Wednesday, April 15, 2009

கூட்டாஞ்சோறு

தண்டி யாத்திரையில் கலந்து கொண்ட ஒரு தமிழ் சுதந்திர போராட்ட தியாகிக்கு பென்ஷன் தருமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.27 ஆண்டுகளாக கால் தேய நடையாய் நடந்தும் அரசு அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.அது மட்டுமல்லாமல் அவரை எதிர்த்து வழக்கும் நடத்தியுள்ளது.(தினமலர்)(மானாட ,மார்பாட என்ற ஒரு கேடு கெட்ட நிகழ்ச்சியில் நடுவராக வரும் கவர்ச்சி நடிகை ரம்பா சென்ற வாரம் முகவை சந்தித்து தன் பிரச்சனை சொன்னாராம்.அவர் திரும்ப வீடு போய் சேர்வதற்குள் அந்த பிரச்சனை தீர்த்து வைக்க பட்டதாம்.நெகிழ்ந்து போன ரம்பா தன் கொலைத் தமிழில் திமுக விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.(கும்பி எரியுதய்யா)

புதிய பாரதம் என்ற ஒரு பொறுக்கி கட்சி.அதன் தலைவர் ஜெகன் மூர்த்தி.அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்.உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்தவர்.நடைபெற உள்ள நாடாளூமன்ற தேர்தலில் திமுக வின் ஜெகத்ரட்சகனுக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக சென்னை cit நகரில் வீட்டு வசதி வாரியத்தின் 2 குடியிருப்புகள் அவருக்கு ஒதுக்கபட்டிருக்கிறது.அவர் அதை சட்டத்திற்கு புறம்பாக இடித்து கட்சி அலுவலகம் கட்டி வருகிறார்(ஜீனியர் விகடன்)

நரசிங்க பெருமாளின் நட்சத்திரம் சுவாதி.அழகிரியும் அதே நட்சத்திரம்தான்.மதுரை ஒத்தகடையில் உள்ள பிரசித்த பெற்ற நரசிங்க பெருமாள் கோயில் வாசலில் இருந்து தனது தேர்தல் பிராசாரத்தை அழகிரி தொடங்கியிருக்கிறார்.தனது பிராசார வண்டியில் வந்த போலி பகுத்தறிவு பிராசாரம் செய்யும் முகவின் முதல்(இரண்டாம் மனைவியின்) வாரிசை கோயில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.கோயில் பிராசாதமான குங்குமம்,துளசியை
காந்தி(??)அழகிரி பவ்யமாக பெற்றூ கொண்டார்.அழகிரிக்கு விபூதியும் பூசப்பட்டது.

சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அறிவித்து மானங்கெட்டதனமாய் ஒரு தொ(ல்)லைகாட்சி காசு பார்த்தது..
(இவர்கள் சோற்றில் உப்பு போட்டு கொள்வார்களா??)

பாலம் என்றாலே பாலு தான் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.செல்போன் என்றால் தயானிதிதானாம்.
அப்ப ஊழல்,போலி பகுத்தறிவு,பொறுக்கித்தனம்,கூட இருந்தவர்களையே நண்பர்களாகவே இருந்தாலும் நாக்கு கூசாமல் தூற்றுதல்(அடுத்தவன் மனைவியை அபகரித்து விட்டார் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் ஒருவரை இன்று அறிக்கையில் சாடியுள்ளார் மு.க) இதெல்லாம் யாரை நினைவூட்டுகிறது?

ஒரு காட்டுக்குள் ஒரு புலி அட்டகாசம் செய்த்தது.அதை பிடிக்க ஆந்திரா,கர்னாடகா மற்று தமிழக போலிசார் போனார்கள்.
முதலில் ஆந்திரா...புலி எதுவும் தென்படவில்லை என்று சொல்லி விட்டான்.பின் கர்னாடகா போலிஸ் உள்ளே போனார்கள்.சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து புலியை பார்த்தோம் .ஆனால் ஓடி விட்டது என்றார்கள்.இறுதியாக நம்ம
தமிழக காவல் துறை சென்றது.நீண்ட நேரமாகியும் திரும்ப வில்லை.பயந்து போய் மற்றவர்கள் உள்ளே சென்றனர்.அங்கே நம்மாளூ ஒரு கரடியை கட்டி தொங்க விட்டு "நாந்தான் புலினு ஒத்துக்க போறியா, இல்லியானு அடி பின்னிக் கொண்டிருந்தனர்.

6 comments:

நையாண்டி நைனா said...

கடைசி ஜோக்கு சூப்பரு...

Vishnu - விஷ்ணு said...

// 27 ஆண்டுகளாக கால் தேய நடையாய் நடந்தும் அரசு அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.அது மட்டுமல்லாமல் அவரை எதிர்த்து வழக்கும் நடத்தியுள்ளது.//

இதுதான் ஜ(ப)னநாயகம்.

அக்னி பார்வை said...

ஏன் தல அரசியல் அது இதுன்னு இறங்கிரங்க.. அப்புறம் ஊர் போய் சேர முடியது

Prabhu said...

செம மேட்டரு. நாங்க இதெல்லாம் எழுத முடியாது. ஏன்னா நான் மதுரக்காரன்.

R.Gopi said...

பாஸ்

நம்மள மாதிரியே, உங்க பேச்சுலேயும், எழுத்துலேயும் பொறி பறக்குதே??

சபாஷ்.....

தொடர்ந்து வருவேன். நிறைய எழுதுங்கள்.

மணிஜி said...

நன்றி கோபி..இட்லி வடையில் உங்கள் பின்னுட்டங்களை நான் தவறாமல் படிப்பதுண்டு.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அனைவருக்கும் நன்றி