சென்ற வாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியது தலைவரின் “மெளனவலி” அறிக்கைதான்.. பல தரப்பாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டது எனலாம்.. சரி மேட்டருக்கு வருவோம்.. தலைவர் அந்த அறிக்கையை வெளியிட்டு விட்டு வீட்டுக்குள் முடங்கி, உண்ணாமல், உறங்காமல் வேதனையை அனுபவித்திருப்பார் என்று நினைத்தால் உங்களுக்கு பூஜ்யம் மார்க்.. அவர் அன்று சென்ற இடம்..கெஸ் பண்ணுங்கள்.. பார்க்கலாம். அதே இடம். போர்பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரேதான்.. மீண்டும் பெண்சிங்கம்.. திருத்தங்கள்..புலி, சிங்கம் என்று தலைவர் ஜங்கிள் ராஜாதான்..
அதற்கு முன் திரு. மு.கவின் “யாரிடம் சொல்லி அழுவது என்ற முல்லைப் பெரியார் தொடர்பான அறிக்கை சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை. பின் வாலி, வைரமுத்து, ஜெகத் இவர்களுடன் ஆற்றாமையை கொட்டினாராம்.
வெயில், எம்டன் மகன், காதல் என்று சில படங்களில் நடிக்க முயற்சித்த “சின்ன தளபதி” பரத்தை பழனி, ஆறுமுகம், திருத்தணி என்று அழைத்து சென்று மொட்டை அடித்து கோவணம் கட்டி விட்டார்கள் நம் இயக்குநர்கள்.. ஜெயா டிவியில் ரசிகன் என்ற நிகழ்ச்சி.. அதில் ஒரு ரசிகர் பரத்திடம் தனக்கு பிடித்தது அனல் பறக்க அவர் போடும் சண்டைகள் என்றார்.. அடப்பாவிகளா?
சமீபத்தில் “உலக கழிப்பறை” தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ் நாட்டில் தொண்ணுறு லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. (ரயில் வரும் போது எந்திரிச்சு நிப்பாங்களே) ஆனால் கலர் டி.வி இல்லாத வீடே இருக்க கூடாது என்று தலைவர் உத்தரவிட்டுள்ளார்..
விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி. சோதிடம்.. தனியார் நிகழ்ச்சி.. அதில் பேசியவரை எங்கோ பார்த்திருக்கிறேன்.. அவர் சொன்னது.. ஜாதகம், கைரேகை எதுவும் இல்லாமல் முனீஸ்வரர் அருளால் முகத்தை பார்த்தே முக்காலமும் தன்னால் சொல்ல முடியும் என்று அள்ளி விட்டு கொண்டிருந்தார்.. எல்லா ஊருக்கும் பிரதி மாதம் விஜயம் உண்டு. முன் அனுமதி பெற வேண்டும். அவர் “ஒயிட்& ஒயிட் .நீல்கண்ட சிவா” ஒக்கா.. மக்கா.. நினைவுக்கு வந்து விட்டது..சில ஆண்டுகளுக்கு முன் விளம்பரம் தொடர்பாக அவரை சந்தித்தேன்.. எனக்கும் ஜோசியம் சொன்னார். பின் கிளம்பும்போது அவர் சொன்னது..
“ஆட்டோ பின்னாடி விளம்பரம் பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தன் பத்தாயிரம் ரூபாயை ஆட்டையை போட்டான்.. அவனை கண்டுபிடிக்க முடியுமா?
வழக்கம் போல் சரக்கு மேட்டர் கொஞ்சம்..நம்ம ஊருக்கு பொருந்துமான்னு தெரியலை..ஸ்பெயினில் கண்டு பிடித்திருக்கிறார்கள். தினம் சரக்கு அடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு வர வாய்ப்பு கம்மியாம்..
போன இடைத்தேர்தலில் ஐயோ, ஐயோன்னு கூப்பாடு போட்டவங்க.. இந்த வாட்டி ஐயா.. ஜாலின்னு கூவப் போறாங்க... பின்ன, அம்மா அறிவிச்சுட்டாங்க..நாங்களும் ஆட்டத்துக்கு வர்றோம்னு.. அப்புறம் என்ன? கம்மல்,கறிசோறு, காசு,பணம் எல்லாம் உண்டு மக்களே..பா.ம.க ஐயாதான் முச்சந்தியில் நிக்கிறாரு. விட்டாரு பாருங்க ஒரு அறிக்கை. அதாவது இந்த எலெக்ஷன்ல பணம் கொடுத்து ஓட்டு வாங்க மாட்டோம்னு எல்லா கட்சியும் உறுதிமொழி கொடுத்தா, அவரும் ஆட்டத்துக்கு வருவாராம். தோட்டத்திலேயே (தைலாபுரம்) வெட்டியா இருக்க வேண்டியதுதான்..
