Tuesday, July 7, 2009

மானிட்டர் பக்கங்கள்----------07/07/09

ஒரு மாலை நேரம்..லேசாக பசியெடுக்க என் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு ஓட்டலுக்கு போனேன்..சூடாக போண்டா போட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒரு செட் போண்டா சொல்லி விட்டு ஓட்டல் வெளி கண்ணாடி வழியாக பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன்..கண்ணாடிக்கு வெளியே அவன் தென்பட்டான்..மொட்டை அடித்திருந்தான்..கசங்கிய உடை..என்னை பார்த்து சிநேகமாக சிரித்தான்..நான் பதிலுக்கு சிரிக்கவில்லை..சட்டென்று அவன் முகத்தில் ஒரு பாவமாற்றம் ..போண்டா வந்தது..பிய்த்து சுவைத்துக் கொண்டே அனிச்சையாக திரும்பி பார்த்தால்,,அவன் என்னையே அடிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்..அவன் பார்வையில் இருந்த கூர்மை சுரீரென்றது..மீண்டும் சிரித்து ஏதோ சைகை காட்டினான்..பசிக்குது..எதாவது கொடேன் என்பதாக எனக்கு பட்டது..பார்வையை விலக்கி போண்டாவில் கவனம் செலுத்தினேன்..இப்போது வேறு பக்கம் பார்த்தால் மீண்டும் அவன்..இந்த முறை அவன் சிரிப்பில் ஒரு பரிகாசம் இருப்பதாக எனக்கு பட்டது...ஒருத்தன் பசியோடு பார்க்கிறான்..அவனை நீ தவிர்க்கிறாய்..நீ சாப்பிட்டது உனக்கு செரிக்காது என்கிறானோ...சரி..அவனுக்கு எதாவது வாங்கி கொடுக்க முடிவு செய்தேன்..காபியை குடித்து விட்டு பில்லுடன் கல்லாவில இருந்தவனிடம் 100ரூபாயை நீட்டி..அவன் கேக்கறதை கொடுங்க என்று என் வள்ளல் தன்மையை...வெளிகாட்டுவதற்கு முன் ... அவன் ஒரு 50ரூபாய் தாளை அலட்சியமாக நீட்டி “ரெண்டு செட் போண்டா பார்சல் “என்றான்..பாய்ஸ் படத்தில் கிராபிக்ஸீல் துண்டாவது என் மூக்காய் உணர்ந்தேன்..


கொஞ்சம் அரசியல்.....

ஒரு தொழிலதிபர் ஒரு விழாவிற்கு பெரிய இடத்தை அழைக்க நிணைத்தார்..மீடியேட்டர் மூலம் பெரிய இடத்தின் பர்னிச்சர் கடையில் சந்திப்பு நிகழ்ந்தது.. ”இரண்டாவது” அதிகார மையம் போட்ட நிபந்தணைகள்..

1.பத்து லட்சம் ரூபாய் ரொக்கம்...

2.வீட்டிலிருந்து விழா நடக்கும் இடம் வரை போஸ்டர்,தோரணம்(அன்னைக்கும்,மகளுக்கும்) அமர்க்களப்பட வேண்டும்..

3.மினிமம் ஒரு கிலோ கொண்ட வெள்ளியிலான பரிசு தரவேண்டும்..(

4.முக்கியமான நிபந்தணை.....பத்து லட்சம் விவகாரம் எக்காரணம் கொண்டும் “பெரியவருக்கு” தெரியக் கூடாது...

5.போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் பெரியவர்,இவர்கள் இருவர் படம் மட்டுமே..

அடப்பாவிகளா...(சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மீடியேட்டருக்கு ரூ25,000/-)

அவர் சொன்னது இது...அப்படி ஒண்ணும் இந்தம்மா வேணாம்..அந்தம்மா கைப்பட்டது எதுவும் விளங்கிடல..விட்டுடலாம்..


நீங்க எளுதறது எதுவும் விளங்கலயே?

இருத்தலிசம் தெரியுமா உனக்கு?

யாருக்குங்க தெவசம்...

நீட்ஷே வாசித்திருக்கிறாயா..?

எனக்கு கோட்சேதான் தெரியும்..காந்தியை சுட்டு கொன்னவரு..

பூர்ஷ்வாக்கள் பற்றியாவது..?

நைட்டு தண்ணி ஊத்தி வச்சா காலைல பழைய சோறுதான்..

ஓஷோ கேள்விபட்டிருக்கிறாயா..?

எங்கங்க எழவு விளுந்திருச்ச்சு...

அதிகாரமாவது..?

அஞ்சலை எப்ப மீன் குழம்பு வச்சாலும் காரமாத்தான் வைக்கும்..

என்ன வேலை பாக்குற நீ..?

கல்லுடைக்குர வேலை..அய்யா நீங்க..

சொல்லுடைத்தல் எமக்குத் தொழில்..

பார்த்துங்க..பல்லை உடைச்சுர போறாங்க...


