தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று சொல்லப்பட்ட செல்வி ஜெயலலிதா என்ன நினைக்கிறார் எனபதை கண்டு பிடிக்க ஒரு சாஃப்ட்வேர் தயாராகி கொண்டிருக்கிறதாம். அம்மா கட்சியிலிருந்து ஒவ்வொருவராக கழண்டு கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு. இல்லை கொடநாடு . இதுதான் மாஜி மகாராணியின் மந்திரமாக இருக்கிறது . லேட்டஸ்ட்டாக முத்துசாமியும் இன்று திமுகவில் இணைகிறாராம். எம்.ஜி.ஆர் காலத்து விசுவாசி அவர். அம்மையாரின் பாராமுகம் அவரையும் துரத்தி விட்டது. இப்படியே போனால் மேடமும், உடன்பிறவா உபத்திரமும் , அவர் சொந்த வகையறாக்களும் மட்டுமே இரட்டை இலையில் இருப்பார்கள். முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் , கோமாளி சேகர் (நகைச்சுவை கலைஞன் என்பதை கோமாளி என்று சொல்கிறேன்) இவர்களை பிள்ளை பிடிக்கிறவன் பிடித்து போன போது எழுதிய இடுகை . மீள் பிரசுரம்
கொடநாடு எஸ்டேட்...அடிமைகள் போல் எல்லோரும் பம்மி கிடக்கின்றனர்.ஒபிஎஸ்,ஜெயக்குமார்,வளர்மதி,செங்கோட்டையன்,செம்மலை என முன்னாள் மந்தி(ரி)கள் மற்றும் கட்சிக்காரர்கள்.
பெரிய யாககுண்டங்கள் தயாராக இருக்கிறது.
இன்னிக்கு 09/09/09..அம்மா இன்னிக்குத்தானே முழிக்கறதா சொலியிருக்காங்க சின்னம்மா?பவ்யமாக கேட்கிறார் ஒபிஎஸ்
ஆமாம் ..9 மணிக்கெல்லாம் எழுந்துடுவாங்க
மணி 9 ஆச்சு..அசையறாப்ல தெரியலயேம்மா ..செங்க்ஸ்
தாயே..ஆதிபராசக்தி..டான்சி ராணியே..தெய்வமே
துதிகோஷம் காதைப்பிளக்கிறது.
ஹீஹிம்..அம்மா ..சலனத்தையே காணும்
சசிகலா..அம்முவுக்கு டிரைஜின்ல இளநீர்,லைம்கார்டியல் மிக்ஸ் பண்ணி,அதுல துளசியை போட்டா வர ஸ்மெல் ரொம்ப பிடிக்கும்
அதுக்கு எழுந்திருவாங்க..
அம்மா அசருவதாக இல்லை..
அனைவரும் கூடி ஆலோசிக்கின்றனர்.
அதிமுகவில் புதுசாக ஊடுருவியிருக்கும் புல்லுருவி டாக்டர் வெங்கடேஷ் ஒரு ஐடியா கொடுக்கிறார்
அதன்படி ஒரு சிடியை ஒலிக்க விடுகின்றனர்..
இன்னும் சத்தமா வைங்க
சிடி அலறுகிறது
“ஐயோ கொல்றாங்களே”
“ஐயோ கொல்றாங்களே”
தலைவரின் குரல் ஒலிக்க
ஜெ விருட்டென்று எழுந்து வருகிறார்.
மகாவிஷ்ணுவை பார்த்த தேவர் கூட்டம் போல் ஒட்டுமொத்தமாக அனைவரும் காலில் விழுகிறார்
இது பழசுதானா?என்ன பண்ணிகிட்டிருக்கீங்க எல்லாம்?ஆட்சி என்னாச்சு?
அம்மா ..துரையை தூக்கிட்டாங்க..அனிதாவை புள்ளை புடிக்கிறவன் புடிச்சுட்டு போயிட்டாங்க..
அந்த கோமாளி சேகர்?
அந்தாளு காதுல பூவை சொருகிட்டு,அல்வா கொடுத்துட்டு போயிட்டாருங்க..
இடைத்தேர்தல் என்னாச்சு?
அதுல ஸ்ரேயா ஜெயிச்சிட்டாங்க
என்ன உளர்றீங்க?
குமுதம் அரசு கேள்வி பதில்ல திரிஷா,அசின்.ஸ்ரேயா மூணு பேருக்கும் “இடைத்தேர்தல்”வச்சாங்க..அதுலதான்
மாகாதேவன்..இங்க வந்து இந்தாள் மேல விழுங்க
புல்டோசர் விழுந்த எபெக்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் நசுங்கிபோகிறார்.
