Wednesday, July 14, 2010
ஒரு கதை
அஞ்சு மணிக்கெல்லாம் எக்மோர் போய் லைன்ல வண்டியை போடணும் . இன்னிக்கு கொஞ்சம் நிறைய சவாரி போகும்னு நினைக்கறேன் . உமாவை நாளைக்கு செக்கப்புக்கு வேற கூட்டி கிட்டு போகணும் என்று நினைத்தபடி எழுந்தேன். உமா லேசாக சிணுங்கி “மணி என்னங்க என்றாள் . 4 மணி உமா . நான் குளிச்சிட்டு கிளம்பறேன் . நீ மெதுவா எழுந்திரு போதும். வயிறு வலி இப்ப எப்படியிருக்கு ?
பரவாயில்லைங்க . அதான் நைட்டு ஃபுல்லா விளக்கெண்ணெய் தேய்ச்சி விட்டீங்களே .
அம்மா சொல்வாங்க . நியாபகம் வந்துச்சு .
சும்மா கதை . உங்க புள்ளையை ஆசையா தடவி கொடுத்தீங்க . அப்படித்தானே என்றாள் உமா .
குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு சரி அப்படியும் வச்சுக்கலாம் . கதவை சாத்திக்க என்றபடி வெளியில் வந்தேன் .
இருங்க . கொஞ்சம் வாசல்ல தண்ணியை ஊத்திட்டு கிளம்புங்க
நேற்று முழுவதும் ஆட்டோ மக்கர் பண்ணி கொண்டிருந்தது . உமாவை நினைத்துக்கொண்டே ஸ்டார்ட் பண்ணினேன் . ஒரே ஸ்டார்ட் ..இன்னும் பனி மூட்டம் விலகவில்லை . ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது . கடையில் வண்டியை நிறுத்தினேன் . தினத்தந்தியை பிரித்தேன் .சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படத்தின் இயக்குநரின் பேட்டி வந்திருந்தது .
நான் சிகரெட்னு கேட்க கூட வேணாம் . குறிப்பறிஞ்சு பாக்கெட் வந்துடும் உமா .
அப்படியா ? அப்புறம்..
அதை பத்த வைக்க ஒரு போட்டி நடக்கும் பாரு .
ஹீரோயின் கூடவா ?
ம்ம்.. ஆனா அவளும் ஒன்னு பத்த வச்சுக்குவா .
நீங்க அவ கூட நிறைய பேசக்கூடாது .
அப்புறம் அவளுக்கு எப்படி சீன் சொல்றது ?
உங்க அஸிஸ்டெண்ட் சொல்லட்டும் . நாளைக்கு பேப்பர்ல எதாவது அரசல் ,புரசலா வந்துச்சு . பலி போட்ருவேன் .
என்னையா ?
ம்ம் . உன்னை பலிபோடவா உன் கூட வந்தேன் . அந்த சிறுக்கியை என்றாள் உமா பல்லை கடித்தபடி .
மொதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும் . அப்புறம் பார்க்கலாம் . இன்னிக்கு சேலம் புரொடியூசர் வராரு . அநேகமா கிளிக்காயிடும்னு நினைக்கிறேன் .
ஒரு ரூபா காயின் கொடுங்களேன்
எதுக்கு உமா ?
சமயபுரம் மாரியம்மனுக்கு முடிஞ்சி வைக்கிறேன் . நிச்சயம் நடக்கும் .
தம்பி டீ ஆறுதே . அப்படி என்ன பேப்பர்ல படிக்கிறீங்க ?
ஆட்டோவை கிளப்பினேன் . ராக்ஃபோர்ட் வந்திருக்கும் . வரிசை எப்படியிருக்கும்னு தெரியலை . தலைவர் கிட்ட சொல்லியிருக்கேன் . பார்க்கலாம் . ஸ்டேஷனை அடைந்தேன்.கூட்டம் வெளியில் வர ஆரம்பித்திருந்தது . தயங்கியபடி அருகில் வந்தான் அந்த இளைஞன் .
எங்க போகணும் சார் ?
முதல்ல ஒரு லாட்ஜ்க்கு போகணும் . அப்புறம் இந்த அட்ரஸ் என்றபடி ஒரு கார்டை காட்டினான் .