மூட நம்பிக்கையை வேரறுக்க விடிவெள்ளியாய் வந்த கழக ஆட்சியில் நடக்கும் கோமாளித்தனங்களில் இது லேட்டஸ்ட். சிவகாசி ஊர் பேர்ல ஆங்கிலத்துல ஒரு “a ” சேர்க்க போறாங்களாம்.. எண் கணிதப்படி இதை செஞ்சா, ஊருக்கு விமோசனம் வந்துடுமாம்..அரசுக்கு பரிந்துரை செஞ்சிருக்காங்க..ஆற்காட்டார் கூட சாமிங்கிறதை, சுவாமின்னு மாத்திகிட்டார். அப்புறம்தான் அவர் பியூஸை புடுங்கினாங்க.
சிறுகதை பட்டறையில் கொடுத்த ஒரு நூலில் படித்தது. “சிறுகதை பட்டறைகள் நடத்துவதன் மூலம் கதை எழுதும் திறனை வளர்க்க முடியாது. எழுதவே தெரியாதவன் பட்டறையில் கலந்து கொண்டால் ” ஏ.. அப்பா.. இது இவ்வளவு கஷ்டமா? என்று அவனாகவே ஓடி விடுவான். வேண்டுமென்றால் ஓரளவுக்கு எழுதறவன் கொஞ்சம் தேறுவான்” நம்ம எந்த ரகம்னு நமக்கே தெரியும்.. ரம்மியாட்டத்தில் சொல்வார்கள். ஒன்னும் தெரியலையா? ரெண்டை போடுன்னு.. போட்டாச்சு..
அண்ணன் உண்மைத்தமிழன் போன் செய்தார். அண்ணே(என்னயத்தான்) ஏழரை சனியன் வாட்டுது. திருநள்ளாரு போயிட்டு வந்தேன். அந்த வரலாறை ஒரு ஐஞ்சு பாகமா எழுதலான்னு இருக்கேன்னாரு. (சொல்லிட்டேன். பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பா..)
அப்புறம் சொன்னார்.. என்ன.. ரெண்டாயிரம் ரூபா செலவாயிடுச்சு..
நான் சொன்னது.. “சனியன்” தொலையட்டும். விடுங்க.
டிஸ்கி கவுஜை :
செய்தவன்
செய்ததை
சொன்னதிலும்
செய்யப்பட்டது
செய்யபட்டதை
சொல்வதிலும்
நிச்சயம் மிகைப்படுத்தல்
இருக்கிறது..
எனவே please
சொன்னதை செய்யுங்கள்
செய்வதை சொல்லுங்கள்!!
31 comments:
என்ன கொடுமை? தமிழ் மணத்தில் தெரியவில்லை..உள்நாட்டு சதி?
//“ஆட்டோ பின்னாடி விளம்பரம் பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தன் பத்தாயிரம் ரூபாயை ஆட்டையை போட்டான்.. அவனை கண்டுபிடிக்க முடியுமா? //
சிரிச்சு, சிரிச்சு, ச்சு, ச்சு, முடியலண்ணே.
//“சனியன்” தொலையட்டும். விடுங்க.//
நச்.
கவுஜ ..... அது என்னண்ணே மறுபடியும் என்டர் தட்டி விட்டு எழுதுனதா.....
///ஆனால் கலர் டி.வி இல்லாத வீடே இருக்க கூடாது என்று தலைவர் உத்தரவிட்டுள்ளார்..///
நச்.
கலக்கல் சார்.
///அதற்கு முன் திரு. மு.கவின் “யாரிடம் சொல்லி அழுவது என்ற முல்லைப் பெரியார் தொடர்பான அறிக்கை சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை. பின் வாலி, வைரமுத்து, ஜெகத் இவர்களுடன் ஆற்றாமையை கொட்டினாராம்.///
இனிமேல் அவரு பருப்புல்லாம் வேகாது.
