Monday, June 14, 2010

போடுங்கம்மா ஓட்டு



என்னய்யா இது அநியாய ம் ? கேக்க நாதியில்லையா?

குடித்தனம் நடத்துற இடத்துல , இப்படின்னா ?

பொம்பளைங்க நடமாடவே முடியலை . வேட்டி அவுந்தது தெரியாம உருள்ரானுங்க

அத விடுங்க . பக்கத்துல பள்ளிக்கூடம் இருக்கு . எப்படி பர்மிஷன் கொடுத்தாங்க சாராயகடைக்கு

நம்ம கவுன்சிலர்தான் சால்னா கடை போட்டிருக்காரு . 10 மணிக்குத்தான் கடை திறக்கணும் . ஆனா இவங்கதான் மூடறதேயிலையே . போலிஸ்காரனுக்கு மாமூல் போயிடுது .

புள்ளைங்க படிப்பு போயிடும்யா . அஞ்சாம் கிளாசிலயே குடிக்க கத்துக்கிடுவாங்க . தெருவில இறங்கி போராடனும் .

நாளைக்கு போய் அதிகாரிங்களை பார்த்து சொல்லலாம் . கேக்கைலைன்னா மறியல், ஆர்பாட்டாம்தான் .

மறுநாள் அதிகாரியை பார்க்க போனது கூட்டம்

ஐயா .புள்ளைங்க படிக்கிற இடத்துல குடிகாரனுங்க அட்டூழியம் பண்றாங்க . சட்டப்படியே இது தப்பு இல்லையா ?

அந்த இடத்துல ஸ்கூல் இருக்கா என்ன?

ஐயா 500 புள்ளைங்க படிக்கிறாங்க . பாதி பொட்ட புள்ளங்க . வயிற்றில நெருப்பை கட்டி கிட்டு இருக்கோம். கேட்டா எங்க கவுன்சிலர் ஆள் வச்சு அடிப்பேன்னு மிரட்றாரு . போலிசும் புண்ணியமில்லை.

அப்படியா ? எங்களுக்கு கொடுத்த மேப்ல , அங்க 100 மீட்டர் தூரத்துக்குள்ள கோயில், ஸ்கூல் எதுவும் இல்லைன்னு இருக்கு. எங்க ஆட்களும் பாத்து கிளியரன்ஸ் கொடுத்திருக்காங்களே . நான் மறுபடியும் விசாரிக்க சொல்றேன் .

உங்க ஆளுங்க காசை வாங்கிட்டு கதை கட்டியிருப்பாங்க . நீங்களே பாருங்க . இல்லை நாங்க போராட்டம் பண்ணலாம்னு இருக்கோம் .

அதெல்லாம் வேண்டாம் . அமைதியா இருங்க . நான் உங்க கவுன்சிலர் கிடயும் பேசறேன் . நீங்க சொன்னது உண்மைன்னு , நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன் .

என்னய்யா சொல்றீங்க ? கடையை மாத்த முடியாது . இங்கதான் கூட்டம் வரும் . சாராயக்கடை நடத்தினாத்தான் ஓசியில எல்லாம் கொடுக்க முடியும் . ஜனங்க அப்படித்தான் . ஓசியில கழுவி வுடறோம்னா...ண்டியை கூட காமிக்கிறாங்க இல்ல . இதெல்லாம் பொறுத்துக்க வேண்டிடதுதான் . கவுன்சிலருக்கு கோபம் தலைக்கேறியது

கூட்டம் கலைந்தது . அதிகாரி ஆய்வு செய்து பொதுமக்கள் சொன்னது உண்மையென்று கண்டு பிடித்து , அரசுக்கு அறிக்கை அனுப்பினார் . கவுன்சிலருக்கு கடுப்பாயிற்று . என்னத்தை படிச்சு அவரு அதிகாரி ஆனாரு ? பாத்துக்கறேன்னு கருவினார் . மக்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை .

அப்படியா ? மகராசன் நல்லாயிருக்கனும் . இந்த மாதிரி ரெண்டு பேர் இருந்தா போதும் . நாடு உருப்பட்றும் . உண்மையிலயே மாத்திட்டாங்களா ?

ஆமாம் . ஆனா சாராயக்கடையை இல்லை . ஸ்கூலை . இங்கிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தள்ளி..

16 comments:

அ.முத்து பிரகாஷ் said...

கதையல்ல இது நிஜம் ....

க.பாலாசி said...

அடக்கொடுமையே....

மணிஜி said...

நியோ..இந்த சம்பவம் நம்ம ஊரில்தான் நடந்தது(தஞ்சையில்)

Paleo God said...

அப்ப பழைய பள்ளிக்கூடம் பார் ஆயிடிச்சா?

vasu balaji said...

மூடாமப் போனாங்களேன்னு சந்தோஷப்படுவின்ங்களா? கொற சொல்லிக்கிட்டு.:))

Unknown said...

சென்னையில் நிறைய பள்ளிகள் மூடிட்டாங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

vOttu pOttaachchu

ஹேமா said...

எரிச்சலோடு ஒரு நகைச்சுவை.
ஓட்டுப் போட்டேன் மணிஜீ.

சிநேகிதன் அக்பர் said...

வாழ்க குடி ஆட்சி.

பார் பக்கத்துல பள்ளிக்கூடம் வச்சா தப்புதானுங்கோ.

மரா said...

இருங்க ராமனாநாதன் ஒயின்ஸ்காரங்ககிட்ட சொல்லுறேன் :)

ஈரோடு கதிர் said...

ஓட்டு போட்டுட்டேன்

கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா...

ம்ம்... தமிழ்மணம் மட்டும்தான்... தமிழிஷ் ஹாலிடேல போய்டுத்து போலயே...

Unknown said...

சே சே என்ன ஜனங்க இவங்க! என்ன அதிகாரி இவரு! இதுவரைக்கும் கண்டு காணாம இருந்திட்டு...

நல்ல வேளை இப்பவாவது புரிஞசிகிட்டு மாத்தினாங்களே!!

பாவம் இனிமேலாவது, தொண தொணன்னு பேசிகிட்டு யாரும் குறுக்க நெடுக்க வந்து தொல்லை பண்ணாம, ஃப்ரியா நிம்மதியா போய் நம்ம குடிமகன்கள் குடிக்கட்டும்!

உண்மைத்தமிழன் said...

கடைக்காரனை உதைக்கிறதைவிட குடிக்க வர்றவனுகளை தூக்கிப் போட்டு மிதிச்சா இந்தப் பிரச்சினையெல்லாம் இருக்காதுல்லண்ணே..!

அத்திரி said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா............கிகிகிகி.