பொத்தி,பொத்தி வளர்த்தாங்க...
ம்ம்ம்..அப்புறம்..
அப்புறம் என்ன..பொத்தலாயிடுச்சு..
உரத்த குரலில் சிரித்தாள்..கண்ணில் நீர் வரும்வரை..
அழறியா என்ன?
ம்ஹீம்..ஆனந்த கண்ணீர்...உனக்கு தெரியுமா? ஒரு நாள் எங்கப்பா புது கொலுசு வாங்கி கொடுத்தார்..கால்ல மாட்டி, ரெண்டு பக்கமும் பாவாடையை விரிச்சு முழங்கால் வரைக்கும் தூக்கிட்டு வீட்டை சுத்தி நாலு ரவுண்டு அடிச்சேன்...
அது எல்லாரும் பண்றதுதானே..
ஆனா எங்கம்மா அதுக்கே கால்ல சூடு வச்சா..அப்ப வீட்டுல வெளியாளுக ஏதோ வேலையாக இருந்தாங்க..இப்ப பத்தியா..காலை தூக்கி காட்றதே பொழப்பாயிடுச்சு..
இங்க வந்து எப்படி மாட்டி கிட்ட..?
என் புருஷன் வித்துட்டு போயிட்டான்...
அவனுக்கு சட்டென்று அவன் மனைவியின் நினைவு வந்தது....தேடி,தேடி சலிச்சு அவளை பார்த்தவுடன் பிடிச்சு போக ..கல்யாணம்..ஒரே வாரம்.. முழுசாய் பார்க்க கூட அனுமதிக்க வில்லை..ஏதாவது காரணம் சொல்லி திரும்பி படுத்துக் கொள்வாள்..எட்டாவது நாள்......ஓடிப் போனாள்..ஒரு துண்டு சீட்டு...நாலு வரி..”உங்களை பிடிக்க வில்லை..ஏற்கனவே பிடித்து போனவருடன் போகிறேன்....மன்னிக்கவும்...
என்னய்யா யோசிக்கிற..
உன்னை உன் புருஷன் வித்துட்டு போயிட்டான்..என் பொண்டாட்டி என்னை விட்டுட்டு போயிட்டா?....உன் கதைய கொஞ்சம் சொல்லேன்..
நீ பைத்தியமா? இல்ல... பத்திரிக்கைகாரனா?...பொண்டாட்டி வேற இல்ல...இங்க எதுக்கு வந்த..வா ..என்னை தொழில பார்க்க வுடு..அவள் ஆடைய களைய ஆரம்பிக்க..
இரு..இப்ப வேண்டாம்...நீ அந்த கதையை சொல்லு..
கதையா...நிஜம்யா..தாங்குவியா நீ.. காதல்னு ஒருத்தன் கிட்ட ஏமாந்தேன்...கொஞ்ச நாள் குடும்பம் நடத்தினான்..வயித்துல மூணு மாசம்..ஒரு நாள் நைட்டு புல்லா குடிச்சுட்டு வந்தான்..கூட நாலு பேர்...தேவிடியா மகனுங்க..சின்னா பின்ன மாக்கிட்டானுங்க...சீரழிஞ்சு இங்க வந்து சிக்கிட்டேன்.குழந்தக்கு பேர் கூட வச்சிருந்தேன்..நல்ல வேளை..கலைஞ்சிருச்சு..இல்ல..அப்பன் யார்னு தெரியாம வளர்ந்து மாமா பையனாயிருக்கும்..இங்க அதை விட கொடுமையான கதைலாம் இருக்கு..இப்ப அவுக்கவா?
ம்ம்ம் சரி அவு..
எல்லா ஆம்பளையும் அப்படித்தான்யா..அவுக்க சொல்லிட்ட பார்த்தியா?ஆமாம் பின்ன ..நீ அதுக்குத்தான வந்திருக்க...ஆனா ஒன்னு..இன்னிக்கு மெஷின் மாதிரி இருக்க மாட்டேன்..விளையாடுயா..
முழு பிறந்த மேனியாக இருந்தாள்..அவன் கண்களை மூடிக்கொண்டு கையில் கொண்டு வந்திருந்த பையை நீட்டி...இந்த புடவையை கட்டி கிட்டு நகையெல்லாம் போட்டு,கிட்டு வா..
அவள் புரியாமல் பார்த்தாள். ...பின் மெளனமாக வாங்கி கொண்டு பாத்ரூமுக்கு போனாள்..
தலையை குனிந்து அழுது கொண்டிருந்தவன்...காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்தான்...
அவன் மனைவியின் நெற்றி சுட்டி,மூக்குத்தி,கம்மல்,தாலி சங்கிலி..பார்வை கழுத்துக்கு கீழே போக திடுக் என்றது..
இது..
அவள் சொன்னாள்..இது என் ஆசைய்யா? நீ ஒன்னும் சொல்ல மாட்டேன்ற நம்பிக்கைலதான்..அவள் குரல் கம்மியிருந்தது..
அவன் முகத்தில் இனம் புரியாத உணர்ச்சி...நா காதை வச்சு கேட்கவா?
அவள் தலையாட்டினாள்..