நல்லா இருக்கு...
[[[வழக்கம் போல் சரக்கு மேட்டர் கொஞ்சம்.. நம்ம ஊருக்கு பொருந்துமான்னு தெரியலை.. ஸ்பெயினில் கண்டு பிடித்திருக்கிறார்கள். தினம் சரக்கு அடிப்பவர்களுக்கு இதய பாதிப்பு வர வாய்ப்பு கம்மியாம்..]]]
பொய்யான தகவல்.. தினம் தவறாமல் அடிப்பவர்களுக்குத்தான் கட்டாயம் இதய பாதிப்பு வரும்..!
இப்படிச் சொல்லி நியாயப்படுத்த பார்க்காதீங்க தண்டோராஜி..!
[[[அண்ணன் உண்மைத்தமிழன் போன் செய்தார். அண்ணே (என்னயத்தான்) ஏழரை சனியன் வாட்டுது. திருநள்ளாரு போயிட்டு வந்தேன். அந்த வரலாறை ஒரு ஐஞ்சு பாகமா எழுதலான்னு இருக்கேன்னாரு. (சொல்லிட்டேன். பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பா..)
அப்புறம் சொன்னார்.. என்ன.. ரெண்டாயிரம் ரூபா செலவாயிடுச்சு..
நான் சொன்னது.. “சனியன்” தொலையட்டும். விடுங்க.]]]
அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..!
அடி பின்றீங்க. ஸ்பெயின் மேட்டர் ஒயின்ல எழுதியிருப்பான் நம்பாதீங்க. :)). டிஸ்கி சூப்பர். நைஜீரியா அண்ணன் உங்கள பார்த்து எழுதறேன்னா சும்மாவா
அய்யோ... ஆபீஸ்ல படிச்சு சிரிச்சு.... முடியல....
//தினம் சரக்கு அடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு வர வாய்ப்பு கம்மியாம்..
//
இதய பாதிப்பு "மட்டும்" கம்மி... டிஸ்கியையும் சேத்து படிக்கணும்.
ஆமா... அதெப்படி?? கவிதைன்னு சொல்லிட்டா போதும். தானா எண்டர் கீல ஒரு ஆட்டொமேடிக்கா தட்டு விழுந்துக்கிட்டே இருக்குமா??
//அப்புறம்தான் அவர் பியூஸை புடுங்கினாங்க.//
அச்சிச்சோ அப்புறம் இப்ப உட்காந்துக்கிட்டுதான் உச்சா கோயிங்கா????:))
//ஒரு ஐஞ்சு பாகமா எழுதலான்னு இருக்கேன்னாரு. (சொல்லிட்டேன். பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பா..)//
அப்படியே பேசி அவர் மனசை மாத்தி எழுதவிடாம செய்வதை விட்டுப்புட்டு, இங்க வந்து வார்னிங்கா கொடுக்குறீரு?!!!
திரும்ப ஒரு போன் போட்டு அண்ணே சனியை பத்தி எழுதினா திரும்ப சனி விளையாட ஆரம்பிச்சுடுமாம் என்று ஒரு பிட்டை சைஸா போட்டு எங்களை காப்பாத்துங்க!
அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..!
//
அதுக்குப் பேர் இந்த டிவியிலல்லாம் சொல்றாங்களே.. அதே மாதிரி, மெகாத்தொடர்தானே அண்ணே..!!
//தானா எண்டர் கீல ஒரு ஆட்டொமேடிக்கா தட்டு விழுந்துக்கிட்டே இருக்குமா??//
அடுத்த வாரம் மக்கள் டீவியில் கவிதை செய்வது எப்படியில் அண்ணாச்சி பேட்டி வருது, அப்பொழுது இந்த கேள்விக்கு செயல்முறையோடு விளக்கம் கொடுப்பார்!
//ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..!
//
அஞ்சு பழய பிகர் அண்ணாச்சி, அது பாகத்தை ஏன் பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க? விடுங்க!
