Tuesday, June 9, 2009

கடன் வாங்கி கழித்தல்

மாப்ள..ஒரு நாளாவது நாலு தெருவையும் சுதந்திரமா சுத்தி வரணும்டா…சொன்னது என் நண்பன்.இடம் தஞ்சை..காரணம் கடன் தொல்லை..எங்கள் ஊரில் மேற்கு,கிழக்கு,வடக்கு,தெற்கு என்று நான்கு ராஜவீதிகள்.ஊடாக சின்ன சந்துகள்..ஒரு சந்தில் நுழைந்தால் போதும் சுத்தி சுத்தி நாலு ராஜ வீதிகளையும் அடையலாம்...+2 முடித்து கல்லூரியில் கால் வைத்த பருவம்.டீக்கடை,பொட்டிகடை,வாடகை சைக்கிள் கடை,அயார்ன் கடை..இப்படி எங்கள் கடன் கணக்கு சகல இடங்களிலும் வியாபித்திருந்தது.ஒரு இடத்துக்கு நேர் வழியில் போகவே முடியாது.எங்களை பொறுத்தவரை நேர்வழி சுற்றாகவே இருந்தது.என் நண்பன் உலக்சுக்கு ஒரு சமயம் பொட்டி கடை கடன் ரூ100 ஐ தாண்டி விட்டது.கடைகாரன் கொலைவெறியோடு இருந்தான்.சிக்கினா சின்னாபின்னம்தான் என்ற நிலை.மாப்ள..ரூபா பொரட்டி கொடுத்திடலாம்..ஆனா பார்த்தவுடனே மேல கையை வச்சுட்டான்னா பிரச்சினையாயிடும்.என்ன பண்ண...ஒரு ஐடியா பண்ணோம்.அதன்படி உலக்ஸ் முதலில் மீசையை எடுத்தான்.
வெள்ளை வேட்டி சட்டைக்கு மாறினான்.நேரா அந்த கடைக்கு போனான்.கடைகாரருக்கு அடையாளம் தெரியவில்லை.இவன் அவனான்னு குழப்பம்.என் தம்பி உங்க கிட்ட கடன் வாங்கியிருக்கானா? கேட்டது நம்மாளூ..கடைகாரர் ஆமாம் என்க.இந்தாங்கன்னு பணத்தை கொடுத்து தம்பி வேலை விஷயமா வெளியூர் போயிட்டான்.இனிமே வர மாட்டான்.கடைகாரர் உணர்ச்சி பிரவாகமானார்.சே..எப்படிபட்ட புள்ளைய திட்டிபுட்டோம்னு “பரவாயில்லை தம்பி..நீங்க எப்ப எது எவ்வளவுக்கு வேணும்னாலும் நம்ம கடையில வாங்கிகங்க..காசு மெதுவா கொடுத்தா போதும்.இது எப்புடி இருக்கு.அப்புறம் அந்த கடன் குட்டி போட்டுகிட்டே போனது தனி கதை.

பெத்த கடன்,வளர்த்தகடன்,சோத்துக்கடன்,நன்றிகடன் இப்படி எத்தனை கடன் இருந்தாலும் ரூபாயா கொடுத்த கடனும்,வாங்கின கடனும் தான் பாடாய் படுத்தும்.கடன் பெற்றார் நெஞ்சம் போல் ..இது பழசு.கடன் கொடுத்தார் நெஞ்சம் இதுதான் புதுசு.பாருங்க ஒரு பீடி கடன் கேட்டு கொடுக்கலை..இதுக்கு ஒரு கொலை..கடன் வாங்குறது சின்ன புள்ளைல இங்க் கடன் வாங்குறதிலயே ஆரம்பிக்குது.பேனா கழுத்தை திருகி சொட்டு கணக்குல மை கடன் வாங்கி,அதை திருப்பி கொடுத்து வரவு செலவு முளையிலேயே தொடங்குது.

எழுத்தாளர் ஏடாகூடம் ஒரு புத்தகம் போட்டார்.”கடன் வாங்குவது எப்படி?”அதை கடனுக்குத்தான் அச்சடித்தார்.பிரஸ்காரர் பணம் கேட்டு வந்தபோது ஏடாகூடம் சொன்னார்”ஐயா இன்னொரு புத்தகம் எழுதியிருக்கேன்.அதையும் கடனுக்கு அச்சடிச்சு கொடுத்திங்கன்னா மொத்தமா திருப்பிடறேன்.அது என்னய்யா புதுசுன்னு கேட்டால் “வாங்கின கடனை திருப்பி தராமல் இருப்பது எப்படி”யாம்.



