Monday, August 10, 2009

சேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........








விடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது.கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல்.நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான்.மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு” calling.. என்ன இந்த நேரத்துல..கரகரப்பாய் ஹலோ என்றேன்..அண்ணா..பாரதி பேசறேன்..குரல் உடைந்து இருந்தது.பாரதி சேஷுவின் மனைவி.

என்னம்மா?சேஷு இன்னும் வரலையா?

அண்ணா..அவர் போயிட்டார்.

குப்பென வியர்த்தது..வாட்..என்னம்மா சொல்றே?

ராத்திரியெல்லாம் தூக்கம் வராம அவஸ்தை பட்டு கிட்டிருந்தாரு..டீ வேணூம்னு கேட்டாரு..போட்டு எடுத்துகிட்டு வர்ரதுக்குள்ள.....அழ ஆரம்பித்தாள்.

சேஷு ஒரு விளம்பர காப்பி ரைட்டர்.பெரிய ஏஜன்சிகளின் ஆபத்பாந்தவன்.கான்செப்ட்டும்,ஒரு மணி நேரமும் கொடுத்தால் போதும்..பின்னி விடுவான்..அந்த பெயிண்ட் விளம்பரமும்,மசலா விளம்பரமும் ஹிட் ஆனதுக்கு முழு காரணம் சேஷூதான்.குடி,சிகரெட் எல்லாம் ஓவர்டோஸ்தான்.குழந்தை இல்லை.”பாரதிதான் எனக்கு குழந்தை.என்ன... அவதான் குழந்தை இல்லைன்னு பித்து பிடிச்சு பேசுவா.

பாரதி..நா கிளம்பிட்டேன்.நீ தைரியமா இரு..

அண்ணா..அவர் வீட்டுல சொல்லிடுங்க.

இருவரும் காதல் திருமணம்.பாரதிக்கு அப்பா,அம்மா யாருண்ணே தெரியாது.ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள்..சேஷூவின் வீட்டில் எதிர்ப்பு.மீறி பதிவு திருமணம்.நான் தான் கையெழுத்து போட்டேன்.” இனி அந்த பெண் என்ன செய்யப் போகிறாள்..

ரெண்டாவது ஒலிப்பில் போனை எடுத்து விட்டான் ராஜூ..சேஷூவின் தம்பி.ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு பாங்கில் வேலை..

என்னன்னா?இந்த நேரத்தில்..

விவரம் சொன்னேன்...

நா வர்ர வரைக்கும்???

பாவி நீதான் கொள்ளி போடணும்..சீக்கிரம் வா..ஃப்ரிசர் பாக்ஸ் அரேஞ்ச் பண்ணிடறேன்..

லிண்டாஸ் வைத்தி,ஓ அண்ட் எம் காத்ரீன் சொன்னவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள்.நைட்டு மப்பு இன்னும் இருக்கும் போல.போன வாரம் அவள் வீட்டில் ஒரு பார்ட்டி..குறையொன்றும் இல்லை என்று சேஷூ பாட,அவள் ஒன்ஸ் மோர் கேட்டது ஞாபகம் வந்தது.நெருங்கிய அனைவருக்கும் தகவல் சொல்லி நான் சேஷூவின் வீட்டை அடைந்தபோது யாரும் வந்திருக்கவில்லை.வாசலில் பாரதி விலகி வழிவிட ஹாலில் அது ஒருக்களித்து இருந்தது.திடுக்கிட்டு பாரதியை கேள்விக்குறியுடன் பார்த்தேன்..

இப்பதான் அண்ணா..திரும்பி படுத்துகிட்டார் என்றாள்

தலை சுற்றுவது போல் இருந்தது..பாரதி வெறித்த பார்வையுடன் இருக்க உலுக்கினேன்

இல்லண்ணா..ஒரே பக்கமா படுத்து உடம்பு வலிக்குமேன்னு நாந்தான் திருப்பிபடுக்க வச்சேன்..எழுப்பட்டுமா?

