Monday, November 23, 2009

சில பிரபலங்கள்....சில பிராபலங்கள்


நண்பர் பைத்தியக்காரனுக்கு ஒரு மெயில் வருகிறது..படிக்கிறார்.

டியர் மேடி..

நான் சட்னி வெல்டன்.. அதாவது சிட்னி ஷெல்டனின் பேரன்.. என் பாட்டனார் எழுதிய கதைகளுக்கு என்னிடம் காப்புரிமை உள்ளது.. நீங்கள் அவர் கதை ஒன்றை (ஒன்றுதானா? ) களவாடி விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.. தாங்கள் எழுதியதை மொழி பெயர்த்து சென்னையிலிருந்து ஒரு நண்பர் அனுப்பி வைத்தார்...
அவர் யார் என்ற விவரம் வேண்டாம்.. அதனால் நீங்கள் உடனடியாக எனக்கு சேர வேண்டிய ராயல்டியை அனுப்பவும். வேறு திருட்டுகளும் இருந்தால் மொத்தமாக செட்டில் செய்யவும். கணிசமான தள்ளுபடியும் உண்டு.

இப்படிக்கு

சட்னி வெல்டன்.

சிவராமனுக்கு பயம் வந்து விடுகிறது. கோர்ட், கேஸ் எல்லாம் பார்த்தால் கவிதையை கண்ட கேபிள் சங்கரைப் போல் மெரிசலாகி விடுவார். அவர் உற்ற நண்பரும், எழுத்தாளருமான வளர்மதியை சந்திக்கிறார். (உங்கள் நலம் கருதி அவர் லிங்க்கை கொடுக்கவில்லை)

என்ன மேடின்னு இருக்கு? ஒருவேளை மாதவனுக்கு எழுதியிருப்பாரோ?இது எவனோ வேலை மெனக்கெட்டு செஞ்சிருக்கான் பாரு .. யாராயிருக்கும்?மைலாப்பூர் ராயல்ல டீ வாங்கி கொடுத்தா போதுமான்னு கேக்கனும்

வளர்.. பைத்தியக்காரன் அப்படிங்கிறங்கிறதைதான் மேடின்னு போட்டிருப்பாரு.. இது தண்டோராவின் வேலையாத்தான் இருக்கும். ஏன்னா ! இந்த மாதிரி நயவஞ்சகமான திரிசமம் எல்லாம் அவர்தான் செய்வாரு..

அவர் நயவஞ்சகன்னு எப்படி சொல்றீங்க?

ஆர்.கே. செல்வமணி சொல்லியிருக்காரு..

சே..சே.. அவரு செஞ்சா சொல்லிடுவாரு..

இரு அந்த பதிவுல இருக்கிற பின்னூட்டத்தையெல்லாம் படிப்போம்

வளர்மதி இன்ஸ்டண்ட் ஷெர்லோக் ஹோம்ஸ் ஆகிறார்.

சிவராமா.. இங்க பாரு.. இனிமே நாங்க எல்லாம் புனைவு எழுதலாமானு தயக்கமா இருக்குன்னு நர்சிம் சொல்லியிருக்காரு. அவராயிருக்குமோ?

தம்பி அப்படியெல்லாம் பண்ண மாட்டாரே..

காப்பி அடிச்சதுதான் அடிச்சே..அதை ஏன்யா வெளிப்படையா சொன்னே?நாங்க எல்லாம் அப்படியா இருக்கோம்? 400 கதை எழுதியிருகேன்னு வேற சொல்லியிருக்கே.. இன்னும் எத்தனை பேரோட பேரனுங்க கிளம்ப போறானுங்களோ? பேரனுங்களை சாதாரணமா எடை போட கூடாது தெரியுமில்ல? தலைவரே ததுங்கிணத்தோம் போட்டாரு..சரி 400 ம் சுட்டதா?

இல்லை. ஒன்னு, ரெண்டு சொந்தமா எழுதினதுதான்..

.........................................................................................................................................................................

என்றும் இளமை மாறா மார்க்கண்டேய கவி அனுஜன்யா வீடு.

தலைவர் ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டில் சிக்கென்று இருக்கிறார்.

சார் ஆபிஸ் லீவா?

