Wednesday, March 11, 2009

சிவன்,சைக்கிள்,வண்டி

சிவன்,சைக்கிள்,வண்டி,டம்,பொட்டலம்,தூள் எனப் பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.பெரிய மேதைகள் கூட இதற்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது.காரணம்..மனதை ஒரு நிலை படுத்தும் சக்தி இதற்கு உண்டென்று சொல்லப்படுகிறது.ஜெயகாந்தன் இதன் பரம ரசிகராம்..சமீபத்தில் வெளி வந்த "நான் கடவுள்" திரைப் படத்தில் இதுவும் ஒரு முக்கிய கதாபாத்திரம்.

அது "கஞ்சா" என்று அழைக்கப் படும் போதைப் பொருள். சாராயம்,மது வகைகள் போல் ஆளை சாய்த்து விடாமல் ஒரு வித மோன நிலையில் மனிதனை வைத்திருக்கும்.வாசனை வராது..அதனாலேயே நிறைய பெரிய படைப்பாளிகள் இதை நாடுகிறார்கள்.நான் கல்லூரியில் படிக்கும் போது இந்த ராஜ போதையை அனுபவித்தது உண்டு.கஞ்சா அடித்து விட்டு சிரிக்கவோ, அழவோ தொடங்கினால் நாம் அதையே செய்து கொண்டிருப்போம் என்பது இதன் தனிச்சிறப்பு.கண்கள் சொருகி நடை லேசாக தவறி நம்மை நாமே அனுபவிக்கும் ஒரு வித போதை....இன்றும் சைதாப் பேட்டையில் என் அலுவலகத்தின் வாயிலில் கூட விற்கிறார்கள்..நான் இப்போது டாஸ்மாக் தான்...

கஞ்சா வை வைத்து ஒரு அரசியல் புரட்சியே செய்தது அம்மாதான்...முதலில் திடீர் வளர்ப்பு மகன் மீது..பின் எம்.ஜி.ஆர்.. நினைவு இல்ல பொறுப்பாளர் முத்து..அதன் பின் காஞ்சி சங்கர மட விஸ்வநாதன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது.இதன் உச்ச கட்டம் மதுரை ஷெரினாதான்..சசிகலா விற்கு சக்களத்தியாகி விடுவார் என்ற நிலையில் அவர் மீ தும் கஞ்சா வழக்கு...இதற்காக மதுரை செக்காயுரனி போலிசார் கோர்ட்டில் காண்பிக்க கஞ்சாவை தேடி அலைந்தது தனிக் கதை.தமிழ் நாட்டில் தேனி மற்றும் அதை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் அதிகம் விளைகிறது..அங்கிருந்து தான் சென்னைக்கு தினம் ஆம்னி பஸ்ஸில் வருகிறது என்று ஒரு வியாபாரி ? கூறினார்.இன்று ஜீவியில் இதை பற்றி எழுதி இருக்கீறார்கள்.உடலுக்கு கெடுதல் தான்....ஆனால் களவும் கற்று மற என்பதை போல் ஒரு முறை அடித்து பார்க்கலாம்.

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாரதியாரும் பாவித்தாராமே;..அதனால் தான் மேதைகளென்றும் சேர்த்தீர்கள்.இன்றைய போதைப் பொருட்களுடன் ஒப்பிடும்போது இது தூசி என்பார்கள். ஒல்லாந்தில் இதை மென் போதைப் பொருளாக
அங்கீகரித்து. இதற்கான சிறப்பு "கோப்பி பார்"உள்ளதாக அறிந்தேன். ஐரோப்பாவில் இச் சட்டத்தை அமுல்படுத்தும் ஆலோசனையுண்டு. இங்கு சிலர் திருட்டாக வீட்டினுள் பூச்சாடியுள் வளர்த்து உபயோகிக்கிறார்கள். அரசுக்குத் தெரிந்தும் பார்த்தும் பாராமல் இருக்கிறது. இதைத் தடுக்க முற்பட்டால்
ஏனைய வலிமைகூடிய போதையின் அமோக விற்பனைக்கு அடிகோலும் என நினைக்கிறார்கள்.

Jackiesekar said...

இன்றும் சைதாப் பேட்டையில் என் அலுவலகத்தின் வாயிலில் கூட விற்கிறார்கள்..நான் இப்போது டாஸ்மாக் தான்...//

ஜால மற்ற எழுத்து என்பது இதுதான் அய்யா.

Jackiesekar said...

கஞ்சா வை வைத்து ஒரு அரசியல் புரட்சியே செய்தது அம்மாதான்...முதலில் திடீர் வளர்ப்பு மகன் மீது..பின் எம்.ஜி.ஆர்.. நினைவு இல்ல பொறுப்பாளர் முத்து..அதன் பின் காஞ்சி சங்கர மட விஸ்வநாதன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது.இதன் உச்ச கட்டம் மதுரை ஷெரினாதான்..சசிகலா விற்கு சக்களத்தியாகி விடுவார் என்ற நிலையில் அவர் மீ தும் கஞ்சா வழக்கு...இதற்காக மதுரை செக்காயுரனி போலிசார் கோர்ட்டில் காண்பிக்க கஞ்சாவை தேடி அலைந்தது தனிக் கதை.//

என்ன ஞாபக சக்திப்பா???