இந்தியாவின் இன்ஷியல் என்ன? G.ஏன். காந்தி தானே "FATHER OF OUR NATION" ஸ்கூல் படிக்கும் போது கேள்விப் பட்ட புதிர் இது.நிறைய பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் மகாத்மாவை பற்றி எழுதி பரிசுகள் வாங்கி இருக்கிறேன்.
"புன்னகை மன்னன்" என்று வாலி அவருக்கு சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தம்.மித வாதி என்று பெயர் வாங்கியிருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஆத்ம தீவிரவாதி.ஆயுதம் ஏந்த அசட்டு துணிச்சல் கூட போதும்.எத்தனை துயரிலும் புன்னகையை தொலைக்காத,அகிம்சையை கை விடாத பாங்கு..இதற்கு தேவையான வைராக்கியம்...இந்த மனிதரை வெல்ல முடியுமோ?
காந்தி எங்காவது கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்காமல் இருந்திருப்பாரோ?பின் ஏன் காந்தி கணக்கு என்ற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது ?
ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்.....காந்தியின் கொள்கைகளை நாம் எப்பவோ ஏலம் விட்டு விட்டோம்...ஆனால் இப்ப விடப் பட்டது.. அவர் பயன் படுத்திய பொருட்களாம்...
வாழ் நாளெல்லாம் காந்தி யாரை எதிர்த்தாரோ அவன் தான் காந்தியை பற்றி படம் எடுத்தான்.காந்தி கடுமையாக எதிர்த்த இன்னொன்று மது...ஆனால் விதி பாருங்கள்..சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையா தான் அவர் பொருட்களை ஏலம் எடுத்ததவர்..அதை இந்திய அரசுக்கு அன்பளிப்பாக கொடுக்கப் போகிறாராம்...ஹே...ராம்..
பின் குறிப்பு:அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி..டாஸ்மாக் லீவு..முத நாளே சரக்கு வாங்கி வைக்காட்டி..பிளாக்ல வாங்க வேண்டியிருக்கும்.
3 comments:
//ஆனால் விதி பாருங்கள்..சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையா தான் அவர் பொருட்களை ஏலம் எடுத்ததவர்..//
இதுதான் மிகப்பெரிய அவமானம்..
பகிர்தலுக்கு நன்றி.
நல்லாயிருக்கு.
அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் சில கடைகளில் கதர் குல்லா அணிந்து வந்து டீ காபி குடிப்பவர்களிடம் காசு வாங்க மாட்டார்கள். சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்களுக்கு ஒரு மரியாதையும் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவிட வேண்டி சிலர் செய்த தருமம் என்று என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.
அதையும் கொச்சைப் படுத்தி காசு கொடுக்காமல் ஏமாற்றுபவர்களை இப்படி சொல்கிறது நமது சமூகம்.
காந்தி ஜெயந்தி முன்னிட்டு நமீதா பேட்டி ஒளிபரப்பும் நமது ஊடகங்களில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..
வண்ணத்து பூச்சியார் வந்ததில் தேன் குடித்த சந்தோஷம்
Post a Comment