சேஷூவை தொட்டு பார்த்தேன்.உடல் சில்லிட்டு சர்வ நிச்சயமாக செத்து போயிருந்தான்.

அண்ணா ..அவருக்கு போட்ட டீ ஆறி போய் அப்படியே இருக்கு.சூடு பண்ணி கொண்டு வரட்டுமா?


கடவுளே.என்ன கொடுமை இது..என்ன ஆச்சு ?இவளுக்கு? மனசிதைவு? நொடியில் மனம் பிறழுமா என்ன?

பாரதி..நீதானே சொன்ன..சேஷூ போயிட்டான்னு..அதுதான் உண்மை...உனக்கு அழுகை வரலையா?வாய் விட்டு கதறுடி..

தெளிஞ்சவுடனே அவரே எழுந்திருப்பார் விடுங்கண்ணா..

தகவல் தெரிந்த நண்பர்கள் வர ஆரம்பித்திருந்தனர்..காத்ரீன் பாரதியை ஆறுதலாக அணைத்து விசும்ப ஆரம்பித்திருந்தாள்..அநேகமாக வரும்போது லேசாக குடித்திருக்க வேண்டும்.ஃப்ரிசர் பாக்ஸ்காரன் மொபைலில் அழைத்து விலாசம் சரி பார்த்துக் கொண்டான்.எனக்கு குடிக்க வேண்டும் போல் இருந்தது.காத்ரீனிடம் இருக்கா என்று கேட்டேன்..கார் சாவியை கொடுத்தாள்.

சேஷூ....எனக்கு தாமதமாகத்தான் அறிமுகம்..நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தாமதமாக அறிமுகமாகி,சீக்கிரம் பிரிந்து விடுவது எவ்வளவு வேதனையை தருகிறது.தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது.இருந்தாலும் அந்த எரிச்சல் எனக்கு தேவையாயிருந்தது.சிகரெட் பற்ற வைத்து கொண்டேன்..சேஷூவுக்கும்,எனக்குமான நட்பு ஒரு எட்டு வருடம் இருக்கலாம் முதல் சந்திப்பே ஒரு மதுக்கடையில்தான்..யாருடனோ விவாதித்து கொண்டிருந்தவன் என் கவனத்தை இழுத்தான்..தீப்பெட்டி இருக்குமா?என்ற சாதாரண கேள்வியுடன் அவர்கள் உரையாடலில் நுழைந்தேன்..அவன் பேச,பேச என்னை அவனிடம் இழந்தேன்.ம்ம் சேஷூவிற்கு இப்படி எதுகை,மோனை பிடிக்காது .அது ஆர்டிபிஷியலாக இருக்கும்..நேரா சொல்லணும் என்பான்..மொபைல் அடித்தது.ராஜு..

அண்ணா..திருச்சி தாண்டிட்டேன்.இன்னும் அஞ்சு மணிநேரம் ..வந்துர்றேன்..

மரணத்தை பற்றி சேஷூவிற்கு சிலாகித்து பேச பிடிக்கும்.அதுவும் சாராயம் குடித்து விட்டால் சாவை கொண்டாடியே விடுவான்.இதற்கென்று திருநீர்மலைக்கு போவோம்...வா அய்யரே..வரவேற்று சொம்பில் கொடுப்பார்கள்.சேஷூ முதலில் பியுரிட்டி செக் பண்ணனும்னு சொல்லி பத்து ரூபாய் நோட்டை நனைத்து கொளுத்துவான்..ஸ்பிரிட் வரைக்கும் எரியும் பாரும்பான்..பின் பேச ஆரம்பித்தால் அருவிதான்.ஆங்கிலமும் தமிழும்அருவியாய்கொட்டும்உலகசினிமா,இலக்கியம் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்களுடன்...சிகரெட் கையை சுட இன்னொன்று பற்ற வைத்துக் கொண்டேன்..

