Monday, June 28, 2010

சொங்கியார் நேரடி ரிப்போர்ட்


புலனாய்வு பத்திரிக்கைகளில் செய்தி சொல்ல ஒரு பறவையையோ , அல்லது எதாவது கேரக்டரையோ வைத்திருக்கிறார்கள் . கழுகார் , வம்பு சாமியார் , அலெக்ஸ் பாண்டியன் ..இத்யாதிகள் . சும்மா நானும் கொஞ்சம் பேசுகிறேன்.


சொன்ன நேரத்துக்கு சொங்கி நடை போட்டு தேவாங்கார் உள்ளே நுழைந்தார் . வாய் நிறைய குமபகோணம் வெற்றிலை
சீவல் . நல்ல நாளிலேயே நாயகம் நம்மாளூ . இன்னிக்கு என்னத்தை பேசி கிழிச்சு... வாருங்கள் சொங்கியாரே..வரவேற்பில் ஏனோ திருப்தியில்லை சொங்கியாருக்கு . குறிப்பறிந்து பாக்கு மட்டை தட்டில் பன்னீர் புகையிலையை வைத்து நீட்டினோம் . அதை போட்டு கொண்டே தாங்க்ஸ் என்றார் சொங்கியார் . நம் முகத்தில் குற்றால சாரல் . கோபிக்காதீர் . சீசன் நெருங்கி விட்டதை நினைவூட்டுகிறேன் என்றார் சொங்கி .

சரி விஷயத்துக்கு வாருங்கள் என்றோம் .

இதோ . கோயில்பட்டி கடலை மிட்டாய் இருக்கிறதா?


யோவ் சொங்கி . ஒரு ரெண்டு மேட்டராவது சொல்லுமய்யா . உமக்கு தீனி போட்டு மாளாது போலிருக்கிறது .


செம்மொழி மாநாட்டின் நிறைவு உரை கேட்டீரா ? அங்கிருந்து ஆரம்பிக்கிறேன் .


சீக்கிரம் தொலயும் .


முதலில் வரிசையாக மத்திய அமைச்சர்கள் பிரணாப் , சிதம்பரம் ,ராசா என்று பெயர்களை குறிப்பிட்ட முதல்வர்
அழகிரியை விட்டு விட்டார் . துணைமுதல்வர் ஸ்டாலின் பெயருக்கு பின்னால் அழகிரியை சொன்னதை அஞ்சாநெஞ்சன் ரசிக்க வில்லை. முகத்தில் புன்னகை மிஸ்ஸிங் . அது மட்டுமல்ல . ஸ்டாலின் பெயரை சொன்னபோது உடன்பிறப்புகளின் ஆரவாரமும் , விசிலும்... அண்ணன் அப்செட் . அவர் முகம் அநியாயத்துக்கு இறுகி போய் கிடந்தது .

அதெல்லாம் தலைவர் சமாளிச்சுடுவார் . நீங்க அடுத்த மேட்டருக்கு வாங்க என்றோம் .


அந்த பால் சர்பத் என்று சொங்கியார் இழுக்க ,

கொடுத்து தொலையறோம் . மேட்டருக்கு வாங்க .


ஆட்சிக்கு வாரிசு ரெடி . ஆனால் தன் தமிழுக்கு யார் வாரிசு என்பதையும் முதல்வர் இந்த மாநாட்டில் கண்டு கொண்டு
விட்டார் . கவிதாயினிதான் அது .

அங்கு ரெண்டு கவிதாயினிகள் இருக்கிறார்களே . யாரை சொல்கிறீர் என்றோம் குறும்பாக .


மாடு கழனி தண்ணீரை உறிஞ்சுவது போல் சத்தமாக சர்பத்தை உறிஞ்சி கொண்டே

“ இந்த விகட குறும்புதான் உம்மிடம்
பிடித்தது என்று நம் தலையில் செல்லமாக குட்டினார் .

சிஐடி நகர் வீட்டம்மாவுக்கும் ஏக திருப்தியாம் . அடுத்து மந்திரி பதவிதான் என்று மிதக்கிறார்களாம்.


அதை விடுங்கள் . செம்மொழி மாநாட்டிற்கு பிறகாவது தமிழனுக்கு விடிவுகாலம் வருமா ?


என்ன இப்படி கேட்கிறீர் ? செம்மொழி மாநாட்டு மேடையிலிருந்த அத்தனை தமிழனுக்கும் இனிதான் விடிய வேண்டுமா
என்ன ? வழக்கமாக சீவி , சிங்காரித்து அறுப்பார்கள் . இந்த முறை அறுத்தாயிறுற்று . சீவி, சிங்காரித்தார்கள் .

