Tuesday, December 14, 2010

கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு


கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு...அதனாலேயே எனக்கு அவரை பிடிக்கிறது...வெளிப்படையான எழுத்துக்களும்...நீண்ட நாட்கள் கழித்து விசில் அடிப்பதை எனக்கு ஞாபகப்படுத்திய திருவிழா அது..சாருவின் தேகம் ... ஒரு இரவில் முழுவதும் ஆ(ரா)ய்ந்து படிக்க முடியாத நாவல்..எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் முதலில் போட்டுக் கொள்ளலாம்..கடைசி இரண்டு எழுத்துக்களில் கம் இருக்க வேண்டும்..மெதுவாக அனுபவித்து படித்து, தப்புவதோ..துப்புவதோ அப்புறம்...



பொதுவாக ஒலிபெருக்கிகள் பார்வையாளர்களை பார்த்திருக்கும் . சாருவின் விழா என்பதாலோ என்னவோ..மேடையில் இருந்த பாவைகளை பார்த்து இருந்தது . வேறொன்றும் காரணம் இருக்காது ..வாஸ்துவாக இருக்கலாம் ..மேடையில் இருந்த இரண்டு கவிதாயினிகளில் ஒருவர் இந்த * *பசுவும் புல் திங்குமோ என்பது போல் இருந்தார்.



டிசம்பர் சீசன், கம்பன் விழா என்று எல்லா இடங்களிலும் புரவலரின் பேச்சு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் போல..1986 ல் கனிமொழியுடன் நிக்ழந்த உரையாடலை நியாபகம் வைத்திருந்தார் செட்டியார் .



நடராஜன் சார் தினமலர் வாரமலரில் இளமை துள்ளும் ஒரு காதல் தொடர் எழுதுகிறார். யோசித்து வாசியுங்கள்..



2011 ஆம் ஆண்டு பங்குதாரர்களில் ஒருவரான ரவிக்குமார் சர்காஸ்டிக்காக பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.. அப்படியே ஆக கடவது..



தமிழச்சியின் பேச்சும் நன்றாக இருந்தது.. நிறைய பேர் அதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. நான் உட்பட சிலர் *பார்த்து*க்கொண்டிருந்தோம்



திமிருக்கும் , கர்வத்துக்கும் ஒரு மெல்லிய கோடுதான் என்று எங்கோ படித்த நியாபகம்... சாருவின் பேச்சு ..எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..



மிஷ்கின்...விழாவில் பேசியதை அன்று விஜய் டிவிக்கு வந்து பேசியிருக்க வேண்டும்.. இன்னொருத்தன் பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழா..அங்கு வந்து தான் பிள்ளை பெற பட்ட பிரசவ அவஸ்தைகளை பேசினால்...சாரு எழுதியது சரிதான்



ஒரு சந்தேகம்...



சாருவின் வாசகர்கள் யாரும் ஜெமோவை இவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பதில்லை..(எனக்கு தெரிந்து).. அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். சிவாஜியாக இருந்து விட்டு போகட்டும்.. இந்த ஜெமோவின் வாசகர்கள் ஏன் இப்படி சாருவை பிரித்து மேய்கிறார்கள்?



ஆக மொத்தம் ...காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜ் அரங்கில் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்காது...



ஹேட்ஸ் ஆஃப் சாரு..கண்டினியூ ராக்கிங்..

21 comments:

க ரா said...

ஆக மொத்தம் ...காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜ் அரங்கில் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்காது...
---
sema nakkal jii...

vasu balaji said...

/ஆக மொத்தம் ...காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜ் அரங்கில் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்காது.../

நாளைக்கு சஞ்சய் மாமான்னு வந்து கிழிக்கப் போறாரு

CS. Mohan Kumar said...

சாமி ! இப்போ நீங்க சாமி !!

சங்கர் said...

//சாருவின் வாசகர்கள் யாரும் ஜெமோவை இவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பதில்லை//

உங்களோட ”சாருவின் வாசகர்கள்” லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு எனக்கு தெரியாததால, ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை :)

Ahamed irshad said...

இரண்டு கவிதாயினிகளில் ஒருவர் இந்த * *பசுவும் புல் திங்குமோ என்பது போல் இருந்தார்.//

:))))))))..

செங்கோவி said...

//நான் உட்பட சிலர் *பார்த்து*க்கொண்டிருந்தோம்// நீங்களுமா..உலகத்துல எல்லாரும் நம்மளை மாதிரி யோக்கியங்கதானோ..நல்ல பதிவு!

--செங்கோவி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இரண்டு கவிதாயினிகளில் ஒருவர் இந்த * *பசுவும் புல் திங்குமோ என்பது போல் இருந்தார்.//

காலத்துக்கேற்ற கருத்து- ரசித்தேன்.

//நான் உட்பட சிலர் *பார்த்து*க்கொண்டிருந்தோம்//

ஜொள்ளுவைத் துடைத்தது யார்? பகிடி- கோவப்பட வேண்டாம். அவர் அவ்வளவு அழகா?..எனக்கு அப்படித் தெரியவில்லை.(நேரே பார்த்ததில்லை)

நையாண்டி நைனா said...

/*"கொண்டாட்டங்களின் ரசிகன் சாரு"*/

அப்படின்னா பேச்சுக்கு பேச்சு ஹாய் டண்டணக்கா டனக்குனக்கா ஹாய் டண்டணக்கா டனக்குனக்கா என்று சொல்கிற என் தானை தலைவன் என்ன கொண்டாட்டத்தின் கடவுளா?

ஹாய் டண்டணக்கா டனக்குனக்காஹாய் டண்டணக்கா டனக்குனக்கா

Jerry Eshananda said...

ரசித்தேன்.

நையாண்டி நைனா said...

அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

நையாண்டி நைனா said...

அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

நையாண்டி நைனா said...

அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

நையாண்டி நைனா said...

அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

ரோஸ்விக் said...

//..எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் முதலில் போட்டுக் கொள்ளலாம்..கடைசி இரண்டு எழுத்துக்களில் கம் இருக்க வேண்டும்//

சாருவின் எழுத்துக்களில் கண்டிப்பாக "கம்" இருக்குமாம். படித்தவர்கள் சொன்னது. :-)

ரோஸ்விக் said...

//ஆக மொத்தம் ...காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜ் அரங்கில் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்காது...//

விழுந்து விழுந்து சிரிக்கிறேன் சாமி. நக்கலுக்கு ஒரு அளவில்லையா!!!?

vinthaimanithan said...

சாமியேய்...சரணம் ஐயப்பா!

Ganesan said...

மணிஜி,

விழாவில் நீங்க அடித்த கமெண்ட் போட்டால் ரசிக்கும்படியா இருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

//ஆக மொத்தம் ...காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் காமராஜ் அரங்கில் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்காது...//

ha.. ha... ha...


நல்ல பதிவு.

butterfly Surya said...

@ ரோஸ்விக்.. இதுக்கு விழுந்து விழுந்து சிரிச்சா.. அன்றைக்கு விழாவில ஜி அடித்த கமெண்டுக்களை நினைத்து இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்.

அதுவும் கனிமொழி பேசும் போது......

R.Gopi said...

//தமிழச்சியின் பேச்சும் நன்றாக இருந்தது.. நிறைய பேர் அதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. நான் உட்பட சிலர் *பார்த்து*க்கொண்டிருந்தோம்//

********

இந்த வரிகளை தாண்டி போகவே மனசில்லை மணிஜீ...

கலக்கல்... *பார்த்து* .... ஹா.ஹா

செங்கோவி said...

புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.