Wednesday, June 2, 2010

சாரு நிவேதிதா மன்னிப்பு கேட்கிறார்



மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன்.

இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது. இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி. இதை அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.

கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.

என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயே நண்பர்கள் என்னை ட்யூப் லைட் என்பார்கள்.

நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான். அதை இயக்குபவர் ஆண்டனி.

அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து விழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள் என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின் பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக வருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன். விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியே புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான் என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின் பார்ட்னரா? எனக்கும் அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது?

ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள். இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள். பவா ஒரு கம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார்.

ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து கொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள். என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிக வெகுளியான ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான் நம்புவேன். அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன்.

இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யா வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால் ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும் 60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச் சாமியார்கள் ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக் கொல்லவில்லையே?

தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம். அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில் நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியை குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின் பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக, நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா? சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை கிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய் திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப் பற்களைக் காட்டுவார்கள்.

மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும் பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம். பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான் குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை.

ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.

(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்)

44 comments:

பாலா said...

ஒண்ணு....!!!

பாலா said...

அண்ணே.. தலைப்பு வில்லங்கமாயிருக்கே?

எதுனா.. இன்ஸைட் கோல்? :)

மணிஜி said...

தலைப்பில் எந்த உள்குத்தும் இல்லை

மணிஜி said...

மன்னிப்பு கேக்கறதுதான் இப்ப ட்ரெண்டு பாலா

மணிஜி said...

மன்னிப்பை கேட்கிறார்னு வரணும். தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்

பாலா said...

///மன்னிப்பை கேட்கிறார்னு வரணும். தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்//

ஹா...ஹா.. ஹா... ஹா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்)
//

எட்டிருச்சு சார்.. சிங்கை வரை..

Cable சங்கர் said...

திருந்தவே மாட்டாயா.... சாரு..

Cable சங்கர் said...

திருந்தவே மாட்டாயா.... சாரு..

Cable சங்கர் said...

சாரு அடிவருடி.. மணிஜி....

பாலா said...

அடப்பாவிகளா.. உங்களை நம்பி.. இதை பப்ளிஷ் பண்ண சொல்லிகீறாரே.

எத்தன தபாதான்.. ஏமாறுறதுன்னே ஒரு கணக்கில்லையா??

சரி... இதை நர்சிம் பப்ளிஷ் பண்ணுவாரா மாட்டாரான்னு யாருனா பெட் கட்டுறீங்களா?

மணிஜி said...

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
13/36 | நர்சிம்

நர்சிம் மன்னிப்பு கேட்டது மெஜாரிட்டியா பிடிக்கலைன்னு அர்த்தமா?

மணிஜி said...

போன மே 18 ஆம் தேதி நடந்தது நமக்கு தெரியும். இந்த 18 க்கு நாம சாப்பிடாமய இருந்துட்டோம் . ஈழ ஆதரவு விட்கெட்டுகள் கூட தூக்கப்பட்டு விட்டன.சூப்பர் லிங்க்ஸ்னு ஒரு காமெடி தளம். அதில் ஆணாதிக்கத்து எதிரா ஒரு விட்கெட்..ஆதித்யா , சிரிப்பொலி

மணிஜி said...

Who Voted?
19
ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!
19/21 | அசுரன் | நர்சிம் | வினவு | சந்தன முல்லை
நர்சிம்மின் ஆணாதிக்க பொறுக்கித்தனத்தை எதிர்க்கும் பதிவர்கள் கீழே உள்ள விட்ஜெட்டை தமது பதிவில் இணைத்துக் கொள்ளவும். ..

இது இன்னொரு அசுரகாமெடி

Unknown said...

உள்குத்து.. வெளிகுத்து..
நடுகுத்து...
அணுகவும் மணிஜி... பரோட்டா கடை..

முதல்ல கேபிளுக்கு ஒரு பார்சல் அனுப்புங்க...
திருந்தவே மாட்டீங்களா...?

இராஜ ப்ரியன் said...

சிங்கத்த இப்படி அசிங்கப் படுத்திடிங்களே

butterfly Surya said...

