Thursday, June 18, 2009

T ராஜேந்தரிடம் 32 கேள்விகள்

1. உங்க ஊர்,பெயர் சொல்லுங்க.. உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தண்ணில பாயுரோம்...
வெயில்ல காயுரோம்.
போதைல சாயுரோம்..
என் ஊர் மாயுரம்

ஷங்கர் எடுக்கிரார் எந்திரன்.
என் பெயர் ராஜேந்திரன்..
T.T.R ஆ என்னை ஆக்க ஆசைப்பட்டார் எங்கப்பா.
ஆனா நா T.R ஆ ஆயிட்டேன் தப்பா.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இந்த டிஆர் எப்பவும் எதுக்கும் அழ மாட்டான்
மாடிலேர்ந்து கீழே விழ மாட்டான்
ஆனா இப்ப மன்சூரலிகான் குடிச்சதுக்கு நா தண்டம் அழுதேன்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பேப்பர்ல எழுதுவேன் எழுத்து..
பெப்பர் சிக்கனை நீ அழுத்து..
மைல போடுவேன் கையெழுத்து...
டைல போட்டா அது தலையெழுத்து....

4).பிடித்த மதிய உணவு என்ன?

தங்கச்சி...முள்ளுல சேலை விழுந்தாலும்..சேலை முள்ளுல விழுந்தாலும்

சார்..நா பிடிச்ச மதிய உணவு என்னன்னு கேட்டேன்..

யோவ்..தண்டோரா..அதைத்தான்யா சொல்ல வர்றேன்..ஆத்துக்கு தங்கச்சி தண்ணி எடுக்க போயிருக்கு

புரியலயே சார்..

தங்கச்சி தண்ணி எடுத்துட்டு வந்தவுடனே சோத்துல தண்ணி ஊத்தி சாப்பிடுவேன்..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ரெண்டு நண்பர்கள் காட்டுக்கு போனாங்க..அப்ப திடீர்னு ஒரு கரடி வந்துச்சு.ஒருத்தன் மரத்துல ஏறிட்டான்...கரடிக்கு மரம் ஏறத் தெரியாது...இன்னொருத்தன் மூச்சை அடக்கிட்டு படுத்தானா?

சார்..இப்ப எதுக்கு இந்த கதை..

யோவ் அந்த கரடி நாந்தான்யா..


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ஏன் நீ முதுகு தேச்சு விடப்போறியா?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

இப்ப நீ இங்க வந்தப்ப நா எங்க பார்த்தேன்...அதை எழுதிக்க...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: எதிர்ல இருக்கிறவங்களை அடிக்கிறது

பிடிக்காத விஷயம் : அடிச்சப்புறம் கடிக்கிறது...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சரி பாதி இல்ல..அவ சரீரத்துல நான் தான் பாதி..

அவ உயிருள்ளவரை நான் உஷார்...

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?


என் பக்கத்தில யாரும் நிக்க முடியாது...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நாலு வாழை இலையை இடுப்புல சுத்திகிட்டிருக்கேன்...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மச்சி...அவ மூஞ்சில துப்பினா எச்சி...

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

சொர்ணம்..கர்ணம்..புர்....கரடி கலர்

14.பிடித்த மணம்?

கோமணம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

உஷாதான்..ஒட்டியாணம் கேட்டு உயிரை எடுக்கிறாள்.....

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

மன்சூரலிகான்...கழுதைக்கு கருத்தடை பண்றதை பத்தி எழுதியிருந்தார்..படிச்சுட்டு பின்னங்காலால எத்திட்டு வந்தேன்..


17. பிடித்த விளையாட்டு?

திருடன்,போலிஸ்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லன்னா வேற எங்கயாவது கடிச்சுடுவேன்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஒரு கிரேன் ஷாட் வச்சுக்குவமா?

20.கடைசியாகப் பார்த்த படம்?

சிம்புவும்,நயனும் ஓட்டல்ல எடுத்துகிட்ட படம்..

21.பிடித்த பருவ காலம் எது?

வீட்டுக்கு போன உடனே ஊசி போட்டுக்க..இல்லன்னா செப்டிக் ஆயிடும்...

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சிம்புவுக்கு வந்த லவ் லெட்டரையெல்லாம் அழகா பைண்ட் பண்ணி வச்சிருக்கான்..அதைத்தான்....

