Tuesday, July 27, 2010

இன்ன பிற





பத்ம வியூகத்தில் அபிமன்யூ
வைகுண்ட ஏகாதசிக்கு
இரண்டு படங்களாம்
பராசக்தியும் , பெண்சிங்கமும்


கூவாகத்தில் சிலை
பீஷ்மருக்கு
செருப்பு மாலையும்
விந்தாபிஷேகமும்


சர்ப்ரைஸ் ஷாக்
பீமனை சரவண பவனில்
சப்ளையராக பார்த்ததில்
கதை என்ன ? என்றேன்
செருப்பு மாறிப் போச்சு என்றான் .
அர்ஜீனனுக்கு மதுரையில் வேலையாம்
கூலிப் படைக்கு தலைவனான்
வச்ச குறி தப்பாது


சோழி உருட்டி ஜோசியம்
சகாதேவனுக்கு கிளி
சூப்பு ரொம்ப இஷ்டம்


லேசர் சிகிச்சைக்கு முன் பதிவு கியூ
திருதராஷ்டிரன் , குந்தி சகிதம்
நாங்க இருக்கோம் என்ற
இளைஞனை வெறிக்கிறாள் .
மூச்சில் உஷ்ணம் ஏறுகிறது
துரியோதனன் தொடையில்
டாட்டூஸ் குத்தப்படுகிறது



இலவச டிவி
கிருஷ்ணனுக்கும் ஒன்று கிடைத்தது
ஜெமினி சானலில் என்.டி.ஆரை
பார்த்த பிரமிப்பு அவனுக்கு



மனுநீதி சோழன் கதை
தருமனுக்கு சொன்னார்கள்
கோபாலபுரம் தரிசனம்
கோடி புண்ணியமாம்
மேல்சபையில் சீட்டு
அவனுக்கும் நிச்சயமாம்

நேரடி ஒளிபரப்பாம்
துச்சாதன துகிலுரிதல்
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்
போத்திஸின் சாமுத்திரிகா பட்டு

22 comments:

RRSLM said...

:)))

Cable சங்கர் said...

//நேரடி ஒளிபரப்பாம்
துச்சாதன துகிலுரிதல்
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்
போத்திஸின் சாமுத்திரிகா பட்டு //

சர்காஸிஸத்தில் உன்னை அடிக்க ஆளில்லைய்யா..

vasu balaji said...

யப்பா சாமி! கையரிப்பு தீர்ந்துச்சா? நவீன மகாபாரதத்தில் கூட கோபாலபுரம்:)). பின்னிட்டீங்கஜி.

Anonymous said...

மணி,

அருமை.

Vidhoosh said...

பாரத சமுதாயம் வாழ்கவே !!

Katz said...

அருமை.

உண்மைத்தமிழன் said...

தண்ணியடிக்காமலேயே தண்ணியடிச்ச மாதிரி எழுதுற ஒரே ஆளு நீதாண்ணே..!

செ.சரவணக்குமார் said...

அசத்தல் மணிஜீ.

வால்பையன் said...

காக்கா

பற பற!

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

VISA said...

எப்படி? இப்படி?

'பரிவை' சே.குமார் said...

//நேரடி ஒளிபரப்பாம்
துச்சாதன துகிலுரிதல்
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்
போத்திஸின் சாமுத்திரிகா பட்டு //


அசத்தல் மணிஜீ.

நேசமித்ரன் said...

அண்ணேஏ...ஏஏஏஏஎ!

Thamira said...

அண்ணே.. ஒங்களுக்கு ரொம்ப அறிவுண்ணே. எனக்கு ஒண்ணியும் புரியலை.

பாலா said...

பின்றீங்களே மணிஜீ!! :)

அன்புடன் நான் said...

சரியான அடி அடிக்கிறீங்க ... எவனுக்கு உறைக்கிறது?

கலகலப்ரியா said...

:o)

பா.ராஜாராம் said...

நேற்றே வாசித்தேன்...

சர்ரியலிசத்திலும் சேர்க்க முடியாத கடா முடாவா இருக்கிறது போல இருக்கிறது. (ஒரு வேலை சிலோன் எடுக்கலையோ என்னவோ, எனக்கு)

மணிஜி தளத்தில் என்னால் பயணிக்க இயலவில்லை.

(தளம் வந்து, வாசித்து போவது என்பது, சற்றேறக் குறைய முக்கால் மணி நேரம் ஆகிறது. கீழே வர, கர்சரை தட்டும் போது, ஹாங் ஆகிறது கம்ப்யூட்டர். நண்பர்கள் யாருக்கும் இதே தொந்திரவு இருக்குமானால், அழை பேசியில் எவ்வளவு சொன்னாலும் கேட்காத மணிஜிக்கு தெரியப் படுத்தினால், உங்களுக்கு என் பேத்தியை/பேரனை கட்டித்தர சம்மதமாகிறேன்)

butterfly Surya said...

வாவ்.. எப்பூடி..?

மணிஜி said...

நண்பர்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி..

பா.ரா வேறு யாரும் சொல்லவில்லை. டெம்ப்ளெட் மாற்றுகிறேன்

மங்குனி அமைச்சர் said...

சார்ப்பா அடிக்கிரிகளே

vinthaimanithan said...

//இலவச டிவி
கிருஷ்ணனுக்கும் ஒன்று கிடைத்தது
ஜெமினி சானலில் என்.டி.ஆரை
பார்த்த பிரமிப்பு அவனுக்கு//

குப்புனு சிரிப்பு வந்துடுச்சு

//நேரடி ஒளிபரப்பாம்
துச்சாதன துகிலுரிதல்
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்
போத்திஸின் சாமுத்திரிகா பட்டு//

கலக்கல்ங்க... ஆமா ஒரு டவுட்டு... "இப்போது உரியப்பட்டுக் கொண்டிருப்பது உங்கள் போத்தீஸின் சாமுத்ரிகா பட்டு"னு ஏதும் குரல் ஒலிக்குமா??!!