30 comments:

உண்மைத்தமிழன் said...

தெளிந்திருந்தால், தெளிந்தமைக்கு வாழ்த்துகிறேன்..

புரிந்திருந்தால், புரிந்தமைக்கு
பாராட்டுகிறேன்.

உணர்ந்திருந்தால், உணர்ந்தமைக்கு
நன்றி கூறுகிறேன்..

அடுத்து நானும் திருந்தணுமா?

முருகா..!

நாமக்கல் சிபி said...

//அடுத்து நானும் திருந்தணுமா?//

பின்னே!

Anonymous said...

மணி / சரவணா,

யார் சரி யார் தவறு என்பதல்ல முக்கியம் இங்கே. தேவையா இல்லையா என்பதுதான்.

யாரும் யாருக்கும் எதையும் நிரூபிக்க முடியாது என்பதுதான் இப்பொழுதும் இதற்கு முன் வேறு விஷயங்களில் நடந்த விவாதத்திற்குமான பொது விளைவு.

அப்படியே உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொண்டேன் என்றாலும் அது அச்சமயம் உரசலைத் தவிர்க்கத்தானே தவிர ஆழமனதில் என் எண்ணம்தான் என்னை ஆளும்.

தொடர் வாதம் புரிவதில் பெறுவது ஏதுமில்லை. ஆனால் இழப்பது ஏராளம். முதலில் அடிவாங்குவது உங்கள் கற்பனைத்திறன், எழுத்துத் திறமை, நேரம், மன உளைச்சல்.

விட்டுவிட்டு அடுத்த படைப்பைப் படைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். படைப்புகள்தான் பேசவேண்டுமேதவிர படைப்பளி நின்று அறைகூவல் விடுவதில் ஏதும் பிரயோசனமில்லை.

ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஆட்டம் முடிந்ததும் வேறிடம் தேடிச் செல்லும், வேறொரு சண்டை பார்க்க.

நாமக்கல் சிபி said...

//
ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஆட்டம் முடிந்ததும் வேறிடம் தேடிச் செல்லும், வேறொரு சண்டை பார்க்க.//

ரிப்பீட்டு!

நாமக்கல் சிபி said...

நாட்டாமை! தீர்ப்பை இன்னொரு தபா மாத்தாம சொல்லு!

எங்கள் இணைய நாட்டாமை பாசமிகு அண்ணாச்சி வடகரையார் வாழ்க!

Mahesh said...

தண்டோரா அண்ணே... வேலன் அண்ணாசி சொல்வதை வ்ழிமொழிகிறேன்... நாட்டில் நாலும் இருக்கும். ஒன்றொன்றுக்கும் பதில் சொல்லப் போனால் அதுவே தொழிலாகி விடும் அபாயம். உங்கள் கிரியேட்டிவிடியை தொலைத்து விடாதீர்கள்.

ஈரோடு கதிர் said...

அப்பாடா....
4/4

நாமக்கல் சிபி said...

5/5

velji said...

ஏதோ நடந்து,இப்ப நல்லாதான் முடிஞ்சிருக்கு போல!( நாங்க ஏரியாவுக்கு புதுசு!)
நான் சொல்ல வந்தது..., என் தளத்தின் பெயர் ஜெயபேரிகை! title caption 'உரக்கச் சொல்வோம் உலகிற்கு!'. ஒற்றுமையை கவனித்தீர்களா!?

T.V.ராதாகிருஷ்ணன் said...

தெளிந்தமைக்கு வாழ்த்துகிறேன்

பழமைபேசி said...

இன்றுதான் இங்கு வர வாய்ப்பு கிடைத்தது... பதிவில் இருக்கும் நிறைய இடுகைகள் வாசித்தேன்....

மிக அற்புதமான கவித்துவம்... வாழ்த்துகள்!

ரவி said...

good boy..!!!

Sanjai Gandhi said...

என் மேல் இவ்வளவு பயமா.. சரி சரி.. இதோட முடிச்சிப்போம்.

Sanjai Gandhi said...

//அடுத்து நானும் திருந்தணுமா?//

என்னாது அடுத்தா? மொதல்லயே நீங்க தான் திருந்தி இருக்கனும். :)

Cable சங்கர் said...

உ.த.. என்னைக்கு திருந்துறாரோ.. அன்னைக்கு திருந்திக்கலாம்..:)

Beski said...

நல்லது.
---
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அடுத்து நானும் திருந்தணுமா?//
நீங்க என்ன தப்பு பண்ணீங்க திருந்துறதுக்கு? ஓ... இப்ப எழுதின கவிதய(?) சொல்றீங்களா? கண்டிப்பாண்ணே. விட்டுருங்க.
--
வடகரை வேலன் அண்ணாச்சி,
நல்லா சொல்லியிருக்கீங்க.

Thamira said...

இதுக்கு பேரு கவுஜையா? ஏதாவது சொல்லிறப்போறேன்.. இதையே நேரா எழுதுனா என்னாவாம்?

butterfly Surya said...