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என் கிட்ட ஹார்மோனியம்தான் இருக்கு...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

நா கடிக்கும்போது நீ கத்துன சத்தம் பிடிச்சது...கடிச்சு அரை மணி நேரமாச்சு..இன்னும் அழுதுகிட்டிருக்க..அந்த சத்தம் பிடிக்கலை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

வண்டலூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னொருவாட்டி கேளு..சொல்றேன்...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

விஜயகாந்த்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

எவ்ளொ பட்டாலும் உனக்கு புத்தி வராது போலிருக்கே...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சினிமா தியேட்டர் கக்கூஸ்...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்ப இருக்கிறா மாதிரிதான்

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

சவரம் பண்றது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

பொழைச்சு..போயிடு...

35 comments:

butterfly Surya said...

hahahaha...

முடியலை சாமி..

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

எல்லாம் அண்ணன் ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற தில்லு தானே? அந்த வாயில்லா பிள்ளையை இப்படியா கலாய்ப்பது? ஒரு ஆட்டோ இல்லையென்றாலும், ஒரு சைக்கிலாவது அனுப்ப சொல்றேன் இருங்க. ரொம்ப சிரித்து விட்டேன் பாஸ்.

முரளிகண்ணன் said...

:-))))

மணிஜி said...

/hahahaha...

முடியலை சாமி.//

கடிச்சுட்டனா? டிவிடி என்னாச்சு..சாயந்திரம் வீட்டுக்கு வரவா?

மணிஜி said...

//எல்லாம் அண்ணன் ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற தில்லு தானே? அந்த வாயில்லா பிள்ளையை இப்படியா கலாய்ப்பது? ஒரு ஆட்டோ இல்லையென்றாலும், ஒரு சைக்கிலாவது அனுப்ப சொல்றேன் இருங்க. ரொம்ப சிரித்து விட்டேன் பாஸ்//

நாங்க மரத்துல ஏறிடுவோமில்ல...

மணிஜி said...

/முரளிகண்ணன் June 18, 2009 2:15 AM
:-))))//

நன்றி முரளி..கதை அனுப்பியிருக்கேன்..தேறலைன்னு நினைக்கிறேன்...

Unknown said...

மருத்துவ செலவுக்கு பணம் அனுப்புங்க.

விழுந்து விழுந்து சிரிச்சதால நிறைய அடிபட்டிருக்கு.

அனைத்து பதில்களும் மிக அருமை.

ஒருவேளை TR எழுதிய பதில்களைதான் பதிவிடீங்களோ.

நன்றி

Raju said...

உங்களுக்கு கேள்வி கேட்க வேற ஆளே கிடைக்கலயா..?
அடுத்து யாரு கார்த்திக்கா...?

(2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசி அரட்டை அரங்கத்துல...)

நல்லா வாய் விட்டு சிரிச்சேன் தலைவரே..!
நன்றி.

Raju said...

உங்களுக்கு கேள்வி கேட்க வேற ஆளே கிடைக்கலயா..?
அடுத்து யாரு கார்த்திக்கா...?

(2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசி அரட்டை அரங்கத்துல...)

நல்லா வாய் விட்டு சிரிச்சேன் தலைவரே..!
நன்றி.

R.Gopi said...

தல

கரடிய பிச்சு போட்டுடீங்க........... சூப்பரா இருந்தது...... கரடிய கலாய்க்கவும் பிடிக்கும். வேற யாராவது கலாய்ச்சாலும் பிடிக்கும்........

வாய் ஓயாமல் அடுக்குமொழி பேசி, அடுத்தவரை எப்போதும் குறை கூறி கொல்லும் இந்த கரடி, கொஞ்ச நாளாக வாய்மூடி இருக்கிறது. அவரை நம் மக்களுக்கு ஞாபகப்படுத்தும் நோக்கில் அவர் எழுதிய ஒரு சூப்பர் கவிதை, உங்கள் பார்வைக்கு.
********************************************
டேய் குகையில் இருந்தா புலி
வலையில் இருந்தால் எலி
கொழம்புல போட்டா புளி
ஜலிப்பு கட்டினா சளி
அடிபட்டா வரும் வலி
குழியில ஆடுனா கோலி
கழியில ஆடுனா கில்லி
கழுத்துல கட்டுனா தாலி
கொழந்த தூங்குனா தூளி
வேல செஞ்சா ஜோலி
ஊர் சுத்துனா ஜாலி
வீட்ட சுத்தி போட்டா வேலி
ஆனா, மவனே லாரி ஒன்மேல ஏறினா நீ காலி

