”மழையாகி வர வேண்டும் நீ”
மனம் தந்த விதையாகவும்
மகரந்த மொழி பேசும் மலராக்கி...
என்ன பண்றீங்க காலையில? இந்த கத்து கத்தறேன் . செவிடா நீங்க ?
சார் இந்த சில்க் லோகோல டெக்ஸர் எப்பயிருக்கலாம் ?
ரவி..கடையோட பேர்..ஒரு வீவிங் ஸ்டைல்ல வரணும் . அப்படியே அலையாய் ஃபார்மேஷன் இருந்தா பெட்டரா இருக்கும் .
தானே குளிக்கிறேன்னு அடம் . பாத்ரூமை துவம்சம் பண்ணிகிட்டிருக்கா . என்ன பண்ணிகிட்டிருக்கீங்க ? அவளை போய் ரெண்டு சாத்து , சாத்தி கிளப்புங்க . வேன் வந்துடும் .
யெஸ் டார்லிங்...
என்ன ஐயா பிஸியா ? இத்தனை ரிங் போகுது . எடுக்க மாட்டிங்களா? யாராவது மாடல் கூட கடலையா ?
சொல்லுடா ..
நாளைக்கு என்ன நாள் தெரியுமா /
வியாழக்கிழமை . இன்னிக்கு புதன் .கரெக்டா ?
மொக்கை . அதில்லை . டேட் என்ன நாளைக்கு
செப்டம்பர் 11. அட ..ஆமாம் ட்வின் டவர் அட்டாக்கான நாள் . அமெரிக்காவுக்கு ஒரு அஞ்சலியை செலுத்திடுவோம் . வாழ்க பின்லேடன்.
மண்ணாங்கட்டி . நடிக்கிறீங்களா ? நாளைக்கு நம்ம..
இரு . திரும்ப கூப்பிடறேன் .
இங்க நான் ஒருத்தி காலையிலேர்ந்து இந்த பாழாப்போன ஸ்டவ்வோட போராடிகிட்டிருக்கேன் . என்னத்தை நோண்டி கிட்டிருக்கீங்க ?
“காதலாகி வர வேண்டும் கண்ணே !
கனிந்த என் இதயத்தில் விளக்காகவும்
காதலன்புக்கு ஏங்கும் எனை காத்து
உன் மனம் தர வேண்டும் நீ “
இந்த கவிதையை நியாபகம் இருக்கா ? எதையோ தேடினா , இது கிடைச்சது . இது ஒரு பொக்கிஷம்னு அடிக்கடி சொல்வியே . இப்படி குப்பையில கிடக்கு .
ம்க்கும் . இது ஒன்னுதான் இப்ப குறைச்சல் . லேட்டா போனா சம்பளம் கட் . உங்களுக்கு என்ன ? வீட்ல ஜாலியா இருக்கீங்க . நான் இல்ல பஸ்ல கூட்டத்துல அவதி...
சொல்லு டார்லிங் . நாளைக்கு நம்ம கல்யாண நாள் .நியாபகம் வந்துடுச்சு .
கோவிலுக்கு போலாங்க ..
சாரிடா ..நாளைக்கு டெஸ்ட் ஷூட் இருக்கு. நாளைக்கு விட்டா , அந்த பாம்பே மாடல் பறந்துடுவா?
அவளையே கட்டி கிட்டு அழுங்க .
சனியனே .. ஸ்கூல் வேன் வந்துடும்னு தெரியாது . அப்படியே அப்பன் மாதிரி , பொறுப்பில்லாம...
ஏங்க நான் தான் . உங்களுக்கு நான் எழுதின முதல் கடிதம் ஞாபகமிருக்கா ?சின்னதா கவிதை மாதிரி..
ஷிட் .. அது கவிதையா ? எங்கயோ காப்பியடிச்சு எழுதினது .
இதை விட காவியத்தை யாரும் எழுத முடியாதுன்னு சொன்னீங்களே ..பொய்யா அது ?
காதலே பொய் ..சும்மா ஒரு மயக்கம் .. அதுல என்ன எழுதினாலும் காவியமாயிடுமா ?
நான் ஆஃபிஸ் கிளம்பறேங்க .. மழை வர மாதிரி இருக்கு . துணியை எடுத்து வச்சிடுங்க ..என் தலை மறைஞ்சப்புரம் லைப்ரரிக்கு போயிடாதீங்க . இன்னிக்கு ரேஷன்ல கெரசின் போடுவான் . சாமி மாடத்துல காசு இருக்கு ..வாங்கி வைங்க .. அந்த கர்மத்தை குடிக்க போயிடாதீங்க..
சிங்க பெருமாள் கோவில் . ஆளுக்கொரு புளியோதரையும் , சர்க்கரை பொங்கலும் வாங்கி கொண்டோம் .
நமக்கு கல்யாணம் ஆகி எத்தைனை வருஷம் ஆயிடுச்சு பாத்தீங்களா ?
எத்தனை வருஷம் ஆனா என்ன டார்லிங் . அன்னிக்கு பார்த்தாப்லயேதான் இருக்கே ..
பொய்தானே என்றாள் அழகான சிரிப்புடன்
13 comments:
அடேங்கப்பா! சாமி! தொடர்ந்து சாமியாடுறீங்க:)). நடக்கட்டு:))
சும்மா சொல்லக் கூடாது:)! நல்லதொரு காதல் கதை.
ஓட்டுப் பட்டைகளைக் காணும்??
பட்டய கிளப்பீட்டீங்க...
இன்னும் கொஞ்சம் திருத்தமாக பத்தி பிரிச்சி எழுதியிருக்கலாம்.
ஆனா ஐடியா அருமை.
போதும் போதும்..
இந்தக் காதல் கவிதை கணவர்களின் தொல்லை தொங்கலப்பா..!
டெம்ப்ளேட்டும் கதையும் டெரர்ர்ரா இருக்கே... டெம்ப்ளேட் கொஞ்சம் பயமுறுத்துது...
ரொம்ப நல்லாருக்கு ஜீ.
சும்மாவா ?
ம்ம் அப்ப சரி !!!
:)
பயங்கரமான ஆளுதான் .பாவம் மாமி :))
super
superb
டெம்ப்ளேட் அருமை மணிஜி. ஆனா, லோட் ஆக டைம் எடுக்குது..ஒரே கல்லில் ரெண்டு மாங்கா. :-)
(ஒருவேளை நான் லோட் என்பதால் இதுவான்னு தெரியல..மல்லுக் கட்டி பார்த்துட்டேன்)
கலக்கல் தல, அருமையா இருக்கு... rush hour கவிதை தல..
Post a Comment