Tuesday, July 20, 2010

கால் எத்தும் கழுதை .. 2



அந்த எழவெடுத்த எளக்கிய கூட்டம்..ஹா..ஹா... கூட்டம்னா முதல்ல 50 சேர் போட்டிருந்தானுங்க . ஒரு 10 பேர் நின்னுக்கிட்டிருந்தானுங்க . மொத எளக்கியவாதி பேசினான் . அப்புறம் அவன். அப்புறம் இவன். அட ! பாலா பட டைட்டில் . அந்தாளு எப்படியும் நமக்கு சான்ஸ் கொடுக்கப் போறதில்லை . பாவம் அந்த நாற்காலிங்க. முழுசும் காலி. எளக்கியவாதீங்கதான் தீர்ற வரைக்கும் , அதாவது நம்ம தாவு தீர்ற வரைக்கும் போட்டானுங்க பாருங்க ஒரு போடு . நடுவில பி.பி.சி லேர்ந்து போன் மேல போன் . பிசியா இருக்கேன்னு சொல்லி சமாளிக்க வேண்டியதா போச்சு . அந்த எழுத்தாளன் பேர் என்னவோ மாறவர்மனோ சோழவர்மனோ ? எங்கயோ எதையோ படிச்சு எழுதிபுட்டான் . நரகத்திற்கு உள்ளே வாம் தலைப்பு . உண்மைதான் . அங்க இருக்கவரைக்கும் அப்படித்தான் இருந்தது . முதல் நாள் ராத்திரிதான் புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தான் . சார் உங்கள மாதிரி எழுத்தாளர் என்னை பாராட்டி பேசினால் நான் தன்யனாவேன்னான் . எல்லாம் சரி . தட்சணை எங்கடான்னேன் . கோமதி நாட்டு மருந்து கடைன்னு போட்டிருந்த ஒரு துணிப்பையில ஒரு முழு பாட்டில் சாராயமும் , செல்வி ஊறுகாய் மூணு பாக்கெட்டும் கொடுத்தான் .

கொஞ்சநேரம் நான் எப்படி எழுத்தாளானா ஆனேன்னு (ஆகிட்டாலும்.) ஒரு மொக்கையை போட்டான் . நான் அவனை சாப்பிட சொல்வேன்னு எதிர் பார்த்தான் போல . ஒரு வழியா அவன் தலை மறைஞ்சதும் பாட்டிலை திறந்தேன் . ஒரு ரவுண்டு போச்சு . போன் அடிச்சுது . அவன் தான் . என்னடான்னேன் . சார் குடிச்சிட்டு மட்டையாகிடாதீங்க . விழாவுக்கு வந்திருங்க .

கண்டிப்பா வரேன்யா . போனை வை .

சார் வர்றது மட்டும் பத்தாது . கதையை படிச்சிட்டு ஒரு நாலு வார்த்தைன்னு இழுத்தான் .

அதென்னடா நாலுவார்த்தை . எழுவு மாதிரி . ஏன் நாற்பது வார்த்தை . இந்த இன்னா நாற்பது மாதிரி பேசக்கூடாதா ?

பேசுங்க சார் . அது என் பாக்கியம் . போனை வச்சிட்டான். அப்ப பிடிச்சது அவனுக்கு சனி....

நீங்க மொசாம்பிக் போயிருக்கீங்களா ? தம்பி கொஞ்சம் ஞாபகபடுத்தறியா ? பொறை வாங்கணும். என்னோட செல்லத்துக்கு . இல்லை என்னை கழுதைன்னு திட்டுமே. ஏன்னு கேக்கறீங்களா ? நேத்திக்கு என் நாயை கூட்டி கிட்டு வாக்கிங் போனேன் . எதிரில் வந்த ஒரு குடிகாரபாவி கேட்டான் . கழுதையை எங்க கூட்டி கிட்டு போறேன்னான் . ஏண்டா கண்ணு தெரியலை.. இது நாய்டான்னேன் . அதுக்கு அவன் சொன்னான் . நான் நாயை கேட்டேன்னான் . பாருங்க ஒரு எளக்கியவாதியோட நிலைமையை . அப்பாடா ஒரு வழியா முடிச்சானானுங்கப்பா. நான் தான் முடிவுரை. கூப்பிட்டதுக்கு நன்றி. அடுத்த வாட்டி இந்த எழவுக்குக்கெல்லாம் கூப்பிடலைன்னா ரொம்ப நன்றி..


ஆட்டோ அரேஞ்ச் பண்ணி கொடுத்தார்கள் . டிரைவர் உக்காருங்க தம்பின்னான் . தம்பியா ? பரவாயில்லை . டை அடிச்சது வேலை செய்யுதுன்னு பெருமை பட்டு முடிக்கறதுக்குள்

எங்க அண்ணே போகணும் ?

