ஒரு அறிவிப்பு :மானிட்டர் என்பதால் முதலில் அற்பம்,கசுமாலம்,சீ என்று லேபிள் போடிருந்தேன்..பின் யாரைவாது புண்படுத்துமோ என்று அதை மாற்றி விட்டேன்,,ஆனால் திரட்டிகளில் இணைத்துவிட்டதால் இந்த விளக்கம்..பிழையென்றால் மன்னிக்க....
இரண்டு நாட்களாக பதிவு(க)லகம் மதுரை தினகரன் அலுவலகம் போல் பற்றி எரிகிறது...காட்டு ராஜா சென்ற 18 ஆம் தேதி போட்ட ஒரு பதிவுக்கு எதிராய் நேற்று சிம்மம் கர்ஜித்தது..வெறும் 21 பின்னுட்டங்களுடன் ஆறிப் போயிருந்த அந்த பதிவு மீண்டும் மலையேறியது...சிம்மம் அந்த குறிப்பிட்ட பதிவின் லிங்கை கொடுக்காவிட்டாலும் அவர் எழுதியது அந்த பதிவை தேடி படிக்கத் தூண்டியது...நல்ல தொடுகை,கெட்ட தொடுகை பற்றிய அந்த இடுகையின் விமர்சனம் ஏற்புடையதல்ல என்றாலும் அதற்கு கிடைத்த பப்ளிசிட்டி தேவையா?
”இங்கிட்டு”சிம்மத்தின் பதிவை தொடர்ந்து “அங்கிட்டு” ஒரு பதிவு...ஏ அப்பா...கண்ணை கட்டுதப்பா..டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங் போல் பதிவுகளும் ரேட்டிங் பெறத் துடிக்கின்றன..
அய்யா காட்டு ராஜா...மனநல மருத்துவர்..அதுவும் பெண் என்றால் அவர் எந்த பெயரில் இருந்தாலும் உங்களுக்கு மாத்ருபூதத்துடன் மல்லுகட்டியவரின் தோற்றம்தான் நினைவுக்கு வரும் போல.....
கேபிள் சங்கர் இல்லாமல் “மச்சான்” நமிதா கலந்து கொள்ளாத “மானாட,மயிலாட”போல் பதிவுலகம் இருக்கிறது..கொடைக்கானலில் கும்மியடித்து விட்டு திரும்பி விட்டார்..சேர்த்து வச்சு சாத்துங்க தல...
ரஜினிகாந்த் முதலில் திவீரமாக விரும்பியது கீதாவை(நிணைத்தாலே இனிக்கும் படத்தில் அவர் ஜோடி)சில பிரச்சனைகளிலிருந்து ரஜினி விடுப்பட்ட சமயம்..கீதாவின் வீட்டுக்கே போய் பெண் கேட்க,கீதாவின் தந்தை “அய்யங்கார்”ஜாதியில்தான் கொடுப்போம் என பெரிய சண்டை..ரஜினி அங்கிருந்து பாலச்சந்தர் முயற்சியால் வெளியேற்றபட்டார்...நானும் ஒரு அய்யங்கார் பெண்ணை கட்டி காட்டுகிறேன் என்று சவால் விட்டு ஜெயித்தும் விட்டார்.....
ஒரு அரசியல் செய்தி : திமுக எதிர்ப்பு ஓட்டுகளை விஜயகாந்த் பிரித்து வெற்றிக்கு வழி வகுத்தார் என்பது ஆதித்யா சேனலில்”ஆத்தியா வாலு என்று அழகாக கூறும் அந்த குட்டிஸுக்கும் தெரியும்..பணம் மட்டும் இல்லை..இன்னும் ஒரு நிபந்தனையும் அவர் போட்டிருந்தார்..அது டி.ஆர் பாலுவுக்கு மந்திரி பதவி தரக்கூடாது என்பதாம்....(விருகம்பாக்கம் டாஸ்மாக்கில் விஜியின் கார் டிரைவர் மப்பில் கக்கியது)
ஒரு ஜென் கதை : இன்றுதான் ஊர் திரும்பியிருக்கும் ஒரு பதிவர்,அடிக்கடி கீழே விழும்(வைத்திய) பதிவர்,மற்றும் விரைவில் டின் கட்டப்படும் இருக்கும் அறிவிப்பு பதிவர் மூவரும் சேர்ந்து “டாஸ்மாக்கை” கவிழ்த்து காலி பண்ணிட்டு பிரிந்த பின் அறிவிப்பு பதிவை காரை பின் பக்கமாக ஓட்டி சென்றதில் சரி டேமேஜ்.ரூ 10,000/- பணால்...அதனால் குடித்துவிட்டு காரை ஓட்டாதீர்கள் என்று மாருதி ஜென் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..