செத்தா அழறது எனக்கு பிடிக்கலை.எதுக்கு அழனும்?ஒரு போராட்டத்துக்கு அப்புறம் கிடைக்கிற விடுதலை..அதை அனுபவிக்கனும்டா..படுக்க வச்சு,மெலிதாக பகவத்கீதை,கண்ணதாசன் பாடல்கள்,எம்.எஸின் பஜகோவிந்தம் அப்புறம் குறையொன்றும் இல்லை ஒலிக்கணும்.

சே..நினைச்சாலே எவ்வளவு ஆனந்தமா இருக்கு..அதுவும் கண்ணதாசன் மரணத்தை வென்றவன்..அவன் பாட்டு சாவு வீட்டில ஒலிக்கிறது எவ்வளவு பொருத்தம்..ஆனா அவன் தான் “பாவி..அல்பாயுசல போயிட்டியேடா?போதை தலைக்கேற சேஷூ அழ ஆரம்பித்தான்.

மழுங்க வழிக்கப்பட்டு குளிப்பாட்டி திருமண்,ஸ்ரீசூர்ணம் இட்டு சேஷூ என்ற சேஷாத்திரி அய்யங்கார் ஹாலில்கிடத்தப்பட்டிருந்தார்..மெல்லியதாக எம்.எஸின் குரல் கேட்டுக் கொண்டிருக்க அருகில் சென்றேன்...

காலையில் பார்த்த சவக்களை இல்லை.ஒரு வித பரவசம்..தேஜஸ்.. சொல்லிக்க முடியலைடா..திடீர்னு அழைப்பு வந்துடுச்சு..என்று அவன் முகத்தில் உறைந்திருந்த மர்மபுன்னகை சொல்வது போல் இருந்தது

என் பிரிய சிநேகிதா..சேஷா...போ..வருகிறேன்.. சந்திப்போம்...குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்...துக்கமும்,போதையும் தலைக்கேறியிருந்தது..

அவனுக்கு மிகவும் பிடித்த,இந்த பாட்டுக்காக சாகலாம்டா என்று அவன் உருகிய.....

"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

வளரும் விழி வண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே - வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே!'

சத்தமாக வாய் விட்டு பாடி...

“பாவி கண்ணதாசன் மட்டுமா?நீயும்தாண்டா....அடக்க மாட்டாமல் வெடித்து...........



Saturday, August 8, 2009

வேணாம்....விட்ரு..வலிக்குது...அழுதுடுவேன்....



கழிவறை ஒன்று புதிதாக திறக்கிறார்கள்
வருகிறாயா?

இல்லை...இங்கேயும் ஒன்று
இரண்டு நாளில் வருகிறது
’இருக்க”வேண்டும்..

அல்சூர் காக்கையும்
அயனாவரம் காக்கையும்
”கா”மெயிலில் சாட்டியது
---------------------------------------------------------------------------------------------------
வள்ளுவருக்கு சிலை
காவிரிக்கு சமாதி
உழவென்னும் தலைப்பில்
உள்ள பத்து குறட்பாக்கள்
நீக்கம்..அரசு உத்தரவு
-------------------------------------------------------------------------------------------------
நண்பரின் மகளை சந்திக்க நேர்ந்தது..அங்கிள் என்று வாய் நிறைய அழைத்து பேசிக்கொண்டிருந்தாள்.”நா சின்ன பிள்ளையா இருந்தப்ப என்று சில நிகழ்ச்சிகளை சொன்னாள்.ஆச்சர்யமாக இருந்தது.இதில்லென்ன வியப்பு என்கிறீர்களா?அவளுக்கு இப்ப வயசு அஞ்சுதான்...குழந்தைகள் எப்போதும் ஆச்சர்யபடுத்துபர்கள்தான்..
-------------------------------------------------------------------------------------------------
பஞ்சாப்பில் சிறைகைதிகளுக்காக புது திட்டம் ஒன்றை அறிமுகபடுத்தி இருக்கிறார்களாம்..அதன் படி சிறை வளாகத்தில் குடில்கள் கட்டப்படும்.கைதிகள் வருடத்திற்கு ஏழு நாட்கள் தங்கள் குடும்பத்தோடு கழிக்கலாமாம்..காவலர்கள் விளக்கு பிடிப்பார்களோ?ஏற்கனவே நம்மூரில் கோழியெல்லாம் போட்டு அசத்துகிறார்கள்..தலைவர் அடுத்து என்ன அறிவிக்க போகிறாரோ?
-------------------------------------------------------------------------------------------------

அனுமாஷ்யமான சூழல்.அடர்த்தியான இருள்.பொட்டல்வெளியில் மரங்கள் உதிர்த்த சருகுகளின் மேல் ஒரு பிரம்ம ராட்ஸசன் நடந்து வரும் பேரோசை..