இன்னும் பத்து நிமிஷந்தான் இருக்குப்பா என்றேன் அண்ணனாகி தம்பியானவனிடம்

இன்னா சீரியல் சாரே என்றான் அவன்

முட்டாள் டாஸ்மாக் மூட என்றேன்

பிளாக்கில வாங்கலாம் சார்

நான் ஒன்னும் ஆட்டோ ஓட்டலைப்பா.. எழுத்தாளன்யா


சாரே . நீங்கதானா அது ? தெய்வமே


இவன் கேரளாக்காரனாயிருப்பானோ என்று சந்தேகம வந்தது . ஆனால் அவன் எழுத்தாளன் என்று சொல்வது இந்த சுவற்றில் எழுதுவார்களே” தலைவர் அழைக்கிறார்” அதையாம்

பொறை வாங்கணும் தம்பி . ஆமாம் நீ எம்.ஜி.ஆர் ரசிகனா ?

ஆமாம் சார் . நீங்களுமா ? கேட்டபடியே எஃப் .எம் ஐ போட்டான் . வீடு வரை உறவு . வீதி வரை மனைவி என்று அது புலம்ப , நம்மாள் சொன்னான் .

தத்துவ பாட்டுன்னா தலைவர்தான் . இந்த பாட்டுல புரட்சித்தலைவர் என்னமா நடிப்பார் . நீ பார்த்திருக்கியா என்று சட்டென்று ஒருமைக்கு தாவினான் . அடுத்த வாட்டி அடிச்சிடுவான்னு நினைக்கிறேன் . சரக்கும் , பொறையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் சோழவர்மன் போன் பண்ணான் .

தலைவரே ! என் கதையை உள் வாங்கி படிச்சிருக்கீங்க . அவ்வளவு நேர்த்தியான விமர்சனம் என்றான் . அவனிடம் நேற்று அவன் போன பிறகு நடந்ததை சொல்ல முடியுமான்னு தெரியலை . உங்க கிட்ட சொல்றேன் . நீங்க அவனுக்கு சொல்லிடுங்க .

அதாவது அவன் கொடுத்த ஃபுல் பாட்டில் காலி . ஊறுகாய் லேபிள் மட்டும்தாம் மீதி . அதில் செல்வி என்னை பார்த்து கண்ணடித்து அழைத்தது வேண்டாம் . ஊறுகாய் என்ன எண்ணெயோ எழவோ ஒத்துக்கலை . அந்த நேரம் பார்த்து கரண்ட் வேற போயிருச்சு . வயித்தை கலக்குது . பாத்ரூம் போயிட்டு பார்த்தா , சொட்டு தண்ணி இல்லை . வேற வழி .. நரகத்திற்கு வெளியேதான் . ஆனா என்ன வேணுமின்னா சொல்லுங்க . அப்பதான் சொர்க்கத்துக்கு உள்ள இருக்கிற மாதிரி இருந்துச்சு ..

(அந்த பி.பி.சி போன் தாங்க முடியலைப்பா . என்ன சொல்றது அவனுக்கு ? . பி.பி.சினா பிஸ்மில்லா பீரோ கம்பெனி )


15 comments:

யாசவி said...

நச் தலைவரே


கொஞ்சம் பத்தி பத்தியா பிரிச்சி எழுதக்கூடாதா?


பகடி அருமையா வந்து இருக்கு

சிப்பு சிப்பா வருது :)

யாசவி said...

மொத வெட்டா?

யாசவி said...

சும்மா அடிச்சி ஆடுங்க

Unknown said...

ஆனாலும் இவ்வளவு குசும்பு ஆகாது... கண்ணீர் வருமளவு சிரிச்சிட்டு இருக்கேன்..

ஒரு பத்து முறையாவது படிச்சிருப்பேன்... சூப்பர்..

மதார் said...

.

பத்மா said...

hmm ithula yaar paavam

பாலா said...

ஹா.. ஹா.. ஹா.. சோழவர்மன் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறாரா?? :) :)

vasu balaji said...

பாவி மனுஷா. அங்க உக்காந்து யோசிச்சதா:)).

Sanjai Gandhi said...

கட்டதொரைக்கு கட்டம் சரி இல்ல..

உண்மைத்தமிழன் said...

உம்மையெல்லாம் எப்படிய்யா இன்னும் அந்த மனுஷன் நண்பர்ன்னு நம்பிக்கிட்டிருக்காரு..!

பாவம் அவரு..!

Kumky said...

பகடி...பக்கா.

:))

நெசமா தலைவரே..?

பித்தன் said...

ஓகே சனியன் சடபோட ஆரம்பிச்சிடிச்சு......

Jackiesekar said...

பகடிடிடிடிடி

butterfly Surya said...

அய்யோடா.. ஆரியமாலா..

R.Gopi said...

ஹையா...ஹையா... இது ஆரியமாலா...

தல... போட்டு பின்னி பிரிச்சு எடுத்துட்டீயளே!!!

இன்னும் நல்லா அடிச்சு ஆடுங்க....