சின்னதா ஒரு பொழைப்பு ஆரம்பிச்சேன்.
நடையா நடந்தேன்..நாயா திரிஞ்சேன்..
நாலு காசு கையில சேர்த்தேன்.
சொந்தமா ஒரு சைக்கிள் வாங்குனேன்..
சைக்கிள்ல சுத்தாத இடமில்ல..
சைக்ளோன் மாதிரி ....பறந்தேன்..
ஒரு கட்டு ரூபா பார்த்ததும்
ஒரு மோட்டார் சைக்கிள் சொந்தமாச்சு.
அப்புறம் ராவில்ல..பகலில்ல..
நேரத்துக்கு சோறு இல்ல..
சரியா உறக்கமும் இல்ல.முடிவெல்லாம்
ஒரு கார் வாங்குறதிலயே தான்
வாங்கிட்டேன் ..புது கார்..புது வீடு எல்லாம்
இப்ப எல்லாம் முன்ன மாதிரி ஓட முடியல
மூச்சிரைக்குது..முழங்கால் குடையுது
டாக்டராண்டை போனேன்..
எல்லாம் கேட்டு ஒரு சீட்டுல இப்படி எழுதி கொடுத்தாரு..
"தினம் காலை,மாலை ஐந்து கிலோ மீட்டர் நடக்கவும்"
டில்லியில் சோனியாகாந்தி,ராகுல்காந்தி,வருண்காந்தி,மேனகாகாந்தி இருக்காங்க.இப்ப ஒரு புது காந்தி.நம்ம ஊருல இருந்து..யாரு?காந்தி அழகிரிதான்..மதுரை மச்சான் பதவி ஏற்கறதை அவிங்க குடும்பதோடு கண்டு களிச்சதை சில டிவிக்கள் குறிப்பாக காட்டினார்கள்."ம் தூக்கிடு..வெட்டிடு..எஸ் ஆயிடுங்க" இப்படிபட்ட வார்த்தைகளையே(ரன் பட அதுல் குல்கர்னி மாதிரி)கேட்டிருந்தவருக்கு "ஐ அழகிரி என்று அவர் ஆரம்பித்ததும்" ஐகளில்..அதாங்க கண்களில் ஆனந்த கண்ணீர்.என்ன எழவு பெட்ரோலியம் கேட்டாங்காளாம்..கொடுத்திருக்கலாம்.சும்மா கொளுத்தியிருப்பாருல்ல?
10 comments:
நல்லாயிருந்துச்சுப்பா...!
"அ"னா பத்தி எழுதுனதுக்கு ஆட்டோ வரப் போகுது பாருங்க.
//சைக்கிள்ல சுத்தாத இடமில்ல..
சைக்ளோன் மாதிரி ....//
:)
டக்ளஸ்சை பாருங்க, அண்ணண் பேர சொல்லறதுக்கே பயந்து போய் முதல் எழுத்து மட்டும்தான் சொல்லராறு நீங்க என்னடான்னா அண்ணனை வெறுப்பேத்திகிட்டே இருக்கிங்க.... அவராவது ஆட்டோ சொன்னார் நான் பொக்கலைனே வந்தாலும் ஆச்சர்யபடறதுக்குகில்ல...
மத்தபடி உங்க பீலிங்ஸ் எனக்கு புரியுது. முடடி முழங்கால் வலிக்கு அதுமட்டும்தானா? காரணம்?????
தண்டோரா அண்ணே, உங்க வஞ்சப் புகழ்ச்சிய என்னான்னு சொல்றது.... “படிச்சிட்டு, அப்படியே ஷாக் ஆகிட்டேன்”
என்னா கவித.. என்னா கவித.. எனக்கு பிரிஞ்சிருச்சு.. ஊட்டாண்டே ஆட்டோ வந்தா அஞ்சாம.. ஓடி போயிரு.. அண்ணன் அவ்வளோ நல்லவரூ.
டக்லஸ்..நீயே சொல்லி "அ"னுப்பிடுவே போலிருக்கே
பார்சல்ல பஞ்சாமிர்தமும்,விபூதியும் அனுப்புங்க தல..
விஜயகோபால்..பாக உண்ணாரா?
நன்றி ஜாக்கி ...தினசரி நடை பயிற்சியும் செய்யுங்க...(வாக்கிங் போனேன்.."தாக்கி" விட்டார்கள்)
எனக்குத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்சிருச்சு..
சந்தோஷம்..
உண்மையா சொல்லுங்க ..தமிழரே.. எதுக்கு துணை?உதை வாங்கறதுக்கா?
Post a Comment