ஊடுருவி பார்த்தாலும் புலப்படாத விருட்சங்கள் வாழ்வின் பயங்கரத்தை பறைசாற்றுகிறது..பகல் பொழுதுகளில் பொசுக்கிய அக்னி இருள் கவ்வியதும் பொழியும் உமிழ்களில் அந்த நீர்நிலை உறைந்தே கிடந்தது..காரிருளிலும் மேல் வானக்கண்ணாடியாய் நிலாவை ஏரி பிரதி
எடுத்துக் கொண்டிருந்தது எனலாம்.

என்ன செய்கிறான் அவன்..மாலை நேர நிழலைப் போல் நீண்டு உயரமாய் தெரிந்தவன்..அடுத்த வரியில் முரண்படும் எழுத்தாளனாய்,மதிய வெயிலின் நிழலாய் மாறுகிறான்.

இப்போது அவன் உருவன் சுருங்கியது,கர்ப்பத்தில் இருக்கும் சிசுவாய் காட்சியளித்தான்..என்னவோ பிரசவ அவஸ்தை அவன் முகத்தில் அவதானித்தது..அவன் தன் பாய்மர துடுப்பு போன்ற கரங்களால் ஏரி நீரை விலக்குகிறான்..அடடா..இப்போது அவன் தோற்றம் நீரில் முன்னும்,பின்னும் நீந்தும் அன்ன பட்சியாய்....

ஒண்ணுமில்லீங்க...ஒருத்தன் ஏரி கரைல பேண்டுட்டு,கழுவிகிட்டு இருக்கறதைதான் நம்ம நவீனத்துவங்கள் மேஜிக்கல் ரியலிசம் நடைல எழுதியிருக்காங்களாம்...
-------------------------------------------------------------------------------------------------

இந்த இடுகைக்கு இதை தலைப்பா வச்சதுக்கு காரணம், பின்னூட்டம் போடவும் வசதியா இருக்கும் பாருங்க..அப்படியே ஒத்தி போடலாம். வெட்டியும் போடலாம்..வசதிப்படி செய்ங்கய்யா..


Thursday, August 6, 2009

சம்திங் ராங்க்.......????



ஆத்திரத்தை அடக்க முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க முடியவில்லை...
டயாபட்டிக்..

மூத்திரத்தை அடக்க முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்..

கிழிந்த நைட்டியில்
வழியும் இளமை
கிளர்ச்சியில்லை..
இம்பொடன்ஸ்...

இருட்டினதும் விளக்கை அணைக்கிறேன்...
டிமென் திஷியா..


வாங்கின கடன்
நினைவில் இல்லை..
செலக்டிவ் அம்னீஷீயா...

பல்லவன் படிக்கட்..
ஏற கஷ்டம்
ஆர்த்தரைடிக்ஸ்..

விரல் மரத்து அவஸ்தை..
ஸ்பாண்டிலைட்டிஸ்


சட்டென்று பெயர் மறந்து போகிறது..
அல்சைமர்..

இதெல்லாம் சரிதான்...

இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..

சம்தி..ங் ராங்க்...

Wednesday, August 5, 2009

சேஷூ............



விடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது.கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல்.நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான்.மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு” calling.. என்ன இந்த நேரத்துல..கரகரப்பாய் ஹலோ என்றேன்..அண்ணா..பாரதி பேசறேன்..குரல் உடைந்து இருந்தது.பாரதி சேஷுவின் மனைவி.

