செத்து..செத்து..விளையாடலாம் ..வர்றீங்களா....
இருக்கும் வரை வரப் போவதில்லை..வந்தபின் நாம் இருக்கப் போவதில்லை...மரணம்....நிச்சயம் என்று தெரிந்தாலும் நிணைத்து பார்க்க மனம் விரும்புவதில்லை.அடுத்த நொடியில் கூட சம்பவிக்கலாம்....சதம் கூட அடிக்கலாம்..அதற்குள் வாழ்க்கையை முழுசாய் வாழ்ந்து விட முடியுமா? அடுத்த வீட்டில் நிகழ்ந்தால் செய்தி..நம் வீட்டில் நடந்தால் துக்கம்...
நாம் இறந்த பின்னர் எத்தனை பேர் உண்மையில் அழுவார்..எத்தனை பேர் கூலிக்கு மாரடிப்பார்..காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ.. கவியரசர் நிதர்சனமாய் எழுதி விட்டுத்தான் போயிருக்கிறார்...எல்லோருடைய வாழ்க்கையிலும் யாரோ ஒருவரின் மரணம் எதாவது ஒரு செய்தியை விட்டு விட்டுத்தான் போகிறது..நண்பன்...நெருங்கிய உறவினர்..ஆனாலும் அதையே நாம் நினைத்து கொண்டிருப்பதில்லை.. கால ஓட்டத்தில் இறந்த தேதி கூட மறந்து போகிறது....சரி..நாம் இறக்கும் நாள் தெரிந்தால் எப்படியிருக்கும்....
அருப்புக்கோட்டை பேருந்து பணிமனை அருகில் ஒரு கடையில் மட்டன் சுக்கா மிக நன்றாக இருக்கும். ஒரு முறை சாப்பிட்ட உடன் இதற்காகவே சென்னையிலிருந்து மீண்டும் வர வேண்டும் என்று நினைத்தேனே. அதை சாப்பிட தோன்றுமோ? இறுதி வரை அவளுக்கு அஞ்சல் செய்யப் படாத அந்த கடிதத்தை நேரிலேயே போய் கொடுத்து விட்டு வந்து விட தோன்றுமோ?... கவிதைப் போட்டி முடிவுகளை பார்த்து விட்டு போக முடியுமா? சோகத்தில் பெரிது"புத்திர சோகம்"என்பார்களே... பெற்றவர் இருக்க நாம் முன் போனால் அந்த அக்னியின் வீச்சு அடி வயிற்றில் எப்படி இருக்கும் ?
நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்பதை ஒரு வலைத் தளம் சொல்கிறதாம்..அது மட்டுமல்ல.. நாம் இறக்கும் போது அல்லது இறந்த பின் சிலருக்கு சில விஷயங்களை சொல்லி விட வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் அந்த வலைத் தளம் உதவுகிறது. உதாரணமாக சொத்து விவரங்கள்(எனக்கு அடியில் கண்ட சொத்துக்கள்தான் ???)
பிள்ளைகளுக்கான அறிவுரைகள் (ம்ம்ம்..இருக்கும் போதே கிழிஞ்சது..செத்த பின்னாடி கேட்டுட்டுதான் மறு வேலை..)
யாரை நம்புவது.. அம்மாவை யார் பார்த்துக் கொள்வது . இதையெல்லாம் அந்த தளத்தில் நீங்கள் பதிவு செய்து வைத்து விடலாமாம். அந்த தளத்தில் ஒரு அம்சம் நம் ஆயூள் எத்தனை நாள் என்று கணக்கு போட்டு அது சொல்வதுதான். பெயர்,வயது,பால் (செத்த பின் ஊத்தறது இல்லிங்க..)எடை,உயரம்,மது,புகை உண்டா? என்று கேட்டு பின் குத்து மதிப்பாக ஒரு கணக்கு காட்டுகிறது. (நிமிடம்,நொடி உட்பட)
தளத்தில் பதிவு செய்தவுடன் நம் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் வரும்.அதில் நமக்கு ஒதுக்கப்பட்ட பக்கத்தில் நம் எண்ணங்களை பதிந்து வைக்கலாம். நாம் இறந்த பின்னர் அவை வெளியிடப்படும்..அது மட்டுமல்ல ..நமக்கு பிடித்த பாடல்களையும் பதியலாம்(ஆறு மனமே ஆறு/ சட்டி சுட்டதடா/ போனால் போகட்டும் போடா/ கனவு காணும் வாழ்க்கை யாவும்/ வாழ்வே மாயம்..)
