Thursday, November 26, 2009

அர்த்தமில்லாத கதை----4


சிதம்பரம் சம்சாரமா ?

ஆமாங்க.

சொன்னதையெல்லாம் நினைப்பிருக்கு இல்ல?

இருக்குங்க..

அந்த விருதாசலத்து ஆளும், நாச்சியாரும் கூட்டு சேரவே கூடாது. நீதான் பொறுப்பு..

தெரியுங்க.. நான் சொல்லித்தானே நாச்சியாரம்மா அந்தாளை குடிகாரன்னு தூத்தினாங்க.. நான் பாத்துக்கறேன்

அந்த முட்டை கண்ணன் ரெண்டு பேரையும் சேர்க்க ரொம்ப மெனக்கெடறான் பாத்து..

நீங்க கவலையை விடுங்க ஐயா.. என் கடையில எவ்வளவு கொள்முதல் பண்றீங்க.. நன்றி மறப்பேனா?

அது மட்டுமில்ல.. பஞ்சாயத்துல உன் மேல எவ்வளவு பிராது இருக்கு. நாங்க கண்டுக்கிறதே இல்லை.

தெரியுங்கய்யா.. உடம்பும், உயிரும்தான் இங்க.. விசுவாசத்தை அங்கதானே வச்சிருக்கேன்

என்ன வரதா? திருவிழா நெருங்கிடுச்சு. என்ன பண்றது?

வரதன் கையிலிருந்த சுத்தியை கீழே வைத்தவாறு அதான் எனக்கும் புரியலை.. நாச்சியாரம்மாவோட இனி கஷ்டம்தான்.. உங்க நிலைமை என்ன?

அறிவாளை சாணம் பிடித்து கொண்டிருந்த பாண்டி.. ஒன்னும் தெரியலை.. அறுவா வேற மழுங்கி போச்சுது.. திருவிழால கலந்துக்கலை. அம்புட்டுதான் ஒரு பய உண்டியல்ல சல்லிக்காசு போட மாட்டான்..

ஒருக்கா ஐயா கிட்ட பேசி பார்த்தா என்ன?

அட போய்யா.. அந்தாளுக்கு நம்ம பவிசு தெரிஞ்சு போச்சு.. சீண்டகூட மாட்டாரு..பேசாம இந்த வாட்டியும் நம்ம தனியா திருவிழாக்கு போனா என்ன?

அட போப்பா.. பொண்சாதி, புள்ளைங்க கூட வரமாட்டாங்க... சரி .. விதி விட்ட வழி.. பார்ப்போம்..

என்னம்மா இது..சோத்துல சுத்தமா உப்பை காணோம்?

தம்பிதான் சேர்க்க வேணாம்னு சொல்லிடுச்சு.. இந்த ரோஷத்தையெல்லாம் கொஞ்ச நாளைக்கு தள்ளி வைங்க.. வீராப்பா தங்கச்சி கிட்ட மொறைச்சுகிட்டீங்க..இப்ப திருவிழா வேற .. உங்க அண்ணன் கால்லயாச்சும் விழுந்து எந்திரிக்க வேணாமா.. அதான்..

தம்பி எங்க?

ம்ம்..நைட்டுக்கு அடுப்பெரிக்க வேணாமா? அதான் காட்டுக்கு சுள்ளி உடைக்க அனுப்பியிருக்கேன்.

19 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அறிவாளை சாணம் பிடித்து கொண்டிருந்த பாண்டி.. ஒன்னும் தெரியலை.. அறுவா வேற மழுங்கி போச்சுது.. திருவிழால கலந்துக்கலை//

ஆமா க‌ல‌ந்துட்டாலும் .......
போய் புள்ள‌ குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்க‌ப்பா

ஜெட்லி... said...

அர்த்தம் இல்ல இல்லன்னு... போட்டு வறுத்து எடுக்குரிங்க....

வால்பையன் said...

ரெண்டு நாள்ல தெரியும் சுள்ளி பொறுக்க போனவரு யார் காலுக்கு அடியில கிடக்குறாருன்னு!

Ashok D said...

கொஞ்சம் புரிந்தது.. சந்தோஷம்

vasu balaji said...

இருக்கிற குழப்பத்துல இப்படியெல்லாமா வெறுப்பேத்தறது.;))

Cable சங்கர் said...

அர்த்தமில்லாம எழுதறதா சொல்லிட்டு அர்த்ததோட எழுதறதுதான் உங்க ஸ்டைலா..

அகல்விளக்கு said...

சுள்ளி பொறுக்கப்போனவரு யார் கால்ல கிடக்கப்போறாரோ ?

அதுக்குள்ள அண்ணனைச் சொல்றாரு.

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல்ல சுத்தமா ஒண்ணுமே புரியல தல.. அப்புறமா லேபிள படிச்சுட்டு மறுபடியும் படிச்சா.. அடங்கொக்கமக்கா.. எம்புட்டு வெவரமா இருக்கீங்க..:-))))

butterfly Surya said...

அடுத்த அர்த்தமில்லாத கதை எப்போ..??

ஆனாலும் இந்த தடவை காமெடி டிராக் ரொம்ப இல்லையே..?? ஏன்..??

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

தமிழ்க்குடிதாங்கியை இப்படி நீங்கள் தொடர்ந்து தாக்குவதன் காரணம் என்னவோ..?

வரதராஜலு .பூ said...

கதை புரியுது

பெசொவி said...

அண்ணே, கலக்குங்க!
(அந்த சிதம்பரம் சம்சாரமும் முட்டைக் கண்ணனும் தான் யாருன்னு தெரியல)

மணிஜி said...

/அண்ணே, கலக்குங்க!
(அந்த சிதம்பரம் சம்சாரமும் முட்டைக் கண்ணனும் தான் யாருன்னு தெரியல)//

சசிகலா நடராஜன்.. சோ..

Mahesh said...

என்னவோ போங்க... மெட்ராஸ்ல ஆட்டோ ஜாஸ்தி... உடம்பு பத்திரம்...

Thamira said...

நான் உண்மையில் சீரியஸாக சொல்கிறேன் அண்ணே. எனக்கு ஒண்ணும் புரியவில்லை. ஒரு வேளை இது தொடரா.? இரண்டாவது முறை பொறுமையாக படிக்க எனக்கு நேரமில்லை.

ஏன் இப்படி உரையையும், வசனங்களையும் கமா, புல்ஸ்டாப், கொட்டேஷன் எதுவும் இல்லாமல் எழுதுறீங்கன்னு புரியவில்லை.

Unknown said...

திருவிழாவுக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கே(இருக்குதுங்களா??)..

cheena (சீனா) said...

புரியல - மொத மூணையும் மொதல்ல படிச்சிட்டு அப்பாலிக்கா இங்கிட்டு வாரேன்

நல்வாழ்த்துகள் தண்டோரா

Unknown said...

I visit your blogspot very eagerly, just for your meaningless stories.

Great job, I like the flow as well.

Sabarinathan Arthanari said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

முதல்ல சுத்தமா ஒண்ணுமே புரியல தல.. அப்புறமா லேபிள படிச்சுட்டு மறுபடியும் படிச்சா.. அடங்கொக்கமக்கா.. எம்புட்டு வெவரமா இருக்கீங்க..:-))))//

Super