திருந்தவே மாட்டாயா, நீ தண்டோரா..

பாலா said...

பூச்சி... இந்த சாரு.. ஒரு 5-6 பேருகிட்ட மட்டும் கேட்டிருக்காரே...

அப்ப.. நாமெல்லாம் பிரபலமில்லையா?

வால்பையன் said...

சத்தம், சத்தம்!

butterfly Surya said...

பாலா, உனக்கு சிறுகதை/ புனைவு/ பின் நவீனத்துவம் / மொக்கை எழுத வருமா..?

பாலா said...

மொக்கை ஓகே.!!

மத்ததெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது!!

ஸாரி சாரு! மீ நோ க்வாலிஃபை! :( :(

butterfly Surya said...

அப்போ கவிதையாவது டிரை பண்ணு :(

sathishsangkavi.blogspot.com said...

தல சாருவை நம்பி நீங்க இந்த பதிவ போட்டதற்காக உங்களிடம் ஒரு கேள்வி....

மீண்டும் விஜய் டிவி அழைத்தால் சாரு அங்கே போக மாட்டார் என உறுதியாக கூறமுடியுமா?

பாலா said...

///அப்போ கவிதையாவது டிரை பண்ணு ///

லீனா மேட்டர் ஆரம்பிச்சதுல இருந்து, இப்ப பின் நவீனத்துவம் கத்துகிட்டு வர்றேன்.

போன நாலஞ்சு நாளா நல்ல ட்ரெய்னிங். அது ஓக்கேவா?

மணிஜி said...

பூக்காரன்னு ஒரு கதை எழுதியிருக்கேன். அதை ஐநா சபைக்கு அனுப்பியிருக்கேன்.அப்புறம் மார்க்கரெட் தாட்சர் , டோனி பிளேயர் இவங்களுக்கும் ஒரு காப்பி அனுப்பிருக்கேன்.அவங்க ஓகே சொன்னப்புறம் போடுவேன்

janaki said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மணிஜீ...... said...

பூக்காரன்னு ஒரு கதை எழுதியிருக்கேன். அதை ஐநா சபைக்கு அனுப்பியிருக்கேன்.அப்புறம் மார்க்கரெட் தாட்சர் , டோனி பிளேயர் இவங்களுக்கும் ஒரு காப்பி அனுப்பிருக்கேன்.அவங்க ஓகே சொன்னப்புறம் போடுவேன்
//

சூப்பர் சார்.. உங்க தமிழ் பற்றை மெச்சுகிறேன்..
( மார்க்கரெட் தாட்சர் , டோனி பிளேயர்,இருவரையும் இலக்கணப்பிழை இல்லாம புரூப் பார்க்கச்சொல்லுங்க..ஹி..ஹி)

Santhappanசாந்தப்பன் said...

// 13/36 | நர்சிம்

நர்சிம் மன்னிப்பு கேட்டது மெஜாரிட்டியா பிடிக்கலைன்னு அர்த்தமா? //


இதுல இப்படி ஒண்ணு இருக்கோ!


அப்புறம், இந்த பதிவு..

தலைப்பு, நீங்க எழுதினீங்களா?

எதிர்வினை லேட்டா புரிஞ்சா, ட்யூப் லைட்டுங்களா?

மணிஜி said...

சாருன்னா சாருதான்..சும்மா எகிருதில்ல..

Ahamed irshad said...

திசைதிருப்பல்... ;(

மதி.இண்டியா said...

திருப்ப சாணி ஸ்டீபன் என்ற பெயரில் கடிதம் எழுதி வெளியிட்டுக் கொண்டாயிட்ற்று ,

ஆனால் ஜெ உட்பட யாருமே இந்தாளை பொருட்படுத்துவதில்லை என்பதுதான் கொடுமை .

தேடுதல் said...

விடு...விடு......யாரும் பாக்கல...சூனா பானா அப்பிடியே மெய்ண்டைய்ன் பன்னு...

ILLUMINATI said...

//மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
13/36 | நர்சிம்

நர்சிம் மன்னிப்பு கேட்டது மெஜாரிட்டியா பிடிக்கலைன்னு அர்த்தமா?//

எனக்கும் ஒரு கேள்வி இருக்குண்ணே....
உங்க வீட்டு குழந்தைய நாய் கடிச்சிட்டு,போய் படுத்துக்குது.அப்ப நீங்க போய் அடிக்கிறீங்க.எதுக்கு கடிச்சன்னு அடிப்பீங்களா இல்ல ஏன் நிறுத்துனனு அடிப்பீங்களா?

ILLUMINATI said...

//மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
13/36 | நர்சிம்

நர்சிம் மன்னிப்பு கேட்டது மெஜாரிட்டியா பிடிக்கலைன்னு அர்த்தமா?//

எனக்கும் ஒரு கேள்வி இருக்குண்ணே....
உங்க வீட்டு குழந்தைய நாய் கடிச்சிட்டு,போய் படுத்துக்குது.அப்ப நீங்க போய் அடிக்கிறீங்க.எதுக்கு கடிச்சன்னு அடிப்பீங்களா இல்ல ஏன் நிறுத்துனனு அடிப்பீங்களா?

மரா said...

என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்)
//

எட்டிருச்சு சார்.. SUNNYWALE வரை..

butterfly Surya said...

மீண்டும் விஜய் டிவி அழைத்தால் சாரு அங்கே போக மாட்டார் என உறுதியாக கூறமுடியுமா?///

சங்கவி.. இவ்வளவு அப்பாவிய நீங்க.?

Swamy said...

I have read this----

www.techsatish.net/2010/05/dfrrrt.html (கடைசி 3 partsல் சாரு நிவேதிதா உரை வருகிறது)

திரு சாரு நிவேதிதா அவர்களுக்கு,

நான் உங்கள் நீண்டநாள் வாசகன். உங்களின் திரைப்பட விமர்சனங்களையும், இலக்கிய விமர்சனங்களையும் வெகுவாக ரசிப்பவன். அதை ஆழ்ந்து படிப்பவன். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நீங்கள் விவாதம் செய்ததை நானும் பார்த்தேன். நீங்கள் அந்த நிகழ்ச்சியில் பேசியதை விவாதம் என்று கூறுவதா அல்லது உளறல் என்று கூறுவதா? ஒன்றுமே எனக்கு புரியவில்லை. இன்று நீங்கள் எழுதிய பதிவை படித்தால் அது உளறலின் உச்சக்கட்டமாக உள்ளது.

talk show என்று போனால் எதிர்பாராத கேள்விகள் வரத்தான் செய்யும். மேலும் அந்த talk show ல் அதுபோன்ற கடினமான கேள்விகள் எதுவும் உங்களிடம் கேட்கப்படவில்லை. ஏற்கனவே நன்கு அறிமுகமான கேள்விதான் கேட்கப்பட்டது. அதாவது நித்யானந்தா வை புகழ்ந்து எழுதி உங்கள் வாசகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.

நான் மன்னிப்புகேட்க தேவையில்லை என்பதையும், ஏன் தேவையில்லை என்பதையும் விளக்கமாக நீங்கள் உங்கள் ப்ளாக் ல் எழுதிவிட்டீர்கள். ஆனால் இதே கேள்வி talk show ல் கேட்கப்பட்ட போது நீங்கள் ஏன் அந்தளவு குனிந்து நெளிந்து, ஒரு sorry அல்ல 10000 sorry

களுக்கு சமமாக நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கூறவேண்டும்.

சரி எதோ sorry கேட்டுவிட்டீர்கள். அத்தோடு விட்டுவிட வேண்டியதுதானே. இன்று உங்கள் blog ல்அந்த talk show யை நடத்தும் director ஆண்டனி, நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி, உங்களோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பவா.செல்லதுரை அனைவரும் உங்கள் முதுகில் குத்திவிட்டதைபோல் அவர்கள் மேல் சேற்றை வாரி இரைத்திருக்கிறீர்கள். இன்று உங்கள் blog ல் அந்தளவு தெளிவாக எழுதும் நீங்கள், இதையே talk show ல் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக கூறியிருக்கலாமே. talk show ல் என்னை அனைவரும் corner செய்துவிட்டார்கள், கொலைவெறியுடன் தாக்கினார்கள், கொரில்லா போல தாக்கினார்கள் என்றெல்லாம் பீலா விடுவது ஏன் என்றே புரியவில்லை.