//தியேட்டரேதான்.. மீண்டும் பெண்சிங்கம்.. திருத்தங்கள்..புலி, சிங்கம் என்று தலைவர் ஜங்கிள் ராஜாதான்..//
ஹா...ஹா...ஹா... சென்சார் போர்டு மெம்பர்களை விட அதிக படம் பார்த்த முதலமைச்சர்னு ஏதாவது “கின்னஸ் ரெகார்ட்” பண்ண போறாரோ என்னவோ?? இப்போ சமீபத்துல அவிய்ங்க குடும்பம் போயிட்டு வந்த “சிதம்பரம் கோவில் நடராஜர்”க்கு தான் வெளிச்சம்...
//“யாரிடம் சொல்லி அழுவது என்ற முல்லைப் பெரியார் தொடர்பான அறிக்கை சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை. பின் வாலி, வைரமுத்து, ஜெகத் இவர்களுடன் ஆற்றாமையை கொட்டினாராம்.//
அடடா... ஜல்லி கோஷ்டி...
//வெயில், எம்டன் மகன், காதல் என்று சில படங்களில் நடிக்க முயற்சித்த “சின்ன தளபதி” பரத்தை பழனி, ஆறுமுகம், திருத்தணி என்று அழைத்து சென்று மொட்டை அடித்து கோவணம் கட்டி விட்டார்கள் நம் இயக்குநர்கள்.. ஜெயா டிவியில் ரசிகன் என்ற நிகழ்ச்சி.. அதில் ஒரு ரசிகர் பரத்திடம் தனக்கு பிடித்தது அனல் பறக்க அவர் போடும் சண்டைகள் என்றார்.. அடப்பாவிகளா?//
தலீவா... தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு இன்னும் இருக்கு....
//தமிழ் நாட்டில் தொண்ணுறு லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. (ரயில் வரும் போது எந்திரிச்சு நிப்பாங்களே) ஆனால் கலர் டி.வி இல்லாத வீடே இருக்க கூடாது என்று தலைவர் உத்தரவிட்டுள்ளார்..//
ஆமாம்... அது போகாமல் கூட இரு... இந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த “மானாட மயிலாட” பார்க்காமல் இருக்காதே...இதுதானே “தல”யின் தாரக மந்திரம்...!!??
//எல்லா ஊருக்கும் பிரதி மாதம் விஜயம் உண்டு. முன் அனுமதி பெற வேண்டும். அவர் “ஒயிட்& ஒயிட் .நீல்கண்ட சிவா” ஒக்கா.. மக்கா.. நினைவுக்கு வந்து விட்டது..சில ஆண்டுகளுக்கு முன் விளம்பரம் தொடர்பாக அவரை சந்தித்தேன்.. எனக்கும் ஜோசியம் சொன்னார். பின் கிளம்பும்போது அவர் சொன்னது..
“ஆட்டோ பின்னாடி விளம்பரம் பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தன் பத்தாயிரம் ரூபாயை ஆட்டையை போட்டான்.. அவனை கண்டுபிடிக்க முடியுமா? //
தலைவா... நீங்களுமா அவரிடம்??? ஜோசியக்காரரே நீங்களுமா தண்டோராவிடம்.....அவ்வ்வ்வ்வ்??
//ஆற்காட்டார் கூட சாமிங்கிறதை, சுவாமின்னு மாத்திகிட்டார். அப்புறம்தான் அவர் பியூஸை புடுங்கினாங்க.//
ஹா...ஹா...ஹா...ஜூப்பரு......
//டிஸ்கி கவுஜை :
செய்தவன்
செய்ததை
சொன்னதிலும்
செய்யப்பட்டது
செய்யபட்டதை
சொல்வதிலும்
நிச்சயம் மிகைப்படுத்தல்
இருக்கிறது..
எனவே please
சொன்னதை செய்யுங்கள்
செய்வதை சொல்லுங்கள்!!//
டிஸ்கி கவுஜை... பட்டையை கெளப்புது.......
மானிட்டர்.. வழக்கம் போல் நல்லாயிருந்துச்சு...
உ.த. அண்ணே நீங்க எழுதுங்க அண்ணே...
வேண்டாம்னா கேட்கவா போறீங்க..
உ.த அண்ணே, உங்களுக்காக, தமிழிஷ், தமிழ் மணத்தில் நிச்சயம் ஓட்ட்டு போட்டுடறேன் அண்ணே.
உங்களைப் பார்த்து, பின் பற்றி, அடியொற்றி நானும் கவிதை எழுத முயற்சி பண்ணியிருக்கேன்... அதை படிச்சுட்டு பின்னூட்டாம விட்டா எப்பூடி?
