Monday, June 22, 2009

ஆற்காடு வீராசாமியிடம் 32 கேள்விகள்
1. உங்க பெயர் சொல்லுங்க.. உங்க தொழில் என்ன?

வீராசாமி..அப்புறம் ஆற்காட்டார்...பெரியார் கனவில் வந்து சொன்னதால வீராஸ்வாமின்னு மாத்திக்கிட்டேன்..

எங்கப்பா விசிறி வியாபாரம் பண்ணாரு..நானும் அமைச்சராகறதுக்கு முன்னாடி மெழுகுவர்த்தி வித்துகிட்டிருந்தேன்...2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மானாட,மயிலாட பார்த்துகிட்டிருந்தப்ப கரண்ட் போயிடுச்சு..அப்ப அழுதுட்டேன்...அப்புறம் தலைவர்..எழுதற படத்தோட கதையை கேட்டவுடனே அழுகை வந்துச்சு..மக்களை நினைத்து..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

தெரியலையே..நா எழுதி ரொம்ப நாளாச்சு...

4).பிடித்த மதிய உணவு என்ன?

கரண்ட் இருக்கிரப்பவே பிளக் பாயிண்ட்ல கையை வச்சு சார்ஜ் ஏத்திக்குவேன்..அதான் பிடிக்கும்..5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அது “மாட்லாடறவங்களை”பொறுத்து மாறும்..6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

வியர்வைல குளிக்க பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

நெற்றியை...வேர்த்திருக்கிறதான் பார்ப்பேன்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: வியர்வையே சிந்தாம சம்பாதிக்கிறது..
பிடிக்காத விஷயம் : சரியா கேக்கலை...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்வி தேவையா?


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

தாமஸ் ஆல்வா எடிசன்...


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கும்மிருட்டுல உக்கார்ந்திருக்கேன்..அதனால........

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சம்சாரம்...அது மின்சாரம்.....

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வேற என்ன கறுப்புதான்

14.பிடித்த மணம்?

வியர்வை நாற்றம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

விஜயகாந்த்......நல்லா திட்டர மாதிரி நடிப்பாரு....

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

கலைஞர்தான் அனுப்பினார்..1,2,3 எண்றதை பத்தி ஒரு பதிவு போட்டிருந்தார்..அப்படியே ”ஷாக்”காயிட்டேன்....

17. பிடித்த விளையாட்டு?

வீட்டுக்குள்ள லைட்டை போட்டு அனைச்சு,திருப்பி போட்டு அனைச்சு விளையாடுவேன்...

18.கண்ணாடி அணிபவரா?

ஆமாம்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

தலைவர் வசனம் எழுதணும்...தலையெழுத்தேன்னு பிடிச்சாகனும்..

20.கடைசியாகப் பார்த்த படம்?

மின்சார கனவு.........

21.பிடித்த பருவ காலம் எது?

வெயில் காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

ஆற்காடு பிரியாணி செய்யறதை ஒரு நவாப் எழுதியிருக்காரு..அதை படிச்சுகிட்டுருக்கேன்..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

காலைல 3 வாட்டி....சாயந்திரம் 3 வாட்டி....

24.உங்களுக்கு பிடித்த நகைச்சுவை எதாவது.

நா டெய்லி பேசறதே நகைச்சுவைதான்..இருந்தாலும் ஒண்ணு சொல்றேன்...

ராமுவும்,சோமுவும் சந்தித்து கொண்டார்கள்.அதில் ராமு கையில் பை வைத்திருந்தான்.சோமு கேட்டான்..”எங்க கடைக்கா? அதற்கு ராமு “இல்லை,இல்லை கடைக்கு என்றான்..உடனே சோமு”ஒஹோ நான் கூட கடைக்குத்தான் போறியோன்னு நினைச்சேன்னான்”


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அறிவாலயம்தான்..முக்கியமான டெல்லி மீட்டிங்னாகூட செகரட்டரிதான் போவார்.....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நீ பத்திரிக்கை படிக்கிறதில்லையா?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பல்பும்,ஃபேனும்தான்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சர்தான்...உன் பியூசை புடுங்கினாத்தான் சரிப்படுவே..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

நெய்வேலி.......

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

காற்றாட சட்டையெல்லாம் அவுத்து போட்டுட்டு...

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

கிரண்டர்ல மாவாட்டறது...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

புழுக்கம்தான்.....

11 comments:

அக்னி பார்வை said...

நல்ல தான் இருக்கு அப்படின்னு சொன்னா வீட்டூகு கரண்ட் கட் ஆயிடுமே, சரி நல்ல இல்லன்னு சொன்னாலும் கரண்ட் கட் ஆகும் அதனலே உண்மையான ’நல்ல இருக்கு’ என்ற விஷ்யத்தையே சொல்லிடுவோம்....

வால்பையன் said...

//கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

வியர்வைல குளிக்க பிடிக்கும்//

நச்சு டிச்சு!

மணிஜி said...

அக்னி..,வால்பையன்..காத்தாடிக் கொண்டிருந்த பதிவிற்கு விசிறி விட வந்ததுக்கு நன்றி....

butterfly Surya said...

super.. super..

கலக்கல்.

அடுத்தது யார்..? துரைமுருகனா..?

கடல்புறா said...

மாப்பு..வைக்கிறியே ஆப்பு....அடுத்து சிக்கப் போறது ஆரு?சூப்பர் தலைவா...

சித்து said...

எல்லா கேள்வி பதிலும் அருமை, இன்னும் குருமா, கொய்யா, அப்புறம் இன்று பிறந்த நாள் காணும் இளைய தளபதி.......... இப்படி இன்னும் நிறைய உங்களிடம் எதிர்பார்கிறேன்.

Jackiesekar said...

கலக்கல் காக்டெயில்

R.Gopi said...

தல

பதிவு சூப்பர்.

யாரோ ஏத்தி விடறான்கன்னு குருமா பத்தி எல்லாம் எழுதிடாதீங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல நகைச்சுவையான பதிவு.. வழ்த்துக்கள்!!

R.Gopi said...

Mu.Ka. on Arcot Veerasamy

கேள்வி : ஆற்காடு வீராசாமி?

பதில் : தொட்டால் ஷாக் அடிக்கமாட்டார். இடது புறம் சென்று பேசினால், பதிலளிக்க மாட்டார். மொத்தத்தில் நல்லவர். கழகத்தில் ஒரு மூத்தவர்.

ஜோதிஜி said...

மொத்தமாக உங்கள் ஆதங்கத்தை கொட்டிவிட்டீர்கள். இவருடைய இறுதிகாலம் எப்படி இருக்கும் என்று திருப்பூரில் மின்சார தடையினால் அழிந்து போனாவர்கள் கேட்டுக்கொண்டு இருக்கும் பல கேள்விகள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.