கடன் வாங்குறதுக்கு கணக்கு வாத்தியாரும் ஒரு காரணம்.அவர்தானே பத்தலைன்னா பக்கத்துல கடன் வாங்கி கழிங்கன்னு சொல்லி கொடுத்தார்.
கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை..ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா கொடுத்திங்கன்னா...

13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை..//


டேன்ஜரஸ் மேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை..//


டேன்ஜரஸ் மேன்

தினேஷ் said...

நான் உங்க கடைக்கு வந்த்துக்கு ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா கொடுத்திங்கன்னா நல்லாதான் இருக்கும்.
கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை --- என்று நீங்க தான் சொல்லிருக்கீங்க எப்போ வந்து வாங்கிக்கிற?...

மணிஜி said...

நான் உங்க கடைக்கு வந்த்துக்கு ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா கொடுத்திங்கன்னா நல்லாதான் இருக்கும்.
கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை --- என்று நீங்க தான் சொல்லிருக்கீங்க எப்போ வந்து வாங்கிக்கிற?...

நல்ல திருப்புறாங்கய்யா ?சின்ன புள்ளைத்தனமால்ல இருக்கு.

மணிஜி said...

//கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை..//


டேன்ஜரஸ் மேன்

அப்படியே கொடுத்துட்டுத்தான் மறு வேலை..பஞ்சாமிர்தம் அனுப்புங்க அப்பு.

நையாண்டி நைனா said...

கடனேன்னு போட்டு தொலையுறேன் ஒரு பின்னூட்டம். அப்பாலிக்க நம்ம கடையிலே வந்து ரெண்டு பின்னூட்டம் போட்டுருங்க....( ரெண்டு ஏன் தெரியுமா? இப்ப நான் போட்ட ஒன்னுக்கு வட்டி )

Cable சங்கர் said...

ஒகே.. நைட் வர்ரேன். ரெடியா வைங்க..

மணிஜி said...

ஒகே.. நைட் வர்ரேன். ரெடியா வைங்க..

யோவ்.. நீதான் நா யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டியே..முன்ன பின்ன தெரியாதவனுக்கு நா கடன் கொடுக்கிறதில்ல(ஆனா கொடுத்தா வாங்கிக்குவேன்)

நையாண்டி நைனா said...

/*யோவ்.. நீதான் நா யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டியே..முன்ன பின்ன தெரியாதவனுக்கு நா கடன் கொடுக்கிறதில்ல(ஆனா கொடுத்தா வாங்கிக்குவேன்)*/

எங்க அண்ணன் கேபிளு கூட சண்டையெல்லாம் வோணாம்.

இப்படிக்கு
"பெரிய"சாமி நற்பணி மன்றம்
மும்பை கிளை.

அகநாழிகை said...

//Cable Sankar said...
ஒகே.. நைட் வர்ரேன். ரெடியா வைங்க..//

நானும் சொல்றேன்.
ஆனா நைட் இல்ல.
சாயந்தரமே வர்ரேன். ரெடியா வைங்க..
(கேபிளுக்கு முன்னே)
ஒரு கொண்டாட்டமும்,
இரண்டு சப்பாத்தியும்
கடனா கிடைக்குமா ?
கண்டிப்பா
திரும்பத்தந்துடுவேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

மணிஜி said...

வாசு..கொண்டாட்டம் நமக்கு விதிக்கபட்ட கடன்..சப்பாத்தி கடைகாரன் தான் கொடுக்கணும்

Jackiesekar said...

கடன் வாங்குறதுக்கு கணக்கு வாத்தியாரும் ஒரு காரணம்.அவர்தானே பத்தலைன்னா பக்கத்துல கடன் வாங்கி கழிங்கன்னு சொல்லி கொடுத்தார்.
கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை..ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா கொடுத்திங்கன்னா...


வேலையை பாத்திக்கிட்டு போவிரா அதவிட்டுட்டு கை நீட்டி கடன்வேற கேக்கற...

R.Gopi said...

//கடன் வாங்குறதுக்கு கணக்கு வாத்தியாரும் ஒரு காரணம்.அவர்தானே பத்தலைன்னா பக்கத்துல கடன் வாங்கி கழிங்கன்னு சொல்லி கொடுத்தார்.
கடன் கேட்பது உரிமை...கொடுப்பது கடமை..ஒரு ஆயிரம் ரூபா கைமாத்தா கொடுத்திங்கன்னா...//

************

No problem. How much you want, only Rs.1,000/-. Take from நையாண்டி நைனா