சுவற்றில் விழுகிறது சுமதியின் நிழல் . பாலா ஓடி வருகிறான். அம்மா அப்படியே இருங்க. அசையாதீங்க . ஒரு பென்சீலை அவசரமாக சீவி நிழலில் மேடிட்டிருக்கும் வயிறை சுற்றி ஒரு அரை வட்ட்ம் வரைகிறான் .
இதுக்குள்ளதான் பாப்பா இருக்கும்மா
சுமதிக்கு சிலிர்த்து போகிறது. கண்ணீரை வெளிக்காட்டாமல் அவனை வாரியணைத்துக் கொள்கிறாள் . ராம் இன்னும் வரவில்லை. எங்கு என்ன போராட்டமோ இன்று. வந்தால்தான் உண்டு. இல்லை எதாவ்து போலிஸ் ஸ்டேஷனில்தான் போய் பார்க்க வேண்டும். காலையில் அந்தம்மா வீட்டில் இருந்து நிறைய பழங்கள் கொடுத்தனுப்பியிருந்தார்கள் . கண்ணா கொஞ்சம் பழம் சாப்பிடுறா என்றாள் பாலாவை
எனக்கு வேண்டாம்மா. நீ சாப்பிடு . அப்பதான் பாப்பா நல்ல பலசாலியா இருக்கும். அந்த மாமி சொன்னாங்களே ..என்னை மாதிரி இல்லாம .சொல்லும்போதே அவனுக்கு அழுகை வருகிறது.
இல்லடா கண்ணா . உனக்கு ஒன்னுமில்லை. டாக்டர் அங்கிள் சொன்னாருல்ல .. நீ போய் விளையாடு போ..
என்னை யாரும் விளையாட சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க .. நம்ம வீட்டூக்கு பாப்பா வரட்டும் . நான் அது கூடத்தான் விளையாடுவேன்.
சுவற்றில் இப்போது நிறைய அரை வட்ட்ங்கள் உருவாகி விட்டது .பாலா தன் பழைய விளையாட்டு பொருட்களையெல்லாம் பத்திரப்படுத்தியிருந்தான். சக்கரம் உடைந்து போன சைக்கிளை அப்பாவை நச்சரித்து சரி பண்ணியிருந்தான். ஏண்டா கண்ணா ! பாப்பா பொறந்தவுடனேவா சைக்கிள் ஓட்டப்போகுது என்றான் ராம் . நான் கத்துக்கொடுத்துவேம்பா என்றான் பாலா . அதை சொல்லும்போது அவனுக்கு அப்படியொரு பெருமிதம்.
நானும் ஆஸ்பத்திரிக்கு வரும்வேன் . என் கிட்டதான் முதல்ல பாப்பாவை காட்டணும் .
இல்லடா செல்லம். நீ ஸ்கூலுக்கு போகணும் இல்ல . சாயங்காலம் நான் கூட்டிகிட்டு போறேன் என்கிறான் ராம்.
அரை மயக்கத்தில் இருந்தாள் சுமதி. நிழலாய் காட்சிகள் தெரிகிறது. தொப்புள் கொடியை துண்டிக்கிறார்கள் . வேதனை மறைந்து அந்த ரோஜாவின் முகத்தை காணும் ஆவல் நிறைகிறது.
ஸ்கூல் வளாகத்தில் இருக்கும் கோயிலில் முழங்காலிட்டு வேண்டிக்கொண்டிருக்கிறான் பாலா .. அப்பாவிற்க்காக காத்துக் கொண்டிருக்கிறான் . ஏன் அப்பா இன்னும் வரவில்லை.
இங்க பாருங்க மிஸ்டர் ராம் . இது கொஞ்சம் எமோஷனல் விஷயம்தாம் . ஆனால் இதுதான் கண்டிஷன் .
சுமதிக்கு குழந்தையை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது . ஆனால் அவளிடம் காட்டவேயில்லை. அப்படியா சொன்னார்கள் ? கடவுளே .. அடி வயிற்றை பிசைகிறது. ப்ளீஸ் யாராவது ஒரு முறை அந்த முகத்தை.
மிஸ்டர் ராம் நீங்க எல்லாவற்றுக்கு சம்மதித்துதான் கையெழுத்து போட்டிருக்கிறீர்கள் . உங்க அக்கவுண்டில் மீதி தொகை கிரெடிட் ஆகிவிடும்..