"என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.

என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது." - என்று இன்று உங்கள் ப்ளாக் ல் உங்கள் பலவீனம் பற்றி புலம்பும் நீங்கள் ஏன் talk show ல் கலந்து கொண்டீர்கள். உங்கள் பலவீனம் இதுதான் என்றால் எதற்காக கலந்துகொள்ள வேண்டும்.

ஒருவரால் உங்களுக்கு நல்லது நடந்தால் அவர் உலகிலேயே உத்தமர். நீங்கள் எதிர்பாராதது நடந்தால் அவர்போல் மோசம் யாரும் கிடையாது. இனிமேல் mummy returns போல் 50 பக்க கட்டுரையை நீயா நானா கோபி, ஆண்டனி, பவா செல்லதுரை ஆகியோரை தாக்கி தினம் தினம் உங்கள் blog ல் எழுதுவீர்கள். mummy returns போலவே அந்த கட்டுரையும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். தங்களை பாரதி யோடு ஒப்பிட்டு தாங்களே எழுதிக்கொண்ட கட்டுரையை படித்ததைப்போலவே இதையும் படித்து தொலைக்கவேண்டியதுதான்.

மேலும் ஆன்மீகவாதிகளிடம் ஏமாறுவது உங்களுக்கொன்றும் புதிதில்லையே. (என் 35 வருட எழுத்து வாழ்க்கையில் ஒரே சறுக்கல் இதுதான் என்று நீயா நானாவில் நீங்கள் கூறியது பொய் ) இதற்கு முன்பு புட்டபர்த்தி சாய்பாபா, உஸ்மான் சித்தர் ஆகியோரை நித்யானந்தாவை போலவே பிரபலப்படுத்தி எழுதியுள்ளீர்கள்.

மக்கள் நித்யானந்தாவைகூட நம்பலாம். ஆனால் உங்களைப்போல் நேரத்துக்கு ஒன்றை பேசும், எழுதும் எழுத்தாளரை நம்பவே கூடாது.

சாரு நிவேதிதா வாசகர்கள் இவரின் நேர்மைத்தன்மையைப்பற்றி தங்களின் கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு இவர் மாற்றி மாற்றி பேசுவதை வாசகர்கள் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

//இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்//

காலம் தவறி செய்யும் எந்த செயலும் பலனளிக்காது. விஜய் டிவியில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் இவர்களை இப்போது உதவிக்கு அழைப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

(இதைப்பற்றி விரைவில் blog ல் விரிவாக பதிவிடுகிறேன்)

இப்படிக்கு,

தாமஸ் ரூபன்

அத்திரி said...

//சாரு அடிவருடி.. மணிஜி....//

கிகிகிகி.......ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

Thomas Ruban said...

http://kuttytamilish.blogspot.com/2010/06/blog-post.html

இதை படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் நன்றி.

geethappriyan said...

அண்ணே உங்க பதிவுல திட்டவேணாம்னு போறேன்....

ரிஷபன்Meena said...

நடிகர் வடிவேலு அடிவாங்கி அழுகிற
பாணியும் இதுவும் ஒன்னு போல இருக்கே.

”கைபுள்ள” காமெடியே சாருவை பார்த்து தான் பண்ணுறாங்களோ.

நவீன் said...

@Thomas,

I had same questions after watching the show, its clear that Gopinath was trying to corner him but i totaly diagree with charu saying he is surprised on the questions.

Moreover gopinath questioned him whether you would say sorry but not cornered him to say sorry.
I was wondering why charu totally look bizzare to this and ,after all he is attending the most relevant topic.

an Now i really dont understand why charu feel bad about the sorry pulled out of his mouth. He admitted he is writing thousands and thousands of words on behalf of sorry (eventually claiming he dont need to say :( )

In my opinion, none of his readers/fans will be expecting him to say sorry. Most of us will try to know his stand on the issue.
Becuase by the time he accused Usman sithar and slowly started beliving Nithi, everyone of his fan would have sensed his volatility.

Naveen

pichaikaaran said...

u too mani jee ?? !!

அகல் said...