ஒரு தகவல்.....

இந்த ஜீலை மாதம் வரும் தேதிகளின் கூட்டுத் தொகை அந்தந்த எண்களில் முடிகிறதாம்..உதாரணம்..இன்று தேதி 07/07/2009 ---இதன் கூட்டு தொகை --7
இது போல்தான் இந்த மாதம் 1 முதல் 31 ஆம் தேதி வரை வருகிறது....

34 comments:

Jackiesekar said...

ஏம்பா ஒரு திறப்பு விழாவுக்கு அவ்வளவா கேட்குறாங்க????

மணிஜி said...

//ஏம்பா ஒரு திறப்பு விழாவுக்கு அவ்வளவா கேட்குறாங்க????///

கம்மியாம்...அப்புறம் ஊருக்கு போயிட்டு வந்துட்ட போல..

தராசு said...

கடைசி கேள்வி பதில்கள் கலக்கல் தலைவரே

மணிஜி said...

//கடைசி கேள்வி பதில்கள் கலக்கல் தலைவரே//

தராசு அண்ணே..உங்க பதிவு கலக்கல் காமெடி..பின்னுட்டம் போட முடியாம கீ போர்டு சதி..வருகைகு நன்றி..

நையாண்டி நைனா said...

என்னைய கூப்பிட்டா ஒரு லச்சம் போதும்.

Raju said...

அண்ணே, போட்டோவுல நல்லா கிண்டுறீங்க..!
பக்கத்துல யாருண்ணே அது,?

வால்பையன் said...

//சொல்லுடைத்தல் எமக்குத் தொழில்..
பார்த்துங்க..பல்லை உடைச்சுர போறாங்க...//

ஆமாமா பார்த்து ஜாக்கிரதையா இருங்க!

:)

மணிஜி said...

//என்னைய கூப்பிட்டா ஒரு லச்சம் போதும்.//

நைனா உங்க வருகையே லட்சம் பெறுமே..

மணிஜி said...

//அண்ணே, போட்டோவுல நல்லா கிண்டுறீங்க..!
பக்கத்துல யாருண்ணே அது,?//

டக்ளஸ் கிண்டறதுதானே நம்ம வேலையே...அது ஒரு விளம்பர மாடல்..

மணிஜி said...

////சொல்லுடைத்தல் எமக்குத் தொழில்..
பார்த்துங்க..பல்லை உடைச்சுர போறாங்க...//

ஆமாமா பார்த்து ஜாக்கிரதையா இருங்க!//

வேவ் லெந்த் தல..நா கமெண்ட் போட்டாலும் இதைத்தான் போட்டிருப்பேன்...டிரிங்க் அலைக்..திங்க் அலைக்..

உண்மைத்தமிழன் said...

அந்த வீடு அப்படித்தாண்ணே..!

பேசாம பெரிய வீட்டைப் புடிச்சா பிரச்சினையே இல்லை..

உண்மைத்தமிழன் said...

அந்தக் கடைசி கட்டுடைத்தலை போட்டு உடைத்திருப்பது கண்டு என் மனம் பட்டென்று போனது..

நன்று..!

R.Gopi said...

//வேவ் லெந்த் தல..நா கமெண்ட் போட்டாலும் இதைத்தான் போட்டிருப்பேன்...டிரிங்க் அலைக்..திங்க் அலைக்..//

********

Write-up is super and the comment to Vaal is SUPER NACH .......

Kalakkunga "THALA"....

Sari, andha shop opening enna aachu?

R.Gopi said...

//தண்டோரா said...
//அண்ணே, போட்டோவுல நல்லா கிண்டுறீங்க..!
பக்கத்துல யாருண்ணே அது,?//

டக்ளஸ் கிண்டறதுதானே நம்ம வேலையே...அது ஒரு விளம்பர மாடல்..//

***********

Model super anne.... heee heee

NAAN KAIYILA KARANDI VACHU IRUKKARA MODEL PATHI SONNEN......

butterfly Surya said...

பத்து லட்சமா..??

பேசாம கடையே எழுதி கேட்கலாம்.

மேலு உள்ள படத்திற்கான மேட்டர் என்ன..??

அதென்ன லேபிள்ஸ்கு அப்படி ஒரு பெயர்கள்..???

நாஞ்சில் நாதம் said...

பத்து லட்சமா..??

முதலுக்கே மோசம். வெளங்கிடும்

மணிஜி said...

//அந்த வீடு அப்படித்தாண்ணே..!

பேசாம பெரிய வீட்டைப் புடிச்சா பிரச்சினையே இல்லை..//

அண்ணே உங்களுக்கு எல்லா வீட்டையும் தெரியும் போல..

மணிஜி said...

////வேவ் லெந்த் தல..நா கமெண்ட் போட்டாலும் இதைத்தான் போட்டிருப்பேன்...டிரிங்க் அலைக்..திங்க் அலைக்..//

********

Write-up is super and the comment to Vaal is SUPER NACH .......

Kalakkunga "THALA"....