என்னம்மா?சேஷு இன்னும் வரலையா?

அண்ணா..அவர் போயிட்டார்.

குப்பென வியர்த்தது..வாட்..என்னம்மா சொல்றே?

ராத்திரியெல்லாம் தூக்கம் வராம அவஸ்தை பட்டு கிட்டிருந்தாரு..டீ வேணூம்னு கேட்டாரு..போட்டு எடுத்துகிட்டு வர்ரதுக்குள்ள.....அழ ஆரம்பித்தாள்.

சேஷு ஒரு விளம்பர காப்பி ரைட்டர்.பெரிய ஏஜன்சிகளின் ஆபத்பாந்தவன்.கான்செப்ட்டும்,ஒரு மணி நேரமும் கொடுத்தால் போதும்..பின்னி விடுவான்..அந்த பெயிண்ட் விளம்பரமும்,மசலா விளம்பரமும் ஹிட் ஆனதுக்கு முழு காரணம் சேஷூதான்.குடி,சிகரெட் எல்லாம் ஓவர்டோஸ்தான்.குழந்தை இல்லை.”பாரதிதான் எனக்கு குழந்தை.என்ன... அவதான் குழந்தை இல்லைன்னு பித்து பிடிச்சு பேசுவா.

பாரதி..நா கிளம்பிட்டேன்.நீ தைரியமா இரு..

அண்ணா..அவர் வீட்டுல சொல்லிடுங்க.

இருவரும் காதல் திருமணம்.பாரதிக்கு அப்பா,அம்மா யாருண்ணே தெரியாது.ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள்..சேஷூவின் வீட்டில் எதிர்ப்பு.மீறி பதிவு திருமணம்.நான் தான் கையெழுத்து போட்டேன்.” இனி அந்த பெண் என்ன செய்யப் போகிறாள்..

ரெண்டாவது ஒலிப்பில் போனை எடுத்து விட்டான் ராஜூ..சேஷூவின் தம்பி.ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு பாங்கில் வேலை..

என்னன்னா?இந்த நேரத்தில்..

விவரம் சொன்னேன்...

நா வர்ர வரைக்கும்???

பாவி நீதான் கொள்ளி போடணும்..சீக்கிரம் வா..ஃப்ரிசர் பாக்ஸ் அரேஞ் பண்ணிடறேன்..

லிண்டாஸ் வைத்தி,ஓ அண்ட் எம் காத்ரீன் சொன்னவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள்.நைட்டு மப்பு இன்னும் இருக்கும் போல.போன வாரம் அவள் வீட்டில் ஒரு பார்ட்டி..குறையொன்றும் இல்லை என்று சேஷூ பாட,அவள் ஒன்ஸ் மோர் கேட்டது ஞாபகம் வந்தது.நெருங்கிய அனைவருக்கும் தகவல் சொல்லி நான் சேஷூ வின் வீட்டை அடைந்தபோது யாரும் வந்திருக்க வில்லை.பாரதி மட்டும் வாசலில் அழுத படி..என்னை பார்த்தவுடன் விலகி வழி விட உள்ளே போனேன்

சேஷு ஹாலில் ஒருக்களித்து படுத்திருந்தான்.திடுக்கென்றது..பாரதியை கேள்விக்குறியுடன் பார்த்தேன்.

இப்பதான் அண்ணா திரும்பி படுத்து கிட்டார் ....என்றாள் பாரதி.

-------------------------------------------------------------------------------------------------


(பின் குறிப்பு) இது ஒரு உண்மை நிகழ்வு.நானும் சம்பந்த பட்டிருக்கிறேன்.நிஜத்தில் சேஷூ இறந்து விட்டான்.சேஷூ எப்பவும் புரண்டு,புரண்டு படுப்பதுதான் வழக்கம்.அன்று பாரதி ஒரே பக்கமாய் படுத்திருக்கிறாரே..வலிக்குமே..என்று சவத்தை ஒருக்களிக்க வைத்திருக்கிறாள்.மனநோய்க்கான சிகிச்சை முடிந்து பாரதி இப்போது புட்டபர்த்தியில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.இங்கு சேஷூவை சாகடிக்க எனக்கு மனமில்லை...

