ஒரு ஓட்டுக்குரூ2000/வீதம் மொத்தம் 50 ஓட்டு நம்ம குடியிருப்பில் இருக்கு.ரூ100000/- வசூலாகும்.அதை வச்சு நம்ம கழிவு நீர்,சாக்கடை அடைப்பு,தெருவில் உள்ள குழிகளை மூடுதல் மற்றும் பெயிண்ட் அடித்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.இது எங்கள் குடியிருப்போர் நல கூட்டத்தில் நான் சொன்னது.
அது எப்படி...நீங்க படிச்சவங்க(??)மீடியாவில வேற இருக்கீங்க..இப்படி சொல்லலாமா?இது ஒரு அரசாங்க ஊழியர்(அவர் சம்பளத்துல(மட்டும்) அவர் life style ல நினைச்சு கூட பார்க்க முடியாது(கிம்பளம்தான்)
சார்,இது ஒண்ணும் பெரிய தப்பு இல்ல..இதோ ராமானுஜம் வீடு என்ன வெள்ளத்துல அடிச்சுகிட்டா போயிருச்சு..முத ஆளா இவர் தான் போய் கீயூல் நின்னு 2000 ரூபா வாங்கிட்டு வரல??
சார் எல்லாரும்தான் வாங்கினாங்க.ஏன் என்னைய மட்டும் குத்தி காட்டுறிங்க
சரி இப்ப என்ன சொல்றிங்க
சார்..போட்டி பலமாயிருக்கும் போல..நாம கொஞ்சம் ரேட்டை ஏத்திடலாமா?(ஒரு house husband)
சார்.நான் காசு வாங்கினாகூட அதுக்கு ஓட்டு(கை விரலை நன்றாக விரித்து)போட மாட்டென்..கண்டு பிடிச்சுடுவாளா?(TELEPHONES)
நான்: சரி நீங்க எதுக்கு வேணா ஓட்டு போடுங்க..அது பிரச்சனை இல்லை.இப்ப காசு கொடுத்தா வாங்கலாமா..வேண்டாமா..
ஒரு மனதாக அனைவரும் இந்த டீலை நானே முடிப்பது என்று முடிவாயிற்று..சீட் பேச்சு வார்த்தை போல அனைத்து கட்சி பிரதி நிதிகளிடமும் பேரம் பேசி(??)ம்ம்ம்..
ஒருவர் கேட்டார்..சார் இது அரசாங்கத்தை ஏமாத்தற மாதிரி இல்ல?
பதில் இந்த நகைச்சுவை..??
ஒருவன் சொன்னான்..நான் அரசை ஏமாத்திட்டேன்.. மத்திய அரசை..அதுவும் ரயில்வேயை
எப்படிடா? டிக்கெட் வாங்காம ரயில்ல வந்தியா?
இல்ல...தாம்பரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு, மாம்பலத்திலேயே இறங்கிட்டேன்..
மு.க மாதிரி ஒரு தீர்மானம்..
அனைவரும் மிகவும் வற்புறுத்துவதால் குடியை விட்டு விடலாம் என்று முடிவு எடுத்து விட்டேன்.இன்று முதல் sunday மட்டும் குடிக்கலாம் என்று ....????(நாளைய தீர்மானம் இனி monday மட்டும்)
2 comments:
நல்ல முடிவு
//அனைவரும் மிகவும் வற்புறுத்துவதால் குடியை விட்டு விடலாம் என்று முடிவு எடுத்து விட்டேன்.இன்று முதல் sunday மட்டும் குடிக்கலாம் என்று ....????(நாளைய தீர்மானம் இனி monday மட்டும்)//
***********
சரியாதானே சொல்லி இருக்கீக
ஒன்கிட்ட நேத்து ஒரு பேச்சு, இன்னிக்கு ஒரு பேச்சு இல்லைய்யா, நீ ரெம்ப நல்லவன்.
Post a Comment