அம்மா..விஜயகாந்த் நிறைய ஓட்டு வாங்கறாரு.அவரு கிட்ட கூட்டணி வச்சா?
ஆமா..அவருக்கும் சேர்த்து நா ஊத்தி கொடுக்கணுமா?ஏன் எல்லாரும் முகமூடி போட்டிருக்கீங்க? அது போடாமயேத்தானே கொள்ளையடிச்சோம்.
பன்றிக்காய்ச்சல் நாட்டை மிரட்டுது தாயே..ஒரு போராட்டம் அறிவிச்சா ..செல்வாக்கை பெருக்கிடலாம்.
மண்ணாங்கட்டி..மக்கள்தான் எல்லா ஓசியையும் வாங்கிட்டு நன்றிக்காய்ச்சல் வந்து அலையறாங்களே
அப்போது பின் பக்க சுவர் ஏறி குதிச்சு வைகோவும்,ராமதாசும் ஓடி வருகிறார்கள்..
யார் மேன் நீங்க?
அம்மா என்னைத்தெரியலையா?நான் தான் வைகோ
இங்க வர்றவங்க எல்லாம் பொட்டியை வச்சுட்டு கோதான்..நீ யாருய்யா?
ராமதாஸ் வைகோவிடம் ‘சீக்கிரம் அழுதுகாட்டுங்க”அம்மா மறந்துட்டாங்க போல’
வைகோ தரையில் படுத்து புரண்டு ஓ வென கதறுகிறார்.
அந்த அழுவாச்சியா?சரி என்ன வேணும்?
தேம்பி,தேம்பி அழுகிறார்.
சசி..இந்தாளுக்கு ஜவ்வு முட்டாய் வாங்கி கொடுத்து துரத்து.நான்சென்ஸ்..நீங்க யாரு?எஸ்டேட்ல மரம் வெட்டற ஆளா?
அன்பு சகோதரி..என்னை தெரியலையா?நான் தான் தமிழ்குடிதாங்கி.அன்புமணிக்கு ராஜ்யசபா..
போங்கய்யா ..தரித்திர சுமைதாங்கி.உங்ககூட சேர்ந்துதான் குடியே மூழ்கி போச்சு..சனிப்பொணம் தனிப்போகாதுன்னு என்னையும் சேர்த்து இழுத்துட்டு போயிட்டீங்க..
அப்படி சொல்லாதீர்கள் அன்புசகோதரி..அன்புமணி அத்தை,அத்தை என்று உங்கள் நினைவாகவே இருக்கிறார்
சசி...இவரை தோட்டத்துத்து அனுப்பு..கைல கோடாரியை கொடுத்து மரம் வெட்டினாத்தான் கஞ்சி..உப்பு போடாம..
செக்யூரிட்டி யாரையோ இழுத்து கொண்டு வருகிறான்..
“அம்மா யாருண்ணு தெரியலை..ஒரு தகர டப்பாவை வச்சுகிட்டு குலுக்கிட்டிருந்தாரு..பூம் பூம் மாட்டுக்காரன் மாதிரி தெரியுது..ஆனா மாடு இல்லை
மாடு எங்கய்யா?
அதை வித்துதான் இடைத்தேர்தலில் நின்னோம்
ஜெ கண்டுபிடித்து விடுகிரார்.
தா.பாண்டியனா?
ஆமாம்மா...
சசி..இவர் கைல சுத்தியும்,அரிவாளும் கொடு..ஒழுங்கா வேலை செய்யனும்..என்ன?
எல்லாரும் நா சொல்றதை கேளுங்க..நீண்ட நாள் ஓய்வில இருந்ததால எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு..அதனால் நா திரும்ப ஓய்வு எடுக்கப்போறேன்..இந்த மைனாரிட்டி ஆட்சி ஒழியனும்..இருள் விலகணும்,..அதனால வீட்டுக்கு ஒருத்தர் தீக்குளிங்க....
சசி எல்லாருக்கும் சோறு போட்டு அனுப்பு..
விஜயகாந்த் மட்டன் பிரியாணி போடராரும்மா..நீங்களும்..
ஆட்சி வரட்டும்.ஊரையே அடிச்சு உலை வச்சிடலாம்.சசி..ஆளுக்கு 20ரூபா கொடுத்தனுப்பு.சைதாபேட்டையில தண்டோரா ஆபிசுக்கு பக்கத்தில ஒரு வண்டியில மீன்குழம்பு சாப்பாடு நல்லாயிருக்கும்.வாங்கி கொட்டிக்கங்க.
