Friday, June 10, 2011

கண்ணாடி நிழல்..




அலைந்து கொண்டிருக்கின்ற
அவசரகதியில் அங்கமிங்குமாய்
அந்த நிழல்கள்

எனக்கு அருகாமையில் விசித்திர
ஒலியெழுப்பிக்கொண்டேயிருக்கிறது
ஒரு பூதாகர வஸ்து

மிதந்துகொண்டு இருக்கும் நான்
அந்த ஒலியில் மிரள்கிறேன்

செவ்வக பெட்டியின் மீது 
முளைக்கிறது சிறிது வெளிச்சம்
ஆறுதல் வேண்டி
தூவப்படும் உணவு


பொன்மயமாய் ஜொலிக்கும்
என்னுடலை
உடலை வெறித்து பார்த்து
நகர்கிறதுஅந்த நிழல்
அசைவற்று , அமைதியில்
இருப்பதை நான் காணவில்லை
ஒரு நிழலானேனும்...

எதையோ துரத்தி கொண்டே
இருக்கின்றன நிழல்கள்
துரத்தப்பட்டுக்கொண்டும்தான்

சுதந்திரமாக நீந்தியபடி
ரசித்துக்கொண்டே இருக்கிறேன் நான்..
...சுதந்திரமாக நீந்தியபடி

9 comments:

vasu balaji said...

ஜொலிக்குது

க ரா said...

//என்னுடலை
உடலை //

இது ஏன் ஜீ இப்படி.. ?

ரமேஷ் வைத்யா said...

ஹையோ ஹையோ

'பரிவை' சே.குமார் said...

great....

உலக சினிமா ரசிகன் said...

நானும் உங்கள் ஜாதிதான்...அதாவது விளம்பரப்பட இயக்குனன்.

அவன் இவன் இயக்கியது எவன்?...
என்ற தலைப்பில்
எனது கோபத்தை
எனது வலைப்பக்கத்தில் இறக்கி வைத்துள்ளேன்.
வருகை புரிந்து கருத்துக்ளை கூறுமாறு அன்போடு அழைக்கிறேன்.

மாலதி said...

//எதையோ துரத்தி கொண்டே
இருக்கின்றன நிழல்கள்
துரத்தப்பட்டுக்கொண்டும்தான்

சுதந்திரமாக நீந்தியபடி
ரசித்துக்கொண்டே இருக்கிறேன் நான்..
...சுதந்திரமாக நீந்தியபடி//
nice

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

வித்யாஷ‌ங்கர் said...

நம்பமுடியவில்லை கவிதை அவ்ளோ சூப்பரா அமைஞ்சிருக்கு

முனைவர் இரா.குணசீலன் said...

நிழல்கள் என்றும் நம்மை நீங்குவதில்லை..

நாம் தான் அதைக் காண்பதில்லை..