லேசாக குடித்திருந்தேன் . சேலம் பார்ட்டியை சந்திக்கவே முடியவில்லை .சேம்பருக்கு போயிட்டு வந்துடறேன் . லஞ்சுக்கு அப்புறம் சந்திக்கலாம் என்றார் . நடேசன் பார்க்கில் கொஞ்சம் பொழுதை ஓட்டிவிட்டு ரூமுக்கு போனால் , சார் தூங்கறார் . எழுப்பினா பயங்கர கோபம் வரும் என்றான் ஒரு அல்லக்கை . காலையில் பார்த்த போது தென்படாத ஒரு லேடிஸ் செருப்பு கண்ணில் பட்டது . டிஸ்கஷன் நடக்கிறது என்று நினைத்துக் கொண்டேன் .
ஈவினிங் வரட்டுமா சார் ? சார் கண்டிப்பா சந்திக்கலாம்னு சொலியிருந்தார் என்றேன் பலகீனமான குரலில்
உன் கிட்ட மட்டுமா சொல்றாரு . பத்து பேர் கிட்ட அப்படித்தான் சொல்லியிருக்காரு . அதுல ஒருத்தன் புத்திசாலி . பாரு என்று அந்த செருப்பை காட்டினான் அல்லக்கை . சே என்ன பிழைப்பு இது . திறமைக்கு இங்க மரியாதையே கிடையாதா ? என்று நொந்து கொண்டேன் . கிடையாது என்று தெரிந்திருந்தும் . அதிர்ஷ்டம் வேண்டும் . இல்லை எவனுக்காவது வாரிசாக இருக்க வேண்டும் .வெளியில் வந்தேன் . யாரோ பேர் சொல்லி அழைத்தார்கள் . கிருஷ்ணா !
ஒரு பழைய ஜீன்ஸும் , டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு வெளியில் வந்தான் அந்த இளைஞன் . ஆட்டோவில் ஏறிக்கொண்டான் .
எங்க போகணும் சார் ?
முதல்ல வீனஸ் காலணி
எந்த தெரு சார் ?
மணிரத்னம் வீடுப்பா என்றான் . ஹம்மா..ஹம்மா என்று முணுமுணுத்தபடி
மணிரத்னம் வீடு . சற்று தள்ளி வண்டியை நிறுத்தினேன் .போன சுருக்கில் திரும்பி வந்தான் . டிநகர் போங்க என்றான்
டிநகர்ல எங்க சார்?
டைரக்டர் ஷங்கர் வீடு . தெரியுமா?
தலையை அசைத்தபடி வண்டியை கிளப்பினேன் .கிருஷணா!
வேண்டாம் கிருஷ்ணா . உமா திட்டுவா . இப்பல்லாம் குடிக்கறதில்லடா என்றேன் நப்பாசையுடன்
வா என்று அவன் பைக்கில் ஏற்றி கொண்டான் . அரை பாட்டில் ஆர்டர் பண்ணினான் . சிக்கன் சாப்பிடறியாடா?
உமாவுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும் . இந்த நேரத்தில் அவளுக்கு பிடிச்சதை வாங்கி கொடுக்க வேண்டும் .
கிருஷ்ணா ஒரு பார்சல் கிடைக்குமா? என்றேன்.
வீட்டுக்குத்தானே . போகும்போது வாங்கிக்கலாம் .
ரெண்டு ரவுண்டு போன பிறகு எல்லாம் மறந்து போச்சு . அவனிடம் கொஞ்சம் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்று நினைத்தேன் . மறந்து போச்சு . குடி வாங்கி கொடுத்தவனிடம் பணம் கேட்கும் கொடுமை இருக்கிறதே ..வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் இறங்கியிருந்தது . சேலம் பார்ட்டி என்ன ஆச்சு என்று உமா கேட்பாள் . அவளிடம் உண்மையை சொல்லக்கூடாது . ரெண்டு நாள் கழித்து வர சொல்லியிருக்கிறார் என்று சொல்லி விடலாம் . கிருஷ்ணா ஒரு பொள்ளாச்சி பார்ட்டியை சொல்லியிருக்கிறான் . பார்க்கலாம் .