இந்த வாரம் ஆனந்த விகடனில் “அக்னிபார்வை’யின் பதிவை மேற்கோள்காட்டி ஒரு மதுரை நண்பர் கேள்வி பதிலில் கூறியுள்ளார்..வாழ்த்துக்கள்..அநேகமாக அடுத்த வாரம் விகடனில் “சியர்ஸ்”என்ற என் குறும்பட விமர்சனம் வரலாம்...லிங்க்கும் தரப்படும்..நண்பர்கள் பார்த்துவிட்டு கருத்துரைக்கவும்...
காதலியின் பதிலுக்காக காத்திருத்தல்...மாப்பிள்ளை வீட்டாரின் சம்மதம் எதிர்நோக்கும் பெண்ணின் தந்தை,பரிட்சை முடிவை பார்த்திருக்கும் மாணவன் இதையெல்லாம் விட அவஸ்தை பதிவிட்டபின் பின்னுட்டத்தை நோக்கியிருத்தல்...
“பின்னூட்ட பிச்சை கேட்டு வந்தேன்
பதிவரே..வலைப் பதிவரே..
மொக்கையாக....
ஒரு பதிவினை நானும் இட்டு பின்னூட்ட
பிச்சை கேட்டு வந்தேன் பதிவரே..வலைப் பதிவரே..
நண்டை குழம்பு வைப்பதா..இல்லை
நாட்டுக் கோழியை வறுப்பதா,,,
நாலுபக்கமும் பிரச்சனையிருக்க..
நமக்கென்ன என்று போவதா......
24 comments:
//ரஜினிகாந்த் முதலில் திவீரமாக விரும்பியது கீதாவை(நிணைத்தாலே இனிக்கும் படத்தில் அவர் ஜோடி)சில பிரச்சனைகளிலிருந்து ரஜினி விடுப்பட்ட சமயம்..கீதாவின் வீட்டுக்கே போய் பெண் கேட்க,கீதாவின் தந்தை “அய்யங்கார்”ஜாதியில்தான் கொடுப்போம் என பெரிய சண்டை..ரஜினி அங்கிருந்து பாலச்சந்தர் முயற்சியால் வெளியேற்றபட்டார்...நானும் ஒரு அய்யங்கார் பெண்ணை கட்டி காட்டுகிறேன் என்று சவால் விட்டு ஜெயித்தும் விட்டார்.....//
********
First time kelvipadaren.....
:)
சில புதுத் தகவல்கள்!
நானும் இப்பத்தான் பின்னூட்டத்தைப் பத்தி ஒரு இடுகையிட்டு இணைத்தேன்.
மறந்து விட்டேன். வாழ்த்துகள் குறும்படத்துக்கு!
தண்டோரா,
சில சமயங்களில் எதிர்வினை தேவையான ஒன்றே.
நல்லது நடந்திருக்கிறதே.
கோபி..இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்துல எனக்கு தெரியும்....
என் நண்பர்களிடம் பகிர்து கொண்டிருக்கிறேன்..(கீதா என் மனைவிக்கு உறவு)
//மறந்து விட்டேன். வாழ்த்துகள் குறும்படத்துக்கு!//
சங்கா...நன்றி..
//தண்டோரா,
சில சமயங்களில் எதிர்வினை தேவையான ஒன்றே.
நல்லது நடந்திருக்கிறதே.//
உடனே ரியாக்ட் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமேன்னு தோணிச்சு..காட்டு ராஜா இனிமே அசைவத்தை தொட மாட்டார்னு நம்புவோம்..
பதிவு நல்லா இருக்கு.
//ஒரு ஜென் கதை//
ஒரு ஜின் கதை?
//இந்த வாரம் ஆனந்த விகடனில் “அக்னிபார்வை’யின் பதிவை மேற்கோள்காட்டி ஒரு மதுரை நண்பர் கேள்வி பதிலில் கூறியுள்ளார்//
புரியல?
உங்க(உரையாடல்) சிறுகதைக்கு என் பின்னூட்டம் பார்த்தீர்களா?
வாழ்த்துக்கள்!