------------------------------------------------------------------------------------------------




கூட்டாஞ்சோறு-----05/08/09





வழக்கு ஒன்று:(கோர்டில் பணிபுரியும் நண்பர் சொன்னது)

கும்பகோணம் நீதிமன்றம்.திருட்டு குற்றம் சாட்டப்பட்டு ஒரு பெண் கூண்டில் நிறுத்தப்படுகிறாள்.பெரிதாக ஒன்றுமில்லை.பக்கத்து வீட்டில் ஒரு கால் பவுன் கம்மலை திருடிவிட்டாளாம்.முதன் முறை என்பதால் குறைந்த பட்சமாக ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

ஐயா,நான் என் தரப்பை சற்று விளக்க அனுமதி வேண்டும்.

நீதிபதி கனிவுடன் சொல் என்கிறார்.

ஐயா,என் புருஷன் ஒரு பெருங்குடிகாரன்.இன்னொருத்தியுடன் ஓடி விட்டான்.ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு வைத்தியம் செய்யவதற்காகவே திருட நேர்ந்தது.எனக்கு வேறு ஆதரவும் இல்லை.நான் சிறைக்கு சென்று விட்டால் என் மகனின் கதி.?ஆனால் இனி ஒரு போதும் நான் திருடமாட்டேன்.பார்த்து செய்யுங்கள்..

நிதிபதி யோசிக்கிறார்.அம்மா.குற்றத்தை நீயே ஒப்புக்கொண்டு விட்டாய்.விடுதலை செய்ய முடியாது.உன் பிள்ளையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.நீயின்றி அச்சிறுவனால் இருக்கவும் முடியாது என்று தெரிகிறது.ஆகவே உன் தூண்டுதலின் பெயரில் உன் மகன் வீட்டுக்குள் புகுந்து நகையை எடுத்து வந்து உன்னிடம் கொடுத்ததாக வழக்கை மாற்றி ,உன் மகனையும் உன்னுடன் சிறைக்கு அனுப்புகிறேன்.உள்ளே அவனுக்கு கல்விக்கும் ஏற்பாடு செய்யப்படும்.தண்டனை முடிந்து வந்ததும் உனக்கும் ஒரு வேலைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------வழக்கு இரண்டு:(பத்திரிக்கையில் வெளியான செய்தி)

16 வயது இளம் பெண் ரம்யா.காதல் வந்து விட்டது.காதலனுக்கு வயது 19 தான்.வீட்டில் எதிர்ப்பு.ஓடி போகிறார்கள்.பெண்ணின் தாய் ஹேபியஸ் கார்பஸ் மனு போடுகிறார்.கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர் செய்ய போலிசுக்கு கட்டளையிடப்படுகிறது.அதற்குள் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.போலிஸ் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள்.

மைனர் பெண்ணை கடத்திய குற்றத்துக்கு காதலனுக்கு சிறையும்,பெண்ணை தாயுடன் அனுப்பவும் தீர்ப்பாகிறது.

ஐயா நான் என் தரப்பை உரைக்க அனுமதி வேண்டும்--ரம்யா

சொல்லம்மா?

ஐயா,என் தாய்க்கு நாலு புருஷன்கள்.முதல் புருஷனுக்கு பிறந்தவள் நான்.அவர் பிரிந்து விட்டார்.வரிசையாக தெருவுக்கு ஒன்றாக வைத்திருக்கிறாள்.ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் செய்வாள்.நாலாவது புருஷனுக்கு என்னை விற்று விட இருந்தாள்.அதனால்தான் மனசுக்கு பிடிச்சவனுடன் ஓடிப் போனேன்.

சரியம்மா..நீ மைனராச்சே..காப்பகத்துக்கு போகிறாயா?இரண்டு வருடம் கழித்து புருஷனுடன் சேர்ந்து கொள்.