தலைல வெச்சா கரகம்
நான் என்னிக்குமே கெரகம்
மலைன்னா சிகரம்
நான் வந்தா ஊரே நகரும்
துருப்பிடிச்சா தகரம்
இதே ரேஞ்சுல போனா எனக்கு நரகம்

என் பையன் பேரு சிம்பு
அவன்கிட்ட வேணாம் வம்பு
அவன் நல்லவன்டா நம்பு
நீ நம்பினா எனக்கு தெம்பு

எதுவுமே சாப்பிடலேன்னா நோம்பு
ரொம்ப பிகு பண்ணினா வீம்பு
பொந்துல இருந்து சீறினா பாம்பு
அடுப்புல வெடிச்சது கடுகு
தண்ணியில போனது படகு
மலைன்னாலே அது குடகு

நீ என்ன பாத்தா கண்ணு
நான் அப்போ துன்னது பன்னு
குத்தினா பின்னு

பிஸ்கட் வெச்சா டின்னு
நீ ஓரமா போய் நின்னு
நான் சொன்னத திங்க் பண்ணு

தாண்டினா ஜம்பு
தண்ணி வந்தா பம்பு
எனக்கு எல்லாரும் வச்சது ஆப்பு

கண்ணுல வந்தா கண்ணீரு
மண்ணுல வந்தா தண்ணீரு
வாசனையா இருந்தா பன்னீரு

ஏய் டண்டனக்கா, ஏய் டணக்குடக்கா

http://jokkiri.blogspot.com/2009/03/blog-post_02.html

மணிஜி said...

கோபி...சூப்பர்.ஆனா ஏன் அந்த பு....வை மட்டும் விட்டுட்டீங்க..

மணிஜி said...

//மருத்துவ செலவுக்கு பணம் அனுப்புங்க.

விழுந்து விழுந்து சிரிச்சதால நிறைய அடிபட்டிருக்கு.

அனைத்து பதில்களும் மிக அருமை.

ஒருவேளை TR எழுதிய பதில்களைதான் பதிவிடீங்களோ.

நன்றி//

தலைவரே..சிரிப்போட சிறந்த மருந்து இருக்கா என்ன?

மணிஜி said...

//உங்களுக்கு கேள்வி கேட்க வேற ஆளே கிடைக்கலயா..?
அடுத்து யாரு கார்த்திக்கா...?

(2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசி அரட்டை அரங்கத்துல...)

நல்லா வாய் விட்டு சிரிச்சேன் தலைவரே..!
நன்றி.//

நைட் ரொம்ப காய்ச்சிட்டனோ?

Raju said...

அப்டி எல்லாம் ஒன்னுமில்ல..தலைவரே..!

Anonymous said...

கன்பார்ம் ஆட்டோ தான், சரி இந்த வார வீக் எண்ட் பிளான் என்ன

Anonymous said...

:-))))))))))))))))))))))))))

Jackiesekar said...

தண்ணில பாயுரோம்...
வெயில்ல காயுரோம்.
போதைல சாயுரோம்..
என் ஊர் மாயுரம்----//

முத கேள்வி பதிலே அசத்தல் சூப்பருப்பு

மணிஜி said...

/கன்பார்ம் ஆட்டோ தான், சரி இந்த வார வீக் எண்ட் பிளான் என்//

சும்மா இருய்யா? எதாவது ப்ரோகிராம் இருந்தா போன் பண்ணு

மணிஜி said...

ஜாக்கி ....நன்றி..குதிரைல ஏறி வந்ததுக்கு..

பிச்சைப்பாத்திரம் said...

:-)) ரொம்ப சிரிச்சேன்.

Anonymous said...

அந்த கருணாநிதி கேள்வி பதிலை வெளியிட துப்பில்லை,
எதற்காக மற்றவர்களை தூற்றவேண்டும்.

மரியாதையாக அனைத்து பதிவுகளையும் நீக்கு,இல்லை என்றால் நடப்பதேவேறு என்று எவனாவது போன் செய்தால் டவுசரில் ஒன்னுக்குப் போகும் உனக்கு பதிவு எழுதுவது அவசியமா?

ஆமா, கனிமொழி எதையாவது காட்டினாளா?

bhuvanesh said...