சரி , உணர்ச்சி வசப்படாதீர் சொங்கியாரே என்றவுடன்

அப்ப கொஞ்சம் பானகம் கிடைக்குமா என்றார் சொங்கி .


மாம்பழம் கதை எதாவது ?


மாழம்பழ சீசந்தான். ஆனால் மாம்பழ கட்சிதான் கார்பைடு போட்டு பழுக்க வச்ச மாதிரி வெளிறி போயிருக்கிறது . செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டாலும் தமிழ் குடிதாங்கியின் முகம் களையில்லாமல்தான் காணப்பட்டது . தான் ஆடா விட்டாலும் சதையாடாதா என்ன? புத்திரன் வேலையில்லாமல் வெட்டியாக இருப்பதை எந்த தகப்பன்தான் சகிக்க முடியும் ?


சரி அம்மா கதை ?


அம்மாவும் , கேப்டனும் சேர்வதற்கு எல்லா முயற்சிகளும் நடக்கின்றன . சீட்டு , ரேட்டு , அமவுண்டு , பதவி , தேர்தல் செலவுகள் எல்லாம் போட்டு காய்ச்சி கொண்டிருக்கிறார்கள் . கொதி வந்ததும் சியர்ஸ்தான் .


உம்ம குடி புத்தி போகாதே . வேலை நேரத்தில் குடிக்காதீர்கள் என்றோம்.


அப்படி இல்லை . சில சோர்ஸ்களிடம் செய்தி வாங்க குடித்துதான் ஆக வேண்டியிருக்கிறது . பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் .அப்படியா ? இப்போதுதானே கொஞ்சம் அமைதியாக இருக்கிறது .


நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன் . இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் .


விவரமாக சொல்லுங்களேன் .


ம்ம்..மூச்.. எனக்கு கீழ்ப்பாக்கத்தில் ஒரு சின்ன வேலை இருக்கிறது என்று சொங்கியார் விஷமமாக கண்ணடித்தபடி , நொண்டிக் கொண்டே வெளியேறினார் .

23 comments:

Unknown said...

பதிவுலகம்.. நீதிமன்றம் வரைக்குமா.. என்னன்னே சொல்றீங்க?..

பத்மா said...

நல்ல பீதிய கிளப்புறீங்க

vasu balaji said...

//அத்தனை தமிழனுக்கும் இனிதான் விடிய வேண்டுமா என்ன ? வழக்கமாக சீவி , சிங்காரித்து அறுப்பார்கள் . இந்த முறை அறுத்தாயிறுற்று . சீவி, சிங்காரித்தார்கள் //

ஒரு டன் குத்து இது:)

அதென்னா நீதிமன்றம்.அவ்வ்வ்வ்வ்வ்வ்:(

ஈஸ்வரி said...

(ஆட்சிக்கு வாரிசு ரெடி.கவிதாயினிதான் அது.)
தமிழா இந்த சோதனை உனக்கா அல்லது தமிழுக்கா?

CS. Mohan Kumar said...

கடைசியா குண்டை தூக்கி போட்டுட்டு போறீங்க??ஜூவி கழுகு படிக்கிற மாதிரியே இருந்தது

முரளிகண்ணன் said...

சொங்கியார் ரிப்போர்ட் சொங்கியா இல்லை சூப்பராக இருக்கு.

Sanjai Gandhi said...

//சிஐடி நகர் வீட்டம்மாவுக்கும் ஏக திருப்தியாம் . அடுத்து மந்திரி பதவிதான் என்று மிதக்கிறார்களாம்.
//

செம்மொழி மாநாட்டுடன் சேர்ந்து இணைய மாநாடும் நடந்தது.. அதில் மனசாட்சியின் பெயரில் இருந்த அரங்கத்துக்கு துணைவியார் சந்தோஷகிருஷ்ணனுடன் உள்ளே வந்தார். அப்போது சந்தோஷம், வெளிநாட்டை சேர்ந்த உத்தம நிர்வாகியை துணைவியாருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.. நிர்வாகியும் புன்னைகைத்து விட்டு, துணைவியாரைப் பார்த்து, நீங்க???? என்று எழுத்திருக்கிறார்.. சந்தோஷம் சமாளித்திருக்கிறார்.. பின்னர் நண்பர்களிடம் நிர்வாகி சொன்னது “ அந்தம்மாவை நல்லா தெரியும்.. டிவில எல்லாம் பார்த்திருக்கேன்.. இவங்கள எனக்கெப்படி தெரியும்?”