சரக்கடிச்சா.. இதய பாதிப்பு மட்டும் வராது.. ஆனால் லீவர் ஆட்டம் காண ஆரம்பிச்சுடும் ஞாபகம் இருக்கட்டும்.
/*ஆதிமூலகிருஷ்ணன் said...
/*அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..!
//
அதுக்குப் பேர் இந்த டிவியிலல்லாம் சொல்றாங்களே.. அதே மாதிரி, மெகாத்தொடர்தானே அண்ணே..!!
குசும்பன் said...
திரும்ப ஒரு போன் போட்டு அண்ணே சனியை பத்தி எழுதினா திரும்ப சனி விளையாட ஆரம்பிச்சுடுமாம் என்று ஒரு பிட்டை சைஸா போட்டு எங்களை காப்பாத்துங்க!*/
அதென்னா... ரெண்டு பெரும் அண்ணனை இப்படி கரிச்சு கொட்டுறீங்க....
என்னை விட்ட சனி உங்களை பிடிக்க போகுதுடா மக்கா.... ன்னு... பக்காவா எச்சரிக்குராறு.... அவரை போயி...
//“ஆட்டோ பின்னாடி விளம்பரம் பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தன் பத்தாயிரம் ரூபாயை ஆட்டையை போட்டான்.. அவனை கண்டுபிடிக்க முடியுமா?
//
கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லிடுங்க
// சிவகாசி ஊர் பேர்ல ஆங்கிலத்துல ஒரு “கே” சேர்க்க போறாங்களாம்.. //
sivakasi என்பதை sivakaasi என்று ஒரு "a" சேர்க்கப் போவதாக அல்லவே நான் கேள்விப் பட்டேன்?
//அறிக்கையை வெளியிட்டு விட்டு வீட்டுக்குள் முடங்கி, உண்ணாமல், உறங்காமல் வேதனையை அனுபவித்திருப்பார் என்று நினைத்தால் உங்களுக்கு பூஜ்யம் மார்க்..//
அடிமட்ட உடம்பிறப்புகளுக்கே தெரியும்ணே....அவரு என்ன பண்ணுவார்னு.
ஒரே அரசியல் நெடியா இருக்கே....
தானத்தலைவர கலாய்க்காம பதிவு போடமுடியாத உங்களால (நான் உ.த. அண்ணன சொன்னேங்க)
நிறைவு
நச்!
'அஞ்சு' பாகம் குறித்த குசும்பனின் கமெண்ட்... அக்மார்க் ரகம்! :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
/// சிவகாசி ஊர் பேர்ல ஆங்கிலத்துல ஒரு “கே” சேர்க்க போறாங்களாம்.. //
sivakasi என்பதை sivakaasi என்று ஒரு "a" சேர்க்கப் போவதாக அல்லவே நான் கேள்விப் பட்டேன்?//
சுட்டியமைக்கு நன்றி..திருத்தி விடுகிறேன்..(தெரிஞ்சே பண்ண தப்பு)
மானிட்டர் சரக்கு சூப்பர்...
இந்த வாட்டி மப்பு கொஞ்சம் லைட்டாத்தான் இருக்கு தலைவரே..
கேபிள் சஙக்ர்
ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிகாட்டுவதில் தண்டோராவில் சத்தம் அதிகமா...ச்சும்மா நச்சுன்னு இருக்கு.
மானிட்டரின் எல்லா பக்கமும் செம கலக்கல்.
குசும்பனின் பின்னூ...அடேங்கப்பா...:-)))
வாழ்த்துக்கள்.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நண்பர்களுக்கு நன்றிகள்
தல கலக்கல் Mixing..:)
//.. மீண்டும் பெண்சிங்கம்.. திருத்தங்கள்..புலி, சிங்கம் என்று தலைவர் ஜங்கிள் ராஜாதான்.. //
அவரு பாவம் இந்த தள்ளாத(யார தள்ளாதனு கேக்காதிங்க..) வயசுல எவ்ளோ கஷ்டப்படுறாரு, அவர போய் குறை சொல்லிட்டே இருக்கிங்களே..
//அதை விட்டுட்டேன்.. ஆனா அஞ்சு பாகத்தை விடமாட்டேன்..//
நீ எழுது அண்ணே!! புடிச்ச சனியன் எங்கள விடவா போகுது!! :)
Post a Comment