அதையேன் பாஸ் கேக்கறீங்க..ஸ்கூல் யூனிபார்மில் ஆபிசுக்கு வரக்கூடாதுன்னுட்டாங்க.. அதான் போங்கடான்னுட்டேன்..

அப்ப வீட்டுல என்ன பண்றீங்க? போரடிக்குமே !

வீட்டம்மா வருகிறார்கள்..

இவர் கூட முடியலைங்க. இங்க பாருங்க.. பேன் பிளேடையெல்லாம் கழட்டிட்டு ஏதோ எழுதி கிட்டேயிருக்காரு..

அனுஜன்யா.. அது ஒன்னுமில்ல தலைவா.. சும்மா ஒரு கவிதை ..ஹி..ஹி..

முதலில் ஒரு இறக்கையோட பேனை சுத்தி பார்த்தேன். என் பால்யம் நினைவுக்கு வந்தது.

அப்புறம் ரெண்டு இறக்கையோட.. இப்ப என் இளமை நினைவுக்கு வந்தது..

அப்புறம் மூன்று இறக்கைகள். இப்ப..

இப்ப?

அதையேன் கேக்கறீங்க? சம்சார சாகரத்தில் விழுந்தது ஞாபகம் வந்து தொலைச்சுடுச்சு..

அடுத்து செமி ஆட்டோமெட்டிக் வாஷிங்மெஷினை வச்சு ஒரு...

ஐயோ..தலை சுத்துதேன்னு பெரிய குரல் கேட்கிறது..


.........................................................................................................................................................................

9/11 எடுத்த மைக்கேல்மூரை விட பெரிய டாக்குமெண்டரி இயக்குநராக வர வேண்டும் என்று ஆதி சபதம் போட்டிருப்பதாக கேள்விபட்டு அவரை வாழ்த்தப் போனோம்...

ஆதியின் வீடு. வார்னர் பிரதர்ஸீன் அடுத்த பட செட் போலிருந்தது.. பெரிய பலூன்கள் கட்டி தொங்க விட்டிருந்தார்.. கையில் அவரின் கண்ணான கேமரா..

ரெடி.. ஸ்டார்ட் .. ஆதியின் குரல்

கிச்சனிலிருந்து பறக்கும் தட்டுக்கள் வரத்தொடங்கின. அல்போன்ஸ்ராய் பார்த்திருந்தால் அவர் கொள்ளி கண் நிச்சயம் ஆதி மேல் பட்டிருக்கும். சும்மா பறந்து, பறந்து ஷுட் பண்ணி கொண்டிருந்தார்.

ஷாட் இடைவேளை..

இது என்னோட ஆயுதம் ஆவணபடத்தோட அடுத்த கட்ட முயற்சி.. எப்பூடி?

சூப்பர் ஆதி.. யார் ஆர்ட் டைரக்டர்?

வேற யாரு.. ரமாதான்..

என்ன பட்ஜெட்?

3 கிலோ கோதுமை மாவுதான்..2 கிலோ உருளைகிழங்கு

பெரிய பட்ஜெட்தான் போல..

மீண்டும் படபிடிப்பு தொடங்கியது. ஆதி.. இருங்க தண்டோரா.. அடுத்ததா எரிமலை குழம்பு வெடிச்சு பொங்கறா மாதிரி எடுக்கப் போறேன்


ஜீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்....

30 comments:

Cable சங்கர் said...

haa..haa..haa.. super..

கே.என்.சிவராமன் said...

ஹா... ஹா... ஹா...

தொடர்ந்து இதுமாதிரி நல்ல பதிவையும் எழுதுங்க :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்த்திகைப் பாண்டியன் said...

சான்சே இல்ல.. அட்டகாசம்..

//பைத்தியக்காரன் said...
ஹா... ஹா... ஹா...தொடர்ந்து இதுமாதிரி நல்ல பதிவையும் எழுதுங்க :)//

நல்ல பதிவையும்? ஆகா.. இது வேறவா? ஆரம்பிச்சுட்டாங்கையா..:-)))

தராசு said...

அந்த ஆதி மேட்டர் மாத்திரம் கலக்கல் தல.