சரி..நாம் இறந்தது எப்படி அந்த தளத்திற்கு தெரியும்? நாம் நமக்கு நம்பிக்கையான??நாலு நபர்களின் (நாலு பேருக்கு நன்றி..) தகவல்களை பதிய வேண்டுமாம். அவர்கள் இன்பார்மர்கள் என்று அழைக்கப் படுவார்கள். அவர்களுக்கு நம் லிங்கும் பாஸ்வேர்டும் தெரிய வேண்டும். நாம் இறந்த பின் அவர்கள் தளத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். 12 வகையான சோதனைகளை மேற்கொண்டு இறப்பு உறுதி செய்ய பட்ட உடன் 18 ம் நாள் (அதாவது கருமாதி முடிந்த பின்னாடி) நம் தகவல்கள் உலகிற்கு காட்டப்படுமாம். அப்பா ..கண்ணை கட்டிடுச்சுப்பா..(அப்பா உண்மைத் தமிழா..எப்படிதான் வளைச்சு வளைச்சு)
நம்ம எல்லாம் தமிழ் இல்லியா? சாவை பத்தி தெரிய..info@mellogam.out/admin@emaa.in க்கு ஒரு எ(எருமை) மெயில் அனுப்புங்க.. இல்ல http://www.farawayfish.com/Main.php?do=Welcome
ஆயூஷ்மான் பவ...... நீடூடி வாழ்க...
பின் குறிப்பு: யாரையாவது திட்டி ஒரு பதிவு கூட போடலாம்.. இறப்புக்குப் பின் வெளியிட சொல்லலாம்...கரப்பான் பூச்சி,எலி பாஷாணம் சாப்பிட்டு இறக்க விரும்புபவர்கள் கவனிக்கவும்..

15 comments:
இது ஒரு மறு பிறவி
\\அடுத்த வீட்டில் நிகழ்ந்தால் செய்தி..நம் வீட்டில் நடந்தால் துக்கம்..\\
இதைத்தான் இந்நூற்றாண்டு அறிஞரொருவர், நமக்கு வந்தால் ரத்தம்..அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி ஜூஸு என்றார்.
[[[கவிதைப் போட்டி முடிவுகளை பார்த்து விட்டு போக முடியுமா?]]
இங்கதான் தலைவரே நீங்க நிக்குறீங்க..?
//உதாரணமாக சொத்து விவரங்கள்(எனக்கு அடியில் கண்ட சொத்துக்கள்தான் ???)//
கண்டவர் விண்டிலர். ஆமாம் E.C. இருக்கா:))
//http://www.farawayfish.com/Main.php?do=Welcome
//
எல்லாம் ஜோசியம் பாக்குறாப்புலதான். (ஹி...ஹி...நான் போய் பார்த்தேன், இன்னும் 38 வருஷம் உயிரோட இருப்பேனாம்)
"சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்" அப்படின்னு வேற சொல்லியிருக்காங்க.
அண்ணே மட்டன் சுக்கா ம்ம்ம்
ஆனா இந்தக் கவித போட்டிய விட மாட்டேங்குறீங்களே
16 வயசுல காதலிச்சதுதான் அதுக்குன்னு 80 வயசுல அதே வேகம் இருக்குமா கல்யாணம் பண்ணிக்க
அது ஆறிபோச்சுண்ணே அது உரையாடலோட உயில் மாதிரி ஆகிப் போச்சுண்ணே :)
ஏ மனமே
கடவுள் இஷ்டப் படியே
எல்லாம் நடக்கும்.
அஞ்சாதே
சும்மா இரு.
--ரமண மகரிஷி.
அருப்புக் கோட்டை மட்டன் சுக்கா மேலிடத்தில் கிடைக்குமா மகரிஷி? :-)
ம்க்கும்... இவுக இடுகை நமக்கு புரிஞ்சிட்டாலும்... சஞ்சய்காந்தி ஹெல்ப் ப்ளீஸ்...
சாவடிக்கிறீங்களே...
//வானம்பாடிகள் said...
//உதாரணமாக சொத்து விவரங்கள்(எனக்கு அடியில் கண்ட சொத்துக்கள்தான் ???)//
கண்டவர் விண்டிலர். ஆமாம் E.C. இருக்கா:))//
எப்படி..எப்படி..எப்படி பாலா இப்படியெல்லாம் :))))
எழவு தீர மாடேங்குதே!!
:)) டிஸ்கி: no offenses meant (இது வேற ஒரு எழவாப் போச்சு)
உரையாடலையும்,கலைஞரையும்,
மானிட்டரையும் மறக்கமாட்டீகளாண்ணே.. நம்ம ‘மேஜிக் மொமட்ஸ்’ சாப்டுவோம்..கூலா இருங்கண்ணே.
ரைட்டு!
http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html
இந்த இடுகைக்கு உங்க பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி
Post a Comment