ஹி ஹி.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது :)

//ரெண்டு நண்பர்கள் காட்டுக்கு போனாங்க..அப்ப திடீர்னு ஒரு கரடி வந்துச்சு.ஒருத்தன் மரத்துல ஏறிட்டான்...கரடிக்கு மரம் ஏறத் தெரியாது...இன்னொருத்தன் மூச்சை அடக்கிட்டு படுத்தானா?

சார்..இப்ப எதுக்கு இந்த கதை..

யோவ் அந்த கரடி நாந்தான்யா..//


இது Ultimate!

மணிஜி said...

//அந்த கருணாநிதி கேள்வி பதிலை வெளியிட துப்பில்லை,
எதற்காக மற்றவர்களை தூற்றவேண்டும்.

மரியாதையாக அனைத்து பதிவுகளையும் நீக்கு,இல்லை என்றால் நடப்பதேவேறு என்று எவனாவது போன் செய்தால் டவுசரில் ஒன்னுக்குப் போகும் உனக்கு பதிவு எழுதுவது அவசியமா?//


அன்புள்ள அனானி..நான் டவுசரில் ஒண்ணுக்கு போனது உனக்கு எப்படி? நீ வாயை அங்கயா வச்சிருந்தே?

மணிஜி said...

//:-)) ரொம்ப சிரிச்சேன்.//


நன்றி சுரேஷ் கண்ணன்

மணிஜி said...

//ஹி ஹி.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது :)

//ரெண்டு நண்பர்கள் காட்டுக்கு போனாங்க..அப்ப திடீர்னு ஒரு கரடி வந்துச்சு.ஒருத்தன் மரத்துல ஏறிட்டான்...கரடிக்கு மரம் ஏறத் தெரியாது...இன்னொருத்தன் மூச்சை அடக்கிட்டு படுத்தானா?

சார்..இப்ப எதுக்கு இந்த கதை..

யோவ் அந்த கரடி நாந்தான்யா..//


இது Ultimate!//

வருகைக்கு நன்றி

உண்மைத்தமிழன் said...

முடியல சாமி.. முடியல..

வால்பையன் said...

//T.T.R ஆ என்னை ஆக்க ஆசைப்பட்டார் எங்கப்பா.
ஆனா நா T.R ஆ ஆயிட்டேன் தப்பா.//

அதனால நாங்க டரியல் ஆகிட்டோமே!

வால்பையன் said...

//பிடிச்ச விஷயம்: எதிர்ல இருக்கிறவங்களை அடிக்கிறது
பிடிக்காத விஷயம் : அடிச்சப்புறம் கடிக்கிறது...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

மணிஜி said...

உண்மைத்தமிழன்..வால்பையன் வருகைக்கு நன்றி..

கலையரசன் said...

ஐயா, அடங்கமாட்டிங்க போல...
நல்லாயிருக்கு பாஸ்..
ரசித்தேன்.. சிரித்தேன்!!

Anonymous said...

sema ravusu ponga...

selventhiran said...

அல்வா டைம்ஸ், லூஸூப்பையன், ஜாலி விலாஸ், மொக்கராசு என விகடனில் ரவுண்டு கட்டி அடிக்கும் நண்பனிடம் ஒரு நாள் கேட்டேன் "ஏன்யா ஜார்ஜ்புஸ்ஸூ, சதாம் சந்திக்கிற சீன்ல கூட டிஆரை இழுக்கிறேன்னு"
"டி.ஆரும், சு.சாமியும் தமிழ்நாட்டின் ஹோல்சேல் காமெடியன்கள். அவய்ங்க எதைச் செஞ்சாலுமே சிரிப்புதான். நம்மாளான ஒரு பதில் மரியாதை!" ன்னான்.
நாலு வாழை இலையை இடுப்புல சுத்திகிட்டிருக்கேன்... // வெடிச்சிரிப்பு
என் கிட்ட ஹார்மோனியம்தான் இருக்கு... // வெடிச்சிரிப்பு

ரவிஷா said...

//யோவ் அந்த கரடி நாந்தான்யா..// டாப் கிளாஸ் பன்ச்! வாழ்த்துக்கள்!

குடுகுடுப்பை said...

அருமையோ அருமை

மணிஜி said...

கலையரசன்,ஸ்ரீராம்,தம்பி செல்வா,ரவிஷா,குடுகுடுப்பை....வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி...யாவரும் சிரித்து மகிழ நான் உத்தரவாதம்...