Friday, March 18, 2011

ஆதலினால்….....



அன்பரே....
என்னப் பார்வை பார்த்து விட்டீர்கள்..
கடந்து செல்லும் அத்தனை கண்களும்
கண நொடியாவது...என்னை காணாமல்
கடந்ததில்லை...அதில் ஒரு பார்வை கூட
என்னை ஈர்த்ததில்லை..

ஆனால் என்ன மாயம் செய்தீர்...
உயிரை உலுக்கியதே உம் பார்வை..
எண்ணிரண்டு ஆண்டாய்..அன்பையே
கொட்டிய தாயும், தந்தையும்.ஏன் எனக்கு
எதிரிகளாய் தெரிகிறார்கள்..

எங்கே ..உன்னை மறுத்துவிடுவார்களோ
என்ற என் அச்சமா?
சலனமற்று இருந்தேனே..சண்டாளா..
தத்தளிக்கிறேன்..உன் நினைவாலே..

என் பிரிய பிருதிவிராஜா...
கணப்பொழுதும் தாமதியாதே
கவர்ந்து செல்ல ...
விரைந்து வா....

என்னங்க...என்ன பண்ணி தொலைச்சுகிட்டிருங்கிங்க...சாந்தியின் குரல் கர்ணகடுரமாக ஒலித்தது..நெருங்கி வந்து கையில் இருந்த காகிதத்தை பிடுங்கி நான்காக,எட்டாக கிழித்து எறிந்தாள்..

இல்ல சாந்தி..அது நீ எனக்கு எழுதின முதல் கடிதம்..இந்த ஷெல்ப்பை கீளின் பண்ணப்ப கிடைச்சுது..அதான் படிச்சு கிட்டு இருந்தேன். கவிதையா என்னமா எழுதியிருந்தே...அனுப்பி வையுங்க..நல்லா இருந்தா பிரசுரமாகும்னு நணபர் ஒருத்தர் சொன்னார்...

.மண்ணாங்கட்டி....அந்த வாலு குளிக்கிறேன்னு பாத்ரூமை ரெண்டு பண்ணிகிட்டிருக்கா..போய் பாருங்க...சீக்கிரம் ரெடி பண்ணுங்க

..ரிக்க் ஷா வந்துடும்....குழந்தையை பத்திரமா ஏத்தி விட்டுட்டு, இந்த மாச பணம் ரெண்டு நாள்ல தரேன்னு சொல்லிட்டு வாங்க..

ஒரு வழியா அந்த வாலை அனுப்பிவிட்டு வரும்போதே மீண்டும் சாந்தியின் குரல்..

என்னங்க...துணியை சோப் போட்டு வச்சிருங்கேன் அலசி காயப் போடுங்க..நான் வேற சீக்கிரம் ஆபிசுக்கு போகனும்..
என் தலை மறைஞ்சவுடனே லைப்ரரிக்கு ஓடிடாதீங்க..மழை வர மாதிரி இருக்கு..பக்கத்துல இருந்து துணியை மடிச்சு வைங்க..அப்படியே ரேஷன்ல் கெரசின் போட்டா வாங்கி வைங்க...சும்மா கதை எழுதறேன் ..கவிதை எழுதறேன்னு பொழுதை கழிக்காதீங்க..நா கிளம்பறேன்.....பஸ் ஃபுல்லா வரும்..

புலம்பியபடி..சாந்தி மெல்ல பார்வையிலிருந்து மறைய...

நான் சாந்தி கிழித்துப் போட்ட காகிதத்தை பொறுக்கி,ஒட்டி


அவள் காதலிக்கும் போது தந்த அந்த முதல் கவிதையின் உள்ளே....உள்ளே...உள்ளே..

10 comments:

அகநாழிகை said...

மணிஜி கதை சூப்பர்..

rajasundararajan said...

என்ன நீதி? 'காதல் செய்வீர்!'ஆ? 'செய்யாதீர்!'ஆ?

Cable சங்கர் said...

நிஜம்

யுவா said...

//மணிஜி கதை சூப்பர்..//

இது சூப்பர்.

CS. Mohan Kumar said...

அருமை.

பஸ்சுக்கு போனதிலிருந்து ப்ளாக் பக்கம் அண்ணன் அதிகம் வரதில்லை :((

vasu balaji said...

aahaa:)

க ரா said...

:}

Ashok D said...

என்னமோ போய் தொலைங்க

பெசொவி said...

காதல், காதல், காதல்
காதல் வென்றபின் காதல் வென்றபின்
சாதல், சாதல், சாதல்
(அட, குடும்பத்துக்காக செத்துப் பிழைக்கறதைச் சொன்னேங்க!)

நல்ல க(வி)தை, மணிஜீ!

கலையரசன் said...

புனைவா?