
செனட் ராயல் விஸ்கியின் லேபிளை மாற்றி விட்டார்கள் . விலையும் கூடி விட்டது 100 ரூ குவார்ட்டர் .
ரஞ்சிதாவை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது . ஜெய்ஹிந்த் படத்தில் எப்படி இருந்தார் ? . அவரால் சீரியசாகவே இருக்க முடியாது . ஒரு சின்ன ஸ்மைல் எப்போதும் . கொடுத்து வைத்தவன் பாவி நித்யா !!
15 வயதிலிருந்து தனி அறைக்குள் அடைக்கப்பட்டு , பாலும் , பழமும் கொடுத்து வளர்க்கப் பட்ட வாலிபம் . கட்டவிழ்த்து விடும் போது வெளிப்படும் உன்மத்த காமம் . அப்படியொரு மோகம் எனக்கிருந்தது. ராவணன் திரைப்படத்தின் மீது . சனியன் துரித ஸ்கலிதம்தான் மிச்சம் .
ஐஸ்வர்யா அழகாக இருப்பதாக 50 வயது ஆசாமிகள் சொல்கிறார்கள் .(நான் இல்லப்பா..இன்னும் 5 வருடங்கள் மீதமிருக்கிறது).
விக்ரமுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் , நான் குடிப்பதை நிறுத்தி விட உத்தேசித்திருக்கிறேன் .
அக்னி நட்சத்திர ஹீரோக்கள் இதில் காமெடி செய்திருக்கிறார்கள் . ஆனால் சிரிப்பு வாயால் வரவில்லை .
சில ஷாட்கள் தமிழுக்கு புதிது . எல்லோரும் கேமரா அற்புதம் என்கிறார்கள் . கொஞ்சம் சிரமப்பட்டுதான் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது .ஆனால் லோகேஷன்கள் சான்ஸேயில்லை . சுரேஷ் கண்ணன் எழுதியதை போல் , கான்கீரிட் பொந்துகளில் வாழும் நமக்கு பொறாமையாக இருக்கிறது .
வசனம் சுஹாசினி . அவர் பெயர்தான் டைட்டிலில் . அவ்வளவுதான் . சொல்ற மாதிரி எதுவும் இல்லை .
எதையும் எதிர்பார்க்காதே . கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள் . ராமாயண நீதி.
17 comments:
கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே..:-)
//சொல்ற மாதிரி எதுவும் இல்லை .
எதையும் எதிர்பார்க்காதே . கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள் . ராமயண நீதி.//
அப்படிச்சொல்லுங்க தலைவரே...
:)
!!..ம்ம்ஹு
ராவணன் பற்றி கவலையில்லை. எதிர்பார்த்த ஒன்றுதான். வடை போச்சே.. அதான் வருத்தம்.
வசனம் சுஹாசினியா..? ஹை..ஹை..
வழக்கம் போல மற்றுமொரு மணிரத்தினம் படம்தானே?
நான் எதிர்பார்த்ததுதான்.
வழக்கம் போல மற்றுமொரு மணிரத்தினம் படம்தானே?
நான் எதிர்பார்த்ததுதான்.
/எதையும் எதிர்பார்க்காதே . கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள்/
மணிரத்னம் வகையறாக்களுக்காக யாரோ அப்படி ஒரு ராமாயணத்தை எழுதியிருக்கிறார்களோ என்னவோ, தெரியாது,நாங்கள் படித்த ராமாயணத்தின் நீதி அப்படிச் சொல்லவில்லை! தமிழின் தலைவிதி, உல்டா அடிப்பதை, காப்பியடிப்பதைக் கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாதவர்கள் தான் இங்கே பெரிய தலைகளாக சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் வர முடிகிறது!
தல.. சில வரிகள் படிச்சிட்டு செமையா சிரிச்சேன் ..
ஹிந்தியில ரசிக்கப்படும் னு நினைக்கிறேன்
அப்போ படம் யாமாத்திடுச்சுனு சொல்றீங்க.!
ஒகே.. ஒகே..
:(
ரொம்பக் கடுப்பேத்திட்டாரா பாஸ்.?
//செனட் ராயல் விஸ்கியின் லேபிளை மாற்றி விட்டார்கள் . விலையும் கூடி விட்டது 100 ரூ குவார்ட்டர் .//
அண்ணே டாஸ்மாக் நியூஸ் அப்டேட்டை பற்றி எரியும் சீரியஸ் மேட்டரில் சொருகும் உங்கள் லாவகமே தனி.
விமர்சனம் அருமை,ஆனால் பெரிசா எழுதியிருக்கலாம்.:(
ஆமா இருந்தா தானே எழுதறத்துக்கு?
//எதையும் எதிர்பார்க்காதே . கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள் . // யதார்த்தம்
இங்க எஃப் எம் ல் , செலுலாய்டு மேகசின்களில் இந்த கருமத்தை ஆகா ஓகோ ஏஹேஹோய் என புகழவதை தாங்க முடில,ரோஷமான் போஸ்டர் செய்யும் வேலை.
இப்படி கூட விமர்சனம் எழுத முடியுமோ?
இதுவும் இப்டியா.. ஹூம்... போச்சுடா..
butterfly surya said
வசனம் சுஹாசினியா..? ஹை..ஹை//
சூர்யா, உங்களுக்கு ஐம்பது வயசு ஆயிடுச்சா?
ராவணன் படத்துக்கு வித்தியாச விமர்சனம்
கதைய எல்லாம் ரொம்ப பாக்காம "பார்க்கறதுக்காக " போகலாம் மணிரத்னம் படம்
படம் மட்டும் ஏமாத்தலை கவிதை போட்டி முடிவுகள் கூட ஏமாத்திடுச்சி
விஜய்
//எதையும் எதிர்பார்க்காதே . கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள் . ராமாயண நீதி.//
*******
இனிமே எதையும் எதிர்பார்க்க மாட்டோம்... ஒண்ணுமே கிடைக்க போறதில்ல... அப்புறம் எதை ஏத்துக்கறது... போஸ்டர் பார்த்துட்டு அப்படியே எஸ்கேப் ஆயிடுவோம்... அதான் நல்லது...
Post a Comment