பாலாவுக்கு குழப்பம் . நிறைய சாக்லெட் வாங்கி வைத்திருக்கிறான். எல்லோருக்கு கொடுக்க வேண்டும் முதல்ல இந்த சாமிக்கு.. அப்புறம் டீச்சருக்கு, பாபுக்கு, வேணிக்கு.. இது போதுமா .. அப்பா வந்தவுடனே இன்னும் நிறைய வாங்கணும்.. ஆனா அப்பா ஏன் இன்னும் வரலை ?
குழந்தை ஹெல்தியா இருக்கு ராம் . வி ஆர் ரியலி சாரி. இதுதான் டேர்ம்ஸ். நாங்க ஒன்னும் செய்யமுடியாது. கொஞ்ச நாள்ல சரியாகிடும். இந்த மாத்திரைகளை உங்க மனைவிக்கு கொடுங்க.
என்ன மாத்திரை டாக்டர்?
பால் சுரந்து உயிர் வலித்தது சுமதிக்கு.. பாலாவுக்கு என்ன சொல்லப்போகிறேன் . குழந்தை எப்படி இதை தாங்கப்போகிறான்..
மிஸ்டர் ராம் . பாலவுக்கு ஆபரேஷனுக்கு நாள் குறிச்சிடலாம். அவங்க கண்ட்ராக்ட் அமவுண்ட்டுக்கு மேல ஒரு லட்சம் த்ர்றாங்களாம். குழந்தை நல்ல கலர் . நிறைய முடி . அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் .
ஒரு உயிரை காப்பாத்த , இன்னொரு உயிரை சுமந்திருக்கேன் . பத்து நிமிஷம் ஒரு குழந்தை கையில வச்சுகிட்டு கொஞ்சினாலே , கொடுக்க மனசு வராதே. பத்து மாசம் ... முகத்தை கூட காட்டலையேங்க.. பாலாவுக்கு என்ன சொல்லப் போறோம்..
ஏம்பா சாமி ஏமாத்திட்டாருன்னு சொல்றீங்கப்பா ? பாப்பா எங்க ?
சுவற்றில் அரை வட்டங்கள் . அதனடியில் விளையாட்டு சாமான்கள். பித்து பிடித்தாற் போல் அழுகிறாள் சுமதி. அவள் கையில் இருக்கும் ஸ்கேன் படத்தில் , அந்த முகம் காட்டாத மழலை மெல்ல நெளிந்து கொண்டிருக்கிறது.
37 comments:
அண்ணாச்சி என்ன சொல்றது
வாவ்!
முந்தைய விருது சாதனைகளை முறியடிக்கும்! அடிக்க வாழ்த்துகள் மணிஜி !
அசத்துறீங்க..அப்புறம் இந்த படம் எடுத்து முடிச்சாச்சா, இனிமேதானா?
விசூவலா எப்படி வந்துருக்குனு பார்க்க ஆவலாய் உள்ளேன்.
நண்பர்களே..இதை இங்கு எழுதியதற்கு காரணம் உண்டு. இதை இன்னும் எப்படி செம்மை படுத்தலாம் என்கிற உங்க ஆலோசனைகளுக்காக..இண்டர் நேஷனல் ஃபெஸ்டிவலுக்கு அனுப்ப உத்தேசம்..நன்றி
ரொம்ப நிதர்சனமான வேதனையான கதை .கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல .இப்போது தான் நானும் என் பெண்ணும் நம் வயிற்றில் பிறந்த குழந்தையை வேறு யாருக்காவது கொடுக்கஇயலுமாவென்று discuss பண்ணி கொண்டு இருந்தோம். இதில் பாவம் புரியாத சிறுவன் தான் .
வாழ்த்துக்கள் மணிஜி.ரொம்ப நல்ல வந்திருக்கு புனைவு
surrogate mother concept இப்போது பிரபலமாகிறது ... அந்த சிறுவனின் மன நிலை தான் பரிதாபத்துக்குரியது
வலி சுமந்து நிற்கிறது கதை. அற்புதம் மணிஜீ.
.
இங்கு வாடகைத்தாய் என்பது வியாபாரம். அதனை வறுமைக்கான விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர் . இதற்குப் பதில் தத்தெடுத்துக் கொள்ளலாம்..
ஆனால் தான் புருசனின் விந்துவில் பிறந்த குழந்தைதான் வேண்டும் என அபத்தமாக நினைக்கிறார்கள் ..
சொத்துகளில் வாரிசுக்கு ஒருநாள் உண்மை தெரியும், அப்போது அவன்/ அவள் தன் உண்மையான அம்மாவை தேடுவான்/ ள்..