இது கூட பெரும் பூகம்பத்தை கிளப்பலாம்.. :))

கிருஷ்ண மூர்த்தி S said...

கழுகார் இத்தியாதிகளை விட சொங்கியார் ரிபோர்ட் மிக நன்றாக இருக்கிறது மணிஜி!

சஞ்சய் காந்தி கூடத் தன் பங்குக்கு ஒரு விவகாரமான ரிபோர்டைப் பின்னூட்டத்தில் தந்திருக்கிறார்! சந்தோஷ கிருஷ்ணன்களை சந்தோஷமாக இருக்க விடுவதில்லை எண்டு முடிவு செய்து விட்டார் போல இருக்கிறது!

:-)))

Sanjai Gandhi said...

கிமூ சார்.. இதனால கிருஷ்ணருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. தான் புறக்கணிக்கப் பட்டுள்ளதான துணைவியார் மீண்டும் முருங்கை மரம் ஏறினால் மூதறிஞ்சருக்கு தான் கஷ்டம்..

ஆனாலும் உங்க கவலை புரியுது.. எந்தக் காரணத்திற்காகவும் அவா பாதிக்கப் படக் கூடாது என்ற உங்க சாதிப் பற்று புல்லரிக்கவைக்குது..

கிருஷ்ண மூர்த்தி S said...

@சஞ்சய்!

கிசுகிசு, கழுகார் பாணியில் நீங்களும் சேர்ந்து தண்டோரா போட்டதைப் பாராட்டித் தான் ஒரு வார்த்தை சொன்னேன்.

நீங்கள் குறிப்பிடுகிற சந்தோஷ கிருஷ்ணன்கள் யார் என்பதே தெரியாத நிலையில் எங்கிருந்து ஜாதிப் பற்று மட்டும் வந்து விடுமோ எனக்குப் புரியவில்லை!

என்ஜாய்!

செ.சரவணக்குமார் said...

அரசியல் அலசலுக்கு ஒரு அருமையான பகுதி தலைவரே.

கலக்குங்க.

நேசமித்ரன் said...

மறுபடியும் முதல்ல இருந்தா...

ம்ம் !

ரைட்டு

பா.ராஜாராம் said...

// பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள்//

கடவுளே,

சொங்கியார் எண்ணத்தில் மண்ணை போடும். ப்ளீஸ் கடவுளே...

Romeoboy said...

\\இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் //

இனி ஆட்டோ எல்லாம் வராது.. டைரக்டா கோர்ட் தான் ..

Romeoboy said...

\\இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் //

இனி ஆட்டோ எல்லாம் வராது.. டைரக்டா கோர்ட் தான் ..

அத்திரி said...

// பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் . .//

நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு???

ஆண்மை குறையேல்.... said...

mobile num pls???

மணிஜி said...

93400 89989

பெசொவி said...

இன்றைய பரபரப்பு உலகில் உங்கள் சொங்கியார் வேக வேகமாக தரும் செய்திகள் பரபரப்பைக் கூட்டுகின்றன. சொங்கியாருக்கு எங்கள் சார்பில் ஒரு கிரேட் பாட்டில் அனுப்பி வைக்கிறேன்.
(ஜூ.வி. கடிதங்கள் பாணியில் விமரிசனம் எழுத முயன்றேன், அவ்வளவுதான்! கிரேட் என்பதெல்லாம் சும்மா.....அவ்...........!)

மங்குனி அமைச்சர் said...

அப்படி இல்லை . சில சோர்ஸ்களிடம் செய்தி வாங்க குடித்துதான் ஆக வேண்டியிருக்கிறது . பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் .
///


நடக்கட்டும் நடக்கட்டும்

R.Gopi said...

மணிஜீ.......

சொங்கியார் ரிப்போர்ட் பட்டைய கெளப்புது தல....

அந்த செம்மொழி மாநாடுங்கறது என்ன, ஒரு பெரிய அளவிலான “மானாட மயிலாட” போலத்தானே....

//வழக்கமாக சீவி , சிங்காரித்து அறுப்பார்கள் . இந்த முறை அறுத்தாயிறுற்று . சீவி, சிங்காரித்தார்கள் //

சரவெடி தலைவா....

R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...

ஜனவரி மாதத்தில் “தல” சொன்னது:

ஜூன் மாதத்திற்கு பிறகு ஓய்வு பெறலாம் என்றிருக்கிறேன்...

இப்போ ஜூன் மாதத்தில் “தல” சொல்வது :

ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை..