Friday, October 2, 2009

புன்னகை மன்னன் .......


இன்று மகாத்மாவின் 141 வது பிறந்த நாள்...கழக தொலைக்காட்சிகளில் நமீதா மற்றும் மானாட,மார்பாட சிறப்பு நிகழ்ச்சிகள்,வெட்டு,குத்து திரைப்படங்கள் போட்டு கண்ணியமாக அஞ்சலி செலுத்துவார்கள்..இடைத்தேர்தல் நடை பெற்ற ஊர்களில் காந்தி என்றால் 500 ரூ நோட்டை நினைவு படுத்தி கொள்வார்கள்

இந்தியாவின் இன்ஷியல் என்ன? G.ஏன். காந்தி தானே "FATHER OF OUR NATION" ஸ்கூல் படிக்கும் போது கேள்விப் பட்ட புதிர் இது.பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் மகாத்மாவை பற்றி எழுதி பரிசுகள் வாங்கி இருக்கிறேன்.

"புன்னகை மன்னன்" என்று வாலி அவருக்கு சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தம்.மித வாதி என்று பெயர் வாங்கியிருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஆத்ம தீவிரவாதி.ஆயுதம் ஏந்த அசட்டு துணிச்சல் கூட போதும்.எத்தனை துயரிலும் புன்னகையை தொலைக்காத,அகிம்சையை கை விடாத பாங்கு..இதற்கு தேவையான வைராக்கியம்...இந்த மனிதரை வெல்ல முடியுமோ?

காந்தி எங்காவது கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்காமல் இருந்திருப்பாரோ?பின் ஏன் காந்தி கணக்கு என்ற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது ?

அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் சில கடைகளில் கதர் குல்லா அணிந்து வந்து டீ காபி குடிப்பவர்களிடம் காசு வாங்க மாட்டார்கள். சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்களுக்கு ஒரு மரியாதையும் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவிட வேண்டி சிலர் செய்த தருமம் என்று என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.

அதையும் கொச்சைப் படுத்தி காசு கொடுக்காமல் ஏமாற்றுபவர்களை இப்படி சொல்கிறது நமது சமூகம்.

ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்.....காந்தியின் கொள்கைகளை நாம் எப்பவோ ஏலம் விட்டு விட்டோம்...ஆனால் இப்ப விடப் பட்டது.. அவர் பயன் படுத்திய பொருட்களாம்...

வாழ் நாளெல்லாம் காந்தி யாரை எதிர்த்தாரோ அவன் தான் காந்தியை பற்றி படம் எடுத்தான்.காந்தி கடுமையாக எதிர்த்த இன்னொன்று மது...ஆனால் விதி பாருங்கள்..சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையா தான் அவர் பொருட்களை ஏலம் எடுத்ததவர்..அதை இந்திய அரசுக்கு அன்பளிப்பாக கொடுக்கப் போகிறாராம்...ஹே...ராம்..

டிஸ்கி: அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி..டாஸ்மாக் லீவு....அதனால் என்ன?பிளாக்கில் தாராளாமாக கிடைக்கும்...வசூல் ராஜாக்களுக்கு மாமூல் மழைதான்

வாழ்க காந்தி நாமம்...





16 comments:

பித்தன் said...

ரொம்ப சரியாகச் சொன்னீர்கள்......

உண்மைத்தமிழன் said...

இன்னிக்காவது பாட்டிலை தொடாம இருந்து அந்தத் தாத்தாவுக்கு கொஞ்சூண்டு மரியாதை செலுத்துங்க தண்டோராஜி..!

மணிஜி said...

/இன்னிக்காவது பாட்டிலை தொடாம இருந்து அந்தத் தாத்தாவுக்கு கொஞ்சூண்டு மரியாதை செலுத்துங்க தண்டோராஜி..//

அண்ணே நேத்திக்கே வாங்கி வச்சுட்டேனே

கார்த்திகைப் பாண்டியன் said...

காந்தி ஜெயந்தி தின நல்வாழ்த்துகள்

பிரபாகர் said...

அண்ணே,

கரெக்டா நினைவு கூர்ந்திருக்கீங்க. ஸ்டெடியாத்தான் இருக்கீங்க போலிருக்கு! நச்சென்று தகவல்கள்.

வழக்கம்போல ஓட்டுக்கள போட்டாச்சி...

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

//ஆயுதம் ஏந்த அசட்டு துணிச்சல் கூட போதும்.//

அருமையான வரி

S.Gnanasekar said...

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
காந்தி கணக்கு அதை பற்றி தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்திய நல்ல பதிவு...
சோ.ஞானசேகர்.

velji said...

தோட்டா துளைத்த பின்னும் ஹேராம் என்று சொல்லும் அளவுக்கு கொள்கையில் உறுதியாயிருந்தார்.தேசம்தான் தள்ளாடுகிறது.எல்லோரும் சொல்வோம் ஹேராம்!

Ashok D said...

//ரொம்ப சரியாகச் சொன்னீர்கள்......//

ரிப்பீட்டே....

Cable சங்கர் said...

/வாழ் நாளெல்லாம் காந்தி யாரை எதிர்த்தாரோ அவன் தான் காந்தியை பற்றி படம் எடுத்தான்.காந்தி கடுமையாக எதிர்த்த இன்னொன்று மது...ஆனால் விதி பாருங்கள்..சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையா தான் அவர் பொருட்களை ஏலம் எடுத்ததவர்..அதை இந்திய அரசுக்கு அன்பளிப்பாக கொடுக்கப் போகிறாராம்...ஹே...ராம்..//

Irony..

Thamira said...

ஆஜர்.

ஜெட்லி... said...

நீங்க தாங்க உண்மையான குடிமகன்.....
(ஒரு நாள் முன்னாடி உஷாரா வாங்கி
வச்சிடிங்க ஜி)

Beski said...

நல்லாயிருக்கு.
---
//பிளாக்கில் தாராளாமாக கிடைக்கும்...//
நான் கூட என்னமோன்னு நினைச்சு பயந்துட்டேன்.

S said...

இன்று உன்
நினைவு நாள் .
.
வருடத்தில்
இன்று மட்டுமே
உன்னை நாங்கள்
நினைக்கும் நாள்

வாழ்வதற்கு அஹிம்சை
போதித்த உனக்கு
எமது பரிசு
ஹிம்சை மரணம்

அன்றிலிருந்து
எம் ஆட்சியாளர்கள்
எமக்கு தருவதும் ஹிம்சையே

வன்முறை யின்றி
பெற்றுத் தந்தாய் விடுதலை
இன்று வன்முறையிலிருந்து
விடுதலை வாங்கித் தருவார் யார்

மதுவை விலக்கச்
சொன்னாய் நன்று
மதுவில்லாமலே தள்ளாடும்
தேசம் இன்று

உன் கொள்கைகளை
ஏலம் போட்டவன்
அரசியல்வாதி
உன் உடைமைகளை
ஏலம் எடுத்தவன்
மது வியாபாரி

வோட்டு சேர்க்க
காந்தி நோட்டு
நோட்டு சேர்க்க
காந்தி கணக்கு

எங்கள் கரன்சியில்
உன் படம் இருக்கிறது
நாளை உன்னை
மறந்துவிட்டாலும்
நித்தம் உன்னை
தேடுவோம்

கலையரசன் said...

காந்திய பத்தி எழுதினாலும்.. கடைசியா உங்க கட்டிங் இல்லாம முடிக்கமாடீங்களே!!

ஷங்கி said...

மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்!!!