Saturday, November 14, 2009

தலைப்பில்லாமல்......


அந்தரத்தில் உறைந்தது
ஐசக்கின் ரத்தம்.
ஆப்பிள் நறுக்கும் போது....
விரலை வெட்டிக் கொண்டான்
நியூட்டன்..


மூச்சடக்கி
மூழ்கிய போதும்
நினைவுக்கு வர
மறுக்கிறது பாஸ்கல்
விதி
பெருங்காமத்தில்....


சீந்துவாரில்லை
திருவிழாவில்
தொலைந்து போன
சிறுவனாய் .....

வாய் விட்டு கதறினாலும்
உடலில் மட்டுமே
நடுக்கம்..
வார்த்தைதான்
வரவில்லை

பூட்டிய வீட்டுக்குள்
அனாதையாய்
சைலண்ட் மோடில்
கேட்பாரற்று நான்..






16 comments:

Cable சங்கர் said...

உங்களூடய இந்த சர்காசம்தான் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.. தலைவரே.. பதிவர் சந்திப்புக்கு வந்திருங்க..

கே.என்.சிவராமன் said...

தலைப்பில்லாமல் கவிதை போலவே, பின்னூட்டமில்லாமல் பின்னூட்டம் :-)

நல்லா இருக்கு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பாலா said...

ஒன்னுமே.. புரியலே.... உலகத்திலே.....

ஜெட்லி... said...

பீலிங்க்ஸ் தலைவரே...

வால்பையன் said...

அடடே
ஆச்சர்ய குறி!

vasu balaji said...

/வீட்டுக்குள்அனாதையாய்சைலண்ட் மோடில்கேட்பாரற்று நான்../

இன்னாது இது. ஆனாலும் கவிதை பிரமாதம்.

Ashok D said...

பிரபல கவிஞர் D.R.Ashokவுடைய பாதிப்பு கவிதையின் ஊடே தெரிகிறதே :P

நல்லாருக்கு ஜி.

பிரபாகர் said...

தலைப்பில்லாமல்... நிறைய விஷயத்தை அழகாய் உங்கள் பாணியில், கவிதையாய். அருமை அண்ணா... ஓட்டுக்கள போட்டாச்சு.

பிரபாகர்.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு..! செல்லின் கதறல்.. =)

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... தூள் கிளப்பிட்டீங்க...

ஹேமா said...

தலைப்பில்லாமல் ஒரு கவிதை.
உங்களால் மட்டுமே முடிகிறது.

பித்தன் said...

anne "தலைப்பில்லாமல் கவிதை" ithuve oru hi-ku kalakkunga

vinthaimanithan said...

எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க...

அத்திரி said...

அண்ணே நல்லாத்தான இருந்தீங்க

velji said...

கவிதைகள் நல்லாயிருக்கு.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நல்லாருக்கு