பறந்து பறந்து படமெடுத்தாலும், குறைந்த பட்ஜெட்லதான் எடுப்பாரு.

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

kalakkal

R.Gopi said...

கலக்கல் தலீவா.........

எப்போவும் போல, இதுவும் கலக்கல் காமெடி....

சித்து said...

கலக்கல் தல

பாலா said...

இப்பல்லாம்... பதிவு போட்டீங்கன்னாலே.. கவுஜ எழுதிடுவீங்களோன்னு.. ஒரே டெர்ரரா இருக்கு.

இதில்.. முதல் பாகம் சூப்பர்! :)

Mahesh said...

நெட்டு ஒர்க் பண்ணலை அது... இதுன்னு சொல்லும்போதெ நினைச்சேன்... எதோ திரிசமன் வேலைதான் நடக்குதுன்னு... :)))

முடியல தல.... :0)))))))))))))

Ashok D said...

//நீங்கள் அவர் கதை ஒன்றை (ஒன்றுதானா? ) களவாடி விட்டதாக //

//என்ன மேடின்னு இருக்கு? ஒருவேளை மாதவனுக்கு எழுதியிருப்பாரோ?மைலாப்பூர் ராயல்ல டீ வாங்கி கொடுத்தா போதுமான்னு கேக்கனும்//


//ஒன்னு, ரெண்டு சொந்தமா எழுதினதுதான்//

:)))))))))))))

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... உடம்பு முழுக்க மூளைங்க உங்களுக்கு..

// இருங்க தண்டோரா.. அடுத்ததா எரிமலை குழம்பு வெடிச்சு பொங்கறா மாதிரி எடுக்கப் போறேன் //

இஃகி, இஃகி...

vasu balaji said...

/இது தண்டோராவின் வேலையாத்தான் இருக்கும். ஏன்னா ! இந்த மாதிரி நயவஞ்சகமான திரிசமம் எல்லாம் அவர்தான் செய்வாரு../

இந்த ஐடியா நல்லாருக்கே. :)). அதிருது

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருக்குண்ணே!

கலக்குங்க!

பிரபாகர்.

செ.சரவணக்குமார் said...

அனுஜன்யா மேட்டர் கலக்கல்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

:)))))))))))))))

Superrrrr..

But I dont know the persons :(

ஜெட்லி... said...

:))கலக்கல்

குசும்பன் said...

//3 கிலோ கோதுமை மாவுதான்..2 கிலோ உருளைகிழங்கு


பெரிய பட்ஜெட்தான் போல..//

ஹா ஹா ஹா ஹா:) ஹைலைட்டே இதுதான்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

வால்பையன் said...

அருமையான கலாய்த்தல்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))

பா.ராஜாராம் said...

ஹா...ஹா..மணிஜி.......

:-))))))

விநாயக முருகன் said...

முதலில் ஒரு இறக்கையோட
பேனை சுத்தி பார்த்தேன்.
என் பால்யம் நினைவுக்கு வந்தது.
அப்புறம் ரெண்டு இறக்கையோட.. இப்ப என்
இளமை நினைவுக்கு வந்தது..

அப்புறம் மூன்று இறக்கைகள்.
இப்ப..
இப்ப?
அதையேன் கேக்கறீங்க?
சம்சார சாகரத்தில் விழுந்தது ஞாபகம் வந்து தொலைச்சுடுச்சு..

ஹா... ஹா... ஹா...

யாத்ரா said...

:)

கலக்கல்

மாலோலன் said...

nalla thamashana pathivu

thiyaa said...

கலக்கல்

பித்தன் said...

நல்ல தாம்லே இருக்கு இந்த பதிவும்.....

மண்குதிரை said...

:-)))

நர்சிம் said...

மிக மிக மிக மிக நல்ல ரசனை தலைவரே.

அனுஜன்யா மேட்டர் தான் டாப்கிளாஸ்.

ஸ்கூல் யூனிஃபார்ம் கலக்கல்.

நல்லா எழுதி இருக்கீங்க.

anujanya said...

யோவ், இன்னிக்கி தான் பார்க்கிறேன். இருக்கட்டும். யூத் மற்றும் கவிஞனாக இருந்தால் எத்தனை பிராப்ளங்கள் !

அனுஜன்யா