மானிட்டரை ராவா அடிச்சா மாதிரி இருக்கு.
//பதிவு நல்லா இருக்கு.
//ஒரு ஜென் கதை//
ஒரு ஜின் கதை?
//இந்த வாரம் ஆனந்த விகடனில் “அக்னிபார்வை’யின் பதிவை மேற்கோள்காட்டி ஒரு மதுரை நண்பர் கேள்வி பதிலில் கூறியுள்ளார்//
புரியல?
உங்க(உரையாடல்) சிறுகதைக்கு என் பின்னூட்டம் பார்த்தீர்களா?
வாழ்த்துக்கள்!//
ரவி...சிறுகதை மற்றும் இந்த பின்னூட்டத்திற்கும் நன்றி..விகடனில் நானே கேள்வி,,நானே பதிலில் ஒரு வாசகர் “சமீபத்தில் ரசித்த ரீமிக்ஸ் டயலாக் என்று நம்ம அக்னிபார்வையின் ஒரு பதிவை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
ஆமா, இது அரசியல் பதிவா..?
இல்ல பதிவு அரசியலா...?
நான் எஸ்பேப்பு..!
கலக்கல்.
தொடர்ந்து நல்லாதரவு நல்கும் நைனா..நன்றி..
டக்ளஸ் தம்பி ..நைட்டு பேசினது என்ன?
சூர்யா நன்றி..
///ஒரு ஜென் கதை : இன்றுதான் ஊர் திரும்பியிருக்கும் ஒரு பதிவர்,அடிக்கடி கீழே விழும்(வைத்திய) பதிவர்,மற்றும் விரைவில் டின் கட்டப்படும் இருக்கும் அறிவிப்பு பதிவர் மூவரும் சேர்ந்து “டாஸ்மாக்கை” கவிழ்த்து காலி பண்ணிட்டு பிரிந்த பின் அறிவிப்பு பதிவை காரை பின் பக்கமாக ஓட்டி சென்றதில் சரி டேமேஜ்.ரூ 10,000/- பணால்...அதனால் குடித்துவிட்டு காரை ஓட்டாதீர்கள் என்று மாருதி ஜென் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..
/////
பார்த்து போயிருக்கலாம்..
அண்ணனுக்கு கட்டிங் மானிட்டர் சொல்லுப்பா...
வந்ததே ராத்திரிதான்..
விடிஞ்சதும் நேரா டாஸ்மாக்குதானா..?
ஏன்யா இப்படி சின்னப் பசங்களையெல்லாம் கெடுக்குறீரூ..?
அலோவ்வ்வ்வ்.. தண்டோரா.. யார்யா ஊர்லேர்ந்து வந்த பதிவர்.. ?
//கீதாவின் தந்தை “அய்யங்கார்”ஜாதியில்தான் கொடுப்போம் என பெரிய சண்டை..ரஜினி அங்கிருந்து பாலச்சந்தர் முயற்சியால் வெளியேற்றபட்டார்...நானும் ஒரு அய்யங்கார் பெண்ணை கட்டி காட்டுகிறேன் என்று சவால் விட்டு ஜெயித்தும் விட்டார்.....//
அதனால் அவருக்கு தலையில் கொம்பு எதாவது முளைத்ததா?
//(விருகம்பாக்கம் டாஸ்மாக்கில் விஜியின் கார் டிரைவர் மப்பில் கக்கியது)//
பொய் பேசும் கார் டிரைவர்கள் இருக்கிறார்களா?
அண்ணே, அந்த முப்பத்திரெண்டு கேள்வியை நயன்தாரா கிட்டயும் கேளுங்களேன். கில்மாவா பதிவு படிச்சு ரொம்ப நாளாச்சு...
Mr. தண்டோரா..
நயன்தாரா ... Plz note this.. Need of the hour...
//வாலு..கொம்பா முக்கியம்..வம்புதான்..
//அண்ணே, அந்த முப்பத்திரெண்டு கேள்வியை நயன்தாரா கிட்டயும் கேளுங்களேன். கில்மாவா பதிவு படிச்சு ரொம்ப நாளாச்சு...//
போயும்,போயும் நயன்தாரா கிட்ட கேள்வியா கேப்பாங்க(பர்மிஷன்தான்)
Good article. You gave information about good and evil. Anyway avoid alcohal (Katturaiylum, valkkaiyilum).
R.Muthukumar
Salem.
Post a Comment