அம்மா திரும்ப எப்ப உங்களை எழுப்பறது?
25 comments:
nalla irukku
குட்மார்னிங்
இடைத்தேர்தல் என்னாச்சு?
அதுல ஸ்ரேயா ஜெயிச்சிட்டாங்க
என்ன உளர்றீங்க?
குமுதம் அரசு கேள்வி பதில்ல திரிஷா,அசின்.ஸ்ரேயா மூணு பேருக்கும் “இடைத்தேர்தல்”வச்சாங்க..அதுலதான்
...... ha, ha,ha,ha,ha,ha,ha....
அருமையான நகைச்சுவை பதிவு.
//அம்மா திரும்ப எப்ப உங்களை எழுப்பறது? ம்ம்ம்..10/10/10 லதான்//
சூப்பர் நச்!
//இடுகை . மீள் பிரசுரம்// அப்படீன்னு சொல்றீங்க ஆனா இப்ப நடக்கிற நிகழ்வுக்கு புதுசா எழுதின மாதிரியே இருக்கு. ஒரு வேளை அடுத்த வருஷம் இதை மீள் பதிவு செஞ்சாலும் அப்பவும் Freshஆ தான் இருக்குமோ?
குட்மார்னிங் மணிஜீ. அந்த மீன் சாப்பாடு கடை எங்கயிருக்கு?
:)
Very good morning..
:)
செம நக்கல் தல .
அது திருப்பள்ளியெழுச்சி-ன்னா? ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆயிடுத்து பாருங்கோ?
//கொழுப்பு/அரசியல்//
யாருக்கு? :))
சூப்பர்.
இப்பவும் தண்டோரா ஆஃபீஸ் பக்கத்து வண்டில மீன் குழம்பு சோறு ரூ20தானா தலைவரே:)
நாங்கதான் தவணை முறைல கட்சிய வித்துட்டமே...
அடி பின்றீங்க.
Super .. Amma inime avvalothan..Etho moottai adicha panatha vechukittu thozhi kooda jollyaa iruntha porum..
Inime thi mu ka vukku ethir katchi kidayathu..
Ippadiye ponaa, konja naalla rettai ilai pazhuthu udhirnthidum.., ellam rose powder karayura varaikkum thaan.., ippo pudu make-up potta aalai thedum malayaali Marudhur Gopalakrishna pilai Ramachandiranin(MGR)-in visiladichaan kunjugal!
unmayaave ippadithaan nadkumoo poes Gardenla.., nethu Vaiko, Communist varadharaaajan, magendiran utkaarthukondu iruppathai paartha.., ippadi thaan irunthirukkumonnu thonuthu.., paavam vaisol veerargaal! Amma veetula(Poes Garden-la) Eli! veliya mike(kedaichaa) munaadi puli!
சைதபேட்டைல உங்க அலுவலகம் என்ககீது ?
தள்ளுவண்டி கட மீன் குழம்பு சாப்பாடு எனக்கு வேணாம்.
நா சுத்த சைவம்.
ஆமா ...அது எப்டி "அம்மாவுக்கு " தெரிஞ்சிது??
கூல்...
கமெண்ட் சொல்ல பயம்ம்ம்மா இருக்கு.
வெறும் ஹா! ஹா! ஹா! மட்டும்
ரிப்பீட்டிங் ரிவிட்டிங்
:)
மந்தி(ரி)கள்
மிகவும் ரசித்தேன்
விஜய்
மூணா கானா ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இனிமேலே ஜெயலலிதாவை நம்பி எந்த பிரயோசனுமும் இல்லை,அழகிரி பார்த்து ஏதாவது செய்தால் தான் உண்டு.
///மண்ணாங்கட்டி..மக்கள்தான் எல்லா ஓசியையும் வாங்கிட்டு நன்றிக்காய்ச்சல் வந்து அலையறாங்களே///
;;)))))))))
IPPOTHU IRUKKUM THALAIVAR KALIL KONJAM BETTER JAYA THAAN. MAHANKAL ILLAI , KANIMOLIYIN THAAYAR PETRA MAGAL ILLAI , PERANKAL ILLAI, ENAVE 2011 -L IVRUKKU ORU CHANCE KODUPPOME!!!
திருப்பள்ளியெழுச்சியா.. விக்கி விநாயகம்பிள்ளை கச்சேரியாட்டம்ல இருக்கு... ஹிஹி..
தண்டோரா ஆபீஸ் பக்கத்துல இருக்குற மீன் குழம்பு கடைக்குத் தான் இது விளம்பரமா இருக்கும். அவனுகளுக்கு ஒன்னும் ஏறாது... :-)
Post a Comment