அவன் எழுந்து அருகில் சென்றான்..அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே குனிந்து சின்ன தலையணை வைத்து பெரிதாகப்பட்டு இருந்த அவள் வயிற்றில் காதை வைத்து “பேர் வச்சுட்டியா” என்றான்...
21 comments:
தூள்ண்ணே..!
கவிதைக்கேற்றதுதான்..!
வெற்றி பெறுவீர்கள்..!
மணிஜி. கதை சூப்பரா இருக்குண்ணே.பரிசு நிச்சயம்தான். வாழ்த்துகள்.
கவிதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது!
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
நீங்க தர வேண்டிய டிரீட் ஏறிகிட்டே போகுது!
//தூள்ண்ணே..!
கவிதைக்கேற்றதுதான்..!
வெற்றி பெறுவீர்கள்..!//
நன்றி அண்ணே..
/மணிஜி. கதை சூப்பரா இருக்குண்ணே.பரிசு நிச்சயம்தான். வாழ்த்துகள்.//
அன்புக்கு நன்றி..
//கவிதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது!
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
நீங்க தர வேண்டிய டிரீட் ஏறிகிட்டே போகுது!//
சேர்ந்து “கலக்கும்”காலம் எப்போ?
கதை நல்லாயில்ல.
நீட்டி முழக்க வேண்டிய இடங்களில் தாட்சண்யமில்லாமல் சுருங்கச் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. இதனால், மெலோடிராமா மேக்சிமம் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.
//கதை நல்லாயில்ல.//
ஆஹா..ஜென்ம சாபல்யம்..நன்றி..குருவே
//நீட்டி முழக்க வேண்டிய இடங்களில் தாட்சண்யமில்லாமல் சுருங்கச் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. இதனால், மெலோடிராமா மேக்சிமம் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.//
கதாபாத்திரங்களின் பெயரை தவிர்த்தது மெலோடிராமாவை குறைக்கத்தான்..
1000 எழுத்தாளர்கள் குறைந்தது ஆளுக்கு 100 முறை வீதம் லட்சம் தடவை எழுதிய கதை...சின்ன முயற்சி...நன்றி ஆசானே..
/கதை நல்லாயில்ல//
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஜ்யோ மாமா...
\\ஜ்யோவ்ராம் சுந்தர்
கதை நல்லாயில்ல.\\
ஏன் தல...?
காரணம் சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல...!
தம்பி டக்ளஸ்..இது ஒரு குறும்படத்துக்கான கதை.இதை காட்சி படுத்தி பார்வையாளனை ஈர்ப்பது கட்டுடைபவர்களால் நிச்சயம் இயலாத காரியம்...ஆனால் என் போன்ற எளியவர்களுக்கு இது சாத்தியம்...
இந்த கதையை குறும்படமாக எடுக்கும் எளக்கியவாதிகளுக்கு ரூ 25000 பரிசு...
நடுவர்களையும் அவர்களே நிச்சயிக்கலாம்...
அப்பிடி போடு அருவாள...?
இப்பத்தான் ஆட்டம் சூடு பிடிக்குது..
25000/ தட்டிச்செல்லப்போகும் அந்த எளக்கியவதி யார்னு பார்ப்போம்.
கதை ஒரு 'மாதிரியா' நல்லா இருக்கு!!
அருமை.
வெற்றி பெற வாழ்த்துகள்..
ஆ.முத்துராமலிங்கம் said...
//கதை ஒரு 'மாதிரியா' நல்லா
இருக்கு!!//
நன்றி முத்து...
கதை என்ற அளவில் இது கச்சாவாக (raw) இருக்கிறது. அதனாலேயே எனக்குப் பிடிக்கவில்லை.
தண்டோரா சொல்வது போல் இதை ஒரு குறும்படத்துக்கான குறிப்பாக (synopsis) நான் வாசிக்கவில்லை.
வண்ணத்துபூச்சியார் said...
அருமை.
வெற்றி பெற வாழ்த்துகள்..
நன்றி நண்பா...
டக்ளஸ்....... said...
அப்பிடி போடு அருவாள...?
இப்பத்தான் ஆட்டம் சூடு பிடிக்குது..
25000/ தட்டிச்செல்லப்போகும் அந்த எளக்கியவதி யார்னு பார்ப்போம்.
நானும் காத்திருக்கிறேன்......டக்ளஸ்.ஆனால் கேபிள் சங்கருக்கு போட்டியில் அனுமதி இல்லை..ஏன்னா அவர் எளக்கியவாதி இல்லை...
ஜ்யோவ்ராம் சுந்தர் July 4, 2009 9:34 PM
//கதை என்ற அளவில் இது கச்சாவாக (raw) இருக்கிறது. அதனாலேயே எனக்குப் பிடிக்கவில்லை.
தண்டோரா சொல்வது போல் இதை ஒரு குறும்படத்துக்கான குறிப்பாக (synopsis) நான் வாசிக்கவில்லை.//
உங்கள் விமர்சன நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது..கதை எழுதல் எனக்கு புதிது(அச்சுக்கு).கொடுத்த கருவிற்கு எனக்கு விஷூவலாக தோன்றியதை எழுதினேன்.நேரில் சந்திக்கும் போது இது பற்றி எனக்கு விளக்குங்கள்..நன்றி குரு..
Post a Comment