சாருவின் நிலைமை இப்படி ஆனதற்கு காரணம் அவரே. வேலி ஓணானை வேட்டியில் வைத்து அவரே தைத்திருக்கிறார்.

குமுதமும், விஜய் டி.வி யும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு படவில்லை. அவர்களொன்றும் நித்யானந்தர் என் காலை தொட்டதால் என் கால் வலி சரியானது, என் குறியில் கை வைத்தார் 12 இன்ச் பெரிதானது என்றெல்லாம் பிரசாரம் செய்யவில்லை.
கம்யூனிசத்தை பின்பற்றியதால் பவா செல்லத்துரை மன்னிப்பு கேட்பாரா? என்று வெக்கங்கெட்ட தனமாக கேட்கும் சாருக்கு தெரியவில்லை ஆண்டனியும் கோபிநாத்தும் நித்யானந்தரை பின்பற்றியவர்களிடம் மன்னிப்பு கேட்கச்சொல்லவில்லை... அந்த அயோக்கியனை பிரசாரம் செய்தவர்களைதான் மன்னிப்பு கேட்கச்சொன்னர்கள்...
உஸ்மான் சித்தரின் பின் அமெரிக்க வாழ் தமிழர்களெல்லாம் உன்னை நம்பி வந்தார்களே அதற்க்கு யார் பொறுப்பு? அவர்களுக்கு அறிவில்லையா? என்கிற ரீதியில் சாரு கேட்கப்போகும் வசதியான கேள்விகளோடு தான் அவரின் பிழைப்பே போய்க்கொண்டிருக்கிறது.

அவர் கட்டுரையில் நான் விழுந்து விழுந்து சிரித்த இடமொன்று உண்டு அது 'நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான்' என்பதே. இதை பற்றி எழுதுவதற்கு முன் சாரு பப்பு அல்லது சோரோ விடம் கேட்டிருக்கலாம் அவர்களுக்கே இவை தெரிந்திருக்கும். பேச்சாளர்களின் கண்களை பார்த்துக்கொண்டு, மொழிவளம் குறையாமல் காதில் வந்து விழும் இன்னொருவரின் கேள்வியை முன் வைக்க வேண்டும் இது பார்வையாளனுக்கு கோபிநாத்தின் கேள்வி போல தெரியவேண்டும் இது தான் கோபிநாத் அவர்களின் வித்தை, லாவகம். சாரு நித்யானந்தரை பற்றி கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போது அவர் மனைவி நித்தியின் ஒரு சத்சங் பாடலை காதில் பாடச் சொல்லிப்பார்த்தால் இந்த சங்கடம் சாருவுக்கு புரியும்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இனி சாருவை படிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. you are what you create ... so இனி இவரின் எழுத்திலும் யோக்கியதை இருக்க வாய்ப்பில்லை. ஆண்டவனிடம் நான் ஒவ்வொரு நாளும் பிரார்த்திப்பதெல்லாம் ஒரு போதும் என் எதிரிக்கு கூட சாருவின் மனநிலையை கொடுத்துவிடாதே என்பதுதான்.

சாருவின் முதல் தவறு இதை அவரது வலைதளத்தில் எழுதியது. அதைவிட பெரிய தவறு இதை மற்ற வலைதள நண்பர்களிடம் பிரசுரிக்க சொன்னதுதான். சாருவின் வலைதளத்திலாவது பின்னூட்டம் போட வாய்ப்பில்லை இங்கே டவுசர் கிழிகிறது.

சாருவின் தளத்தில் தன்னைப்பற்றி யாரேனும் அவதூறு பேசினால்/எழுதினால் என் நண்பர்கள் அப்படி வருத்தப்படுகிறார்கள், வாசக கண்மணிகள் ஆயுதத்தோடு அலைகிறார்கள் என்றெல்லாம் அவர் எழுதும்போது எனக்கு எப்பொழுதுமே வடிவேலுவும் அவர் பின் சுற்றிகொண்டு அடிவாங்கித் திரியும் கூட்டமும் தான் நினைவுக்கு வரும். (இன்னுமா இந்த ஊரு இவங்கள நம்பிக்கிட்டு இருக்கு)

முடியல....

சாணக்யா