முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாமியாக இருந்த அடிமைகள் , இன்று அய்யா குட்டையில் மட்டையாகிவிட்டார்கள் . அவர்கள் சொல்லும் காரணம்தான் வேடிக்கையாக இருகிறது . இத்தனை வருடங்களாக அங்கு அடிமைகளாக இருந்தார்களாம். இப்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது . முத்துசாமி சொல்கிறார் . அம்மா ஒரு முறை கழற்றி போட்ட செருப்பை பத்திரமாக வைத்திருக்கிறாராம் . அதிமுக ஆட்சியில் இருந்தால் , அதால் அடித்தால் கூட பெருமையாக வாங்கி கொண்டிருப்பார் . மக்கள் சேவைக்காக அணி மாறியதாக அவர் பேட்டியை படிக்கும்போது , அந்த செருப்பாலேயே ரெண்டு சாத்தினால் என்ன என்று தோன்றியது . சின்னசாமி சமயம் பார்த்து தாவியிருக்கிறார் . அமைச்சராக , கரூர் எம்பியாக இருந்தவர் . திமுகவின் மாவட்டசெயலாளர் திருமதி வாசுகி முருகேசனின் அகால மரணம் , அந்த இடத்தை தான் பிடித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் இந்த முன்னாள் அடிமை . பார்க்கலாம். இந்த அடிமைகள் புது குட்டையில் விழுந்த நாள் , சென்னை திக்குமுக்காடியது . டிராஃபிக் நெரிசல் .
நீலகிரியில் இருப்பவர்கள் எல்லாம் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா ? என்று ஒரு விநோத அறிக்கை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் நிரந்தர முதல்வர் புரட்சித்தலைவி . அதுமட்டுமல்ல . அறிவாலயத்தில் அனைவரும், முக உட்பட சீட்டாடுகிறார்கள் . கேளிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் விளாசி தள்ளியிருக்கிறார் . தலைவரின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . ஆனாலும் டான்சி ராணிக்கு இப்படி புத்தி பேதலித்து போக வேண்டாம் . பதில் லாவணி விரைவில் வரும் . அதில் என்னென்ன கூத்து இருக்கிறதோ . எனக்கு 62 வயதாகி விட்டது . இன்னும் எல்லோரிடமும் நானே நின்று மனுக்களை வாங்க முடியுமா என்றும் செல்வி கேட்கிறார் . வாய்க்கு வாய் ஐயாவை காச்சறீங்களே ! அவரை பார்த்தாவது தெரிஞ்சுக்கலாமே . 87 வயசுல என்ன சுறுசுறுப்பு . சும்மா நின்னு விளையாடறாரு .
தைலாபுரத்தாருக்கு எதை தின்றால் பித்தம் தெளியும்னு ஆயிடுச்சு போல . அன்புமணிக்கு தச்சு வச்ச கோட்டு , சூட்டையெல்லாம் பழைய பாத்திரக்காரனுக்குத்தான் போடனும் . தலைவர் வச்சது சூப்பர் ஆப்பு . அப்படியே அம்மாவும் கண்டுக்காம விட்டால் , மறுபடியும் கோடாரிதான் .
ராவணன் படம் நிறைய எதிர்பார்ப்புகளை கிளறி விட்டிருக்கிறது . மலையாளத்தில் வெளியாகவிருக்கும் ராமராவணன் என்ற படமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சைபடுத்தி காட்சிகள் உள்ளனவாம். சிங்களவர்கள் அன்பானவர்கள் , புத்தரின் வழி வந்த தியாகசீலர்கள் என்பதாக சித்தரிப்புகள் . மேலும் இலங்கை அவர்கள் சொந்த மண் இல்லை. இங்கிருந்து பஞ்சம் பிழைக்க போனவர்கள் என்று வரலாறும் திரிக்கப்பட்டிருக்கிறதாம் .சிங்கள் அரசு நிதியுதவியுடன் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் . மலையாள சினிமாவில் தமிழனை இழிவு படுத்துவது ஒன்றும் புதிதல்ல . அதைப் பற்றி நிறைய இடுகைகளும் வந்திருக்கிறது . செம்மொழி மாநாட்டு பாடலை படமாக்கியவர் ஒரு மலையாளி . அதில் வரும் நிறைய முகங்களும் வேற்று முகங்களே . தமிழனின் பெருந்தன்மைக்கு அளவே இல்லையப்பா . வந்தோரை வாழ வைத்து ..இருப்போரை ...
கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது , காதலியில் காலில் ஒரு முள் தைத்து விடுகிறது . காதலுக்கு வந்ததே கோபம் . முள்ளை பிடுங்கி சனியன் பிடித்த முள்ளே என்று வைது , தூக்கி வீசுகிறான் காதலன் . இருவருக்கும் திருமணமாகிறது . சில வருடங்களுக்கு பிறகு அதே கோவில் . அதே முள் . கணவன் சொல்கிறான் . சனியனே ..கண் அவிஞ்சா போச்சு . பார்த்து வர வேண்டியதுதானே . எப்படியிருக்கு சனிப்பெயர்ச்சி ? சுகி சிவம் சொன்னது .
ஒரு மீள் கவிதை :
உலக்கையை போட்டு
உள்ளறையில் ஏன்
உட்கார்ந்திருக்கிறாய் அம்மா?
