இருக்கை தேடி அமர்ந்து
சற்று ஆசுவாசம் ..
அப்புறம் ? நீங்க ..எங்க ..
வழித்துணைக்கு ஆள் சேர்த்தல் ..
குறும்பு செய்யும் குழந்தை .
விழுந்து விடுவானோ என்ற
பயம் கலந்த பெருமையுடன் தாய் ...
ஆங்காங்கு சிணுங்கும் அலைபேசிகள் .
இப்பதான் ...கிளம்பிச்சு .
இன்ன பிற அறிவிப்புகள் ..
கொஞ்சம் தூரம் போகட்டுமே..
"மூடி திறக்கும் " தவிப்பில் 'மப்பர்கள் "
கடந்து செல்லும் சிற்றுண்டி
விற்பவனின் குரலிலும் பசி
பிச்சை எடுக்கவில்லையப்பா ..
பார்த்து கொடுங்கள் என்ற
மண்டியிட்டு சுத்தம் செய்பவனின்
பரிதாப பார்வை ....
வெள்ளைத்தோல் காரியை
வெறித்து நோக்கும்
வெள்ளந்தி மனிதர்கள் ...
சேர்வதே நிச்சயமில்லை எனினும்
திரும்பும் இடம்
பற்றிய கவலை ..
பற்றியும் பற்றாமலும்
சென்று கொண்டே இருக்கிறது வண்டி
16 comments:
சும்மா இருக்க முடியல..
ஆரம்பம் கொஞ்சம் மாறியிருச்சுபோலருக்கு.
//பற்றியும் பற்றாமலும்
சென்று கொண்டே இருக்கிறது வண்டி//
ரைட்டு, நீங்களும் அந்த பற்றியும் பற்றாமலும் கும்பல்ல சேர்ந்துட்டீங்களா???????
//கடந்து செல்லும் சிற்றுண்டி
விற்பவனின் குரலிலும் பசி //
//பிச்சை எடுக்கவில்லையப்பா ..
பார்த்து கொடுங்கள் என்ற
மண்டியிட்டு சுத்தம் செய்பவனின்
பரிதாப பார்வை ....//
மிக நுட்பம் தலைவரே.
இந்த மனுஷன் என்னாமா கவிதை எழுதுறாரப்பா...!
எதிர் கவிதை போட்டுரவேண்டியதுதான்.
\\ரைட்டு, நீங்களும் அந்த பற்றியும் பற்றாமலும் கும்பல்ல சேர்ந்துட்டீங்களா???????\\
அண்ணே, 'அனு' 'அனு' வா ரசிச்சு எழுதியிருக்காப்ல..கிண்டல் பண்றீங்களே தராசண்ணே...
நண்பர்களே ....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ....வெளியூரில் இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை ....
தலைப்பை பார்த்ததும் நினைச்சேன். நல்லாருக்கு தல.
வழக்கமாக எழுதப்படும் கவிதை என்றாலும் நல்லா இருக்கு.
நல்லாயிருக்குங்க
இன்னிக்கு பாப்புலர் பக்கத்தில்
ஒரே கவி மயமா இருக்கு
நல்லாயிருக்கு கவிதை..
//விற்பவனின் குரலிலும் பசி //
சுடுகிறது
:))
present sir.
என்னையும் கிறுக்க வைத்ததற்கு நன்றி
நண்பர்கள் அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி..
Post a Comment