நல்ல கதைக் களன்.. அவார்ட் நிச்சயம்...
எங்க இருந்து மணிஜி, இப்படியெல்லாம் 'கரு' கிடைக்குது?
freeze ஆயிட்டேன்யா, பாவி. :-(
professional பாவி! :-)
கலங்கடிக்கிறதே வேலையா போச்சு..
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல கதை .....
ஆனால் ஒரே ஒரு விஷயம் எனக்கு தோன்றியது....
கதையில் இருவரின் மன அழுத்தத்தை சொல்ல வருகிறீர்கள் சிறுவன் , அந்த தாய்.
என்னை கேட்டால் அந்த சிறுவனின் அழுத்தத்தை மட்டும் சொன்னால் இன்னும் கூர்மையாய் இருக்கும் !!!!
இது எனக்கு தோன்றியது.
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
விசா நன்றி..அப்படித்தான் நானும் நினைத்திருக்கிறேன்.சிறுவனின் பார்வையில்தான் திரைக்கதை
ரொம்ப நல்லாச் சொல்லியிருக்கீங்க அண்ணே. படிக்கும் போது அம்மாவின் வலியும், வேதனையும், பாலாவின் ஏமாற்றமும் வந்து தொற்றிக் கொள்கின்றன..
சூப்பர் அண்ணே...
சிறுவனுக்கு என்ன குறை என்று சொன்னால் எனக்கு புரியும்
அந்தக் குழந்தைக்கு (பாலா) எதுவும் இன்னும் தெரிவிக்க வில்லை என்பது போலே முடியுங்கள் மணிஜி. அம்மா கதறி அழுவது போல் எல்லாம் காட்டாதீங்க, இதோ இப்போ விழுந்து விடும்னு 'சுகாசினி' டைப்பில் அப்புறம் அங்கேருந்து அரைவட்டங்கள், குழந்தையின் எதிர்பார்ப்பு புன்னகை என்று உங்களுக்கு தெரியாததா?
ரொம்ப நல்லா இருக்குங்க. மனசு ரொம்ப நேரம் அசை போடும்...
ஜெயிச்சு பெண் பதிவர்களும் கலந்துக்கும்படியான பிரத்தியேக பார்ட்டி கொடுக்கணும் :))
வாழ்த்துக்கள். அருணை ஈசன் துணை நிற்க வேண்டுகிறேன்.
சீக்கிரம் எடுத்துருவோம்..:)
கேபிள் சங்கர்
ஜி,
//மிஸ்டர் ராம் . பாலவுக்கு ஆபரேஷனுக்கு நாள் குறிச்சிடலாம். அவங்க கண்ட்ராக்ட் அமவுண்ட்டுக்கு மேல ஒரு லட்சம் த்ர்றாங்களாம். குழந்தை நல்ல கலர் . நிறைய முடி . அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்//
இந்த டயலாக்ல பாலாவுக்கு ஆபரேஷனுக்கு நாள் குறிச்சிடலாம் கடைசியா வரட்டும்.. அதாவது இப்பிடி
//மிஸ்டர் ராம். அவங்க காண்ட்ராக் அமவுண்டுக்கு மேல ஒரு லட்சம் தராங்களாம். குழந்தை நல்ல கலர். நிறைய முடி. அவங்களுக்கு ரொம்ப சந்தோசம். பாலா ஆபரேஷனுக்கு உடனே நாள் குறிச்சிடலாம்’
ஒண்ணும் சொல்ல முடியல மணிஜீ....பிரமிப்பில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை...! வாழ்த்துக்கள்!
சூப்பர் மணிஜீ. நேசன் சொன்ன மாதிரி 'சியர்ஸ்'ன் சாதனைகளை நிச்சயம் முறியடிக்கும் என்பது திண்ணம்.
பையனின் பார்வையில் திரைக்கதை அமைக்க உத்தேசித்திருப்பதாக சொன்னது மிக அருமையான முடிவு.
மணிஜி, நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்.
Nalla varum. mudinjathum pakka erpadu pannunga. :)
மனதை பிசைய வைத்து விட்டீர்கள்....
மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ரொம்ப அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.
கதை. அற்புதம்
ஹேட்ஸ் ஆஃப்:)
சூப்பர் சார்
அசத்தல்....அற்புதம்.....விவரிக்க இயலாத அனுபவம், ஐயா! திரையில் காண ஆவலாய் இருக்கும் பலரில் நானும்.