விலக்குடா மகனே
விளங்கவில்லை
யார் வந்து சொன்னார்கள்?
காகம் வந்து
கல்லெடுத்து போடும்
தெரிந்து கொள்வேன்
காகத்துக்கு எப்படி தெரியும்?
யார் சொல்வார்கள்?
அதோ....அந்த
மரக்கிளை
மரக்கிளைக்கு?
அதோ ஓடுதே
அணில் அது சொல்லும்
யார் சொல்வார்
அந்த அணிலுக்கு?
சாமிதான் ராசா
சொல்லும்
அப்ப சாமிக்கு?
அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..
தலையை ஆட்டிக்கொண்டேன்
விளங்கினதுக்கு அடையாளமாய்.
24 comments:
அண்ணே..
எழுதுறதே ஒரு பக்கந்தான்..
எழுதிட்டு மறுபடியும் ஒரு தடவை ப்ரூப் பார்த்தாதான் என்னவாம்..?
எழுத்துப் பிழைகளால் ருசிக்க முடியாமல் போகிறதண்ணே..!
இங்கயும் அதே பிரச்சனைதானா?
ஹா ஹா ஹா
தாவிய காரணத்துக்கு நல்ல செருப்படி..
///எழுதிட்டு மறுபடியும் ஒரு தடவை ப்ரூப் பார்த்தாதான் என்னவாம்..?//
உ.த அண்ணே..
நான் கூட.. நீங்க சுடச்சுட பதிவை போஸ்ட் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்.
பதிவெழுதி.. ப்ரூஃப் பார்த்து......
அப்ப.. ஒரு நாள் கழிச்சித்தான் போஸ்டிங்கா???
செம கிக்கு! :)
கவிதை எனக்கும் விளங்கிப் போச்சு!!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அண்ணே..எழுதுறதே ஒரு பக்கந்தான்..எழுதிட்டு மறுபடியும் ஒரு தடவை ப்ரூப் பார்த்தாதான் என்னவாம்..ழுத்துப் பிழைகளால் ருசிக்க முடியாமல் போகிறதண்ணே..!//
அண்ணே உங்க லெவலுக்கு வரமுடியுமா
//எழுத்துப் பிழைகளால் ருசிக்க முடியாமல் போகிறதண்ணே..!
//
ரிப்பீட்டேய்
காதல்ன்னு வந்தாலே தடுமாற்றம் வந்திடுமோ?? அங்கே தான் பிழை தாராளம்
போதையேறிப் போச்சு .. புத்தி மாறியாச்சு ...
//அண்ணே..
எழுதுறதே ஒரு பக்கந்தான்//
அதானே..
அண்ணனைப் போல ஒரு 20 பக்கம் எழுதி எங்கள ஓடவைக்க வேணாமா?
என்னா மணிஜீ நீங்க.
கவிதை சூப்பர் மணிஜீ..
//முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாமியாக இருந்த அடிமைகள் , இன்று அய்யா குட்டையில் மட்டையாகிவிட்டார்கள்//
//அவர்கள் சொல்லும் காரணம்தான் வேடிக்கையாக இருகிறது . இத்தனை வருடங்களாக அங்கு அடிமைகளாக இருந்தார்களாம். இப்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது //
உண்மைதான். ஆனாலும், எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு கட்சியை இப்படி கலகலக்க வைத்த பெருமை ஜெயாவையே சாரும். இன்னமும் என் கட்சி, என் தொண்டர்கள் என்று மமதையோடு பேசும்வரை, அதிமுகவை அழிக்க வெளியிலிருந்து எவரும் தேவையே இல்லை.
அம்மா ஒரு முறை கழற்றி போட்ட செருப்பை பத்திரமாக வைத்திருக்கிறாராம்//// அவர் வெளியிட்ட அறிக்கையை படிச்சீங்களா..?
செம காமெடி..
அட்டகாசமான மீள் கவித...
அண்ணே மீள்கவிதை நல்லா இருக்குண்ணே
மத்தபடி தக தக தகவென ஆடிவா ரேஞ்சுக்கு சுதி :)
கவிதை சூப்பர் :-).
சாமியாடிட்டீங்க சாமியோவ். மீள் கவிதை நமக்கு புதுசு. பிரமாதம்:)
ரோமிங் தாசுக்கு ஒன்னு எழுதியுருக்கீங்களே அதுதான் சூப்பரப்பு!
ஏண்ணே
அப்போ கோட்டு சூட்டெல்லாம் பாத்திரக்காரனுக்கு தானா?
சரக்கு, சைடு டிஸ் ரெண்டும் செ...ம ... டேஸ்டு!!!
//முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாமியாக இருந்த அடிமைகள் , இன்று அய்யா குட்டையில் மட்டையாகிவிட்டார்கள் . // :)
ராம ராவணன் மலையாள செய்திக்கு நன்றி.படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாது...அதுக்கு நான் கேரண்டி.
என்ன ஒரு அதிசயம் .. கலைஞரை பற்றி புகழ்ந்து எழுதி இருக்கீங்க ..
உ.த அண்ணே..சுட்டியமைக்கு நன்றி
அணைவரின் கருத்துக்களுக்கும் நன்றிகள்
Post a Comment