மிக்க நன்றி. மகிழ்ச்சி.

முருகா.. அவரும் திருந்தட்டும்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

நல்லது... சொல்ல வேண்டிய்து எல்லாம் வேலன் சொல்லிட்டாரு....நம்ம புதுசா என்னத்த சொல்ல..

Vidhoosh said...

:)
நல்லா இருங்கப்பா எல்லாரும்...

-வித்யா

மனமே சாட்சி said...

புரிஞ்சா சரி
எங்க 'பதிவுலக சுனாமி' யுவாவை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேட்டவன் யாரும் 2 நாளுக்கு மேல தாக்கு புடிச்சதா சரித்திரம் கிடையாது
நண்பர்கள் விருப்பம் அது இதுனு சொல்லிட்டு ஓடிப்போய்டுவானுங்க நாங்கதான் வால் பையன், பிளீச்சிங்க் பவுடர்னு நிறையா பார்த்திட்டோம்ல
போங்க பொழைச்சி போங்க

மணிஜி said...

//
புரிஞ்சா சரி
எங்க 'பதிவுலக சுனாமி' யுவாவை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேட்டவன் யாரும் 2 நாளுக்கு மேல தாக்கு புடிச்சதா சரித்திரம் கிடையாது
நண்பர்கள் விருப்பம் அது இதுனு சொல்லிட்டு ஓடிப்போய்டுவானுங்க நாங்கதான் வால் பையன், பிளீச்சிங்க் பவுடர்னு நிறையா பார்த்திட்டோம்ல
போங்க பொழைச்சி போங்க///

User Stats
On Blogger Since October 2009
Profile Views (approximate) 7

நீ திருந்தவே மாட்டே..பொழைச்சு போ...புதிய தலைமுறைதான் பாவம்

மணிஜி said...

//
புரிஞ்சா சரி
எங்க 'பதிவுலக சுனாமி' யுவாவை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேட்டவன் யாரும் 2 நாளுக்கு மேல தாக்கு புடிச்சதா சரித்திரம் கிடையாது
நண்பர்கள் விருப்பம் அது இதுனு சொல்லிட்டு ஓடிப்போய்டுவானுங்க நாங்கதான் வால் பையன், பிளீச்சிங்க் பவுடர்னு நிறையா பார்த்திட்டோம்ல
போங்க பொழைச்சி போங்க///

மனமே சாட்சி
User Stats
On Blogger Since October 2009
Profile Views (approximate) 7


நீ திருந்தவே மாட்டே..பொழைச்சு போ...புதிய தலைமுறைதான் பாவம்

குசும்பன் said...

எக்ஸ்கியூஸ் மீ டைப் செய்யும் பொழுது ஏன் உடனே உடனே என்டர் தட்டிவிடுகிறீர்கள்...இல்ல கீ போர்ட் ஏதும் பிரச்சினையா?


சஞ்சய் மாமோய் உன் கமெண்ட் சூப்பர்:))

மணிஜி said...

/எக்ஸ்கியூஸ் மீ டைப் செய்யும் பொழுது ஏன் உடனே உடனே என்டர் தட்டிவிடுகிறீர்கள்...இல்ல கீ போர்ட் ஏதும் பிரச்சினையா?


சஞ்சய் மாமோய் உன் கமெண்ட் சூப்பர்:)//

தீபாவளிக்கு தஞ்சை வருவதாக கேள்விபட்டேன்..நானும் தஞ்சைக்கு போகிறேன்...கால் பண்ணுங்க(093400 89989)

முனி ரத்னம் said...

நீ திருந்தவே மாட்டே..பொழைச்சு போ...////

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...

அகங்காரம் அழிவிற்கு வழி. விட்டு தொலைங்க...

அன்புடன் நான் said...

இதுக்கு முன்ன என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் திருந்திட்டேன் என்பதை பாராட்டுகிறேன். ஏனெனில் திருந்திட்டேன் என்று சொல்வதற்கும் தனி கம்பீரம் வேணும். பாராட்டுகள்.

ரவி said...

அந்த பதிவையும் நீக்கியிருப்பீங்கன்னு நினைச்சு வந்தேன்.

ஏன் மறுபடி புதிய தலைமுறை ? மனமே சாட்சி என்ற பின்னூட்டம் போட்டது யார் ?

பொதுவாக தண்டோரா என்ற வலைப்பதிவு வைத்திருந்தவர் விக்கி..

http://vicky.in/dhandora/

அவர் 2005 இல் இருந்து எழுதுகிறார். அவரை நன்றாக தெரியும். தண்டோரா என்ற பின்னூட்டம் பல இடங்களில் கண்டது அவர்தான் என்று நினைத்தேன். மணிஜி என்றே எழுதலாமே ? உண்மையிலே குழம்பிவிட்டேன்.

அகநாழிகை said...

மணி ஜி,
திருந்திட்டீங்களா...
அப்படியா ?
வாழ்த்துக்கள்.

Suresh Kumar said...

வாழ்த்துக்கள்.