Sari, andha shop opening enna aachu?//

கோபி நன்றி...

மணிஜி said...

//பத்து லட்சமா..??

பேசாம கடையே எழுதி கேட்கலாம்.

மேலு உள்ள படத்திற்கான மேட்டர் என்ன..??

அதென்ன லேபிள்ஸ்கு அப்படி ஒரு பெயர்கள்..???//

அதெல்லாம் அஜால்..குஜால்ல் கண்டுக்காதீங்க தல...

Anonymous said...

//போண்டா/ஜிகர்தண்டா/விதண்டா//

ஏண்டான்னு யாராவது சட்டையப் பிடிச்சுக் கேட்டுறப் போறாங்க. பார்த்து. சென்னையில் இருக்கீங்க.

மணிஜி said...

பத்து லட்சமா..??

முதலுக்கே மோசம். வெளங்கிடும்//

அண்ணே இதுஎல்லாம் ஒண்ணுமேயில்லே...

Anonymous said...

just 10 lacs ப் பூ

குடந்தை அன்புமணி said...

அப்புறம் எதுக்கு அவன் உங்களை அப்படிப் பார்த்து சிரிக்கணும்?

பத்து லட்சம்? அய்யா ஆளைவிடுங்கய்யா...

கடைசி கேள்வி- பதில்... யாருக்காக...

மணிஜி said...

///போண்டா/ஜிகர்தண்டா/விதண்டா//

ஏண்டான்னு யாராவது சட்டையப் பிடிச்சுக் கேட்டுறப் போறாங்க. பார்த்து. சென்னையில் இருக்கீங்க.//

நன்றி நண்பரே....

மணிஜி said...

//just 10 lacs ப் பூ//

அக்னி..அடிவயித்துல எரியுது..

மணிஜி said...

//அப்புறம் எதுக்கு அவன் உங்களை அப்படிப் பார்த்து சிரிக்கணும்?

பத்து லட்சம்? அய்யா ஆளைவிடுங்கய்யா...

கடைசி கேள்வி- பதில்... யாருக்காக...//

அன்பு கிட்ட எனக்கு பிடிச்சது இதுதான்..எல்லாம் தெரிஞ்சும்.....

R.Gopi said...

//ஒரு தகவல்.....

இந்த ஜீலை மாதம் வரும் தேதிகளின் கூட்டுத் தொகை அந்தந்த எண்களில் முடிகிறதாம்..உதாரணம்..இன்று தேதி 07/07/2009 ---இதன் கூட்டு தொகை --7
இது போல்தான் இந்த மாதம் 1 முதல் 31 ஆம் தேதி வரை வருகிறது....//

***********

Indru ORU THAGAVAL super....

"Thenkachi"kku pottiyaa?? Appadinnaa, naan UNGA KATCHI

யாத்ரா said...

இருத்தலிசம் தெரியுமா உனக்கு?

நீட்ஷே வாசித்திருக்கிறாயா..?

பூர்ஷ்வாக்கள் பற்றியாவது..?

ஓஷோ கேள்விபட்டிருக்கிறாயா..?

அதிகாரமாவது..?

சொல்லுடைத்தல் எமக்குத் தொழில்..

:) :) :)

அருமை,ம் கட்டுடையுங்கள்.

மணிஜி said...

யாத்ரா..நான் பதில் போட போவதில்லை

ச.முத்துவேல் said...

இந்தப் பதிவப் பத்திப் பேச நிறைய இருக்குது.இருந்தாலும் எல்லாத்தையும் பின்னுக்குத்தள்ளிக்கிட்டு முன்னால வர்றது பொறாமைதான்.எல்லாம் உங்கப் பக்கத்துல வர்ற ஆளால வர்றது.

Cable சங்கர் said...

எனக்கு எல்லா தெரிஞ்சிருச்சு.. உங்கபக்கதில இருக்கிறவங்களோட போன் நம்பரை தவிர.. ஹி.ஹி..

மணிஜி said...

//இந்தப் பதிவப் பத்திப் பேச நிறைய இருக்குது.இருந்தாலும் எல்லாத்தையும் பின்னுக்குத்தள்ளிக்கிட்டு முன்னால வர்றது பொறாமைதான்.எல்லாம் உங்கப் பக்கத்துல வர்ற ஆளால வர்றது.//

கவிஞருக்கு நான் சொல்லி தெரியவேண்டுமா? பெண் ஒரு மாயப்பிசாசு..நம்பாதீர்கள்..ஹி...ஹி..

மணிஜி said...

//எனக்கு எல்லா தெரிஞ்சிருச்சு.. உங்கபக்கதில இருக்கிறவங்களோட போன் நம்பரை தவிர.. ஹி.ஹி..//

கேபிள் ..நானே அந்த நம்பரை டெலிட் பண்ணிட்டேன்..(ஆனா ஞாபகம் இருக்கு)

ரமேஷ் வைத்யா said...

அடப்பாவிகளா... படம் படம் ங்கிறீங்களே அது எங்கே?