கதவை தட்டினேன் . பதிலில்லை . தள்ளினால் கதவு திறந்திருந்தது . லைட் கூட போடாமல் என்ன பண்ணுகிறாள் இவள் ? உமா என்று மெல்லிய குரலில் அழைத்தேன் . ஒரு வேளை தூங்கலாம் . ஆனால் உமா முனகி கொண்டிருந்தாள் .
இப்ப எங்க சார் போகணும் ?
லாட்ஜ்க்கு போயிடுங்க . டைரக்டர் வெளியில் போயிருக்காராம் . சாயந்திரம் மறுபடியும் போகணும் என்றபடி அவன் பணத்தை எண்ண ஆரம்பித்தான் .
லாட்ஜில் அவனை இறக்கி விட்டு
சார் ஒரு நிமிஷம் என்றேன் .
கேள்விக்குறியுடன் பார்த்தான் . சினிமா சான்ஸ்தானே தேடறீங்க என்றேன்
ஆமாம் . முதல்ல உதவி இயக்குநர் ஆகணும் . அப்புறம் நடிக்கணும்
வேற எதாவது தொழில் தெரியுமா ?
டிகிரி முடிச்சிருக்கேன் என்றான் கொஞ்சம் பெருமையுடன் .
ஆட்டோ ஒட்ட கத்துக்கங்க . நிச்சயம் உதவும் என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினவனை புரியாமல் பார்த்தான் அவன்
முதலில் ஒன்றும் புரியவில்லை . குளமாய் ரத்தம் அவளை சுற்றி . நைட்டி நனைந்திருந்தது . என்னவாயிற்று ? அரை மயக்கத்திலிருந்தாள் உமா .
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
சுடுதுண்ணே..!
:-(
நிதர்சனம்!...........
ப்ச் ... :(
அசந்தர்ப்பத்தில் இப்படி கேட்பது தப்புதாண்ணே... ஆனாலும் கல்யாணத்துக்கு அழைப்பே வரவே இல்லை?
செக்யூரிட்டி - வாச்மேன் வேலை கூட பாக்கிறாங்க.. :(
உமா :(
நேத்து இடுகையில்தான் எழுதினேன். மணிஜி ஒத்தை வரியில் புரட்டிப் போடும் திருப்பம்னு. இன்னைக்கு இது. காதுல மூக்குல புகை வருது:).கீப் இட் அப் அண்ட் தாங்க்யூ ஃபார் ப்ரூவிங்க் மி ரைட்:))
Super
Fucking...
:(
வேற எதாவது தொழில் தெரியுமா ?
பிக்பாக்கெட்டுக்கும், கொள்ளையடிக்கறதும் ரொம்ப ஈசி- இது நீங்க சொன்னதுதான்...
வலி.
உமா, மஹா வலி. :-((
:-)
கடைசியில் நெஞ்சில் வலி ஏற்படுத்திவிட்டீரே!!
புரியலைண்ணே!!! :(
இன்னும் இதே போல எத்தனை உமா இருகீறர்களோ
I love Maniji's writing very much. He create visuals in my mind with kutti kutti sentences. Thats the beauty of his writing.
I meant the story is Fucking me inside out. Thats what I meant in my comment. So Guys dont take it in a wrong way.
தம்பி தமிழில பிளாக் எழுதிட்டு இங்கிளிபீஸ்ல கமென்டா நடத்து நடத்து.
அந்த வார்த்தையை தமிழாக்கம் செய்து போட்டிருந்தால் இன்னும் கேவலமாக இருந்திருக்கும் ஹீ ஹீ ஹீ.
ஸ்ஸப்பா... செமையா இருக்கு.
மணிஜீ..........
கதை நெஜமாவே ரொம்ப சூடு....
படித்ததும் மனதும் கனத்தது....
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே
நிதர்சனக் கதை ரொம்ப உருக்கமான உண்மை அதனால்தான் சூடு கொஞ்சம் அதிகமோ....!
என்னங்க இது முதல்ல பொன்வாசுதேவன். இப்ப நீங்க.. ரணகளமா கதை இருக்கு. கொன்னுட்டீங்க
எங்கயோ போய்ட்டீங்க.சீக்கிரமே இதுக்காக ஒரு “Magic Moment"டன் சந்திக்கிறேன்.
Post a Comment