Saturday, May 15, 2010

கதை சொல்லிகள்




முன்பு தஞ்சையில் தஞ்சை ப்ரகாஷ் கதை சொல்லிகள் என்றொரு நிகழ்வை நடத்தி வந்தார். நிறைய முறை அதில் கலந்து கொண்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். சில நாட்கள் முன்பு கூட ஒரு இடுகையில் கவிஜீவனைப் பற்றி எழுதியதில் நண்பர் ஜெயமார்த்தாண்டன் அதைப் பற்றி பின்னூட்டம் இட்டிருந்தார்.

தமிழ் ஸ்டூடியோ நண்பர் அருண் குறும்பட தளத்தில் செம்மையாக இயங்கி வருவது நமக்கு தெரியும். அவரின் இன்னொரு முயற்சியாக ஒரு புதிய தளம் கதை சொல்லி.


கதை சொல்லி.. இலக்கிய உலகில் இந்த வார்த்தை மிகவும் பிரசித்திப் பெற்றதுப் போலவே திரையுலகிலும், அதன் தன்மை மாறாமல் அதே முக்கியத்துவத்துடன் இருப்பது கவனத்திற்குரியது.

நம்முடைய எல்லா வயதிலும் நமக்கு கதை சொல்லி தேவைப்படுகிறார். பாட்டி, அம்மா, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் என எல்லா நிலைகளிலும் கதை சொல்லியாக இருப்பவர்கள் நமது மனதில் நீங்கா இடத்தைப் பெற்று விடுகின்றனர். நமது மனம் எப்போதும் ஏதோ விதத்தில், ஏதோ உருவத்தில் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது. கதைகள் நம்முடைய வாழ்வோடு கலந்தவை. நமது வாழ்க்கையை சில நேரங்களில் வழி நடத்துவதும் கதைகளே.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தொழில்நுட்பம் நமக்கு கொடுத்திருக்கும் வசதிகளையும் பயன்படுத்தி கூடு இணைய வாசகர்களுக்காக புதிதாக கொண்டுவரப்பட்டதே இந்தக் கதை சொல்லிப் பகுதி. இந்த கதை சொல்லிப் பகுதியில் நமக்கு பிடித்த எழுத்தாளர்கள், கிராமங்களில் வாழும் உண்மையான கதைசொல்லிகள், பல தலைமுறைகள் கடந்து வாழும் பாட்டிகள், திரைப்படக் கலைஞர்கள், குழந்தைகள் என் எல்லோரும் கதை சொல்லியாக உங்களை சந்திக்க அல்லது உங்களுடன் உரையாட வருகிறார்கள்.

இந்தக் கதை சொல்லிப் பகுதி முழுக்க முழுக்க ஒலி வடிவத்தில் மட்டுமே கிடைக்கும். இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து (Download) அலைபேசி, இசைக் குறுந்தகடுகள், ஐ பாட், போன்றவற்றில் இணைத்து உங்கள் பயணங்களில், உங்கள் ஓய்வு நேரங்களில் அவைகளை கேட்டு மகிழலாம். உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் உங்களோடு பேசிக் கொண்டே வருவது போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கப் போவதே இந்தக் கதை சொல்லிப் பகுதி. உங்கள் தனிமையை நீங்கள் நேசிக்கும் கதைசொல்லி, எழுத்தாளர், திரைக் கலைஞர்களோடு பகிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணங்கள், ஓய்வு நேரங்கள் சுகமாக....... கேளுங்கள்.. கேளுங்கள்.. இது கூடு இணையதளத்தின் கதை சொல்லிப் பகுதி. கேளுங்கள் ..உங்கள் பால்யத்தை மீட்டெடுங்கள். நண்பர்களிடமும் பகிருங்கள்..






13 comments:

Unknown said...

அண்ணாச்சி என் பையன் (அஞ்சு வயசு) என்னைவிட பிரமாதமா கதை சொல்வான் ..

ஈரோடு கதிர் said...

பயனுள்ள இடுகை

Vidhoosh said...

அட இந்தாங்க என் பங்குக்கு. ஒரு கதை ஒலி வடிவில்.

http://www.mediafire.com/?mmahryiym3o

இந்தக் கதை சமீபத்தில் எங்கூரு கோவிலில் கதாகலாட்சேபம் பண்ணினது. ரொம்ப ரசிச்சாங்க எல்லோரும். :) (நன்றி; www.sridharblogs.com

Vidhoosh said...

வோட்டு போடாமல் போயிட்டேன். இப்போ போட்டாச்சு.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

vasu balaji said...

நன்றிண்ணா!

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு மணிஜி! நன்றி.

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல முயற்சி மணிஜீ. பகிர்வுக்கு நன்றி.

சென்ஷி said...

மிகப் பயனுள்ள பகிர்வு. நன்றி மணிஜி

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு மணிஜி!

க ரா said...

சிறப்பான பகிர்வு மணிஜீ. நன்றி.

அன்புடன் அருணா said...

நல்ல பகிர்வு மணிஜி! நன்றி.

Unknown said...

good attempt ji