வாழ்த்துகள்!
கதை கரு உணர்வு பூர்வமானது.
நெகிழ வைத்தது. நேர கட்டுப்பாடுக்காக குறைக்க வில்லை என்றால் ஒரு சில உணர்வு பூர்வமாய் நிகழ்வுகள் சேர்க்கலாம்.
பரிசு பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையான கதை ஒன்றை இழந்து தான் வேறு ஒன்றை பெற வேண்டுமா?
வறுமையும் பாசமுமாய் போராடுது கதை.நெகிழ்வாயிருக்கு மணிஜீ.
கண்டிப்பா இந்த வருஷத்துக்குள்ள ஒரு சிறுகதை புத்தகம் போடுங்க..
கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..விரைவில் படபிடிப்பு ஆரம்பம். பதிவர்களுக்கு ஸ்பெஷல் ஷோ உண்டு..நன்றி
வாழ்த்துக்கள் மணிஜி,
ரொம்ப அருமையா இருக்கு
//சக்கரம் உடைந்து போன சைக்கிளை அப்பாவை நச்சரித்து சரி பண்ணியிருந்தான். ஏண்டா கண்ணா ! பாப்பா பொறந்தவுடனேவா சைக்கிள் ஓட்டப்போகுது என்றான் ராம் . நான் கத்துக்கொடுத்துவேம்பா என்றான் பாலா . அதை சொல்லும்போது அவனுக்கு அப்படியொரு பெருமிதம்//
இந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. ஒட்டு மொத்தமாக ஒரு சிறுகதையைப் படித்த உணர்வு ஏற்படுகின்றது. ஆனால் இதை ஓரளவுக்கு திரைக்கதை வடிவத்தில் கொடுத்திருந்தால் நீங்கள் எதிர்ப்பார்த்தபடியான ஆலோசனைகள் இன்னும் கிடைத்திருக்கக்கூடும்.
////
என்னை மாதிரி இல்லாம .சொல்லும்போதே அவனுக்கு அழுகை வருகிறது
என்னை யாரும் விளையாட சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க /////
இது போன்ற சூழல்களில் பாலாவை ரொம்ப எமோஷனலா காட்ட முயற்சி செய்வது சற்று நெருடலாக உணர்கிறேன்.
// நம்ம வீட்டூக்கு பாப்பா வரட்டும் . நான் அது கூடத்தான் விளையாடுவேன். //
என்பதே போதுமானதாய் தோன்றுகின்றது.
நீங்கள் சொல்ல நினைக்கும் உணர்வுகளில், உண்மையில் சுமதிக்கே வலிகள் அதிகம். பாலாவுக்கு ஏமாற்றம் சுமதிக்கு ஏமாற்றம்+வலி. எனவே இருவரின் உரையாடல்களையும் மிகவும் powerfull-ஆக வைத்து இயக்குநரின் பார்வையில் படம் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்குமோ என தோன்றுகின்றது. மேலும் பாலாவின் பார்வையில் கதை சொல்ல முயன்றால் வயதுக்கு அதிகப்படியான செய்திகளை அவன் பேசுவதாக அமைந்துவிடுமோ எனத் தோன்றுகின்றது.
// ராம் இன்னும் வரவில்லை. எங்கு என்ன போராட்டமோ இன்று. வந்தால்தான் உண்டு. இல்லை எதாவ்து போலிஸ் ஸ்டேஷனில்தான் போய் பார்க்க வேண்டும்.//
ராம் பற்றி கதையில் ஒட்டாத தகவலாக இருக்கின்றது. ராம் ஒரு போராளியா?
இவையனைத்தும் தங்களுக்கு ஏற்படுதையாக இருந்தால் மகிழ்ச்சி. அதிகப்பிரசங்கித்தனம் ஏதேனும் தென்பட்டிருந்தால் கண்டிப்பாக குறிப்பிடவும். சினிமா-வின் மேல் உள்ள ஆவல்தான் காரணம்
என்னுடைய ‘’43வது பிறந்தநாளுக்குப் பிறகு’’ கவிதைக்கு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.
வெற்றிபெற வாழ்த்துக்கள்
நீங்கள் குறிப்பிட்டபடி பின்னூட்டத்தடங்கல்களை அகற்றியாயிற்று.
நன்றி.
அண்ணா இது அருமையா வரும். நிச்சயமா வெற்றி தான். வாழ்த்துக்கள் அண்ணா...
சூப்பர் மணிஜீ
Post a Comment