ஐயா..எங்களுக்கு திருமணம் மட்டுமல்ல,எல்லாமும் ஆகிவிட்டது.இந்நிலையில் அவரை பிரிந்து ,இரண்டு வருடம் கழித்து வந்தால் அவர் என்னை ஏற்று கொள்வார் என்ற உத்தரவாதத்தை கோர்ட் எனக்கு அளிக்குமா?

நீதிபதி யோசிக்கிறார்..சரியம்மா..நீ புருஷனுடன் போகலாம்.அவனையும் விடுதலை செய்கிறேன்..புருஷன் வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனப்தை போலிசார் தொடர் கண்காணிப்பில் உறுதி செய்து கோர்ட்டில் தெரிவிக்க உத்தரவிடப்படுகிறது..

-------------------------------------------------------------------------------------------------

திருவள்ளுவர் பிறந்த மயிலாப்பூரில் அவருக்கு ஒரு கோயில்உண்டு.பூஜை,பிரசாதம்,திருக்குறள் ஓதல் என்று அமர்க்களப்பட்ட கோயில் இந்து அறநிலைய துறையின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது.பெங்களுர் தமிழ்சங்கத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் அள்ளி கொடுத்திருக்கிறார்..ஆனால் மயிலை திருவள்ளுவர் கோயில் இன்று கேட்பாரற்று கிடக்கிறது.அங்கிருக்கும் வள்ளுவர் சிலை அடையாளம் தெரியாத அளவுக்கு அழுக்கடைந்து இருக்கிறதாம்.

இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும் அரசியல் இருக்கிறது.விரைவில் பெங்களூரு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது.18 லட்சம் தமிழரின் ஓட்டுக்கள்தான் அதை நிர்ணயிக்குமாம்.அதற்காகத்தான் அந்த எலி அம்மணத்தோடு அலைகிறதாம்..

-------------------------------------------------------------------------------------------------
ஓபாமா தேசத்தில் ஒப்பாரி அதிகமாயிருக்கிறது.வீடு இல்லாமல் பரதேசியாய் சுற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம்.அதனால் குடிமக்களே ..எங்காவது சென்று வாருங்கள்..விமான சீட்டு இலவசம் என்று கூவிக் கொடுக்கிறார்களாம்.வழிச்செலவுக்கு காசும் உண்டாம்.

-------------------------------------------------------------------------------------------------

லண்டனில் ஒரு பெண் ,தன் திருமணத்துக்கு விருந்தாளிகள் தேவை என்று விளம்பரம் கொடுத்திருக்கிறாள்.தான் ஒரு அனாதை என்றும் தன் திருமணத்தை சிறப்பிக்க ஆட்கள்தேவை..விருந்தாளிகள் நேர்முகத்தேர்வின் மூலம் அனுமதிக்க படுவார்கள்..தகுந்த சன்மானமும் உண்டாம்..(கையில் காசில்லை..வயிற்றில் பெரும் பசி..நண்பன் ஆலோசனைப்படி”மொய்” கவரை வாங்கி சட்டைப்பையில் வெளியில் தெரியும் படி வைத்துக்கொள்டு ஒரு கல்யாணத்தில் ஓசி சோற்றை கும்மியடித்தது நினைவுக்கு வருகிறது)

-------------------------------------------------------------------------------------------------

ஒரு குறும்படம்..நண்பர் பொன்.சுதா இயக்கியது..

மெல்லிய,உற்சாகமான ஹம்மிங்குடன் ஒருத்தி குளிக்கிறாள்.பின் பீரோவை திறந்து ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறாள்..பின் மேக்கப்..பார்த்து,பார்த்து அலஙகரித்து கொள்கிறாள்..பின் நகை,கடிகாரம் என்று ரசனையுடன் அணிகிறாள்..ஒரு முறை ஆளுயர நிலைகண்ணாடி முன் அழகை ரசித்து கொள்கிறாள்.பின் மீண்டும் பீரோவை திறந்து அந்த கறுப்பு அங்கியை எடுத்து முழுவதும் மூடிக்கொண்டு வெளியேறுகிறாள்....

-------------------------------------------------------------------------------------------------